​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 18 December 2015

சித்தன் அருள் - 264 - மார்கழி மாதம் - பாபநாசத்தில் நீராடவேண்டும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

மார்கழி மாதம் பிறந்துவிட்டது. ஏதேனும் ஒரு நல்ல விஷயம் எல்லோருக்கும் தெரிவிக்க கிடைக்காதா  என்று நினைத்த பொழுது, அகத்தியப் பெருமான் அருளினால் ஒரு புண்ணிய தகவல் கிடைத்தது. அதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

தாமிரபரணி நதியின் ஆதி காலத்தில், அகத்தியப் பெருமான் உத்தரவுடன், ஸ்ரீ தாமிரபரணி தேவியானவள், சிவபெருமானை நோக்கி, பூசித்து, தவமிருந்தாள். அப்படி இருந்த இடம்  திருநெல்வேலியில் இன்றுள்ள பாபநாசம் என்கிற ஊர்.

ஸ்ரீ தாமிரபரணி தாயின் தவத்தில் மகிழ்ந்து, சிவபெருமான் காட்சி கொடுத்து தாமிரபரணித் தாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பலவரங்களை கொடுத்து பின் அந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் உறைந்து போனார்.

ஸ்ரீ தாமிரபரணித் தாய் நமக்காக கேட்டு வாங்கித் தந்த வரங்களில் ஒன்று ........

"மார்கழி மாதத்தில் இவ்விடத்தில் எனது தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணி (நீராடி) தங்களை தரிசனம் பண்ணுவோர், மறுபடியும் இந்த பூமியிற் பிறக்ககூடாது" என்றாள்.

சிவபெருமானும் "அங்ஙனமே" என்று வரமளித்தார்.

பிறகு மலயகுமாரியான இம்மகா நதியானவள் சதாசிவத்தினிடமிருந்து இவ்விதம் அனுக்ரஹம் பெற்று அகஸ்திய மாமுனியுடன் அமர்ந்து அவருக்கு குருபூசை முதலியவை செய்து, பின்னர் மார்கழி மாதத்தில் தன் இருப்பிடம் ஏகினாள்.

இப்படிப்பட்ட தகவல் என்பது மிக மிக அரிதான ஒன்று. ஆதலால், இந்த வாய்ப்பை கைப்பற்றிக் கொண்டு, அகத்தியப் பெருமான், லோபா முத்திரை அருளுடன், அனைவரும் பாபநாசம் சென்று நீராடி, கோவிலில் சிவபெருமானை தரிசனம் செய்து, இப்பூமியில் மறுபிறவி இல்லாத நிலையை பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

மார்கழி மாதத்தில் எந்த நாளிலும் செல்லலாம்.

இந்த  வாய்ப்பை அனைவரும் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

ஸ்ரீ லோபாமுத்திரா தாய்க்கும், அகத்தியப் பெருமானுக்கும் நன்றியை, பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு

வணக்கம்!

6 comments:

  1. ஓம் அகத்தீசாய நமஹ.
    மிக மிக அரிதான தகவல்,சரியான நேரத்தில் தந்திருக்கிறீர்கள்.
    'மாயப் பிறப்பு' அறுக்க மார்கழியில் நீராடுவோம் பாப-நாசத்தில்.
    மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  2. பயனுள்ள இதுவரை தெரிந்திராத தகவல்.
    எல்லோரும் செல்வோம்.நீராடுவோம்.
    புண்ணியம் சேர்ப்போம்.

    ReplyDelete
  3. Om Agatheesaya Namaha: Om Sairam Om Namasivayah:

    ReplyDelete
  4. Mikka nandringa ayya. Om Agasthiyar Ayyanae thunai.

    Today morning only I was thinking to go to paapanasam but not convinced with the month's climate. So I was in oscillation. Pray God ..Almighty gave me answer. I'm very happy.

    ReplyDelete
  5. நன்றிங்க ஐயா. நல்ல தகவல்கள்.
    ஐயா அகத்தியரை கான மந்திரங்கள் சொல்லுங்கல் ஐயா, நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  6. நன்றிங்க ஐயா. நல்ல தகவல்கள் தெரிவித்தீர்கள் ஐயா,

    ReplyDelete