​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 10 March 2019

சித்தன் அருள் - 800 - அந்தநாள் >> இந்த வருடம் [2019-20]

​​
அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா "சமேத" அகத்தீசாய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2018ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து அவர்களின் அருள், ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ போகர் திருநட்சத்திரம்:- 01/06/2019 - சனிக்கிழமை வைகாசி மாதம் - பரணி நட்சத்திரம் - திரயோதசி திதி. பழனியில் போகர் சமாதியில் மிகச்சிறப்பாக அபிஷேக ஆராதனை நடைபெறும்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

09/08/2019 - ஆடி மாதம் - வெள்ளிக் கிழமை  - சுக்லபக்ஷ நவமி/தசமி திதி, அனுஷம் நக்ஷத்திரம்.

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

10/08/2019 - ஆடி மாதம் - சனிக்கிழமை - சுக்லபக்ஷ தசமி/ஏகாதசி திதி, கேட்டை  நக்ஷத்திரம்.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

11/08/2019 - ஆடி மாதம் - ஞாயிற்று கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, மூலம் நட்சத்திரம்.

ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 

28/08/2019 -ஆவணி மாதம் - புதன் கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம்

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.)

10/11/2019 - ஞாயிற்று கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம். 

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாச சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 17/12/2019 முதல் 14/01/2020க்குள் வருகிறது. 

அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:- 13/01/2020 - திங்கட்கிழமை - மார்கழி மாதம், த்ரிதியை திதி - ஆயில்யம் நட்சத்திரம். எங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிற நாள்.

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

சித்தன் அருள் ................. தொடரும்!

32 comments:

 1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி

  நன்றி ஐயா

  ReplyDelete
 2. Dear Sir, Thanks for your great service. Can you please advice/suggest me a contact for Sri Agathiar Jeeva Nadi reader. Thanks for your help.
  Om Agathisaya Namaha!!

  ReplyDelete
 3. Om lopamudra samateAgastiyar Ñamaha.

  ReplyDelete
 4. நன்றிகள் பல அய்யா
  அன்னை லோபமுத்திரை ஸமேத அகஸ்திய பெருமானின் திருவடி சரணம்

  ReplyDelete
 5. மிக்க நன்றி ஐயா.
  சித்தன் அருள் 800 பதிவிற்கு வாழ்த்துக்கள்.
  அடியவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  என்றும் அன்புடன்
  வெங்கடேஷ்

  ReplyDelete
 6. Sir
  All criminals only have money good life style and they easily go to any temple at time. But devotees did not have money even for food medicine.God only help Froude
  Day by day my hope reduced there is god it will help.
  Eg pollachi issue.
  Jewels stolen at triupaty temple
  Palani Murugan navapasana statues issue

  ReplyDelete
  Replies
  1. அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்."

   Delete
  2. Read newspapers and see tv just for the sake of information and do not give over importance to what they preach. You cannot change the past. Be in present and pray. Let him decide, what to happen.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. Sir how can I buy agathiyar's sundarakandam book

   Delete
  5. வணக்கம்,

   புத்தகத்தின் பெயர் : "சுகம் தரும் சுந்தரகாண்டம்- ஸ்ரீ ராமஸ்வாமி"

   கிடைக்கும் இடம்:-

   அருள் மிகு அம்மன் பதிப்பகம்
   16/116, T.P.கோயில் தெரு,
   திருமலா ப்ளாட்ஸ்,
   (ஸ்ரீ ராகவேந்திரா மடம் எதிரில்)
   திருவல்லிக்கேணி, சென்னை - 600 005
   தொலைபேசி: 42663546, 42663545,9445952585
   ஈமெயில்:arulmiguammanpathippagam@yahoo.com

   மிக்க நன்றி,
   இரா.சாமிராஜன்

   Delete
 7. ஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக

  ReplyDelete
 8. காலை வணக்கம்

  ReplyDelete
 9. Om Lopamudra mata Samhet Agastheesaya Nama.

  Thank you for all details.

  ReplyDelete
 10. How can I get sundra kandham book.please give agasthiyar temple address

  ReplyDelete
  Replies
  1. Sundarakandam book is not sold at Agasthiyar Temple. It is available in Amman Publications, Chennai. Search for contact details at Siththan Arul or Web.

   Delete
  2. Sir I got amman publication contact address.
   My patent was very sick so that I want to go agasthiyar temple please give agastiyar temple address where did you got 'padagai'.now I am at madurai

   Delete
  3. The Temple is @ Balaramapuram, Thiruvananthapuram. It is on Nagerkoil-Trivandrum route.

   Delete
  4. அருள் மிகு அம்மன் பதிப்பகம்
   16/116, T.P.கோயில் தெரு,
   திருமலா ப்ளாட்ஸ்,
   (ஸ்ரீ ராகவேந்திரா மடம் எதிரில்)
   திருவல்லிக்கேணி, சென்னை - 600 005
   தொலைபேசி: 42663546, 42663545
   ஈமெயில்:arulmiguammanpathippagam@yahoo.com

   Delete
 11. Om Agatheesaya Nama.

  I'm from Malaysia. I would like to join for the above date on 9/8/2019 - 11/8/2019.. Have anyone planning to go for this prayer? If Yes, pls do contact me at praba_dida@hotmail.com or prabagar.ramasamy@gmail.com. I would like to go for this punniya trip.

  ReplyDelete
 12. Sri lopamudra samata agastiyar thiruvadi saranam.Ayya nambi malai enta iddatil ullatu.Bangaloreill irrutu vantal eppadi sella vandum.pls guide.ayy.

  ReplyDelete
  Replies
  1. Travel from Bangalore to Valliyoor. Go to Thirukurungudi and climb Nambimalai. Do not travel by Jeep from base to Top. You will have free bone problems. Walk the climb. Ok. If your get tired sit some where in shades and pray siddhars to come and help you. You have to experience it.

   Delete
 13. Sorry for the mistake.pls guide ayya

  ReplyDelete
 14. கலியுகத்தில் நாட்டு நடப்பு எவ்வாறு இருக்குகும் என்பது பற்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1604-1693) தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த ஸ்ரீவிராட் போத்தலூரி வீர பிரம்மேந்திர சுவாமிகள் என்பார், “சாந்திர சிந்து” என்னும் வேதமாகிய “காலக்ஞானம்” என்னும் தீர்க்கதரிசனத்தை 14,000 ஒலைச் சுவடிகளில் தெலுங்கு மொழியில் இயற்றி, அதை அவர் தங்கியிருந்த பனகானபள்ளி என்ற ஊரில் ஒரு புளிய மரத்தின் அடியில் புதைத்து வைத்துவிட்டு, அதில் கண்ட விஷயங்களை மக்களுக்குப் போதித்து வந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெலுங்கு மொழியில் தோன்றிய நூல்களில், அவர் கலியுகத்தின் தன்மை பற்றிக் கூறிய தீர்க்கதரிசனங்கள் இடம்பெற்றுள்ளன.

  ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் பங்கனபள்ளி நமது சேலத்து மாம்பழம் எப்படி பிரசித்தமோ அப்படி இந்த பங்கனபள்ளி மாம்பழம் ஆந்திராவில் மட்டுமின்றி மேலை நாடுகளிலும் பிரசித்தமானது தங்கம் போன்ற மஞ்சள் நிறத்தில் மெல்லிய தோலுடன் அதிக சதைப்பற்று கொண்ட சுவையான மாம்பழங்களுக்கு இந்த ஊர் பேர்போனது.இந்த ஊரில் மிகவும் புகழ் பெற்ற ஸ்ரீ வீர பிரமேந்திர சுவாமிகளின் கோவில் உள்ளது/ இவர் விஷ்ணுவின் அவதாரம் என்றும் சொல்வார்கள். கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலத்தில் நடக்கப் போவதை பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து கொண்டு கால ஞானம் என்ற நூலில் விவரமாக எழுதி வைத்தவர் இந்த சுவாமிகள்.

  ஆங்கிலேயர் காலத்தில் இது ஒரு குட்டி சமஸ்தானமாக இருந்தது. நவாப்கள் தான் இதனை ஆண்டு வந்தனர். சுவாமிகள் இங்கு 25 வருடங்கள் தங்கி இருந்தார். பலவிதமான அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். பங்கனபள்ளி நவாப் இவரை சோதிக்க விரும்பி சூல் கொண்ட ஒரு குதிரையை சபைக்கு கொண்டுவந்து அதன் வயிற்றில் உள்ளது ஆணா? பெண்ணா? என சுவாமிகளைக் கேட்டார். அதற்கு சரியாக பதில் சொன்னதோடு தனது ஞானத்தின் மகிமையால் குருட்டுப் பையனுக்கு பார்வை அளித்தார். இதையெல்லாம் பார்த்து மகிழ்ந்த நவாப் ஸ்ரீ வீர பிரமேந்திர சுவாமிக்கு பங்கனபள்ளியில் கோவில் கட்ட 50 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார்.இன்றும் அந்த மடம் அங்கு உள்ளது பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர் மொத்தம் 4,32,000 பனை ஓலைகளில் முக்காலத்தையும் கணித்து எழுதியவை இந்த மடத்தின் கிழே ஒரு மரப் பெட்டியில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளது.ஸ்ரீ வீரப்பிம்மம் – உலகத்துக்கு அன்று எடுத்துரைத்த காலஞானம் இன்று நடந்து கெண்டு இருக்கின்றது.


  ReplyDelete
 15. Hello Pavithra Madam

  பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் 5.15 PM train ல் வள்ளியூருக்கு பதிவு செய்து கொள்ளவும். சரியாக காலை 7.00 மணிக்கு வள்ளியூர் சென்றுவிடலாம். வள்ளியூர் railway STATION ல் இருந்து ஒரு ஆட்டோ பிடித்து பஸ் நிலையம் செல்லவும். அங்கிருந்து திருக்கருங்குடி செல்லும் பேருந்து பிடித்து police station bus stop ல் இறங்கவும். பிறகு ஒரு ஆட்டோ பிடித்து நம்பிமலை அடிவாரம் வரை சென்று இறங்கவும். அடிவாரத்தில் இருந்து நம்பிமலை கோவிலுக்கு சுமார் ஒரு 7 KM தொலைவு தூரம். நல்ல ஒரு அருமையான இறை அனுபவத்தை பெறலாம். Am also from Bangalore. இந்த முறை நானும் செல்ல எண்ணி இருக்கிறேன்.

  வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம்

  இப்படிக்கு
  ஜெயராமன், பெங்களூர்
  E-Mail: jayaram.vee@gmail.com

  ReplyDelete
 16. மதிப்புட்குரிய அய்யா வணக்கம் , போகர் சித்தர் பூஜை பழனியில் நடப்பது காலை வேலையில அல்லது மாலை நேரத்தில.
  யாராவுது தகவல் இருந்தால் தெரிவிக்கவும் .

  ReplyDelete