​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 15 October 2018

சித்தன் அருள் - 771 - தாமிரபரணி புஷ்கரம் - கோடகநல்லூர்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கோடகநல்லூர் நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவ பெருமாள் சார்பாக 12-10-2018 முதல் 14-10-2018 வரை தாமிரபரணி தாய்க்கு, சிறப்பான புஷ்கர பூசை நடை பெற்றது. முதல் இரண்டு நாட்கள் தாமிரபரணி நதிக்கரையில் யாகம் முதலியவை செய்து, தாமிரபரணிக்கு பூஜை நடை பெற்றது. இரண்டாவது நாள், பெருமாளுக்கு கருட சேவையும் நடத்தப்பட்டது.  மூன்றாவது நாள் (14/10/2018) அன்று மதியம் பெருமாள் நதிக்கரையில் அமர்ந்து, தாமிரபரணி பூசை செய்தபின், அவருக்கு நதி தீர்த்தத்தால், அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த புஷ்கர விழாவை சிறப்பாக அமைத்திட வேண்டி, மூன்றாவது நாள் "தீர்த்தவாரி" என்கிற நிகழ்வும் நடந்தது. அந்த மூன்றாவது நாள் நிகழ்வை கண்டு, பங்கு பெறும் ஒரு வாய்ப்பு அடியேனுக்கு கிடைத்தது. 144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் புஷ்கர பூசை என்பதால், அதில் கலந்து கொண்டதே, இந்த ஜென்மத்தில் அடியேனுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கருதுகிறேன்.

கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில் சார்பாகவும் 10 நாட்கள் "தாமிரபரணி புஷ்கர" பூசை 21-10-2018 வரை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அங்கு வரும் அடியவர்களுக்கு, அனைத்து வசதிகளும், அந்த கோவில் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14-10-2018 அன்று கோடகநல்லூர் வந்து சேர முடியாதவர்கள், 21-10-2018க்குள் ஏதேனும் ஒருநாள் சென்று ஸ்நானம் செய்து, இறைவனை தரிசித்து பேறுபெறலாம்.

14-10-2018 அன்று பெருமாள் தீர்த்தவாரியின் பொழுது எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

[பெருமாள் கருட சேவை]

[ சிவபெருமான் கோவில் படித்துறை]

[புஷ்கர விழாவிற்கு எழுந்தருளும் பெருமாள்]

[ பெருமாள்கோவில் படித்துறை- தீர்த்தவாரி]

[ அடியவர்கள் ]

[அடியவர்கள் - புஷ்கர தீர்த்தாடலுக்காக வந்தவர்கள்]


வருகிற 22/10/2018 அன்று, கோடகநல்லூர் ப்ரஹன் மாதவப் பெருமாள் கோவிலில், அகஸ்தியர் அடியவர்கள் ஒன்று கூடி செய்கிற பெருமாளுக்கான, அகஸ்தியரின் பூஜை நடக்கவுள்ளது. அந்தநாள் > இந்த வருடம், தாமிரபரணி புஷ்கர பூசை நிறைவு பெறும் 24ம் தியதிக்குள்ளேயே வருவதால், இப்பொழுது வர முடியாமல் தவித்த அகத்தியர் அடியவர்கள், அன்றைய தினம், பூசையில் கலந்து கொண்டு, இரண்டு பலன்களையும் பெறலாம்.

சித்தன் அருள்................ தொடரும்!

     

6 comments:

  1. ஓம் ஸ்ரீ அகஸ்தியாய நமஹ.
    உங்கள் புண்ணியத்தால் நாங்களும் கண்டு களித்தோம். மிக்க நன்றி ஐயா.
    அகஸ்தியர் அடியவர் எல்லோருக்கும் எனது பணிவான வணக்கம்

    என்றும் அன்புடன்
    வெங்கடேஷ்

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி

    ReplyDelete
  3. நமஸ்காரம்... அடியேனும் அங்கு பங்கு கொண்டேன்...
    ஆனந்த தரிசனம் பெற்றேன்..... சுவாமி படித்துறையில் அபிசேகம்
    நடக்கும்போது நதியில் இருந்து தரிசனம் செய்தது மறக்க முடியாதது....
    நன்றி... தீர்த்தவாரி பற்றிய பதிவிற்கு நன்றி...

    ReplyDelete
  4. ஐயா வணக்கம் .கோடகநல்லூரில் 22/10/18 அன்று நடைபெறும் பூஜைக்காக வர விரும்புகிறேன். முந்தைய நாள் 21/10/18 வந்து தங்க அகத்தியர் அடியவர்களுக்கு இடவசதி இருக்கின்றதா. ..அது தொடர்பாக தொடர்பு எண் இருந்தால் தரவேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்குவதற்கு, தனிப்பட்ட ஏற்பாடுகள் என எதுவும் அங்கு இல்லை. நதிக்கரை திண்டு, கோவில் திண்ணை அல்லது, கோவில் நிர்வாகம் அனுமதித்தால், கோவில் வெளிப்பிரகாரம், தங்குவதற்கு அமையலாம். அதுவும் வெளிப்பிரகாரம், உறுதி கூற முடியாத ஒன்று.

      Delete
  5. மிக்க நன்றி. .

    ஓம் அகத்தீசாய நமஹ. .

    ReplyDelete