[ கலச பூஜை ]
[அகத்தியர் அடியவர்கள் ]
[ பூஜைக்காக காத்திருக்கும் அகத்தியர் அடியவர்கள் ]
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
தாமிரபரணி நதிக்குள் இறங்கி செல்லும் பொழுதுதான் ஞாபகம் வந்தது, தாமிரபரணி தாய்க்கும், அகத்தியர் லோபாமுத்திரை பெற்றோருக்கும், நெற்றி மண்ணில் பட்டு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவில்லை என்று. எப்பொழுது, தாமிரபரணியில் ஸ்நானம் செய்தாலும், மூச்சடக்கி, நீரின் அடியில் சென்று, இரு கரம் முன் நீட்டி, உடல் மண்ணில் பட பல முறை நமஸ்காரம் செய்கிற பழக்கம் உண்டு. சிலவேளைகளில், தாமிரபரணித்தாயே, வேகத்தில் செல்கிற பொழுது, எத்தனை முறை முயற்சி செய்தாலும், நெற்றி மட்டும் பூமியில் படும் அன்றி, நீரின் வேகம், உடலை மேல்பரப்பை நோக்கி தள்ளிவிடும். இம்முறை, நீர் ஓட்டம் அதிகமாக இருந்தாலும், நீரின் அடியில் சென்ற பொழுது, இதமான வேகமாக இருந்ததை உணர்ந்து, இது தான் தருணம் என பலமுறை சாஷ்டாங்கமாக நெற்றி பட நமஸ்காரம் செய்தேன். மனதுள் ஒரு சில எண்ணங்கள் தோன்றியது. அவற்றை கோர்த்து, மந்திர ஜபம் செய்து தாமிரபரணி தாய்க்கு காணிக்கையாக்கினேன்.
"உன் குழந்தைகள், எத்தனையோ பிரச்சினைகளுக்கிடையில், உனக்கான புஷ்கர பூசையை, எங்கிருந்து எல்லாமோ வந்து நடத்துகிறார்கள். அதை ஏற்றுக்கொண்டு, அத்தனை பேரின் வாழ்விலும், இன்பத்தை அளித்திடு. இன்றைய தினம், புஷ்கரத்தினூடேயே அகத்தியப்பெருமான் பெருமாளுக்கு நடத்துகிற பூசையும் நடக்கப்போகிறது. எல்லாம் சிறப்பாக அமைய, நீ அருள வேண்டும். உன் ஆசிர்வாதம் வேண்டும்!" என பிரார்த்தித்தேன்.
நீண்ட நேரம் நீருக்கடியில் இருந்ததால் மூச்செடுப்பதற்காக நீரின் மேல் பரப்பிற்கு வந்து கண் மூடி த்யானம் செய்து நின்றேன். நின்ற இடத்தில் மார்பு வரை நீர் ஓடிக்கொண்டிருந்தது. வேறு யாரும் அருகில் இல்லை. தியானத்தை கலைத்தபடி, ஏதோ ஒன்று மார்பில் முட்டியது. கண் விழித்து பார்க்க, ஒரு அரை முழம் பூ மார்பில் தட்டி மேலும் முன்னுக்கு போக முடியாமல் தவித்தது. இரு கரங்களினால் அதை கையில் எடுத்துப்பார்க்க, அப்பொழுது பூசை செய்ய உபயோகப்படுத்திய பூ போல் தோன்றியது. சரி! தாய் அனைத்திற்கும் பதில் கொடுத்துவிட்டாள்! இனி பூசைக்கு செல்வோம் என் தீர்மானித்து, கரை ஏறும் பொழுது "இந்தா! தாமிரபரணித்தாய் கொடுத்த பூ! தலையில் சூடிக்கொள்!" என மனைவியிடம் கொடுத்துவிட்டு, கரை ஏறினேன்.
அகத்தியர் லோபாமுத்திரை தாயின் விக்கிரகங்களை சுமந்த படி தங்கியிருந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.பொதுவான விஷயங்கள் அனைத்தும் அதனதன் நேரத்தில் நடப்பதை கண்டு, அகத்தியரும், பெருமாளும், எல்லா விஷயங்களையும் அதனதன் நேரத்துக்கு கொண்டு தருகிறார்கள், பூசை விஷயத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என அமைதியானேன்.
கோவிலுக்கு வந்த பொழுது, நான்கு விக்கிரகங்களும் மண்டபத்தில் தூணுக்கு அருகில் அமர்ந்திருந்தது. விக்கிரகங்களை கீழே தரையில் வைக்கக்கூடாது என்று தீர்மானித்து, அடியேனுக்கு ராமானுஜரிடமிருந்து கிடைத்த காவித்துண்டை, விரித்து அதன் மீது வைக்கச் சொன்னேன்.
அகத்தியர் அடியவர்களுக்காக, தயார் செய்யப்பட்ட பொங்கல், பெருமாளின் நிவேதனத்துக்குப் பின் கோவில் வாசலில் வைத்து கொடுக்கப்பட்ட்டது. வந்திருந்த நிறைய பேருக்கு பெருமாளின் பிரசாதம் பெரும் பாக்கியம் கிடைத்தது. கோவிலில் நல்ல கூட்டம் இருந்ததால், பூசை தொடங்க நிறைய நேரம் ஆகும் எனது தோன்றியது.
இதற்கிடையில், அர்ச்சகரை கண்டு, ஐந்து குடங்களையும், மூன்று அண்டாக்களையும் கடன் வாங்கினேன்.
ஒரு குழுவை உள்ளே அனுப்பி, பெருமாளின், தேசிகர் மேடையை தூக்கி வரச்செய்து, வெளியே மண்டபத்தில் போட்டு, சுத்தம் செய்ய வேண்டினேன். ஒரு சிறு குழு மின்னல் வேகத்தில் அந்த வேலையை முடித்தது. அபிஷேக தீர்த்தம் வெளியே செல்ல வேண்டிய குழாய்களை போட்டு, மேடைகளுக்கு நான்கு புறமும் சுத்தம் செய்து மாக்கோலம் போடப்பட்டது.
வந்திருந்த நிறைய அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து, பஞ்சாமிர்தம் செய்வதற்காக அமர்ந்தனர். அதில் பலரும், ஞாபகம் வைத்திருந்து, கனியை நறுக்குவதற்கு, கத்தி வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தது, ஆச்சர்யமாக இருந்தது.
குடத்தை முதலில் அங்கு வந்திருந்த அகத்தியர் அடியவர்களில் ஐந்து பேரிடம் கொடுத்து, நதிவரை சென்று பெருமாளுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்து கொண்டு வந்து, இந்த மூன்று அண்டாக்களில் நிரப்ப முடியுமா! என்று வினவ, உடனே முன் வந்தனர். ஒரு குடம் நீர் விட்டதும், குடத்தை அடுத்த அகத்தியர் அடியவருக்கு கொடுக்க வேண்டும். இதனால் நிறைய பேருக்கு, அபிஷேக தீர்த்தம் கொண்டு விடுகிற வாய்ப்பு அமையும், என கூறி நதிக்கரைக்கு செல்லச்சொன்னேன்.
அடுத்ததாக, யாரெல்லாம் சுற்று விளக்கு போட வருகிறீர்கள், என வினவ, ஒரு ஆறு பேர் வந்தனர். அவர்களிடம், சுற்று விளக்கை காண்பித்துவிட்டு, பெருமாளின் மண்டபத்தை காண்பித்து, அங்கும் விளக்கு போடவேண்டும் எனக்கூறி, அதற்கான சாமான்களை அவர்களிடம் கொடுத்தோம். மிகச்சிறப்பாக, விளக்கு போட்டனர். யாரெல்லாம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று விளக்கு போட்டவர்களுக்கு, பெருமாள் மிகச்சிறப்பான ஆசிர்வாதத்தை அளித்தார் என்பதை உணர முடிந்தது.
உள்ளே சன்னிதானத்தில், கூட்டத்தை ஒரு வழியாக சமாளித்து அனுப்பிவிட்டு 11 மணிக்கு அர்ச்சகர், பெருமாள், தாயார், தேசிகர் விக்கிரகங்களை அதனதன் இடத்தில் கொண்டு வந்து வைத்தார். எதேச்சையாக ஒரு சில விஷயங்களை அர்ச்சகரிடம் கொடுத்து பெருமாள் பாதத்தில் வைக்க வேண்டி சென்ற அடியவன், பெருமாள் இருந்த நிலையை கண்டு ஆனந்தத்தில் அசந்து போனேன். அகத்தியர் அடியவர்கள் கொண்டு வந்த மலை, பூ போன்றவற்றை தரித்து, அவர் முகம் பூரித்து போய், நின்றிருந்தார். அடடா! அகத்தியர் பூஜை செய்கிறார், என்றால், இப்படித்தான் தடாலடி போல. எல்லாம் மிகச்சிறப்பான நேரத்தில், சரியாக வந்து சேரும் போல. என்ன கேட்டாலும், பெருமாள் அப்பொழுதே கொடுத்துவிடுவார் என்று உள்மனம் கூறியது.
"ஏதாவது ஒன்று வேண்டுமானால் கேட்டு வாங்கிக்கொள்!" என்று கூறினாலே, நூறு விண்ணப்பத்தை கொடுத்துவிடும் பழக்கம், அடியேனுடையது. ஆனால் அந்த நேரத்தில் ஒரு விண்ணப்பம்தான் வந்தது.
"வந்திருக்கும் அகத்தியர் அடியவர்கள் சமர்ப்பிக்கிற வேண்டுதல்களை உடனேயே நிறைவேற்றி கொடுத்து, பத்திரமாக அவர்களை வீடு கொண்டு சேர்த்துவிடு!" என விண்ணப்பித்தேன். இதுவன்றி, வேறெதுவும், அடியேன் மனதில் தோன்றவில்லை.
திரு காளிமுத்து என்கிற ஒரு அகத்தியர் அய்யனின் அடியவர், சுத்தமான விரளி மஞ்சள் வாங்கி, நன்றதாக சுத்தம் செய்து, பொடியாக்கி கொண்டு வந்திருந்தார். அதை அர்ச்சகரிடம் கொடுத்து, பெருமாள் பாதம், மார்பு, கைகளில், தாயார் கைகளிலும், பாதத்திலும் சார்த்தி வைக்க கொடுத்தேன். அதையும், பெருமாள் மிக கனிவுடன் வாங்கி வைத்துக் கொண்ட காட்சியை மறக்கவே முடியாது.
பெருமாளிடம், நன்றி கூறி வெளியே வந்து பார்த்த பொழுது, மூன்று பாத்திரங்களிலும், தாமிரபரணி தீர்த்தம் நிரப்பப்பட்டுவிட்டது. கடைசியாக, ஐந்தாவது குடமும் நீருடன் வந்து சேர்ந்தது. நிமிர்ந்து பார்த்த பொழுது, அடியேனுக்கு வெகு பரிச்சயமான முகம்.
"என்ன? எத்தனை குடம் சுமந்தீர்கள்!" என்றேன்.
"ஒன்று தான்! அதற்கு மேல் வாய்ப்பில்லை. இந்த வாய்ப்பு கிடைக்க நிறையவே முயற்சி செய்ய வேண்டி வந்தது. அவ்வளவு பேர்கள் வரிசையில் நின்றார்கள். இதுவே பெரும் பாக்கியம்" என்றார்.
அர்ச்சகர் வந்து, அபிஷேக பூஜையை தொடங்குவதற்காக, அகத்தியர் அடியவர்கள், மிக அமைதியாக, த்யானம் செய்தபடி, ஜெபித்தபடி, மெதுவாக மந்திரம் கூறியபடி அமர்ந்திருந்தனர்.
ஒன்பது குடங்களில், கலச தீர்த்தம் வைத்து முதல் பூசையை அர்ச்சகர் தொடங்கிய பொழுது மணி 11.30.
தாமிர பரணி தீர்த்தமே, குடத்தினுள் விடப்பட்டது.
முதல் பூசையை ஆவாகனம், மந்திர ஜெபம் செய்து முடித்தவர், அடியேனை பார்த்து, தொடங்குகிறேன், என கண்களால் கூறினார்.
அபிஷேகத்துக்கு, அகத்தியர் அடியவர்கள் கொண்டு வந்த சாமான்களை பிரித்து அடுக்கி, ஒரு அகத்தியர் அடியவர், எடுத்து கொடுக்க தயாராக நின்றார்.
சுற்று விளக்கு போட்டுவிட்டு அந்தக் குழு வந்து அமர்ந்தது.
எல்லோரும் வந்துவிட்டார்களா? என ஒரு முறை சுற்று முற்றும் பார்த்துவிட்டு, அர்ச்சகரை நோக்கி "சரி" என தலையாட்டினேன்.
அகத்தியப் பெருமானின், அந்தநாள் >> இந்தவருட பூஜை தொடங்கியது.
சித்தன் அருள்................. தொடரும்!
Om lobamuthra amma samedha agasthiyar ayya thiruvadigal potri potri....Om othiyapar thiruvadigal potri potri potri..
ReplyDeleteஓம் அருள்மிகு பெருமாள் பாதங்கள் போற்றி போற்றி போற்றி
ReplyDeleteஓம் அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி
என்னால் அன்று அங்கு வர இயலவில்லை ஐயா ஆனால் என் மனம் அந்த இடத்தில் தான் இருந்தது....
வணக்கம்... ஐயா, உங்களின் நம்பிக்கை, தொண்டு,பிறர் மீது உள்ள கருணை,இதற்கு அடியேன் தங்களின் திருவடியை வணங்குகிறேன்... நீர் வாழ்க... நின் தொண்டுகள் வாழ்க... வளர்க ..
ReplyDeleteஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாயா நமக!
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ!ஓம் லோபா முத்திரை அம்மா திருவடிகள் போற்றி! ஓம் பூ தேவி நீலா தேவி சமேத ப்ரஹன் மாதவ பெருமான் துணை!
ReplyDeleteOm Agthisaya Namaha. Ungal Theaiviga anubavavangal engaluku Guruvin Vazhikatuthalai Therivikirathu. Nandri Ayya.
ReplyDeleteதொடர் கதையில் தொடரும் போல பதைபதைப்புடன் இருந்தேன்...அந்த ஒரு துண்டு பூ கிடைத்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தேன்.... இப்போது தான் நிம்மதி...
ReplyDeleteஅகத்தியர் மற்றும் தாமிரபரணி தாய்க்கும் நன்றி....
Ayya oru ayyam moksha Deepam pengalum etralaama ??
ReplyDeleteமோக்ஷ தீபம் ஏற்றுவதில், ஆண் பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் ஏற்றலாம்.
DeleteMikka nandri ayya 🙏🏻🙏🏻🙏🏻
Deleteமோட்ச தீப வழிபாடு பற்றி மேலும் அறிய கீழே உள்ள பதிவுகளை காணலாம்.
Deleteகார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 6/12/2018 - https://tut-temple.blogspot.com/2018/12/6122018.html
ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018 - http://tut-temple.blogspot.com/2018/10/7112018.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_7.html
முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_15.html
வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html
21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html
நன்றி
வணக்கம்.
குருவின் தாள் பணிந்து
ரா.ராகேஷ்
கூடுவாஞ்சேரி
Om Sri Annai Lobamudra sametha agatheesaya namah🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteMagalin manavazlkai nandrga amiya iyyanin ammavin asiyum ungalin asirvatamum Vendi nirkiran ayya.om agatisya padame saranam.
ReplyDeleteவணக்கம்!
Deleteஇறைவன், அகத்தியர் அருளால், நல்ல மணவாழ்க்கை அமையும். நீங்கள் செய்ய வேண்டியதில், கவனம் செலுத்துங்கள்!
அக்னிலிங்கம்!