​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 8 March 2019

சித்தன் அருள் - 799 - அடியவர்கள் பிரார்த்தனையை அகத்தியர் நிறைவேற்றினார்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று அகத்தியர் அடியவர்கள் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்பதை மறுக்கவே முடியாது.

ஆம்! கல்யாண தீர்த்தம், பாபநாசத்தில், அம்மா லோபாமுத்திரை தாய் வந்து அகத்தியப் பெருமான் அருகில் நின்றுவிட்டார். அம்மாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அபிஷேகமும் ஆகிவிட்டது.

முன் இருந்த சிலை பின்னமானது என்று அறிந்தது முதலே, ஒரு தாங்கமுடியாத வருத்தம் மனதுள் இருந்தது என்பது உண்மை. கடைசியாக ஒருமுறை அங்கு சென்று தரிசனம் செய்த பொழுது, அகத்தியப் பெருமானிடம் , "இனி என்று அம்மா உங்கள் அருகில் வந்து நிற்கிறார்களோ, அதற்குப் பிறகுதான் உங்களுக்கு, இங்கு வந்து பூஜை செய்வேன்" என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

இன்று அதற்கான நேரம் வந்துவிட்டது. ஒரு வாரத்திற்கு முன்னரே, நாடியில் அகத்தியரிடம் சிலை பிரதிஷ்டை பற்றி யாரோ கேட்க, வந்த பதிலின் புகைப்படத்தை இங்கு தருகிறேன். வாசித்துப் பாருங்கள்.இன்று அதிகாலை ப்ரம்ம முகூர்த்தத்தில், இதை பற்றி வினவ, இன்று பிரதிஷ்டை நடக்கும் என்றும், ஆனால் 10.30க்குப்பின் கல்யாண தீர்த்தத்தில் அவர் வந்து அமர்ந்தபின் தான் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை 10.33க்கு அவர் உத்தரவுப்படி சிலா ஸ்தாபனம் நடைப்பெற்றது.

பின்னர் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அப்பொழுது எடுக்கப்பட்ட ஒரு சில படங்களை உங்கள் பார்வைக்காக தருகிறேன்.
அடியேனின் வேண்டுகோளுக்கிணங்க பிரார்த்தனை செய்த அடியவர்களுக்கும், அதை அருளிய அகத்தியப் பெருமானுக்கும், வந்து அமர இசைந்த ஸ்ரீ லோபாமுத்திரா தாய்க்கும், உங்கள் அனைவரின் சார்பாகவும், சித்தன் அருள் சார்பாகவும், சிரம் தாழ்ந்த நன்றி வணக்கங்களை, நமஸ்காரத்துடன் சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா "சமேத" அகத்தீஸ்வராய நமஹ!

சித்தன் அருள்................... தொடரும்!

12 comments:

 1. Om Agastheesaya Namaha !!!
  Om Agastheesaya Namaha !!!
  Om Agastheesaya Namaha !!!

  ReplyDelete
 2. சந்தோசமாக உள்ளது ............

  ஓம் அகத்திசாய நம

  ReplyDelete
 3. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா "சமேத" அகத்தீஸ்வராய நமஹ!

  ReplyDelete
 4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் லோபமுத்திரை தாயே போற்றி போற்றி போற்றி

  ReplyDelete
 5. அன்னம் ஐயா,
  குரு பிரான் கருணையும், தாயின் கருணையும் அளவில்லாதது. அவர்களின் தெய்வீக தரிசனம் இந்த உலகுக்கு நன்மை அளிக்கவே அமைந்து உள்ளது. இயற்கை சீற்றம் குறைந்து உலகம் நலம் பெற அவர்களின் ஆசி பரி பூரணமாக அமைய அருள் புரியட்டும். அப்பா போற்றி! அம்மா போற்றி!.நன்றி ஐயா.

  ReplyDelete
 6. very much pleased to have this good news.
  Om lopamudra sameth agastheesay namah

  ReplyDelete
 7. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா "சமேத" அகத்தீஸ்வராய நமஹ!

  ReplyDelete
 8. Om agatheesaya Nama, please kindly inform me the the place where naadi reading, phone or address please, thanking you

  ReplyDelete
 9. குரு பாதங்கள் சரணம் ஐயா
  அய்யனுக்கும் அம்மைக்கும் நன்றி...

  ReplyDelete
 10. Om Sri lopamudra samateAgastiyar potri.Asram add details godutatharku nandri.nanum JP Nagar eighth phase.

  ReplyDelete
 11. மிக்க மகிழ்ச்சி... குருவிற்கு வணக்கம்... அன்று என்னுடைய வேண்டுதல் "முன்பை விட பெரிய வடிவத்தில் அம்மையும் அப்பனும் வேண்டும்" என்பது... புகைப்படங்கள் பார்த்தால் அப்படி தான் தெரிகின்றது.. ���� அடியவரின் கோரிக்கை நிறைப்பெற்றதாக எண்ணுகிறேன்...

  ReplyDelete
 12. Ohm shri Lopamudra samaeta Agastiyar Potri
  Iam regular reader of Sitan Arul but aged 75 .
  Pls let me know anyone reading JEEVA NAADI in Tamil Nadu.
  I tried Kallar it seems only On phone people are getting appointment served
  Not for E mail seekers .
  Since Iam totally Become DEAF unable to contact on phone.
  I have read the entire contents of this site over months.
  I pray only inwards daily for Sidhhar Arul.

  ReplyDelete