​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 7 March 2019

சித்தன் அருள் - 798 - ஒரு விண்ணப்பம்!

[கல்யாண தீர்த்தத்தில் குருநாதர், அம்மா, - பழைய படம்]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஒரு விண்ணப்பத்தை உங்கள் முன் வைக்கலாம் என்கிற எண்ணத்தில் இதை தெரிவிக்கிறேன்!

கல்யாண தீர்த்தம், பாபநாசத்தில், லோபாமுத்திரை அம்மாவின் சிலாரூபத்தை மாற்றி நிறுவ வேண்டிய சூழல் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இன்றைய தினம், அல்லது இந்த தொகுப்பை வாசிக்கும் அந்த நொடியில், ஒரு நிமிடம் மௌனமாக அகத்தியப்பெருமானிடம், அம்மாவின் சிலையை நிறுவ எல்லா அருளையும் வழங்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள். உண்மையான பிரார்த்தனையை விட உயர்ந்தது இவ்வுலகில் எதுவும் இல்லை என்று நமக்கு அருள்வாக்கு தந்த அகத்தியப் பெருமானிடமே நம் பிரார்த்தனையை சமர்ப்பிப்போம்!

வாருங்கள்! பிரார்த்தனையில் நம் அனைவரும் ஒன்று சேர்வோம்! விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அடியேன்!

சித்தன் அருள்.............. தொடரும்!

6 comments:

  1. ஓம் லோபாமுத்ரா சமேத அகஸ்தியர் அய்யா திருவடிகள் போற்றி போற்றி
    ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி போற்றி. ஓம் விநாயக சித்தனே போற்றி போற்றி
    ஓம் நமக்குமராய் போற்றி போற்றி
    ஓம் பதினெண் சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி. ஓம் எண்ணில் அடங்காத சித்தர்கள் தேவர்கள் முனிவர்கள் திருவடிகள் போற்றி போற்றி. அடியேனும் வேண்டிக்கொண்டேன் அய்யா.

    ReplyDelete
  2. நான் கேள்வியுற்ற வகையில் அங்கு சிலை தயாராகி விட்டது, ஆனால் வனத்துறையின் அனுமதி தான் கிடைக்கவில்லை போலும், ஒருவேளை பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலை நிர்வாகம் செய்பவர்கள் மூலமாக முயற்சி செய்தால் சீக்கிரம் நிர்வப்படலாம்.

    ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  3. We will get good news soon Sir.

    ReplyDelete
  4. Prayed to Ayya and Amma, Lord Ganapathi to bless the events through out.

    ReplyDelete
  5. ஐயா... அருள்மிகு மூத்தோனையும் ...அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்ரா தாய் மற்றும் எல்லா தெய்வங்களையும் ஏக இறைவனையும் பிராத்தனை செய்து கொண்டோம் ஐயா...

    ReplyDelete
  6. அப்பன் ஈசன் ‌‌அய்யன் ‌‌‌‌பெருமாள் அனுக்கிரகமும் அகத்தியர் ஆசியும் இந்த காரியத்தில் வெற்றி உறுதி செய்து தரும் படி வேண்டுகிறேன்...

    ReplyDelete