​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 8 March 2018

சித்தன் அருள் - 751 - அந்தநாள் >> இந்த வருடம் [2018]


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2017ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து அவர்களின் அருள், ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக்கொள்கிறேன்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

22/07/2018 - ஆடி மாதம் - ஞாயிற்று கிழமை  - சுக்லபக்ஷ தசமி திதி மாலை 06.53 வரை, விசாகம்/அனுஷம் நக்ஷத்திரம்.

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

23/07/2018 - ஆடி மாதம் - திங்கள்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி இரவு 07.41 வரை, அனுஷம் நக்ஷத்திரம் மாலை 04.36 வரை.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

24/07/2018 - ஆடி மாதம் - செவ்வாய் கிழமை - சுக்லபக்ஷ த்வாதசி திதி இரவு 08.56 வரை, மூலம் நட்சத்திரம் மாலை 6.28 முதல்.

ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 

07/09/2018 -ஆவணி மாதம் - வெள்ளிக்கிழமை - திரயோதசி திதி மறுநாள் காலை 4.33 வரை, பூசம் நட்சத்திரம் அன்று பகல் 11.40 வரை .

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.)

22/10/2018 - திங்கட்கிழமை  - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி அன்று இரவு 10.14 வரை, உத்திரட்டாதி நட்சத்திரம் மறுநாள் பகல் 09.32 வரை. 

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2018 முதல் 14/01/2019க்குள் வருகிறது. 

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

24 comments:

 1. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

  ReplyDelete
 2. மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 3. Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!

  ReplyDelete
 4. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete
 5. Thanks for sharing the dates in advance. Praying god to bless everyone who wish to be at the temple.

  ReplyDelete
 6. ஓம் அகத்தீசாய நமஹ...

  நன்றிகள் பல......

  ஓம் அகத்தீசாய நமஹ....

  ReplyDelete
 7. Om Agatheesaya namaha.Om Agatheesaaya namaha..Om Agatheesaaya namaha. Aiya Vanakkam Enakku oru thagaval venum..Naan kadantha 17-02-18 Eravu Thiruvannamalai grivalam ennoda anna maganudan sendiruthen. Vidyarkalai 3 am -4.30 am vada merkku pakkama varache malai mela oru natchathiram pola konjam pragasama therinju marainji rendu thadava nadanthathu..marupadiyum mukira idam , kovilukku munnale malai athe mathiri..oru aro ezho natchathiram pola siriyadhum periyadhum pola piraghasam koodarathum kuraiyarudhuma irundhichi...Ungalukku therichavarai malai mela yarachum irrukangala..kugaila namma sadhukkal madhiri illa vera edhachum adhisiya nigazhvugala irrukuma..Konjam thelivu ponnuga..nandri Ungal padhivugalai thavaramal padikkum agathiyar bakthan..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்!

   நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர் என்று தோன்றுகிறது. அடியேன் கேள்விப்பட்டு, தரிசித்த உண்மையை கூறுகிறேன்.

   அருணாச்சலத்தில், ஒவ்வொரு நிமிடமும் அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கிறது, என அகத்தியப் பெருமானே நாடியில் வந்து கூறியுள்ளார். அடியேனும் நண்பர்களும் கிரிவலம் செல்வது இரவில் தான். மிகுந்த அமைதி இருக்கும். மலையின் பின் புறம் வாயு மூலைக்கு சென்றதும் நடை பாதையில் அமர்ந்து விடுவோம். அனைவரும் மலையையே உற்று பார்த்தபடி, நமச்சிவாய ஜபம் செய்து அமர்ந்திருப்போம். விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் இறங்கி, வேகமாக மலைக்குள் செல்வதை பல முறை பார்த்திருக்கிறோம். பின்னர் அகத்தியர் கூறியபடி பார்த்தால், அவைகள் சித்தர்களும், பெரியவர்களும், அருணாச்சலத்தை தரிசிக்க வருகிறார்கள் என்றார்.

   அவர்கள் காட்ச்சி கிடைப்பதே மிகப் பெரிய புண்ணியம் என்றார்.

   உங்களுக்கு கிடைத்த காட்ச்சி என்னவென்று இப்பொழுது புரிந்திருக்கும்.

   நலமாய் வாழ்க.

   அனைவருக்குமாக சொல்வதென்றால், அருணாச்சல கிரிவலத்தை இரவு 9 மணிக்கு மேல் தொடங்கி, நிதானமாக ஜெபித்தபடி செல்லுங்கள். நீங்கள் எழுதி வாங்கி வந்தது என்னவென்று உங்களுக்கே உணர்த்துவார்கள், பெரியவர்கள்.

   ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

   Delete
  2. நீங்களும் உங்கள் குழுவும் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள்

   ஓம் அகத்தீசாய நமஹ

   Delete
  3. ஓம் ஓம் ஓம்

   இப் பதிவை படிக்கும் போதே தெய்வ அருள் தரிசனம் பெற்றோம்....

   Delete
  4. Miga miga Nandri Aiya..Thangalin seeriya thagavalgalukku. Om Agatheesaya namha , Om Agatheesaya namaha, Om Agatheesaya Namaha..

   Delete

 8. மீண்டும் ஒரு கொண்டாத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.
  ஓம் சிவாய அகத்தீசாய நம

  நன்றியுடன்,
  ரா.ராகேஷ்
  கூடுவாஞ்சேரி
  http://tut-temple.blogspot.in/ & agathiyarvanamindia.blogspot.in/

  ReplyDelete
 9. குரு வாழ்க!குருவே துணை!!

  ReplyDelete
 10. Hearing about the forest fire accident happened yesterday, it made me to think in order to avoid these kind of unexpected things to happen, agathiyar asked us to light 8 lamps in temples. I also read that due to the Saturn - Mars conjunction happening in Dhanusu rasi from Mar 7th to May 2nd, these kinds of accidents, explosions etc is likely to happen around the world.
  May I know your opinions on this ? Can we get a remedy from agathiyar what should we do during this period?

  ReplyDelete
  Replies
  1. As Agasthiyar Ayyan said earlier we have to put deepam everyday if possible...tell to your friends family relatives to do the same...

   Delete
  2. Hi Manonmani,

   Do we need to put deepam at any temple everyday or at home ?

   Thanks & Regards,
   Kanjana N

   Delete
  3. As per Agasthiyar Ayyan we have to put deepam for அஷ்டதிக்கு பாலகர்கள்....that 8 deepams should face inside the temple.

   But those who can't make it everyday in temple while doing at home we should pray and put deepam for what Agasthiyar Ayyan said...it my opinion. Let's wait for Agnilingam ayya.

   Delete
 11. Aiyya waiting for agasAgasth Ayyan arul

  Om Agasthiyar Ayyan potri

  ReplyDelete
 12. Om Agatheesaya Namaha, Agnilingam Ayya, Kindly confirm date of puja/aradhanai at Kodaghanallur so I can plan my trip.

  ReplyDelete
  Replies
  1. அக்டோபர் 22ம் தேதி காலை 10 மணிக்கு பெருமாளுக்கு ஆராதனை நடக்கும். அது ஒரு திங்கள் கிழமை.

   Delete
 13. Nanri Ayya, booked my train tickets._/\_

  ReplyDelete
 14. om agatheesaya nama!please guide me, i want to join your sithanarul group, today only seen YOUR MESSAGE THANK YOU AIYYA!

  ReplyDelete
 15. I WANT TO JOIN YOUR GROUP FOR SITHANARUL, PLEASE HELP AND GUIDE ME! iam also shishan of my guru agathiar!TODAY ONLY I HAVE SEEN THIS WEBSITE BY LUCKLY, SO I AM ALSO WANT TO OTHIAPPER PAL KATTI PRASATHAM, PLEASE SEND MY ADDRESS AND THANK YOU!

  ReplyDelete