​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 1 March 2018

சித்தன் அருள் - 750 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 11 - சம்பூர்ணம்!


ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! "அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவ" தொடரின் நிறைவு தொகுப்புக்கு வந்துவிட்டோம். இனி பெரியவரின் வார்த்தைகளுக்குள் நுழைவோம்.

எத்தனையோ விஷயங்களை, ஒரு மனிதன் மிக எளிதாக்கிக்கொள்ள என்ன செய்ய வேண்டும், என மிகத் தெளிவாக இதுவரை சுந்தரகாண்டத்தின் சர்கங்களில் தொடர்பு படுத்திய அகத்தியப் பெருமான், இன்னும் ஏதேனும் ஒன்றை கூற மாட்டாரா, என்கிற எதிர்பார்ப்புடன், அந்த வியாழக்கிழமை காலை ராமர் சன்னதியில் அமர்ந்த எனக்கு, அகத்தியப் பெருமான் வந்து உரைக்கலானார்.

"ஒரு மனிதன், தான் என்ன வேண்டுமானாலும், தன் தேவைக்கேற்ப திட்டமிடலாம். ஆயினும் இறை அருள் இருந்தால் மட்டும் தான் அவன் திட்டம் வெற்றி பெறும். பெரும்பாலும் அனைவருக்கும், அவர்கள் திட்டமிட்டதற்கு, நேர் எதிராக நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது, அல்லது பலன் உருவாகிற பொழுது, ஏன் இப்படி நடக்கிறது? நாம் சரியாகத்தானே திட்டமிட்டு செயல்பட்டோம்? என்றெல்லாம் நினைத்து குழம்பிப்போவார்கள். உண்மையில், அப்படி வழிமாற்றி விட்டதே இறைவன்தான், அதுவும், நடந்த முறைதான் இவனுக்கு நல்லது, என இறை தீர்மானிப்பதால்தான். ஆனால் இவனோ,  பெருந்தன்மையுடன் அந்த பலனை ஏற்றுக்கொள்ளாமல், கூட  இருந்து வழிகாட்டிய சித்தர்களையும், ரிஷிகளையும், ஏன், அந்த இறையையும் தூற்றுவான். இதனால்தான், எத்தனையோ விஷயங்களை, இறைவன் "தெய்வ ரகசியம்" எனக்கூறி மறைத்துவிட உத்தரவிடுகிறார். இழப்பு இறைக்கு அல்ல. மேலும், மேலும் உயர வேண்டிய மனிதனுக்கே" எனக்கூறி .நிறுத்தினார்.

எனக்கு, இந்த வார்த்தைகள் ஒரு  அறிவிப்பாக தோன்றவில்லை. என்னவோ நடந்திருக்கிறது. இறை, அகத்தியருக்கு ராம காவியம் புனைய கொடுத்த உத்தரவை, திருப்பி வாங்கிக்கொண்டு விட்டதோ?" எனத்தான் தோன்றியது. அது ஓரளவுக்கு உண்மை என அடுத்து அகத்தியப் பெருமான் கூறியதிலிருந்து புரிந்தது.

"தொடங்கியது ராம காதையாயினும், சுந்தர காண்டத்துடன் நிறுத்திக் கொள்ள இறையின் உத்தரவு. இவ்வுலக மனிதர்களுக்கு என்ன போய் சேரவேண்டுமோ, அது சேர்ந்ததும், இறையே "போதும் நிறுத்திக் கொள்! அகத்தியா" என உத்தரவிட்டுவிட்டது."

"ஆகவே, ஒரு  செய்தியை கூறிவிட்டு, பின்னர் இறை உத்தரவு மனிதர்களை சென்று சேர சிறப்பாக செயல் புரிந்த உனக்கும் ஒரு மகிழ்வான செய்தியை கடைசியில் கூறுகிறேன்."

"ஜாதக ரீதியாக குடும்ப ஸ்தானம், சுகஸ்தானம், களத்திர ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றில் கேது, சனி, இராகு செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்களால் பாதிக்கப் பட்டுக்கொண்டிருப்பவர்கள், திருமணமாகாமல் நொந்து கொண்டிருப்பவர்கள், திருமணமாகியும்  தாம்பத்திய வாழ்க்கையைப் பரிபூரணமாக அனுபவிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தம்பதியருக்கு இடையே கருத்து வேற்றுமைக்கொண்டு நிம்மதி இல்லாமல் துடித்துக் கொண்டிருப்பவர்கள், செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் பரம்பரை பரம்பரையாக வந்த குடும்ப தோஷம் கொண்டவர்கள், அஷ்டமச்சனி, அஷ்டம குருவால் அவதிப்படுபவர்கள், காதல் வெற்றி பெறவில்லையே என்று ஏங்குபவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், எதிராளியின் வஞ்சகத்தில் மாட்டிக்கொண்டு துடி துடிப்பவர்கள், அத்தனை பேர்களும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற, ஒரே வழி, இந்த சுந்தரகாண்டத்திலுள்ள அறுபத்தெட்டு சர்கங்களையும் விடா முயற்சியோடு தினமும் படிப்பதுதான், மிகச் சிறந்த பரிகாரம்" எனக் கூறி, ராம காவியத்தை, சுந்தர காண்டத்துடன் நிறுத்திக் கொண்டார்.

அகத்தியப் பெருமானே, இனி ஏதேனும் சொல்லட்டும் என்று நான் அமைதி காத்தேன். மனதில் உதித்த அத்தனை கேள்விகளையும், அப்படியே கழுவி தூக்கி எறிந்தேன்.

சற்று நேரத்தில் அவரே அமைதியை கலைத்தார்.

"ராம காவியத்தை பின்னொரு நாளில், எதிர்காலத்தில், நிறைவு செய்யலாம். அதுவரை அமைதி காக்க. இதுவரை அகத்தியன் புனைந்த காவியம் மிக சிறப்பாக உள்ளது. எமது ஆசிகள்!" என அந்த ஸ்ரீராமனே, சீதாதேவி, லக்ஷ்மணன், ஆஞ்சநேயர் சமேதராக இங்கு வந்திருந்து, வாழ்த்தினார். சற்று முன் நீ பதிவெடுக்கும் பொழுது குளிர்ந்த காற்றை, மெல்லிய துளசி, சம்பங்கி வாசனையை உணர்ந்து தலையை உயர்த்தி பார்த்தாயே, அப்பொழுதுதான் அவர்கள், இங்கிருந்து சென்றார்கள். ஒவ்வொரு குருவாரமும், ராம காவியத்தை யாம் உரைத்த பொழுது, உன் முன் இருக்கும் ராமர் விக்கிரகத்தில் அவர் அமர்ந்து, மற்றவர்கள் அருகே அமர்ந்திருக்க, எம் புனைவை ஆசீர்வதித்து சென்றனர். ஆதலால், இந்த தகவல்கள் நூலாக வெளிவரும் பொழுது, இதை யார் யார் வாங்கி உடன் வைத்திருந்து, அல்லது அந்த சர்கங்களை பாராயணம் செய்கிறார்களோ, அவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு கவசம் இருக்கும். அவர்கள் வீட்டில் வைத்திருந்தால், அந்த வீடே, சுபிட்சமாக இருக்கும். எப்படிப்பட்ட கெடுதலும், அண்டாது. நிறைய ஆச்சரியப் படுகிற விஷயங்கள் நடக்கும்" எனக்கூறி ஆசிர்வதித்தார், நிறைவு செய்தார்.

நான் என்ன நடந்தது, நடக்கிறது என்று உணராமலேயே, ராமரின் அருகாமையில் அமர்ந்து அகத்தியர் மொழியை இத்தனை நாட்களாக நகலெடுத்திருக்கிறேன், என அப்போது உணர்ந்தேன். படிப்பதென்றால், இப்படிப்பட்ட குருவின் வகுப்பில் பயிலவேண்டும். அத்தனை தெய்வங்களும், சித்தர்களும் வருவார்கள். உணர்வது நம் கர்ம விதி.

சுந்தரகாண்டம் சர்கங்கள் அனைத்தும் (தட்டச்சு தமிழிலும், ஒலி தேவநாகரியிலும்) படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள தொடுப்பில் சென்று, "சுந்தரகாண்டம்" தெரிவு செய்து, கேட்டு, படித்துக்கொள்ளவும். மிக எளிமையாக உள்ளது.

https://www.valmiki.iitk.ac.in/sloka?field_kanda_tid=5&language=ta&field_sarga_value=1

இத்துடன், "அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட" அனுபவம் நிறைவு பெற்றது.

இதை "சித்தன் அருள்" வலைப்பூவில் எழுதி, வெளியிட வாய்ப்பளித்த "ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமான்" பாதங்களில் சமர்ப்பித்து, லோகம், அகத்தியர் அடியவர்கள் அனைவரும் சிறப்பாக வாழ்ந்திட வேண்டிக்கொண்டு, நிறைவு செய்கிறேன்.

சித்தன் அருள்............ தொடரும்! 

12 comments:

 1. Vannakkam ayya,
  Ariya vishayangalai elimaiyaga en pondravargalum purindhu kolla aruliyamaikku nandri

  ReplyDelete
 2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete
 3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

  ஐயனின் அன்பு அளவற்றது

  ReplyDelete
 4. அகத்தியர் அருளால் அனைவரும் ஆனந்தம் அடைந்தோம்.திரு.ஹநுமத்தாசன் அவர்களிடம் இருந்த ஜீவநாடியானது இப்பொழுது வேறு யாரிடமாவது கொடுத்து வாசிக்க அருளப்பட்டுள்ளதா? திரு கணேசன் அவர்கள் மீண்டும் நாடி வாசிக்க அருள் கிடைத்து விட்டதா? தங்களுக்கு தெரிந்தால் தெரியபடுத்தவும். ஓம்ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete
  Replies
  1. Sir,
   Vanakkam. Did you get to know about who has Jeevanadi now. Please let me know the details. Thank You.

   Delete
 5. Sir
  Thanks . I will read atleast one chapter daily.

  ReplyDelete
 6. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 7. ஓம் அகத்திய சித்த குருசுவாமியின் திருவடிகள் சரணம்..சரணம்....

  ReplyDelete
 8. எனக்கு இன்று நல்ல நேரம் தான் சொல்லவேண்டும் , எங்கிருந்தாலும் என்ன செய்துகொண்டு இருந்தாலும் எப்படியோ இப்படி பட்ட அறிய விஷயங்கள் என் காதுக்கு எட்டி விடுகிறது . ஒரு வேலை 5க்கு உடைய குருவும் 9க்கு உடைய சந்திரன் 4ஆம் வீட்டில் இருப்பதால் என்னவோ ?. எல்லாம் அகத்தியரின் அருள் ......

  என்ன ஒரே ஒரு குறை ஹனுமத்தாசன் அய்யாவை ஒரு முறையேனும் பார்கவில்லை . இததனைக்கும் ஒரு நாள் முனனுமதி பெற்று , சென்னை வடபழினி வீட்டிற்கு பொய் பார்த்தும் அவர் அங்கு இல்லை என்ற பதிலே வந்தது . அதன் பின் தான் கணேசன் அய்யா மூலம் அகத்தியர் கூப்பிட்டார் . இருந்தாலும் ஹனுமத்தாசன் அய்யாவை சந்திக்கவேண்டும் என்ற ஆசை நிராசையாக போனது ....


  பிரவீன்.

  ReplyDelete
 9. ஐயா வணக்கம். அகத்தியர் ஜீவநாடி தற்பொழுது யாரிடம் உள்ளது என்று தெறியப்படுத்துங்கள். நன்றி. வணக்கம்.

  ReplyDelete
 10. குருவருளையும் திருவருளையும் வேண்டுகிறேன்.அவர் நினைத்தால் அடியேனையும் வவரச்செவர தரிசனம் நல்குவார்.

  ReplyDelete
 11. Ayya, sugam tharum sundara kandam, when you are releasing. where to get this book. please help.

  ReplyDelete