அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Saturday, 30 April 2016
Friday, 29 April 2016
Thursday, 28 April 2016
சித்தன் அருள் - 310 - "பெருமாளும் அடியேனும்" - 51 - அஞ்சனைக்கு வேங்கடவர் அருளால்!
இந்த கேள்வியை கலிபுருஷன் எதிர்பார்க்கவில்லை.
"சரி!சரி! அப்படி பத்திரகாளியை வைத்து புத்ரகாமேஷ்டி யாகம் செய்யவேண்டாம். திருமலைக்கு வராமல் இங்கிருந்தபடியே வணங்கிவிட்டு செல். உனக்கு சகலவிதமான சௌபாக்கியங்களையும் அந்தக் கலிபுருஷனே தருவான். போதுமா?" என்றான் வேங்கடவன் உருவத்தில் இருக்கும் கலிபுருஷன்.
அஞ்சனைக்கு இந்தப் பேச்சுக்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் மாறி மாறி வருவதைக் கண்டு எதிரில் நிற்கும் வேங்கட உருவத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. மனதார திருமாலைப் பிரார்த்தனை செய்து கொண்டாள்.
"பகவானே! உன்னை நாடி வந்திருக்கிறேன். என்னையும் என் கணவனையும் சோதனை செய்யாதே! எனக்கு நல்ல புத்திர பாக்கியத்தை மட்டும் தா!" என்று வேண்டியவாறு, கண்ணை மூடி ஆழ்ந்த நிலையில் த்யானம் செய்தாள்.
அஞ்சனையின் பிரார்த்தனை திருமலையில் வீற்றிருக்கும் திருமாலின் காதில் விழுந்தது. நிலைமையைப் புரிந்துகொண்டார். கலிபுருஷனின் ஆட்டம் இது என்பதைப் புரிந்து கொண்டார்.
அடுத்த நிமிடம்.............
அஞ்சனையைச் சுற்றிலும் நெருப்பு வளையம் வந்தது. கூடவே அசரீரி வாக்கும் வந்தது.
"அஞ்சனை தம்பதியே! எதற்கும் இனி அஞ்ச வேண்டாம். இது கலிபுருஷனின் நாடகம். என்னைப் போல மாறுவேடத்தில் வந்து உங்களை புத்திமாற்றி, திசை திருப்பிக் கொண்டிருக்கிறான். அவன் பேச்சை நம்பாதே. அவனை நானும் என்னுடைய சக்கரமும் கவனித்துக் கொள்வோம்" என்று அசரீரி வாக்கு சொன்னது.
இந்த அசரீரி வாக்கைக் கேட்டதும் அஞ்சனை தம்பதி தங்களை அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராக்கிக் கொண்டனர். அதற்குள் ஒரு வட்ட வடிவத்தில் அஞ்சனை தம்பதி, அவர்களுடைய கூடாரம், சிப்பாய்கள், புரவிகளை சுற்றி பூமியில் ஒரு தீப்பிழம்பு தோன்றிற்று.
வேங்கடவனாக உருமாறி வந்து, அஞ்சனை தம்பதியைத் திருமலைக்குப் போகவிடாமல் தடுத்த கலிபுருஷனது வேடம் கலைந்தது. அடுத்த நிமிடம் கலிபுருஷன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
"நல்லவேளை! நாம் தப்பித்தோம்" என்று அஞ்சனை பெருமூச்சு விட்டாள். "எல்லாம் திருமாலின் கடாட்சம்தான் காரணம்" என்று அஞ்சனையின் கணவரும் சொல்லி "வேங்கடனாதனுக்கு கோவிந்தா!" என்று மனம்விட்டு பக்தியோடு குரல் எழுப்பினார்.
"இனியும் கலிபுருஷன் உங்கள் பக்கம் வரமாட்டான். திருமலைப் பயணம் உங்களுக்கு வெற்றிகரமாக முடியும். முன்னோர் செய்த புண்ணியத்தால் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறக்கும்" என்று வேங்கடவன் இப்போது அசரீரியாக மறுபடியும் ஒலித்தது.
"திருமாலின் அருளால் அப்படியொரு குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை அஞ்சனையின் மைந்தன் என்று சொன்னாலும், அது திருமாலின் குழந்தையாகக் கடைசிவரை இருக்கும். அது எங்களிடம் வளர்வதைவிட திருமாலின் காலடியிலேயே கடைசிவரை வளரட்டும்" என்றாள் அஞ்சனை சந்தோஷத்தோடு.
பக்கத்தில் இருந்த அஞ்சனையின் கணவருக்கு அஞ்சனை இப்படி அவசரப்பட்டுப் பேசியது கொஞ்சம் பிடிக்கவில்லை. சட்டென்று கோபம் வந்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டான் அவன்.
உடனேயே அந்த இடத்தைவிட்டு விலகவும் செய்தான்.
நல்லதோர் அருள்வாக்கைத் திருப்பதி பெருமாளுக்கு நன்றியாக அஞ்சனை கண்ணீர் மல்க வாக்குறுதியை அளித்துவிட்டு திரும்பினாள்.
அங்கு, அஞ்சனையின் கணவனைக் காணவில்லை. "இங்குதானே இருந்தார். அதற்குள் எங்கே போயிருப்பார்? என்று பயந்து நாலாபுறங்களிலும் தேடினாள் அஞ்சனை. அவள் கண்ணில் அவள் கணவன் அந்த இடத்தில் தட்டுப்படவில்லை.
சில நாழிகைகள் இங்குமங்கும் கூடுமானவரை நன்றாகத் தேடியும் கிடைக்காமல் போகவே, தன் சிப்பிகளை விட்டுத் தேடச் சொன்னாள். அஞ்சனையின் இந்த முயற்சியும் பலிக்காமல் போயிற்று. எனவே விசும்பி அழுதாள். தன் கண் கண்ட தெய்வமான வேங்கடவனை நோக்கித் தொழுதாள்.
"கவலைப் படாதே! உன் கணவன் உன்னை விட்டு எங்கும் போகமாட்டான். இருப்பினும் அவன் மனம் புண்பட்டு விட்டது. அவனுக்குப் பிறக்கப் போகும் குழந்தையை அவன் கடைசி காலம் வரை வளர்க்க வேண்டும் என்பது அவனது நெடுநாள் விருப்பம். ஆனால் அந்தக் குழந்தையை திருமால் குழந்தையாக மாற்றி வளர்க்க விரும்பவில்லை.இதுதான் உண்மை." என்று திருமலை வாசன் அஞ்சனையின் கணவனுடைய எண்ணத்தை அஞ்சனையிடம் சொல்லி,
"அவனை இப்பொழுது வாயுபகவான், பக்கத்திலுள்ள நீரோடையில் சென்று, சமாதானப் படுத்திக் கொண்டிருக்கிறான். நீ அங்கு சென்று உன் கணவனை அழைத்துக் கொண்டு வா" என்று அஞ்சனைக்கு தைரியம் கொடுத்து வழியும் காட்டினார்.
மட்டற்ற மகிழ்ச்சியடைந்த அஞ்சனை திருமாலுக்கு நன்றி சொன்னாள். அடுத்து பக்கத்திலிருந்த நீரோடையைத் தேடிச் சென்றாள்.
அங்கு கண்ட காட்சி அஞ்சனையை மெய் சிலிர்க்க வைத்தது.
வருணபகவான், வாயு பகவான், பதினெட்டு சித்தர்கள், முப்பெரும் தெய்வங்கள் என எல்லோரும் அமர்ந்திருப்பது போலவும், அங்கு அக்னி சாட்ச்சியாக தன் கணவர் ஓர் இளம் குழந்தையை வாயு பகவானுக்கு "தத்து" கொடுப்பது போன்றும் ஒரு காட்சி தெரிந்தது.
தான் காண்பது கனவா? அல்லது நனவா? என்று ஒரு வினாடி மெய் சிலிர்த்துப் போனாள். தன் வயிற்றை தடவிப் பார்த்தாள். கரு உருவாகி இருப்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. பின் எப்படி, இப்படி ஒரு ஓர் அரிய காட்ச்சியைக் காண நேரிட்டது, என்று தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள் அஞ்சனை.
அவள் மனதில் மீண்டும், மீண்டும் இதே காட்சி தொடர்ந்து வந்ததால் அதனை என்னவென்று அறியாமல் அப்படியே மயக்கமடைந்து கீழே விழுந்தாள், அஞ்சனை.
சித்தன் அருள்................. தொடரும்!
Wednesday, 27 April 2016
Tuesday, 26 April 2016
Monday, 25 April 2016
Saturday, 23 April 2016
Friday, 22 April 2016
Thursday, 21 April 2016
சித்தன் அருள் - 304 - "பெருமாளும் அடியேனும்" - 50 - "கலிபுருஷனின் விளையாட்டு "
அஞ்சனையும் வேங்கடவனின் அருள் பெறத் திருமலைக்கு வந்து கொண்டிருக்கும் பொழுது இரவு நேரமாகிவிட்டது.
அதே சமயம் அவர்கள் பயணம் செய்துவந்த குதிரைகளும் மிகவும் களைத்துப் போயின. அமாவாசை என்பதால், அஞ்சனை தம்பதி அருகிலுள்ள சிற்றூரில் குதிரைகளுக்குத் தண்ணீர் குடிக்க காட்டினார்கள்.
பிறகு, குதிரையைத்தட்டிக் கொடுத்து பக்கத்திலுள்ள புல்வெளியில் விட்டார்கள். அதுவும் சுதந்திரமாகப் புல்லை மேய ஆரம்பித்தது. ஒரு குதிரை மட்டும் எங்கும் செல்லவில்லை. எனவே அதற்குப் புல்லை அறுத்துப் போட்டுவிட்டு, அருகிலுள்ள மரத்தில் கட்டிவிட்டார்கள்.
அவர்களுக்கு துணையாக வந்த சிப்பாய்கள் சுற்றுமுற்றும் பாதுகாவலாக இருக்க, அரை நாழிகையில் அஞ்சனை தம்பதிக்கு இரவில் தங்க கூடாரமும் போடப்பட்டது.
நள்ளிரவு நேரம்.................
அந்த காட்டிற்கு வந்த கலிபுருஷன் கூடாரத்தில் தங்கியிருப்பது யார் என்பதை கண்டறிந்தான். அவனுக்கு அஞ்சனை யார் என்பது தெரியும். அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை அகில உலகையும் ஆட்கொள்ளப் போகிறது என்பதும் தெரியும்.
அஞ்சனைக்கு வேங்கடவன் தரிசனம் தருவார். அவளுக்கும் குழந்தை பிறக்கும். அது அனுமான் என்ற பெயரில் வலம் வரும் என்பதையும் அறிந்தான்.
அந்த அனுமான் பிறந்தால் வேங்கடவன் மகிமை ஏழு உலகிற்கும் தெரிய வரும். அனுமன் பிறந்தால் அது தனக்கும், தான் மேற்கொள்ளவிருக்கும் சகலவிதமான காரியங்களுக்கும் கெடுதலாக மாறும். எனவே, அஞ்சனை தம்பதி வேங்கடவனைச் சந்திக்க விடக்கூடாது முடிவெடுத்தான். சில நாழிகைகள் யோசித்தபின், தானே வேங்கடவனாக அஞ்சனைக்கு அருள் வாக்கு கொடுப்பதுபோல் கொடுத்து, அவர்களை இங்கிருந்தே திருப்பி அனுப்பிவிடவும் செய்யலாம் என்று முடிவெடுத்தான்.
கண்ணிமைக்கும் நேரத்தில்,
அஞ்சனை தம்பதி முன் நின்றான், வேங்கடவனாக!
பகவானைத் தேடி போய்க் கொண்டிருக்கும் பொழுது பகவானே நம் கண்முன் பிரத்யட்சமாக வந்து நிற்பதைக் கண்டதும் அஞ்சனைக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
வேங்கடநாதன் என்று நினைத்து கலிபுருஷன் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள் அஞ்சனை தம்பதி.
"நாங்கள் செய்த பாக்கியம்! தாங்களே இன்று எங்களைத் தேடி வந்து எங்களை ஆசிர்வாதம் செய்தது" என்றாள் அஞ்சனை.
"உங்களுக்கு என்ன குறை? என்னிடம் சொல்லுங்கள். அதை யாம் தீர்த்து வைப்போம்" என்றான் (வேங்கட) கலிபுருஷன்.
"தங்களுக்குத் தெரியாததா! எங்களுக்குப் புத்திர பாக்கியம் இன்னும் கிட்டவில்லை!"
"அவ்வளவுதானே! இதற்காகவா இத்தனை சிரமப்பட்டு திருமலைக்குப் பயணமாகிக் கொண்டிருக்கிறீர்கள்? இனிமேல் நீங்கள் செல்லவும் வேண்டாம், திருமலையில் என்னைத் தரிசிக்க வர வேண்டாம். இங்கேயே இப்பொழுதே உங்களுக்குப் புத்திர பாக்கியம் தந்தோம். ஆனால்.............." என்று இழுத்தான் கலிபுருஷன்.
"என்ன ஆனால்?" பதறியபடியே கேட்டாள் அஞ்சனை.
"திருமலைக்கு வந்து ஈராண்டு காலம் தினமும் புத்திர காமேஷ்டி யாகம் செய்யவேண்டும். நாரதர், பிரம்மா இருவரும் இந்த யாகத்தை செய்ய வேண்டும். அவர்கள் இதற்கு எளிதில் ஒத்துழைப்பு தரமாட்டார்கள், அதுதான் பெரும் சங்கடம்." என்றான் கலிபுருஷன்.
"வேங்கடவனே இப்படி சொல்வதா? எப்பொழுது தாங்கள் வாக்கு கொடுத்து விட்டீர்களோ அப்பொழுதே எங்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைத்து விட்டதாகவே மகிழ்ச்சி அடைகிறோம். பிறகு எதற்கு புத்திர காமேஷ்டி யாகம்? அதுவும் நாரதர், பிரம்மா துணை கொண்டு என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை" என்றார் அஞ்சனையின் கணவன்.
"சரி! நாரதர் வேண்டாம்! பிரம்மாவும் வேண்டாம்!பத்திரகாளியை வைத்து ஓர் அஷ்டமியில் அந்த யாகத்தை செய்யலாமே!" என்றான் வேங்கடவன் வேடத்தில் இருக்கும் கலிபுருஷன்.
"என்னது?" என்று ஒரே சமயத்தில் அலறினார்கள், அஞ்சனையும் அவள் கணவரும்!
"நாங்கள் பேசுவது திருமலை வேங்கடவனிடம்தானா? ஒரு போதும் புத்திர காமேஷ்டி யாகத்தை பத்திரகாளியை வைத்துச் செய்ததாக சரித்திரம் இல்லையே? எப்படி திருமால் திருவாய் மூலம் இப்படிப்பட்ட தகாத சொல் வந்தது?" என்று பயந்தபடியே அஞ்சனை கேட்டாள்.
சித்தன் அருள்.......................... தொடரும்!
Wednesday, 20 April 2016
Monday, 18 April 2016
Sunday, 17 April 2016
Saturday, 16 April 2016
Friday, 15 April 2016
Thursday, 14 April 2016
சித்தன் அருள் - 298 - "பெருமாளும் அடியேனும்" - 49 - "அஞ்சனை"
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இனிய துர்முகி வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்நிமிடம் முதல் அனைவரும் அகத்தியர் அருளால் எல்லா நலமும் பெற்று மிகச் சிறப்பாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன். வாருங்கள்! இந்த வார சித்தன் அருளை தொடரலாம்.
"என்ன அகஸ்தியர் பெருமானே! தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறீர்கள்? யானும் அதன் காரணத்தை அறியலாமா?' என வாயுதேவன் மிகவும் பவ்யமாக கேட்டார்.
"ஓ தாராளமாக. எல்லாம் வேங்கடவனின் லீலைகள்தான் காரணம்" என்று தன் ஞானக்கண்ணில் தென்பட்டதை வாயுபகவானிடம் சொன்னார்.
"அப்படியா?" என்று வியந்து போன வாயு, "எப்படியோ இந்த திருமலை விழா நன்றாக நடந்தால் போதும்" என்று கூறி மனமகிழ்ச்சி அடைந்தார்.
பிறகு அகஸ்தியரும் வாயு பகவானும் நிகழ்ச்சி நடக்கும் பிரதான மண்டபத்திற்குள் நுழைந்தனர்.
அங்கு திருமாலின் கையில் "சுதர்சனம்" இல்லை.
அகஸ்தியர் நேராக திருமாலிடம் சென்று "இதென்ன ஆச்சரியம்! எப்பொழுதும் சங்கு சக்கரத்தோடு காட்சியளிக்கும் தாங்கள் இன்றைக்கு சக்கரம் இல்லாமல் தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே, இதென்ன நியாயம்?" என்று ஒன்றும் தெரியாமல் கேட்டார்.
"ஓ! இதெயெல்லாம் கூட அகஸ்தியர் கவனித்துக் கொண்டிருக்கிறாரா? பரவாயில்லை" என்று தேனொழுகிய குரலில் பேசிய திருமால் அகஸ்தியரை தன் வலதுகாது பக்கம் வரச்சொல்லி "உங்களுக்குத் தெரியாத விஷயமா இது. விழா முடியும் வரை யாரிடமும் எதைப் பற்றியும் மூச்சு விட வேண்டாம்" என்று காதோடு காதாக ரகசியமாகச் சொன்னார்.
"அப்படியே ஆகட்டும்" என்று சந்தோஷமாக அகஸ்தியரும் ஒப்புக் கொண்டார்.
சில நாழிகைக்குப் பின்...........
திருமால் தலைமையில் திருமலைக்கு வந்திருந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. எந்த விதமான தோஷமும் இல்லாமல் விருந்து அமோகமாக நடந்தது.
தான் கலந்த ஆலகால விஷம் திருமலையில் விருந்து உண்ணும் அனைவருக்கும் போய்ச் சேர்ந்திருக்கும், எல்லோரும் யமலோகப் பதவியை அடைந்திருப்பார்கள் என்று எண்ணிய கலிபுருஷனுக்கு....
திருமலையில் நடந்த விழா அற்புதமாக நடந்தது, எல்லோரும் விருந்துண்டு ஆனந்தப் பட்டிருக்கிறார்கள் என்று செய்தி கிடைத்ததும், வெறுப்புற்றுப் போனான். மனம் அமைதி அடையவில்லை.
திருமால், திருப்பதி மலையில் குடிகொண்டிருக்கும் வரையில் தன் திட்டம் எதுவும் ஜெயிக்காது என்பதை உணர்ந்தான். எத்தனையோ முயற்சிகள் செய்தும் ஆதிசேஷன், கருடன், சனீச்வரன், ரிஷிகள் யாரும் தன் பக்கம் சேரவில்லை என்பதால் இனி பொதுமக்களிடமும், மிருகங்களிடமும் சென்று தன்னுடைய பலத்தைக் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தான்.
அதன்படியே பூலோகத்திலுள்ள மக்களை நாடிச் சென்றான்.
பூலோகத்தில் மிகச் சிறந்த நற்குணங்களைப் பெற்று "அரசியாக" வாழ்ந்தது கொண்டிருந்தாள், அஞ்சனை. அவளின் தலை சிறந்த பக்தி எல்லாரையும் வியக்க வைத்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில் மிகச் சிறந்த வீரனைத் தேர்ந்தெடுத்து, அஞ்சனையை அவனுக்கு மணமுடிக்கத் திட்டமிட்டார் அஞ்சனையின் தந்தை. தன் எதிர்கால மருமகன் ஒரு கையெறி வேலால் மதம் பிடித்த ஒரு யானையை நேர் எதிர்கொண்டு தாக்கி, அந்த யானையை கொல்ல வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
ஆனால்.............
அவர் எதிர்பார்த்தபடி யாரும் இத்தகைய போட்டிக்கு வரத் தயாராக இல்லை. இது அஞ்சனையின் தந்தைக்கு பெரும் வருத்தத்தை உண்டு பண்ணிற்று. மனமொடிந்த அவர், சிறிது காலம் காட்டில் ஓய்வெடுக்கலாம் என்றெண்ணி அருகிலுள்ள காட்டிற்கு பரிவாரங்களோடு சென்றார்.
காட்டில் தங்கியிருக்கும் பொழுது,
ஒரு நாள் மாலையில், யானைக் கூட்டத்தத்திலிருந்து பிரிந்து வந்த மதம் பிடித்த யானை ஒன்று வெகு ஆக்ரோஷத்தோடு காட்டை துவம்சம் செய்து கொண்டிருந்தது.
இதனைக் கண்டு காட்டிலுள்ளவர்கள் அனைவரும் அஞ்சி, உயிரை பாதுக்காக்க பல இடங்களில் சிதறி ஓடினார்கள். இந்த செய்தி அஞ்சனையின் தந்தைக்கு எட்டியது.
மதம் கொண்ட அந்த யானையை அடக்க, வேலோடும் வில்லோடும் புறப்பட்ட அஞ்சனையின் தந்தை நடுவழியில் ஓர் அதிசயத்தைக் கண்டார்.
ஓர் இளைஞன் ஒரு சிறு கை எறிவேலைக் கொண்டு எதிரே வந்த ஒரு மதயானையை அதன் மத்தகத்தில் எறிய, வேகமாக வந்த அந்த மதயானை பிளிறிக் கொண்டு கீழே சாய்ந்தது.
இந்த அரிய காட்சியை கண்டு ஆச்சரியப்பட்ட அஞ்சனையின் தந்தை "அடடா! இப்படிப்பட்ட ஒரு வீரனைத்தான் இத்தனை காலமாகத் தேடிக் கொண்டிருந்தோம். அவன் இந்தக் காட்டிலே கிடைப்பான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லையே! இந்த இளைஞன்தான் அஞ்சனைக்கு ஏற்ற கணவன்" என்று முடிவெடுத்தார்.
சில நாழிகை கழிந்தது.
அந்த வீரனிடம் சென்ற அஞ்சனையின் தந்தை அவனிடம் பேச்சுக் கொடுத்தார். அந்த இளைஞனும் அருகிலுள்ள சிற்றூரில் குறுநில மன்னனாக இருப்பதை அறிந்தார்.
தன் மகள் அஞ்சனையைப் பற்றிச் சொன்னார். அந்த இளைஞனும் அஞ்சனையை மணக்க முன்வந்தான். அவர்களுக்கு திருமணம் நடந்தது.
திருமணம் நடந்து பல்லாண்டு காலமாகியும் அஞ்சனைக்குப் பிள்ளை பேறு இல்லை. திருமலை வேங்கடவனைத் தரிசித்தால் அவளுக்குப் பிள்ளைப் பேறு கிடைக்கும் என்று சொன்னதால், அஞ்சனை வேங்கடவனைத் தரிசிக்க திருமலைக்கு கணவனோடு வந்து கொண்டிருந்தாள்.
அப்போது...............
சித்தன் அருள் .......................... தொடரும்!
Wednesday, 13 April 2016
Tuesday, 12 April 2016
Monday, 11 April 2016
சித்தன் அருள் - 295 - அகத்தியப் பெருமானின் ப்ராஜெக்ட் - நன்றி குருநாதா!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப் பெருமானின் ப்ரஜெக்டில் பங்கு பெற வாருங்கள் அகத்தியர் அடியவர்களே என்று சில மாதங்களுக்குமுன் அழைப்பு விடப்பட்டிருந்தது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். மொத்தம் 122 அகத்தியர் அடியவர்கள் மிக ஆர்வமாக பங்கு பெற்று அகத்தியர் உத்தரவை நிறைவேற்றினர். சென்னையிலிருந்து 46 அகத்தியர் அடியவர்களும், சென்னைக்கு வெளியே இருந்து 76 அகத்தியர் அடியவர்களும் பங்கு பெற்றனர். அவர்கள் பெயர், ஊர் மட்டும் கீழே தருகிறேன். எதற்காக என்ற கேள்வி எழலாம். எல்லோரிடமும் DVD கிடைத்த உடன் கிடைத்தது என ஒரு ஈமெயில் அனுப்பி தெரிவிக்கவும் என கூறியிருந்தோம். ஒரு சிலரே பதில் போட்டனர். இந்த சித்தன் அருள் குழு அனுப்பிவிட்டு, DVD கிடைத்திருக்கும் என நம்பிக்கொண்டு உட்கார்ந்திருக்கும். ஆனால் சிலவேளை அது அடியவரை சென்று சேர்ந்திருக்காது. அப்படிப்பட்டவர் யார் பெயரேனும் இந்த தொகுப்பில் இருந்தால் தெரிவிக்கவும். என்ன ஆயிற்று என்று விசாரிக்கலாம்.
வெளிநாட்டில் வசிக்கும் பல அகத்தியர் அடியவர்களும் இதில் பங்கு பெற்றனர். அவர்களுக்கு டவுன்லோட் லிங்க் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆகவே, இந்த அகத்தியர் உத்தரவில் பங்கு பெற்று அகத்தியப் பெருமானுக்கு சேவை செய்த உங்களுக்கு அகத்தியப் பெருமானின் அருள், வழி நடத்தல், மனம் நிறைந்த நிம்மதி, வாழ்க்கை செல்வம் அனைத்தும் கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நலமுடன் வாழ்க. மிக்க நன்றி உரித்தாகுக!
அகத்தியர் அடியவர்கள், சென்னை
1
|
MS RAVI
|
CHENNAI
|
2
|
JANAKI K
|
CHENNAI
|
3
|
NALINI RAJALINGAM
|
CHENNAI
|
4
|
R. CHANDRASEKAR
|
CHENNAI
|
5
|
R.RAKESH
|
CHENNAI
|
6
|
S.DATTHATHIRI
|
CHENNAI
|
7
|
P.D. ESVANDARDOSS
|
CHENNAI
|
8
|
BALAJI
|
MINJUR
|
9
|
GURUMURTHY.K
|
CHENNAI
|
10
|
MR.C.KAMALASEKARAN
|
CHENNAI
|
11
|
S.ASHOK KUMAR,
|
CHENNAI
|
12
|
G. THIRUSANGU
|
CHENNAI
|
13
|
JEYASEELAN
|
CHENNAI
|
14
|
S.SIVASANKAR
|
CHENNAI
|
15
|
VENKATESAN
|
CHENNAI
|
16
|
D.SENTHILNATHAN
|
CHENNAI
|
17
|
MAHESH
|
CHENNAI
|
18
|
R.SELVI RAJAN
|
CHENNAI
|
19
|
K. NARMADHA
|
CHENNAI
|
20
|
ARUN PRAKASH
|
CHENNAI
|
21
|
NEGHA
|
CHENNAI
|
22
|
PURUSHOTHAMAN
|
CHENNAI
|
23
|
V.C.VELUSAMY
|
CHENNAI
|
24
|
INDRAKUMAR
|
CHENNAI
|
25
|
S SHANKAR
|
CHENNAI
|
26
|
C SURIYA
|
CHENNAI
|
27
|
RANJITHKUMAR
JAYARAJ
|
CHENNAI
|
28
|
NIRMALA ARUMUGAM
|
CHENNAI
|
29
|
A.D.HEMANTH
KUMAR.
|
CHENNAI
|
30
|
SUGANTHI
|
CHENNAI
|
31
|
M.D.BALAJI
|
CHENNAI
|
32
|
S. SWAMINATHAN
|
CHENNAI
|
33
|
M. KUMARAN
|
CHENNAI
|
34
|
JAGADEESH E
|
CHENNAI
|
35
|
S.SATHYABAMA
|
CHENNAI
|
36
|
K.PARI
|
CHENNAI
|
37
|
A SARASWATHI
|
CHENNAI
|
38
|
B PRASAD
|
CHENNAI
|
39
|
V R SREERAMAN
|
CHENNAI
|
40
|
ANANDKUMAR K
|
CHENNAI
|
41
|
K.SWWAMINATHAN
|
CHENNAI
|
42
|
R. ARAVINDAN
|
CHENNAI
|
43
|
C.SIVASANKARI
|
CHENNAI
|
44
|
CHENNAI
|
|
45
|
DIVYA BHARATHY
SARAVANAN
|
CHENNAI
|
46
|
MYTHILI
|
CHENNAI
|
அகத்தியர் அடியவர்கள் பிற இடங்கள்:-
1
|
BASKARAN
|
PUDUKOTTAI
|
2
|
KAVITHA.V
|
|
3
|
T. NAGALINGAM
|
|
4
|
J.VENKATESH
|
TIRUVALLUR
|
5
|
S. MURUGAPPAN
|
TRICHY
|
6
|
M.NAMBIRAJAN
|
VALLIYOOR
|
7
|
GEETHA VENKAT
|
|
8
|
P. SENTHAMARAI SELVI
|
THENI
|
9
|
D.SENTHILKUMAR
|
|
10
|
K.முத்தமிழன்
|
|
11
|
C.BALAKRISHNAN
|
TRICHY
|
12
|
V.GOPALAKRISHNAN
|
VIRUDHU NAGAR
|
13
|
JEEVARAJ.J
|
KANCHIPURAM
|
14
|
M. PRASANNA KUMAR
|
|
15
|
V.SILAMBARASAN
|
|
16
|
N.POORVIKA
|
TRICHY
|
17
|
RAJAA G
|
|
18
|
P. GOPINATH,
|
|
19
|
V.JAYAVEERAPANDIAN
|
THANJAVUR
|
20
|
VAITHEGI
|
CUDDALORE
|
21
|
H BALAJI
|
TIRUNELVELI
|
22
|
C.KOTTIESWARAN
|
|
23
|
G SRINIVASAN
|
ARNI
|
24
|
R.RAMALINGAM
|
PUDUKOTTAI
|
25
|
N.SUNDARARAJAN
|
PALANI
|
26
|
S.SIVAKUMAR
|
|
27
|
M MOHANRAJ,
|
RAMNAD
|
28
|
S.UMAMAHESWARI
|
SIVAGANGAI
|
29
|
K
|
THIRUTHORAIPOONDI
|
30
|
S .T. SHAKTHEVEL
|
PALANI
|
31
|
P VELAYUTHAM
|
TIRUNELVELI
|
33
|
S.C.SHANMUGASUNDARAM
|
|
34
|
S.KALAIVANI
|
ERODE
|
35
|
SRIMATHI BALASUBRAMANIAN
|
|
36
|
M JAYAKUMAR
|
|
37
|
K VIJAYAKKUMAR
|
|
38
|
||
38
|
M SENTHILKUMAR
|
|
39
|
A.S.PHARAMASHIVAM
|
SRIPERUMPUDUR
|
40
|
UDUMALAPET
|
|
41
|
K.MUTHAMIZHAN
|
VANIYAMBADI
|
42
|
JOHNPAULRAI
|
SIVAGANGAI
|
43
|
M ANANTHBABU
|
THIYAGADURGAM
|
44
|
NANDINI KRISHNAKUMAR
|
|
45
|
S.SIVAKUMAR
|
|
46
|
PRAMMENDRAN
|
|
46
|
R.RAVI
|
|
47
|
S.ANANDHA KUMAR
|
ERODE
|
48
|
SREEPREETHIUSHA.D
|
|
49
|
SENTHILKUMAR N
|
|
50
|
K.SENTHIL KUMAR
|
|
51
|
J.CHRISTHU RAJ
|
DINDIGUL
|
53
|
P SIVASHANMUGAM
|
TANJORE
|
54
|
PRASANNA DAS
|
|
54
|
K.A.BALASUBRAMANIAM
|
ERODE
|
56
|
SARAVANABABU.S
|
CHEYYAR
|
57
|
GANESAN
|
|
58
|
SHANTHA KUMAR.S.S
|
|
59
|
M K AYYANAR
|
SIVAKASI
|
60
|
P.PAPITHA
|
|
61
|
K A KIRUBAKARAN
|
TRICHY
|
62
|
NATARAJAN.K
|
|
63
|
K MURALI
|
TANJORE
|
64
|
SUDHAGAR
|
|
65
|
P.MAYILVEL
|
TUTICORIN
|
66
|
C R JAYAKUMAR
|
TIRUPATTUR
|
67
|
R SELVAKUMAR
|
|
68
|
G.N.DHANANJAYAN
|
TIRUVALLUR
|
69
|
A BALAKRISHNAN
|
KANYAKUMARI
|
70
|
R KALPANA
|
|
71
|
MURALI K
|
VILLUPURAM
|
72
|
SRINIVASAN
|
TIRUPATHUR
|
73
|
P SARAVANAN
|
|
74
|
K BOOPATHI
|
|
75
|
P.R.K. RANGANATHAN
|
KUMBAKONAM
|
76
|
P MEENAKSHISUNDARAM
|
Subscribe to:
Posts (Atom)