​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 14 September 2017

சித்தன் அருள் - 722 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 6


​​ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அடுத்தவார வியாழக்கிழமை வந்தது. காலையில் இருந்தே இருப்புக்கொள்ளவில்லை. போனவாரம் வகுப்பை முடித்து நாடியை ராமர் பாதத்தில் வைத்த பொழுது, துளசி மாலை அவர் கழுத்திலிருந்து கழன்று நாடியின் மேல் விழுந்ததை என்னால் மறக்கவே முடியவில்லை. அதை ஒரு நல்ல சகுனமாக மனம் பார்த்ததினால், என் குருநாதர் அகத்தியருக்கு கிடைத்த பெருமையாகத்தான் உணர்ந்தேன். ஸ்ரீராமரே அகத்தியர் அருளியதை வாழ்த்தினார் என்றுதான் தோன்றியது. அப்படியானால் எப்படிப்பட்ட பெருமையை அகத்தியப் பெருமான் பெற்றிருக்கிறார், அதில் ஒரு சிறிதளவு சேவையை ராமருக்கு அடியேனும் செய்துள்ளேன் என்பதில், என் மனம் மிகுந்த நிறைவு பெற்றது.

மூத்தோனையும், அனுமனையும் வணங்கி பூஜை அறையில் அமர்ந்து அகத்தியரை த்யானித்துவிட்டு, நாடியை திறந்து பார்த்தால், அகத்தியப் பெருமானின் வார்த்தைகள், மிகுந்த சந்தோஷத்துடன், வந்தது. எல்லாம் ஸ்ரீராமர் அருளிய செயல் என்று நினைத்துக் கொண்டேன்.

அகத்தியர் கூறலானார்.

"இறைவன் அருளால், இறை அருளியதை தருகிற வேலை மட்டும்தான் என்னுடையது. அதன் கூட, பிறகு நடப்பதெல்லாம் இறைவன் மனம் கனிந்துவிட்டான், அருளுகிறான் என அர்த்தம் கொள்ளவேண்டும். அதுதான் உண்மையும் கூட. சாதாரண, சின்ன சின்ன விஷயங்களில் கூட மனிதருக்கு இறைவன் பல முறை அருளியுள்ளான். ஆனால் அதை புரிந்து கொள்ளும் தன்மை, அந்த மனிதனுக்கு ஏற்படுவதில்லை. காரணம், அவன் எதிர்பார்ப்பு, லோகாய, பௌதீக விஷயங்களில் சார்ந்துள்ளது. ஒருமுறை இறை யோசித்து அருளியது, பிறகு ஒருநாள், ஒரு நல்ல நிகழ்ச்சி அந்த மனிதனுக்கு நடக்கும் வரை, காத்திருந்து கூட நிற்கும். அவனது தர்மத்துக்கு உட்பட்ட விஷயம் நிறைவேறியதும், அது அவனை விட்டு விலகிவிடும். இந்த அருள் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, பெரியவர்கள் "எப்பொழுதும் இறைவனுடன் இரு, எப்பொழுதும் தர்மம் செய், எப்பொழுதும் புண்ணிய ஸ்தல வழிபாடு செய், எப்பொழுதும் பூசை செய், எப்பொழுதும் பிற ஆத்மாக்களிடம், மனிதராயினும், பிற உயிர்களாயினும், அவைகளும் நம்மைப்போல் தன் கர்மாவை, உருவெடுத்து வந்து அனுபவிக்க பிறந்திருக்கிறார்கள், என்ற எண்ணத்துடன், கனிவோடு இரு" என்று கூறினார்கள். ஆனால் மனிதனோ, தான், தன் குடும்பம் என்று மட்டும் இருக்கிற, அந்த மனநிலைதான் அவனை அத்தனை பிரச்சினைகளையும் எதிர் கொள்ள செய்கிறது. அவனும் கூடிய விரைவில் தளர்ந்து போய், இறை வழியை கைவிட்டு, சாதாரண மிருக நிலைக்கு தன்னை மாற்றிக்கொண்டு விடுகிறான். ஒருவனுக்கு அல்லது ஒருவளுக்கு உதவி செய்வதினால் யாரும் யார் கர்மாவையும் மாற்றிவிட முடியாதுதான். கர்மாவை/விதியை பலமிழக்க செய்ய இறைவன் ஒருவனால் தான் முடியும். பிறகு ஏன் உதவி என்றால், உதவி செய்கிறவன் கர்மாவில் விதிக்கப்பட்டுள்ள "உதவி செய்" என்கிற இறைவனின் உத்தரவு அங்கு நிறைவேற்றப்படும். அதன் வழி உதவி பெருகிறவனும் சற்று சுலபமாக மூச்சு விட்டுக்கொண்டு தன் கர்மாவை கடந்து போவான். இங்கு ஒரு விதத்தில் பார்த்தால், கர்ம பரிவர்த்தனை நடக்கிறது என்று மனிதர்களால் உணர முடியும். சித்தர்களுக்கும், இறைவனுக்கும் மட்டும் தெரியும், இங்கு கர்ம பரிபாலனமும் நடக்கிறது."

இதைக் கேட்டதும் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

"என்ன இது! ஸ்ரீ ராம சரிதையை விட்டு வெளியே செல்கிறோமோ!" என்று.

அதற்கும் அகத்தியர் பதிலளித்தார்.

"உன் கேள்வி நியாயமானது. இருந்தும் நீதியை, நல்லவற்றை திருப்பி திருப்பி கூறினால், ஒரு முறைக்கு இருமுறை கூறினால், சிலவேளை மனிதன் விழித்துக் கொள்வானே என்றும், எங்கள் வேலை இன்னும் சுலபமாக முடியுமே என்றும் நினைத்துத்தான் இதைக் கூறினேன். சரி விஷயத்துக்கு வருகிறேன்." என்று கூறி ஸ்ரீராம சரிதைக்குள் புகுந்தார்.

"அஞ்சனை மைந்தனை ஸ்ரீராமபிரான் வெகுவாக நம்பினார். இதை அனுமனும் உணர்ந்திருந்தார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் இருக்கவேண்டும் என்று அனுமனும் தன் சக்தியை உணர்ந்து செயல் பட்டார். அத்தனை கவனத்துடன், அனுமன் செயல்பட்ட விதம், அவர் செய்த லீலைகள், தூதுவனுக்குரிய குணங்கள், என்னால் முடியும் என்கிற நம்பிக்கை, ஸ்ரீராம சேவையே என் பிறப்பின் அர்த்தம், ஸ்ரீராம தாசத்துவம், அவர் செய்த ஜபம், த்யானம் போன்றவை, பின்னால் முனிவர்களால் மந்திர உருவில் போற்றப்பட்ட பொழுது, இறை கனிந்து தன் அருளை அந்த மந்திரத்திற்குள் புகுத்தி, இன்றும் மனித இனம் அதை பாராயணம் செய்தால் பலனை, இறை அருளை பெற்றுக் கொள்ளட்டும் என்று தீர்மானித்ததை, அடியேனும் கண்கூடாக பார்த்தேன். ஒவ்வொரு மிக சிறந்த நிகழ்ச்சிக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். சுந்தரகாண்டம் அனுமனின் லீலைகளாயினும், இன்றும் பலம் மிகுந்து, அருள் நிறைந்த, சிறந்த பலனளிக்க கூடிய ஒரு காண்டமாக இருக்க காரணமே, அதனுள் உறைந்திருக்கும், ஸ்ரீராமனின் ஆசிர்வாதம்தான். இது மட்டும் மனிதனுக்கு புரிந்தால் போதும், அவன் தன் வாழ்க்கையை நல்ல பாதையை நோக்கி திருப்பி விடலாம் ."

"மனிதன் முயற்சி செய்யும் பொழுது இடையூறு வரத்தான் செய்யும். அதையும் தாண்டி செல்கிற மன தைரியம் அவனுக்கு வேண்டும். சுந்தரகாண்டத்தின் பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்று சர்கங்களில் உள்ள 195 ஸ்லோகங்களையும் பாராயணம் செய்து வருபவர்களுக்கு, அனுமனே அதை அருளுவார், அனைத்து தடைகளும் நீங்கிவிடும், என்பது சத்தியம்." 

"ராகு, சனி, கேது, குரு" ஆகிய நான்கு கிரகங்களும் அஷ்டமத்தில் இருந்து ஆட்டிவைக்கும் பொழுது, சங்கடங்களையும், மனக்கலக்கத்தையும், எப்பேர்பட்டவர்களும் சந்திக்க வேண்டிவரும். அப்படிப்பட்ட அத்தனை பேர்களும், வேலைக்கு முயற்சி செய்யும் இளைஞ்சர்கள், திருமணம் இன்னும் நடக்கவில்லையே என்று மனதிற்குள் குமரிக்கொண்டிருக்கும் யுவதிகள், பணத்தட்டுப்பாடு கொண்டு எப்படி வாழப் போகிறேன் என்று துடி துடிக்கும் சம்சாரிகள், அத்தனை பேர்களும் கண்டிப்பாக இந்த சுந்தர காண்டத்திலுள்ள பதினான்கு சர்க்கங்களையும் படித்து வந்தால் மிகப் பெரிய எதிர்காலம் சீக்கிரமே கிடைக்கும், அதையும் அனுமனே தருவார், இது நிச்சயம்!" என்று அருள் வாக்கு தந்தார் அகத்தியப் பெருமான்.

எனக்கென்னவோ "சும்மாவேனும், தேனீ கூட்டை அசைத்துப்பார்ப்போமே" என்று ஆசைப்பட, இப்படி அமுதமாக, வாழ்க்கை செம்மைப்பட, அகத்தியர் அருளுகிறாரே, என்று ஒரே ஆச்சரியம். 

"பதிநான்காவது சர்க்கத்தை தினமும் பாராயணம் பண்ணி, ஒரு மனிதன் தன் பிரார்த்தனையை இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டால், இறை அருள், எந்த காரியத்தையும் சாதிக்க வைக்கும்.

"ஜாதக ரீதியாக தொட்டதெல்லாம் தடங்கல் ஆகிக்கொண்டிருப்பவர்களும், சுபகாரியமான திருமணம், சீமந்தம் நடக்காமல் தடைப்பட்டுக் கொண்டிருக்கும் குடும்பத்தினர்களும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க துடிப்பவர்களும், அஷ்டம சனியினால் பாதிக்கப்பட்டவர்களும், ராகு, கேது தோஷங்களில் பீடிக்கப்பட்டவர்களும், சனி மகா தசையில் ராகு, கேது புத்தி நடப்பவர்களும் வறுமையில் வாடுபவர்களும், இந்த சுந்தரகாண்டத்தின் பதினெட்டாவது சர்க்கத்திலுள்ள ஸ்லோகங்களை விடாது படித்து வந்தால், அனைத்து சிரமங்களும், அனுமன் அருளினால் விலகும்" என்றார்.

இருபத்து மூன்று முதல் இருபத்தி ஆறாவது வரையுள்ள நான்கு சர்கங்களில், வால்மீகி பெண்மைக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும், அதனால் அடைகிற துன்பங்களையும் விவரித்து கூறியுள்ளார். விவாகரத்து செய்ய நினைப்பவர்கள், கணவனை விட்டு பிரிந்து வாழ்பவர்கள், வெளியுலக வட்டாரத்தில் மற்ற சக நபர்களால் விரட்டப்படும் பெண்களுக்கும், தங்கள் ராசியில் ஏழாமிடத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது உள்ள பெண்களுக்கும், அந்த களத்திர அஷ்டம ஸ்தானக் கொடுமையிலிருந்து நீங்க; ஆறாமிடத்து பாவம் பலமற்று செயல்பட இந்த நான்கு சர்கங்களையும், அப்படியே பட்டாபிஷேக சர்கத்தையும் படித்தால், துயரம் விலகும், கணவர் கிடைப்பார், இல்லற வாழ்க்கை மேலும் இனிமையாகும்" என்றார்.

அன்றைய வகுப்பை இத்துடன் முடித்துக் கொண்டு அகத்தியர் ஆசிர்வதித்து விடை பெற்றார். நானும் நாடியையும், குறிப்பெடுத்த புத்தகத்தையும் ஸ்ரீராமர் பாதத்தில் வைத்துவிட்டு, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன்.

பின் எழுந்து, "ஓம் அகத்தீசாய நமஹ" என்று த்யானத்தில் ஆழ்ந்தேன்.

சித்தன் அருள்.................. தொடரும்!

26 comments:

 1. வணக்கம்
  ஓம் லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகத்திய மாமுனியே சரணம் சரணம் .
  அன்புடன் sv

  ReplyDelete
 2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete
 3. இறைவா போற்றி!அகத்திய பெருமான் திருவடிகள் போற்றி!!

  ReplyDelete
 4. ஓம் ஓதியப்பர் முருகப்பெருமான் துணை

  ஓம் நமசிவய சிவய சிவய நம் ஓம்

  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத ஸ்ரீ அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

  திரு. அய்யா அவர்களுக்கு நன்றி. தங்களின் கடுமையான உழைப்பால் நாங்கள் அனைவரும் பலன் அடைகின்றோம்...

  ReplyDelete
 5. சுந்தரகாண்டம் தமிழ் pdf link

  http://www.tamilnavarasam.com/Ilakkiyam/kamba_ramayanam/05%20Kambaramayanam%20Sundara.pdf

  ReplyDelete
 6. sir,
  sundraa kaantaam book yaar ezhuthiyathu vaanga vundum ? mel sonna sarkkangal thamiliz urai nadaiyaga padikkalama? sanskrit thaan vendumaa? please suggest sir!

  ReplyDelete
 7. மெய் மறந்து படித்தேன் .....நன்றி அய்யா .

  ReplyDelete

 8. Thiru agnilingam ayya avargaluku vanakam ...ayya sariyana sundharakandam slogams book enge vanguvathu ..ennidam sugam tharum sundharakandam book ullathu .engaluku valikattungal ..om agatheesaya namah

  ReplyDelete
 9. வணக்கம் அகத்தியர் அடியவர்களே! நிறைய அன்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த புத்தகங்கள் கிடைக்கும் விலாசத்தை, தொடர்பு எண்ணை தருகிறேன்.

  சுகம் தரும் சுந்தரகாண்டம் - ஆசிரியர் ஸ்ரீராமஸ்வாமி - இது நம்மிடம் இருந்தாலே எந்த கெடுதலும் யாரையும் அண்டாது. மிகச் சிறந்த படைப்பு. ஆனால் இதில் ஸ்லோகங்கள் என்பது முழுவதுமாக இல்லை. இந்த புத்தகத்தின் மகத்துவத்தை பற்றி பின்னர் உரைக்கிறேன். இது கிடைக்குமிடம் -

  அருள் மிகு அம்மன் பதிப்பகம்
  16/116, T.P.கோயில் தெரு,
  திருமலா ப்ளாட்ஸ்,
  (ஸ்ரீ ராகவேந்திரா மடம் எதிரில்)
  திருவல்லிக்கேணி, சென்னை - 600 005
  தொலைபேசி: 42663546, 42663545
  ஈமெயில்:arulmiguammanpathippagam@yahoo.com

  மேற்சொன்ன புத்தகத்தில் சொல்லப்பட்ட "ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் - ஸுந்தரகாண்டம் (தமிழ் மூலம்) அம்மன் பதிப்பகத்தில் கிடைக்கிறது, கிரி டிரேடிங் கம்பெனியிலும் கிடைக்கிறது. சமிஸ்க்ரித ஸ்லோகங்கள் தமிழில் பதிவு செய்யப்பட்டிருக்கும். சமிஸ்க்ரிதம் தெரியாதவர்களுக்கு இந்த தமிழ் மூலம் ஒரு மிக வரப்பிரசாதம்.

  இரண்டு புத்தகங்களையும் வாங்கி வைத்து, பாராயணம் செய்து, ஸ்ரீராமர், அனுமன், அகத்தியர் அருள் பெற்று, வாழ்க்கையை செம்மைபடுத்தி வாழ வேண்டுகிறேன்.

  அக்னிலிங்கம் !

  ReplyDelete
  Replies
  1. mikka nandri ayya!! rama rama\\\

   Delete
  2. "இந்த புத்தகத்தின் மகத்துவத்தை பற்றி பின்னர் உரைக்கிறேன்".அய்யா "சுகம் தரும் சுந்தரகாண்டம் " மகத்துவம் அறிய ஆவலுடன் உள்ளேன்.உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன் .

   Delete
 10. ஓம் அகத்தீசாய நமஹ....

  ReplyDelete
 11. ஓம் அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 12. Agnilingam sir naan ungakita pesanum please please please please please please please naan unkita pesanum.it's too urgent anbarasi1092@gmail.com help me nobody helps to me please contact me.

  ReplyDelete
 13. Om Sri Lobamudra Sametha Agatheesaya Namaha:

  ReplyDelete
 14. தமிழ் பபராயாணம் பலன் அளிக்குமா.?

  ReplyDelete
 15. தமிழ் பராயாணம் செயலாமா?

  ReplyDelete
 16. வால்மீகி இராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டமானது தமிழில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
  http://www.prapatti.com/slokas/category/t2-raamaayanam-sundarakaandam-index.html

  ReplyDelete
 17. ellarukum pathi sollringa enakku yen solla matranga...pathi sollathanu unga kuruji sonnara????

  ReplyDelete