ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!
வருகிற திங்கட்கிழமை, 22/10/2018 அன்று, அந்தநாள்>>இந்த வருடம் - 2018 - கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் பெருமாளுக்கு அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி, வருடத்தில் ஒரே நாளான ஐப்பசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரம், திரயோதசி திதி அன்று, பெருமாள், அகத்தியர் அருளுடன், செய்கிற அபிஷேக பூசை நடக்கவிருக்கிறது. "அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூ வாசகர்களுக்கு, இந்த நிகழ்ச்சி அறிமுகமான ஒன்று.
அந்த நாளை பற்றி சுருகங்கக்கூறின் "எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள். அகத்தியர் அடியவர்களுக்கு, நல்ல அனுபவங்களை நிறைய கொடுக்கிற நாள். எளிமையாக இருந்தாலும், அன்று அங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவரவர் பிரச்சினைக்கு, தீர்வு அருளுகிற நாள்." என இப்படி எத்தனையோ விஷயங்களை கூறலாம்.
இத்தகு பெருமை வாய்ந்த அந்த நல்ல நாள் அன்று, உங்களை அனைவரையும், கோடகநல்லூருக்கு வந்து பெருமாளின், அகத்தியப் பெருமானின் அருளுக்கு பாத்திரமாகி, இனிமையாக வாழ்ந்திட வேண்டிக்கொள்கிறேன்.
சென்ற வருடம் போல், ஏதேனும் உழவாரப் பணி செய்கிற வாய்ப்பு கிடைத்தால், முடிந்தவரை ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும் வேண்டிக்கொள்கிறேன்.
அனைவரையும், அகத்தியப்பெருமானும், பெருமாளும் காத்து அருளட்டும் என பிரார்த்தித்துக் கொண்டு, "சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகளை" அடுத்த வாரம் தருகிறேன், என தெரிவித்துக் கொள்கிறேன்.
கோடகநல்லூருக்கான சித்தமார்கம் - திருநெல்வேலி >> சேரன்மாதேவி வழி தடத்தில் "நடுக்கல்லூரில்" இறங்கி, ஒன்றரை கி.மி நடந்து வந்தால், கோவிலை அடைந்து விடலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
சித்தன் அருள்.................. தொடரும்!
which time we have to be there,Iyya?
ReplyDeleteAnytime before 10.00 AM on 22/10/2018
Deleteஐயா தங்களிடம் ஒரு வேண்டுகோள் சண்முகம் மூலம் நட்சத்திரம், பொன்னுசாமி உத்திராடம் என் தந்தை, என் மாமனார் இருவர் குடும்பத்திற்கும் இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்...நன்றிகள் ஐயா
ReplyDeleteஐயா, நான் 3 கிலோ மஞ்சள் பொடித்து வைத்துள்ளேன்.
ReplyDeleteநேற்று முதல் முதலாக தரிசனம் பெற வந்தோம். அதில் உழவாரம் செய்ய நம் பெருமாள் பணித்தார். சித்தன் அருள் ஆசி பெற்றோம்.
ReplyDeleteஇன்னும் நீங்கா நினைவுகளாக உள்ளது. எப்போது வாய்க்குமோ என்று ஏங்கிய தருணம் நேற்று கோடகநல்லூரில் கிடைத்தது.
அகத்தியர் அடியார்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.நேற்றைய உழவாரத்தின் சில துளிகள் இங்கே.
https://www.facebook.com/thedalullathenikalaai/posts/1167693730053807
குருவருளால் என்றும் நன்றியுடன்,
ரா.ராகேஷ்
கூடுவாஞ்சேரி
http://tut-temple.blogspot.com/
Om Lopamudramata samet Agatheesaya Nama
ReplyDeleteநன்றிகள் ஐயா
ReplyDeletehttp://tut-temple.blogspot.com/2018/12/blog-post_7.html