​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 20 December 2018

சித்தன் அருள் - 783 - அகத்தியப் பெருமானின், திருநட்சத்திரம்!


வணக்கம் அடியவர்களே!

இந்த மாதம் 26ம் தேதி (மார்கழி மாதம்) அகத்தியப் பெருமானின் ஆயில்ய திரு நட்சத்திரம் வருகிறது. அகத்தியப் பெருமானின் கோவில்களிலும், வேறு பல புண்ணியத் தலங்களிலும் அவருக்கான அபிஷேக பூஜைகள் மிகச் சிறப்பாக நடக்கவுள்ளது. வலைப்பூவில் தேடிப்பார்த்தால், எங்கெல்லாம் பூசை நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

அகத்தியர் அடியவர்கள் அனைவரும், அருகில் எங்கேனும் அகத்தியருக்கு பூஜை நடந்தால், சென்று பங்கு பெற்று, உங்களால் முடிந்த உதவிகளை, உழவாரப் பணிகளை செய்யுமாறு, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். காலம் சற்று சுகவீனம் அடைந்துள்ளதால், தர்மமும், புண்ணிய கர்மாவும் குறைந்துவிட்டதாக தகவல். அகத்தியரின் அடியவர்களாகிய நாம் அதை மெருகுபடுத்த, அவரின் உத்தரவின் பேரில், அன்றைய தினம், குறைந்தது நல்ல வேண்டுதல்களை வைக்க வேண்டும், லோகம் க்ஷேமமாக இருக்க வேண்டும் என பிரார்த்திப்போம்.

மேலும், அந்த நாள் இந்த வருடத்தில் கூறப்பட்ட, பாபநாச ஸ்நான காலம் மார்கழி மாதத்தில், தொடங்கிவிட்டது. உங்கள் வசதிக்கு ஏற்றபடி, என்றேனும் ஒருநாள், சென்று, ஸ்நானம் செய்து, இறைவனை தரிசித்து வாருங்கள், என வேண்டிக்கொள்கிறேன்.

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது, என. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் உளம் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2018 முதல் 14/01/2019க்குள் வருகிறது. 

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்

கோடகநல்லூர் தொகுப்பை, தனியாக விரைவில் தருகிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் நமஸ்காரம்!

சித்தன் அருள்........................ தொடரும்!

16 comments:

 1. அகத்தியர் ஆயில்ய நட்சத்திரம் மா ??? loll முட்டாள்தனத்தின் உச்சம் !!


  சிவன் செய்த யாகத்தால் அகத்தியர் தோன்றினார் , அவர்க்கு நாள் நக்ஷத்திரம் எல்லாம் இல்லை...


  பிரவீன்.

  ReplyDelete
 2. வணக்கம் பிரவீன்!

  எதையும், எந்த ஒரு நல்ல செயலையும், இகழ்வது கூடாது என நமக்கு சொல்லித்தந்ததே அகத்தியப் பெருமான். உங்கள் எண்ணப்படி, அகத்தியருக்கும், நட்சத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறீர்கள். சிவன் அருளினால் அவர் தோன்றினாலும், காலத்துக்குள், ஒரு திதி நடக்கும் பொழுது, ஒரு நட்சத்திரம் ஆளுமையில் உள்ள பொழுது தான் ஒரு ஆத்மா உருவாக்கப்பட்டிருக்கும், அல்லது இறைவனிடமிருந்து பிரித்து விடப்பட்டிருக்கும். ஒரு புல்லை கூட முளைக்க வைக்கும் தகுதி இல்லாத மனிதனுக்கு, நாள், தேதி, கிழமை, ஊர், காலம் என வரிசையாக அனைத்தும் இருக்கும் பொழுது, மிக உயர்ந்த நிலையில், குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவருக்கு, நட்சத்திரம் கூடவா இருக்காது? இன்னொரு விஷயம் தெரியுமா? பூமியில், இறைவனே அவதாரம் எடுத்தாலும், பூமியின் சட்ட திட்டங்களுக்கு, அவனும் அடிமையாக இருந்துதான் ஆகவேண்டும். உதாரணமாக, கிருஷ்ணர், ராமர் அவதாரங்களை கூறலாம்.

  உண்மையாக புரிந்து கொள்பவர்கள், அமைதியாக இருப்பார்கள். வார்த்தைகள் சிதறாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நாளில், சேய்கள் நல்லதை செய்திட, அது உலகத்தின் நன்மைக்கு பலம் கூட்டும். அப்படியாக ஒன்று நடந்து விட்டு போகட்டுமே என்கிற எண்ணத்தில் தான் இதனை பூஜைகள், த்யானம் எல்லாம் ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.

  சித்த மார்க எளிய அறிவுரைகளில் கூறப்பட்ட விஷயத்தை இங்கு உங்களுக்கு மறுபடியும் தெரிவிக்கிறேன்.

  "தமிழே முருகன்! அதை மிக கவனமாக உபயோகப்படுத்துங்கள்"

  "என்றும், நல்ல விஷயங்களில், பிறர் நம்பிக்கையை தகர்க்காதீர்கள்"

  அக்னிலிங்கம்!

  ReplyDelete
 3. I am going to write the tnpsc group 3a gr 8, I will give half of my first month salary to agasthiyar. SIR PLEASE prey for me

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   எல்லாம் அகத்தியர் அருளால், நல்ல படியாக நடக்கும். கவனம் நீங்கள் செய்ய வேண்டியதில் மட்டும் இருந்தால் போதும்!

   அக்னிலிங்கம்!

   Delete
 4. Migavum sariyaga soneergal Ayya. Nam pumiyil pirantha anaivarukum natchithiram undu enbathodu athanpadiyae avarkalai Vangi varukirom. Enagaluka Agathiyarin Ayilya natchitra avatharathai pathivaga thanthal Nalam.

  ReplyDelete
 5. Thamila Murugan Migavum Sari Ayya. Ungal Blog in Copy right section il miga azhaka Elluthi irrupeerkal Ayaa . Sithan arulai thodarvatharku Athuvum Oru Karanam ayya. Oh Agatheesaya Namaha.

  ReplyDelete
 6. Sir
  Please refer 26 DEC 2016, I ask you if any sidha medicine for pus formed at my dad s left leg due sugar, Now he was almost cure by agasthiyar
  I fell his blessing when my father admit at Apollo ICU.
  That time there is no money on my hand due to demonetization
  And my father health condition become very worst.at that time prayer only
  one way for me.I follow agasthiyar instruction (which is published agasthiyar arul vakku dina thanti news paper 2008 )

  ReplyDelete
 7. Method of preying for recover all type of diseas was published at dina thanti agasthiyar arul vakku section.I just follow these
  Agasth

  ReplyDelete
  Replies
  1. Can you tell us what is that prayer. Will be useful for many people. Thanks

   Delete
  2. Can you tell us what is that prayer. Will be useful for many people. Thanks

   Delete
 8. All advice all agasthiyar will help u at the time of struggle. If u have god blessings. Thank you

  ReplyDelete
 9. விமானங்களுக்கு தகப்பன் ஸ்தானத்திலிருந்துசேய்க்கு ஓங்கி குட்டியும் அன்பாய் தடவியும் தந்த பதில் அருமை

  ReplyDelete
 10. http://tut-temple.blogspot.com/2018/12/26122018_22.html
  Thanks ayya
  Raakesh
  Guduvancheri

  ReplyDelete
 11. may i know ethod of preying for recover all type of disease was published at dinathanti agasthiyar arul vakku section

  ReplyDelete
  Replies
  1. agasthiyar says for all health related issues chant Dhanvantri mantra . in that same article one of his devotee ramanathan mother is ill for many years , by his grace sage himself stayed in his house chanted mantra and dhanvantri got pleased by this and gave good health and extra 20 yrs lifespan .

   last time when i went to ganesan nadi sage advised me to chant dhanvantri mantra every might for an hour ....

   Delete
 12. @usha rani- Replace word " might" with NIGHT . sorry for typo ....

  ReplyDelete