​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 12 April 2018

சித்தன் அருள் - 752 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

மறுபடியும், உங்கள் முன் ஒரு தொகுப்பை சமர்ப்பிக்க வாய்ப்பு (அது ஒன்றுதான் இத்தனை நாட்களாக இல்லாமல் போனது) கொடுத்த குருநாதர் அகத்தியப் பெருமான், ஸ்ரீ லோபாமுத்திரை தாய் பாதங்களை வணங்கி இந்த வாரம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சமீபத்தில், சித்த மார்கத்தில் சிறந்து விளங்கும் ஒரு சில "வாசி யோகிகளை" சந்தித்து, மிக நீண்ட கலந்துரையாடலில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. மனித வாழ்வின் அத்தனை நிகழ்வுகளுக்கும், அவர்களிடம் மிகத்தெளிவான விடை இருந்தது. அகத்தியர் அருள்வாக்கில் நிறையவே கற்ற விஷயங்களை கேள்வி கணைகளாக்கி அவர்களிடம் சமர்ப்பித்தேன். அத்தனை கேள்விகளையும் எதிர் கொண்டு அவர்கள் பதில் அளித்த விதம், பிரமிப்பாக இருந்தது. இவைதான் உண்மை! புரிந்துகொள்! என உச்சி மண்டையில் ஒரு குட்டு வைத்து வகுப்பெடுத்தனர்.

அடியேன் என்னவோ, நாம் அனைவரும்தான் "அகத்தியர் அய்யன் பைத்தியங்கள்" என்று நினைத்திருந்த நேரத்தில், "பைத்தியத்தில்" கூட பல நிலைகள் உண்டு, அதுவும் இவர்களைப்போன்றவர்கள், "மிகத் தெளிவான பைத்தியங்கள்" என்கிற நிலையை அடைந்தவர்கள், என உணர்ந்தேன்.

கலந்துரையாடல் நடந்த பொழுதே, அரிய விஷயங்களை மிக எளிதாக அவர்கள் விளக்கிய பொழுதே, "சரிதான்! நாம் புரிந்து கொண்டது ஒன்றுமில்லை, இவர்கள் நம்மை இன்று ஒரு வழி பண்ணப்போகிறார்கள்" என்றுணர்ந்து, ஒவ்வொரு தலைப்பையும் மனதுள் உருப்போட்டு, கேள்வியாக மாற்றி அவர்கள் முன் சமர்ப்பித்தேன். வந்த பதில்/சரியான வழி காட்டுதலை ஒவ்வொன்றாக (வாரம் ஒரு தலைப்பாக) சித்தன் அருளில் தருகிறேன்.

இந்த வார தலைப்பு "பிரார்த்தனை"

அடியேனின் கேள்வி: "அய்யா, அகத்தியப் பெருமான் "பிரார்த்தனையை" விட மிகச்சிறந்த, உயர்வான விஷயம் இந்த உலகில் இல்லை" என்று உரைத்துள்ளார். இதை விரிவாக கூறுங்களேன்!" என்றேன்.

அவர்கள் அனைவரின் பதிலையும் ஒன்று சேர்த்துள்ளேன்.

"இறைவன், ஒரு மனிதன் தன்னை, தன் கர்மாவை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக அளித்த வரம்தான் "பிரார்த்தனை". இதை இரு வகையாக பிரிக்கலாம். 1.பிரார்த்தனை - தனக்காக; 2. பிரார்த்தனை - பிற ஆத்மாக்களுக்காக. இந்த கலியுகத்தில், 95% பேரும் தனக்காக வேண்டித்தான் பிரார்த்திக்கிறார்கள். மீதி 5% பேர்கள்தான் சித்தர்கள் சொன்ன பிரார்த்தனையை புரிந்து கொண்டு, அதன் படி செய்கிறார்கள். இப்படி, ஒரு மிகப் பெரிய ஒரு குறை இருக்க, இரண்டாவது குழுவில் இருக்கிற மனிதர்களை மட்டும் கூட்டு சேர்த்துக் கொண்டு, எப்படியப்பா இந்த உலகை காப்பது. இன்று இங்கு நடக்கும் அத்தனை துர் நிகழ்ச்சிகளுக்கும் காரணம், மனிதனின் பேராசை. சரி அதை விடு, இறைவன் பார்த்துக்கொள்வார்.

பிரார்த்தனை எப்படி இருக்கவேண்டும்? மிக இயல்பாக, எளிதாக, ஒரு குழந்தை தன் தகப்பனிடம் தனக்கு பிடித்த இனிப்பை கேட்பது போல், (குழந்தைக்கு தெரியும், தன் தகப்பனிடம் உரிமை இருக்கிறது என்று) பற்றின்றி, தனது உறவாக இருந்தாலும், "இவர்கள் அனைவரும் உன் குழந்தைகள், கர்மபலனால் உறவாக, நட்பாக பிறவி எடுத்துள்ளார்கள்" என ஒரு முகமறியாத ஆத்மாவுக்கு வேண்டுவதுபோல், உறவாக இருந்தாலும், வேண்டிக்கொள்ளவேண்டும். மிக  சிரமமான நிலையில் இருப்பவர்களுக்கு வேண்டிக்கொள்கிற பொழுது, "எது அந்த ஆத்மாவுக்கு நல்லது என்று உனக்கு தோன்றுகிறதோ, அதை செய், அதையும் உடனேயே செய்" என வேண்டிக்கொள்ள வேண்டும்.

பிறருக்காக சமர்ப்பிக்கப்படும் பிரார்த்தனையினால், ஒருவன் தன் கர்மாவை கரைத்துக்கொள்கிறான், ஆத்மாவை சுத்தப்படுத்திக் கொள்கிறான், உயர் நிலையை நோக்கி நடக்கத் தொடங்குகிறான். அந்த ஒருவனின் பிரார்த்தனை நாள் செல்லச் செல்ல உடனேயே பலனளிக்கத் தொடங்கிவிடும். இந்த நிலைக்கு ஒரு ஆத்மா முன்னேறுவதற்கு தினசரி வாழ்க்கையிலேயே இறைவன் எல்லோருக்கும் வாய்ப்பளிக்கிறான். ஆனால், ஆரறிவு பெற்றவன் நான் என்று வாழ்கிற மனிதன் அந்த வாய்ப்புகளை புரிந்து கொள்வதில்லை/பிடித்துக் கொள்வதில்லை. உயர்ந்த நிலையை அடைகிற வாய்ப்பை இழப்பது மனிதர்கள், இத்தனை தெரிவித்தும் புரிந்து கொள்ளாததினால், வருத்தப்படுவது சித்தர்களும்/இறைவனும்.

கேள்வி: தினசரி வாழ்க்கையில் கோவில்களில், புண்ணிய ஸ்தலங்களில் பிரார்த்தனைகள் நடந்து கொண்டு தானே இருக்கிறது. ஏதோ மனிதன் அவனுக்கு தெரிந்ததை இறைவனுக்கு செய்கிறானே? அது போதாதா?

பதில்: நல்ல கேள்வி. மிகுந்த தாகத்தில் இருப்பவனுக்கு, ஒரு சொட்டு நீர் எப்படி போதவில்லையோ, அது போல் மனிதர்கள் செய்து கூட்டுகிற பாபங்களை கரைக்க போதுமான பிரார்த்தனைகள் இல்லை. 5% எப்படி 95% கடந்து முன்னேறும்?

உண்மைதான். தினமும், பிரார்த்தனையை இறைவனிடம் வைக்க என்ன செய்ய வேண்டும்? அது எப்படி இருக்க வேண்டும்? அப்படி சமர்ப்பிக்கப் பட்ட பிரார்த்தனைகள் எப்படி ஒரு ஆத்மாவை சுத்தம் பண்ணும்? சற்று தெளிவாக கூறுங்களேன் என்றேன்.

பதில்: இதுவும் நல்ல கேள்விதான்! இருப்பினும் ஒன்றை கேட்க விட்டுவிட்டாய். அது என்ன என்று யோசி, பார்ப்போம்.

சற்று நேர அவகாசம் கொடுத்தார்கள். எத்தனை யோசித்தும் என்ன விட்டு போனது என்று அடியேன் சிற்றறிவுக்கு புரியவில்லை.

"தெரியவில்லையே!" என்றேன்.

"தினமுமே இறைவன் பிற ஆன்மாக்களுக்காக பிரார்த்திக்க பல வாய்ப்புகளை தருகிறான்" என்றேனே! அந்த வாய்ப்புகளை, அனைத்தும் இல்லையென்றால், ஒரு சிலவற்றவையாவது உதாரணம் காட்ட, கேட்டிருக்கலாமே!' என்றார் ஒரு பெரியவர்.

"அட! ஆமாம்! இதை யோசிக்கவே இல்லையே!' என்று வெட்கி தலை குனிந்தேன்.

பின்னர் சுதாகரித்து "அதையும் சேர்த்தே கூறிவிடுங்களேன்" என்று பணிய,

அவர் விவரிக்கலானார். மற்றவர்கள் கூர்மையாக அவரையும், அவர் கூறுவதையும் கவனிக்கத் தொடங்கினர்.

அடியேனும்!

சித்தன் அருள்............ தொடரும்!  

 

8 comments:

 1. மதிப்பிற்குரிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
  மதிப்பிற்குரிய திரு.அகினிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,


  சற்று இடைவெளிற்கு பிறகு மிகச்சிறப்பான ஆரம்பம்.
  பதிவு போட உத்தரவு கொடுத்த குருவிற்கு நன்றி. நாங்களும் அடுத்தவாரத்தின் பதிவிற்காக காத்து இருக்குகிறோம் அய்யா.

  மிக்க நன்றி,
  இரா.சாமிராஜன்

  ReplyDelete
 2. அன்னை லோபாமுத்திரை ஸமேத அகஸ்திய பெருமானின் திருவடி சரணம் , தெய்வம் உண்மை , நம்மிடம் அதை உணர வேண்டும்

  நன்றிகள் பல கோடி

  ReplyDelete
 3. Sir,I pray whenever ambulance crosses me. Before few weeks I saw a person in a hotel who had come from hospital, I don't know who is he , I had seen bandage on his hand , went home and prayed for his recovery.

  ReplyDelete
 4. ஐயா தங்களின் பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல

  ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

  ReplyDelete
 5. நன்றி ஐயா அடியேன் இலங்கையை சேர்த்தவன் இலங்கையில் உள்ள எமக்காகவும் மேனமை கோல் சைவ நீதி உலகமெல்லாம் விளங்கவும் தயவு செய்து ஐயாவிடம் பிராத்தனை செய்ய முடியுமா ? ஓம் சாய்ராம் ஓம் அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 6. வணக்கம்
  உண்மைதான் ஆனால். நடைமுறையில் சாத்தியமில் லையே. யோசித்தால் புரியும்
  அன்புடன் s v

  ReplyDelete
 7. Dear Sir,
  Good morning by god's grace i am in Qatar for Job related activities. You have given very much helpful presentation. Agasthiyar Guru blessed me to realize the unanswered questions coming in my mind for certain things i have practicing in my life . Expecting very much eagerly on the continuation what ever you have explained is coming true on my life i can realize thanks for Guru to make me realize. As you said when i am fully depended on God and worship him he is helping to solve this at the maximum effort and also make me realise that it is done by him.
  Thank you very much for your time and effort let us follow the presentation carefully.

  ReplyDelete
 8. ஓம் அகத்தீசாய நம! மிக்க நன்றி ஐயா

  ReplyDelete