ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சித்தன் அருள் வலைப்பூவிலிருந்து ஒரு வேண்டுகோள்!
நம் பாரத பூமியிலே எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. தற்போது "சித்தன் அருள்" இங்கு தெய்வத் தமிழில், ஆங்கிலத்தில், மலையாள மொழியில் வெளியிடப்படுகிறது. அகத்தியர் நமக்கு காட்டித்தந்த பாதை மிக விசாலமானது. ஏன் அதை பிற மொழிகளிலும் வெளியிடக்கூடாது என்ற அவாவில், எனக்குத் தெரிந்த மலையாள மொழியை தேர்ந்தெடுத்த பொழுது, தமிழ் மட்டும்தான் உனக்கு, மலையாள மொழியில் பகிரந்திட அனுமதியில்லை என்று வந்தது. சரி என்று விட்டுவிட்டேன்.
ஒரு சில காலத்திற்குப் பின், மலையாள மொழி அறிந்த இன்னொரு அகத்தியர் அடியவருக்கு அந்த வாய்ப்பை அகத்தியப் பெருமான் கொடுக்க, இன்று அந்த வலைப்பூ நன்றாக வளர்ந்து வருகிறது. அவரும், அகத்தியருக்கு, மிகப் பெரிய சேவையை, மனம் விரும்பி செய்து வருகிறார்.
இதே போல், பாரத நாட்டில் உள்ள வேறு மொழி அறிந்த அகத்தியர் அடியவர்கள் இங்கு யாரேனும் இருந்து, விருப்பப்பட்டு, சித்தன் அருளை மொழி பெயர்த்து வெளியிட விரும்பினால், அடியேனை agnilingamarunachalam@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும். வெளியிடுபவருக்கென ஒரு சில விதி முறைகளை அகத்தியப் பெருமான் விதித்ததை தனிப்பட்ட முறையில் தெரிவிக்கிறேன்.
அகத்தியருக்கு சேவை செய்ய கிடைத்த இந்த அரிய வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
தொடர்பு கொள்பவர்கள், தயவுசெய்து தங்கள் பெயர், முகவரி, தொடர்பு எண்ணுடன், எந்த மொழியில் வெளியிட விரும்புகிறார்கள் என்பதையும் தெரிவிக்கவும். எந்தக் காரணம் கொண்டும், அவர்களின் சுய தகவல் இங்கு வெளியிடப்பட மாட்டாது/பகிரப்படமாட்டாது என்பதை உறுதி கூறுகிறேன்.
அக்னிலிங்கம்!
OM Agatheesaya Namah
ReplyDeleteOm Agatheesaya namaha
ReplyDeleteவணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
ReplyDeleteஇறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்!!!
Here in Sithanarul I have to thank many of you for your blessings when I had my second delivery in January, 2015.
After delivery I had no time ,then I forgot to thank everyone of you who blessed me.
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...
திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களின் வாழ்த்துக்களுக்கும் வேண்டுதலுக்கும் மிகவும் நன்றி...
போகாின் வருகை சித்தா்களின் எழுச்சி
ReplyDeleteபலா் இன்பாக்ஸ்சில் கேட்டு கொண்டதின் பெயாில் இப்பதிவை பதிவு செய்கிறேன் .
மூன்று நாட்களுக்கு முன் திருநெல்வேலி யில் உள்ள முறப்பநாடு சிவாலத்தின் அருகே உள்ள திருவாவடுதுறை மடத்தின் வெளிப்புற தின்னையில் படுத்திருந்த ஒரு சித்தா் ஒருவா் கூறிய சில விஷயங்கள் .
இரண்டு மணி நேரம் உறையாடல் அதில் பொதுவாக சித்தா்களை பற்றி கூறிவைகளை மற்றும் இப்பதில் பதிவு செயகிறேன்.
நவபாசானம் மூலம் முருகன் சிலையை பழனியில் செய்யத போகநாதன் 2018 ஆம் மீண்டும் வருவாா்.
அவா் வரும் காலம் சமாதி நிலையில் உள்ள அனைத்து சித்த புருசா்களும் வெளிவருவாா்கள்.
ஜீவ சமாதிகளை அடித்தளமாக மாக கொண்டு கட்டப்பட்டு பாழடைந்த நிலையில் உள்ள அனைத்து சிவ ஆலயங்களும் புதுப்பொழிவு பெறும்.
அதன் முன்னதாக பல சித்தா்கள் மக்களோடு மக்களாக உலா வருவாா்கள்.
மக்களிடம் உள்ள எதிா்மறை என்ன அதிா்வலைகளை எல்லாம் மாற்றி அறநெறி வழியில் நடத்திசெல்வாா்கள்.
என்று கூறினாா் அதற்கு அவாிடம் இதை நாங்கள் எப்படி அறிந்து கொள்வது என்று கேட்டேன்.
எங்கும் மழை பொழியும் நிரம்பாத இடங்களும் நிரம்பி வழியும்.
சித்தா்களை வரவற்பதற்கு மக்கள் ஒா் பௌா்ணமி அன்று வீட்டின் வாசலில் விளக்கேற்றி வான் மண்டலத்தை பாா்த்து சிவ நாமம் சொல்வாா்கள் .
செய்த பாவங்களை உணா்ந்து ஒா் சிவராத்திாியன்று அனைத்து சிவாலங்களிலும் ருத்ராட்சம் தானமும் பல லட்சம் போ் ருத்ராட்சம் அணிந்து புலால் உண்பதை விடுவாா்கள்.
எப்போதும் நெற்றி நிறைய திருநிறு அணிந்து செல்லும் பழக்கம் மக்களிடம் உருவாகும்.
காமம் , போதை பழக்கங்கள் , போன்ற பல தீய பழக்கங்கள் மக்கள் மனதிலிருந்து படிப்படியாக குறையும்.
கடல் ஒா் குரு நாட்டை விழுங்கும். ஆனால் அங்குள்ள மக்களின் பக்தி அதை மாற்றி அமைக்கும் சக்தியாக மாறும்.
இவை அனைத்தும் போகா் வரும் முன் சில சித்தா்கள் தோன்றி மக்கள் மூலமாக இதை நடத்துவாா்கள்.
இந்நிலையில் போகா் வருவாா் .
ஆட்சி அதிகாரங்கள் முழுவதும் பக்தி நெறியில் உள்ள நோ்மையாளா்களின் கைகளுக்கு மாறும் .
பருவநிலை மாற்றங்கள் சீராகும்.
பின் தமிழகம் மீண்டும் உலகத்தின் முன்னோடியாக திகழும்.
இதுவே அவா் என்னிடம் கூறியவை . பலரது வேண்டுகோளுக்கு இனங்க பதிவிட்டுள்ளேன்.
இதை முடிந்த அளவு மற்றவா்களுக்கு பகிருங்கள் சித்தா்கள் வருகைக்கு நாமும் தயாராகுவோம்.
🙏🙏👁👃👁
சித்தா்கள் போற்றி
Let the good things happen as said. Waiting patiently for the sunrise among people.
Deleter u in facebook mr.sivasaran sir
Deleteஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி
ReplyDeleteஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி
நன்றி திரு.சிவசரன் அவர்களே... சித்தர்கள் வருகை சந்தோஷமாக உள்ளது..