​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 11 September 2017

சித்தன் அருள் - 721 - ஒரு அகத்தியர் அடியவரின் ஓதியப்பர் பிறந்தநாள் தரிசன அனுபவம்!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் ஒரு அடியவர் "அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்" வலைப்பூவில், இந்த வருட ஓதியப்பர் பிறந்தநாள் ஓதிமலையில் எப்படி கொண்டாடப்பட்டது என்பதை இங்கே தெரிவிக்குமாறு கேட்டிருந்தார். அடியேனுக்கு இந்த முறை செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், எப்படி செல்வது என்று கேட்டு தெரிந்துகொண்ட ஒரு அகத்தியர் அடியவர் தனது அனுபவத்தை எனக்கு தெரிவித்திருந்தார்.

அவர் அனுமதியுடன், இந்த வருட ஓதியப்பர் பிறந்தநாள் அனுபவத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். படித்து இன்புறுக. 

ஒம் அகத்திசாய நமஹ.....

ஒதிமலை பயணம் மிக சிறப்பாக அமைந்தது.   சனிக்கிழமை   ஆலயம் திறக்காது என்று பூசாரி கூறிவிட்டார். அதனால் ஞாயிற்றுக் கிழமை என்னுடன் நம்பிமலை வந்த நண்பருடன் பயணம் செய்தென். சுருக்கமாக என்னுடைய அனுபவங்களை பகிர்ந்த்து கொள்கிறேன். எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.

மலை ஏறி ஒரு மணி நெரம் கழித்து பூசாரி வந்தார். ஒதியப்பரை முதன் முதலாக தரிசிக்கப் போகிறேன் என்று மனதில்  சின்ன ஒரு படபடப்பு. 

பூசாரி வந்து சன்னதியை  திறந்து    திரையை விலக்கி அவருடைய முகத்தை சந்தன அலங்காரத்தில் காட்டியபோது அந்த அழகிய முகம்  என்னுள்  தெறித்து உடலில் பல பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது, என்பதே உண்மை. அதை உணர்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும். அதை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. ஒரு பத்து நிமிடங்கள் நான் நானாக இல்லை. அப்பப்பா.....இப்படி ஒரு கருணையும் அழகும் ததும்பும் முகம். 

அவர் முகத்தை கண்டதன் பிறகு மலை ஏறிய களைப்பு எங்கெ சென்றது என்று தெரியவில்லை. பூசாரி வருவதற்குள் வந்த அன்பர்கள் சிலர் ஆலயத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அபிஷேகம் ஆரம்பமாயிற்று. ஒவ்வொரு அபிஷெகத்தையும் மிகுந்த சந்தோஷத்துடன் அவர் ஏற்றுக் கொண்டது அவருடைய முகத்தில் புன்சிரிப்பில் தெரிந்தது. மேலும்  எனக்கு  அவருடைய  ஒவ்வொரு அபிஷேகத்தை பார்க்கும் பொழுது பழனி பாலதண்டாயுத சுவாமி உருவம் அவருடைய முகத்தில் தெரிந்தது.

அபிஷேகம் நடப்பது ஒதியப்பருக்கா இல்லை பழனி பாலதண்டாயுத சுவாமிக்கா என்று தெரியவில்லை. இது ஏன் என்னுள் தோன்றியது என்று தெரியவிலை. ஒரு 3 வினாடிகள் என் கண்கள் குளமாயின. என்னுடைய கோரிக்கைகளை அவர் காலடியில் சமர்ப்பித்து விட்டேன். அடுத்த பத்து நிமிடங்களில் சட்டென்று என்னுடைய மன நிலையில் ஒரு மாற்ற்ம் ஏற்பட்டதை உணர முடிந்தது. மனம் மிகவும் லேசாகி விட்டதை போன்ற உணர்வு. மிகவும் திருப்தியான ஒரு மன நிலை.  

எல்லாம் முடிந்து அலங்காரத்திற்காக திரை மூடப்பட்டது. அவருடைய தெறிக்க விடும் தரிசனத்திற்காக் காத்திருந்தென்.

திரை விலகி தீபாராதனை   ஒளியில் கோடி ஸூரியனின் பிராகசத்துடன் விபூதி அலங்காரத்தில் ஒதியப்பர் திவய தரிசனமும் அருளும் மிகுந்த அதிர்வலையுடன் கிடைத்தது. தலையாய சித்தன் அகத்தியருக்கு என்னுடைய நன்றியை அந்த சமயத்தில்  ஒதியப்பரிடம் சமர்பித்தேன். அவருடைய வலது பக்கத்தில் இருந்து பூக்கள் வாரி விழுந்தன. அவ்வளவு மகிழ்ச்சியுடன் அத்தனை அன்பர்களுக்கும் அவர் அருள் கிடைத்தது என்பதை உணர முடிந்த்தது.

அனைத்தும் முடிந்து பிறகு வேண்டுகோளுக்கு உத்தரவு கேட்கும் நேரம் வந்தது. பூசாரியிடம் கூறியபின் என்னுடைய கோரிக்கையை  ஏற்று, அவர் சன்னதி முன்  மேல் சட்டையின்றி மண்டியிட்டு நமஸ்கரித்து வேண்டுகோளை சமர்பிக்க சொன்னார். நான் என்னுடைய வேண்டுகோளை அவர் முன் சமர்ப்பித்து அவர் உத்தரவு கொடுத்தாரா என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் பூசாரி அவர்கள், உங்களுக்கு  உத்தரவு கொடுத்துவிட்டார் என்று கூறினார். எனக்கு ஒரு சின்ன மனவருத்தம். அவர் உத்தரவு கொடுத்து நான் பார்க்கவில்லயே சுவாமி என்று பூசாரியிடம் கேட்டேன். உடனே அவர் ஒரு கையை தூக்கி காண்பித்து அருமையான முறையில் உங்களுக்கு உத்தரவு கொடுத்தார். நீங்கள் என்ன கோரிக்கையை அவரிடமும் வைத்தீர்கள் என்று கேட்டார். பொதுவாக யாரிடமும் அவர் அப்படிக் கேட்டதில்லை என்று தோன்றியது.

நான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய ஒரு பாக்கியத்தை கூறினேன். உங்கள் கோரிக்கையை அவர் கூடிய விரைவில் நிறைவேற்றுவார். அடிக்கடி வந்து அவர் அருளை பெற்று செல்லுங்கள். பிறகு ஒதியப்பருக்கு அபிஷேகம் செய்ய என்ன செலவாகும் என்று பொதுவாக அவரிடம் கேட்டு தெரிந்தது கொன்டேன். 

மிகுந்த மன நிறைவுடன் ஒதியப்பர் சன்னதி முன்பு விளக்கேற்றி வழிபட்டு அவர் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து அடிக்கடி அவருடைய தரிசனம் பெற சந்தர்பத்தை அமைத்து தருமாறு வேண்டிக் கொண்டேன்.

பிறகு ஒதியப்பரை பிரிய மனமில்லாமல் அவரிடம் பிரியா விடை பெற்று அங்கிருந்து   கிளம்பினேன். பேருந்து பயணத்தில் இரவு முழுவதும் ஒதியப்பரின் அருள் ததும்பும் அந்த முகம் என் மனதை விட்டு நீங்கவில்லை. மறுநாள் அதிகாலை வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக அகத்தியப் பெருமானுக்கு என் மனமார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொண்டேன். "உடலாலும் மனதாலும் எந்த தடங்கலும் இல்லாமல் நான் ஒதியப்பரை தரிக்க அருள் புரிய வேண்டும்" என்ற  என்னுடைய தினசரி வேண்டுதலை நல்லபடியாக நிறைவேற்றி வைத்துள்ளார். இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்.

ஒதிமலை ஆண்டவா போற்றி..... ஒம் அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்................. தொடரும்!

10 comments:

  1. முருகா முருகா முருகா உன் அன்புக்கு எல்லை ஏது இறைவா முருகா ஷண்முகா வடிவேலா முருகா வடிவேலா

    ReplyDelete
  2. சுந்தர காண்டத்தின் 5 மற்றும் 6 ஆம் சரகத்தை படிக்கவும் !!! :P :P

    ReplyDelete
  3. ஓதியப்பர் முருகப்பெருமான் அருள் கிடைப்பதற்கு அரியது....

    Ayya I would like to share my experience with Odhiyappar...where should I send? In sithanarul comments or to your mail? If it's your mail id, could you please provide?

    Sorry if I'm asking anything wrong...

    Thanks nga Ayya

    ReplyDelete
    Replies
    1. Send to mail :agnilingamarunachalam@gmail.com

      Delete
    2. Ok nga Ayya...but need some time as of now my daughter is not well. thanks

      Delete
  4. as we cant go on that auspicious day ,we went on vinayagar chathurthi.we enjoyed abishegam,its very well done by the aiyar.
    now i feel happy on seeing this post ,as i wasn't there on particular day.
    oothiappar saranam
    agasthiyar saranam

    ReplyDelete
  5. முருகன் அருள் முன்னிற்க !

    அன்றைய தினம் நடந்த விஷயங்கள் இன்னும் நெஞ்சில் உள்ளது.தேடல் உள்ள தேனீக்களாய் என்ற குழுவின் மூலம் சுமார் 10 நண்பர்கள் சேர்ந்து ஓதிமலை சென்றோம் . நாம் எமது பெற்றோருடன் கடைசியாக தான் மலை ஏறினோம். மலை ஏறி, திருக்கோயில் அடைந்ததும்,அங்கே கண்ட காட்சி..சொல்ல வார்த்தைகள் இல்லை.எம்மோடு வந்த உறவுகள் அனைவரும் ,திருக்கோயிலை சுத்தம் செய்யும் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். மிகவும் மகிழ்வுற்றோம். ஓதியப்பரின் அருள் மழையில் அன்றைய தினம் நனைந்தோம். திருவருளைக் காட்டிய அகத்தியருக்கு நன்றி

    ஓம் அகத்தியர் பொற் பாதம் சரணம்

    ரா.ராகேஷ்
    TUT - தேடல் உள்ள தேனீக்களாய்
    tut-temple.blogspot.in / 7904612352/9677267266

    ReplyDelete
  6. https://siththanarul.blogspot.in/2015/03/blog-post_0.html?m=1#comment-form

    Please go through this link and get Meenakshi ammaiyin Arul... thanks to You Ayya

    ReplyDelete
  7. ஒம் ஒதிமலை ஆண்டவா போற்றி......ஒம் அகத்திசாய நமக

    ReplyDelete
  8. பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

    திருவருளைக் காட்டிய அகத்தியருக்கு நன்றி

    ஓம் அகத்தியர் பொற் பாதம் சரணம்

    ரா.ராகேஷ்
    TUT - தேடல் உள்ள தேனீக்களாய்
    tut-temples.blogspot.in / 7904612352

    ReplyDelete