​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 14 December 2017

சித்தன் அருள் - 738 - அந்தநாள் >> இந்த வருடம் 2017 >> பாபநாசம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எல்லோரும் நலமாக வாழ்க என்பதன்றி வேறொன்றும் இங்கு பிரார்த்தனை இல்லை. இன்று, வியாழக்கிழமை அன்று தர வேண்டிய தொகுப்பை தயார் பண்ண முடியவில்லை. ஒருவாரமாகவே மிகுந்த அலைச்சல். இருக்கிற பிரச்சினை போதாதென்று, நேற்று வருண பகவானும் நிறையவே ஆசிர்வாதம் பண்ணப்போக, முழுவதும் நனைந்த பறவையாக வீடு வந்து சேர்ந்தேன். தட்டச்சு செய்ய, மனம் ஒன்று படவில்லை. தொகுப்பு வெளியிட முடியவில்லை.

எப்போதும் போல, அகத்தியர் கோவிலுக்கு மாலை சென்ற பொழுது, முதலில் அனைத்துப் பெருமைகளையும் அவர் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு, நன்றியை கூறி, கூடவே "இன்று ஏன் தொகுப்பை வெளியிடமுடியாதபடி சூழ்நிலை அமைந்துவிட்டது?" என்ற கேள்வியை சமர்ப்பித்தேன்.

சென்ற நேரம், அவருக்கு நிவேதனம் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம், சன்னதி பக்கம் போகக் கூடாது என்ற கட்டுப்பாடு உண்டு. ஆகவே, அவர் சன்னதிக்கு நேர் எதிரே அமர்ந்து, பூசை முடியும் வரை, கண்மூடி, த்யானத்தில் அமர்ந்தேன். ஏதோ தோன்ற, அவர் லோக ஷேமத்துக்காக அளித்த, "ஆதித்ய ஹ்ருதயம்" சுலோகம் தானாகவே உள்ளிருந்து வந்தது. கண் மூடி, அவர் பாதத்தை சுழி முனையில் அமர்த்தி, சுலோகத்தை உருப்போட, உடல் மிக எளிதாக மாறியது. திடீரென ஒரு உத்தரவு தெளிவாக கேட்டது.

"மார்கழி மாதம் பாபநாச ஸ்நானம் செய்து, சிவபெருமானை தரிசித்துவர, எம் சேய்களுக்கு தெரிவித்துவிடு" என்று வந்தது.

முன்னரே இதை பற்றிய செய்தியை "அந்தநாள் >> இந்த வருடம் >> 2017" என்கிற தலைப்பில் சித்தன் அருள் வலைப்பூவில் தெரிவித்திருந்தேன். உங்கள் அனைவருக்கும் அதன் முக்கியத்தை நினைவூட்டுவதற்காக ஒரு முறை கூட இந்த தொகுப்பில் தெரிவிக்கிறேன்.

"பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2017 முதல் 13/01/2018க்குள் வருகிறது."

குறிப்பிட்ட நாளை கூறாமல், 29 நாட்களை அளித்து அருளை அள்ளிச்செல்ல அகத்தியப் பெருமான் வழி காட்டுகிறார்.

அவரவர் வசதிப்படி, 16/12/2017 முதல் 13/01/2018க்குள் ஒரு நாள் சென்று பாபநாசத்தில் தாமிரபரணி நதியில்  (கோவில் முன் உள்ள படித்துறையில்) ஸ்நானம் செய்து, பின் இறைவனையும் அம்பாளையும் தரிசித்து, விண்ணப்பத்தை சமர்ப்பித்து, அருள் பெற்று வாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

அங்கு செல்பவர்கள், அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரில் இருக்கும் உரலில் மஞ்சளை போட்டு (அதுவும் அங்கேயே இருக்கும். வாங்கி செல்ல வேண்டும் என்பதில்லை!) இடித்து, அங்கு வருபவர்களுக்கு அளித்து, சிறிது பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு செல்லும் படியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொல்லச்சொன்னதை தெரிவித்துவிட்டேன். அடியேன் வேலை முடிந்தது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளுக்கு சமர்ப்பணம்!

அக்னிலிங்கம்!

12 comments:

  1. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளுக்கு சமர்ப்பணம்!

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி

    ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி

    ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி

    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

    ஐயா தங்கள் எவ்வளவு பெரிய புண்ணியம் கிடைக்க அருள் செய்து இருக்கிறீர்.... மிக்க நன்றி ஐயா... எல்லாம் இறைவன் செயல்

    ReplyDelete
  3. மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
    மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

    இன்று பதிவு வரவில்லை என்று பார்த்தவுடனே நினைத்தேன்...இன்று வேலை சற்று அதிகம் போல என்று... உத்தரவு வந்ததும்...செயல் படுத்தியமைக்கு மிக்க நன்றி அய்யா

    நேரம், காலம் பாராமல்...தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையுடனும் எங்களுக்கு தாங்கள் வழங்கும் சேவைக்கு(பதிவுகளும் / தகவல்களும்) மிக்க நன்றி அய்யா

    குருவே சரணம்
    ---------------------------------------------------------------------------------------------------------

    வேறு ஒரு தளத்தில் படித்ததை குரு அகத்தியர் அடியவர்களுக்காக பகிர்கிறேன்.
    http://madipakkamsrisivavishnutemple.blogspot.kr/2017/12/blog-post_933.html


    அகத்தியர் பிரபுவின் ஞான உபதேசம்
    -------------------------------------------------
    உண்மையான பாவ மூட்டைகள் எது தெரியுமா நீ சேர்த்து சேர்த்து வைக்கும் அதிக சொத்துக்கள் தான்.

    இந்த விழிப்புணர்வே பெரிய
    தவம்! தவம்! !தவம்!!!

    அகத்தியர் பிரபுவின் ஞான உபதேசம்

    நீ வாழும்போதே வாழ்க்கையை புரிந்து கொண்டால்...
    இறக்கும் போதும் ஒரு விடுமுறை நாள்என்ற தெளிவு பிறக்கும்.
    பயமே இருக்காது

    அகத்தியர் பிரபுவின் ஞான உபதேசம்

    உன் பிறவியின் நோக்கம் பிறவியை அறுக்கத்தான்.

    ஆசையை அழிக்க அழிக்க பிறவிகள் அழியும்

    ஆசையை சேர்க்க சேர்க்க பிறவி வந்து கொண்டேதான் இருக்கும்!

    மிக்க நன்றி
    இரா.சாமிராஜன்.

    ReplyDelete
  4. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  5. om sri Lobamudra sametha agatheesaya namah...

    ReplyDelete
  6. ஐயா அடியேனுக்கு ஒரு சந்தேகம். கோவில் முன் உள்ள படித்துறை என்றால் பாபாநாச சுவாமி கோவில் எதிரிலா அல்லது அருவிக்கு மேலே அகத்தியர் லோபமுத்ர சன்னதிக்கு எதிரிலா?? தயவு கூர்ந்து விடை கூறுங்கள்.. நன்றி

    ReplyDelete
    Replies
    1. பாபநாச சுவாமி கோவில் எதிரில் உள்ள படித்துறை.
      நீங்கள் நினைப்பது கல்யாண தீர்த்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அருவிக்கு மேல் அகத்தியர் லோபமுத்ர சன்னதிக்கு எதிரில் எந்த படித்துறையும் இல்லை.

      Delete
    2. Paapanaasa Swami Kovil Padiththurai.

      Delete
  7. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  8. devi mahalakshmi pathi(avanga purvigam) konjam agathiyar kita kelunga

    ReplyDelete