நாம் கண்டுகொள்ள தவறுகிற எளிய விஷயங்கள் இவ்வுலகில் எத்தனையோ கோடி உண்டு. எப்படியெல்லாம் ஒரு விஷயத்தை நாம் அணுகுகிறோமோ, அதற்கு ஏற்றார் போல் நடக்கும் விஷயங்கள், விஷயங்களின் முகம் மாறுவதை நாம் காணலாம். சற்று முன் கூறினேன், பிரார்த்தனை என்பது இறைவன் மனிதனுக்கு அளித்த வரம், அதன் வழி தன் கர்மாவை கழித்து, உடலை தூய்மையாக்கி, ஆத்மாவை உயர் நிலைக்கு அழைத்து செல்ல ஒரு மனிதன் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என. ஏன், இதே பிரார்த்தனையை, இறைவன் ஒருவனுக்கு கொடுக்கிற தண்டனையாக கூட எடுத்துக் கொள்ளலாம். இல்லையா? எனக்கூறி ஒரு இடைவெளி விட்டார்.
ஏதோ ஒன்று புரிகிற மாதிரி இருந்தது. தெளிவாக இல்லாததால் பதில் கூறாமல் அவர் தொடரட்டும் என்று காத்திருந்தேன்.
எத்தனையோ ஜென்மமாய் ஒவ்வொரு ஆத்மாவும் கரையேறி தன்னை வந்து அடையட்டும் என்று விரும்பி, பல சூழ்நிலைகளை கொடுத்து, அங்கேயே பிரார்த்திக்க தொடங்குகிறானா? என்று இறை காத்திருந்து பார்த்து, அது நடக்காமல் போகவே, மறுபடியும் பரீட்ச்சை வைத்து தேர்வடைகிறானா என்று பார்க்கிறது. பள்ளிக்கூடத்தில் வாத்தியார் 100 முறை எழுது என்று தண்டனை கொடுப்பது போல், இறையும். இன்னும் ஒரு முறை எழுது என ஜென்மத்தை கொடுத்து காத்திருக்கிறது. இனி ஒரு ஜென்மம் என்பது எவரும் விரும்பாதது தானே. தேர்வில் வென்றால் தானே கைலாச வாசம்/வைகுண்ட வாசம்.
சரி! நீ கேட்ட விஷயத்துக்கு வருவோம். உன் கண் முன் விரிந்த, உனக்கு புரிந்த பிரார்த்தனை பண்ண வேண்டிய சூழ் நிலைகளை, நீ கவனித்த படியே கூறு, என்று கேள்வியை அடியேனிடம் திருப்பி போட்டார்.
சற்று நேரம் யோசித்து, முன் ஜாக்கிரதையுடன் சொல்லத் தொடங்கினேன்.
அடியேன் கூறுவது சரியா, தவறா என்று தெரியவில்லை. இருந்தும் கூறுகிறேன்.
உடல் நலக்குறைவால் வாடுபவர்கள், வேறு வழியின்றி உயிர் வாழ யாசகம் செய்பவர்கள், பசியால் வாடுபவர்கள், குடும்ப பாரத்துடன் அதன் பிரச்சினைகளை சுமப்பவர்கள், என பல மனித சூழ்நிலைகளை அடியேன் எதிர் கொண்டுள்ளேன், எனக் கூறி நிறுத்தினேன்.
சபாஷ்! அப்படியென்றால், உன் பிரார்த்தனையை மனிதர்களுடன் நிறுத்திக் கொண்டாய் அல்லவா, என ஒரு புன்சிரிப்புடன் கேட்டார்.
இந்த கலந்துரையாடல் எங்கு செல்கிறது என்று உணர்ந்த மற்ற மூவரும், சற்று சத்தமாகவே சிரித்து, அர்த்த புஷ்டியுடன் ஒருவருக்கொருவரை பார்த்துக் கொண்டனர்.
ஒருவர், "இன்னிக்கு மாட்டிண்டார்! சரியா ஆணி அடிக்கப் போறார், பெரியவர்" என கூறினார்.
"எங்களுக்குள் பெரியவர் சின்னவர் எல்லாம் இங்கு கிடையாது. அனைவரும் சமம். அது இருக்கட்டும். மனிதனை தவிர வேறு ஒரு சூழ்நிலையும் இங்கு கிடையாதா?"
பிற உயிரினங்கள், இயற்கை, நதி, பூமி, ஆகாயம், காற்று,அக்னி, இப்படி எத்தனையோ விஷயங்களை மனிதன் உபயோகப் படுத்திக்க கொள்கிறானே, அவற்றுக்கு உயிர் கிடையாதா? ஏன், அவை பேசாது என்று நினைக்கிறாயா?
இல்லை, அவை பேசும் மொழி மனிதனுக்கு கேட்பதில்லை, கேட்டாலும் புரியாது. புரிய வேண்டுமானால், அதெற்கென ஒரு நிலையை அடைய வேண்டும். அந்த நிலையை அடைய அவனுக்குள் ஒரு கனிவு எப்பொழுதும் சுரந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த கனிவு, வற்றாத ஜீவ நதியாக எல்லாவற்றையும் தழுவும் பொழுது, அவன் மாறும்பொழுது, அனைத்தும் கேட்கும், புரிந்து கொள்ள முடியும். ஆனால் மனிதனுக்கு எங்கே நேரம் இருக்கிறது? தன் சுய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள, எதையும் அழித்து, எதையும் கீழடக்கி, தனதாக்கி கொள்ளத்தானே நினைக்கிறான். இதுதான் நான் முதலில் கூறிய 95%. இங்கிருக்கும் நாம் ஐந்து பேரும் 5% என்று ஒரு உதாரணத்துக்காக வைத்துக் கொண்டால், இந்த நிலை என்று 100% ஆகிறதோ அன்று 95% வென்று விடுவோம். ஆனால் அது என்று? சித்தர்களும்/முனிவர்களும், சித்த மார்க்க யோகிகளும் இன்றும், என்றேனும் 100% ஆகி, பின்னர் அந்த 100லேயே இருந்து மனிதனை மேலே எடுத்து செல்ல காத்திருக்கின்றனர். அதற்கான முதல் படியாக பிரார்த்தனையை கூறலாம்.
நீ சொன்ன சூழ்நிலைகளுடன், இனி கூறுகிற சூழ்நிலைகளையும் சேர்த்துக்கொள். விரைவில் உன் கர்மா கரைந்துவிடும், உடல் சுத்தமாகும், ஆன்மா மேல் நிலைகளை அடையும்! ஆனால் பொறுமை தேவை. இன்று அரச மரத்தை சுற்றிவிட்டு, நாளை காலை வயிற்றை தடவி பார்க்கக்கூடாது. அவசரமும் கூடாது. இயல்பாக அந்த சூழ்நிலையாகவே எப்பொழுதும் மாறிவிடவேண்டும். ஒரு சில சூழ்நிலைகளை கூறுகிறேன்.
பயணிக்கும் பொழுது, அவசர ஊர்தி சென்றால் "இறைவா! யார் என்றறியேன்! போதும் அவர்கள் கர்ம வசத்தால் வேதனை அடைவது. ஒன்று, குணப்படுத்திவிடு, இல்லையேல், மோக்ஷத்தை கொடுத்துவிடு" என வேண்டிக்கொள். மற்றவை இறைவன் தீர்மானத்துக்கு விட்டுவிடு.
போகும் வழியில் ஏதேனும் ஒரு ஜீவன் உடலை நீத்திருந்தால் "இந்த உடலில் இருந்த ஆத்மாவுக்கு மோக்ஷத்தை கொடுத்துவிடு. போதும் மறுபடியும் பிறப்பை கொடுத்து விடாதே! உன் பாதத்தில் பிடித்து வைத்துக் கொள்!" என வேண்டிக்கொள்.
ஏதேனும் இடத்தில் உயிரினங்களை வதைத்து உணவு வியாபாரத்துக்காக வைத்திருந்தால் "இறைவா! இந்த மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு. இங்கு உயிரிழந்த அனைத்து ஆத்மாவுக்கும், இனி மறு பிறப்பை கொடுக்காதே! இவர்கள் செய்கிற தவறுகளை மன்னித்து, திருத்தி, காத்தருள்!" என வேண்டிக்கொள்.
இயற்கையை, பஞ்ச பூதங்களை அழிக்கிற சூழ்நிலையை கண்டால், "இறைவா! காப்பாற்று! மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு!" என வேண்டிக்கொள்.
மருத்துவமனையை கடந்து செல்லும் பொழுது, அனைவரையும் சீக்கிரம் குணப்படுத்தி விடு, இறைவா" என வேண்டிக்கொள்.
பேராசை படுகிற மனித சூழ்நிலையை கண்டால், "இறைவா! சீக்கிரமே நல்ல புத்தி கிடைக்கட்டும் இவர்களுக்கு" என்று வேண்டிக்கொள்.
கோவில்களுக்கு, புண்ணிய ஸ்தலங்களுக்கு, மகான் சமாதிகளுக்கு சென்றால் "லோகம் க்ஷேமமாக இருக்கட்டும்" என்று வேண்டிக்கொள்.
இப்படி, தன்னலம் கருதாமல், எப்பொழுதும், பொது நலம் கருதி பிரார்த்தனை செய்யச்செய்ய, உன் கர்மா வேகமாக கரையும், உடல், மனம் சுத்தமாகும், இந்த உலகில் மனிதனாக பிறக்க விதிக்கப் பட்ட தண்டனை காலத்தை விரைவில் கடக்கலாம், ஆத்மா வேகமாக பல நிலைகளை கடந்து மிக, மிக சுத்தமாகும். அப்படிப்பட்ட நிலையில், ஒரு சூழ்நிலையை கண்டு, "ஓம்" என மனதுள் நினைத்தாலே, உடனேயே இறைவன் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றி விடுவான். இதுதான் எளிய வழி, என கூறி நிறுத்தினார்.
மனிதர்கள், இந்த சூழ்நிலைகளை, இறைவன், அவர்கள் முன் கொண்டு போட்டாலும் புரிந்து கொள்வதில்லை, என்பதே நிதர்சனம்.
மற்ற மூவரும் "மிகத் தெளிவாக, இயல்பாக சித்த மார்கத்தை விவரித்தீர்கள்" என அவருக்கு புகழாரம் சூட்டினார்.
"இன்னும் கேள்வி இருக்கா?" என்பது போல் அந்த பெரியவர் அடியேனை பார்த்தார்.
"இருக்கிறது! அவற்றை நான் தெரிந்து கொள்வதற்கா மட்டுமல்ல, எத்தனையோ பேர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உதவ வேண்டும்" என்றேன்.
"சம்மதம்! வெளியே கூறு" என்று சரியாக என் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அனுமதியை, பதிலளித்தார்.
அடியேன் அடுத்த கேள்வியை கேட்க தயாரானேன்.
சித்தன் அருள்................... தொடரும்!
Om Sri Lobamudramatha sametha agatheesaya namah....ayya intha pathivugaluku ena bakyam seithomo Mikka nandri ...
ReplyDeleteகதை மிகவும் அருமை ... எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது ஆனால் நடைமுறை என்பது வேறு . சர்க்கரை என்று எழுதி வருடினால் இனிக்காது .
ReplyDeleteஅந்த பெரியவர் மட்டும் என் கையில் கிடைதிருந்தால் நான் கேட்க்கும் கேள்விகளுக்கு பயந்து ஓடி இருப்பர் . பாவம் நீங்கள் ! :p :p
யாரும் எங்கும் ஓட மாட்டார்கள். நீங்கள் உங்கள் கேள்விகளை இங்கேயே பதிவு செய்யலாம்.
Deleteஓம் அகத்தீசாய நமஹ...
ReplyDeleteஅருமையான பதிவு....
இங்கே படித்தவற்றில் மிகக் குறைவாக ஏதோ ஒரு சிலவற்றை மட்டுமே செய்கிறோம்...
ஆனால், இதை புரிந்து கொண்டால் ஒவ்வொரு நாளும் இது போன்று பலவற்றை இறைவன் நமக்கு வழங்குகிறான் என்பதை உணர முடிகிறது...
இனி ஒவ்வொன்றையும் நாம் பயன்படுத்தி, வேகமான வளர்ச்சியை பெறவேண்டும் என்று விளங்குகிறது...
இந்த அறிவை வழங்கியமைக்கு நன்றி...
ஓம் அகத்தீசாய நமஹ...
ஓம் அகத்தீசாய நமஹ..
ReplyDeleteஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி
ReplyDeleteஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி
ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி
ஓம் கணேசாய நமஹ
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ஓம் சாய் ராம்
குருவின் ஆசியோடு எல்லா ஜீவராசிக்கும் பிரார்த்தனை செய்ய
https://eprayerroom.blogspot.in/
தங்கள் பிராத்தனையும் தாங்கள் மற்றவருக்காக பிரார்த்திக்க பதிவிடுங்கள்
எல்லோருக்காகவும் சேர்ந்து பிரார்த்திப்போம்
நன்றி
I had always considered my self as waste and not fit for this world. But today after reading this, i am actually proud that i had at least 5% of these qualities
ReplyDelete