எட்டாவது கேள்வி:- ஓம் அகதீசாய நமஹ! முருகர் மீது எனக்கு ரொம்ப அன்பு ஜாஸ்தி. அவரும் என்னை எப்பொழுதும் பார்த்துக்கிட்டு இருகாரு. ஒவ்வொரு செகண்டும் நான் கேட்டதெல்லாம் கொடுத்துகிட்ட்ருக்காறு. இப்ப ஒரு ஆறு மாசமா வந்து அகத்தியப் பெருமானை நான் வணங்கிட்டிருக்கேன். அவரும் எனக்கு, கேட்ட உடனே, சில விஷயங்களை பண்ணிகிட்டிருகாரு. அவங்க ரெண்டு பேரோட அன்பும் எனக்கு குறையாம, என்னை கீழே வெச்சுக்கணும். அது தான் என்னுடைய ஆசை.
அகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையாலே, இன்னவன் யாது கூறினான். முருகப்பெருமானிடம் அன்பு அதிகம் என்று. இதற்காக கவலைப் படவேண்டியது அன்னையர்கள் தான். நாங்கள் அல்ல. வள்ளியும், தெய்வயானையும் தான் இதை குறித்து கவலை பட வேண்டுமே தவிர, நாங்கள் அல்ல. ஆயினும், இவன் பக்தி தொடர, தொடர்ந்து இறைவனை வணங்கி வர, இவன் நலமும் பெற, தொடர்ந்து இறை வழியில் வர நல்லாசிகள் கூறுகிறோம்.
ஒன்பதாவது கேள்வி:- அகத்தீஸ்வர பெருமானுக்கு வணக்கம். ஆப்பூர் நித்ய கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், சுதர்சன ஹோமம் தாங்கள் முன் நின்று நடத்திக் கொடுக்கவேண்டும். அங்க ஆப்பூர் கோவில் அடிவாரத்தில் இருக்கிற பெருமாள் யார்? அவரை அங்கிருந்து எடுத்து, மேல் கொண்டு வந்து பிரதிஷ்டை பண்ணலாமா?
அகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையை கொண்டு, முன்னரெ முன்னரோ, இத்தேடி வந்த பொழுதிலேயே யாம் அருளானையிட, சில செயல்கள், மூன்று தினங்கள் அங்கு அமர்ந்து சகலவிதமான யாகங்களையும் செய்து பூர்த்தி கண்டார்கள். மீண்டும் ஒரவன் வந்து யாகம் செய்திருக்கிறான். ஆகவே, தக்க காலத்தில், அங்கு மீண்டும், இறைவன் அருளால், யாகம் நடை பெறும் . இறைவன் கருணையாலே, அகுதப்ப, அந்த பரம் பொருள், மகா விஷ்ணுவாக, வெங்கடேச பெருமாளாக அருளுகின்ற மலையிலே, இன்றும் 60க்கும் குறையாத சித்த பெருமான்கள், தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். முழுமதி, நிறை மதி காலங்களிலே, ஏற்ப்பாடு செய்ய, இதனை தக்க அன்பர்கள் உணரலாம்.
பத்தாவது கேள்வி:- வணக்கம்! பிறவியை பற்றி மீண்டும் இந்த கேள்வியை எழுப்புவதற்கு, மீண்டும் மன்னிக்கணும். சுக பிரம்மத்தை பற்றி இவர்கள் சொன்ன விளக்கத்தையும், என் ஆசான் கொடுத்த விளக்கத்தையும், சந்தேகத்தோடுதான் சொல்கிறார்களா அல்லது இறந்த மனிதன் மறுபடியும் பிறவி எடுக்கணும் என்று சொல்கிறார்களா என்று இந்த கேள்விக்கு பதில் தெரிவிக்கணும்.
அகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையை கொண்டு, இயம்புவது யாதென்றால், ரவியை வணங்கு, பிறவியின் ரகசியம் புரியுமப்ப. இகுதப்ப இயம்பும் கால், பலரும் பலவிதமாக கூறலாம். யாங்கள், இத்தருணம் கூறுவதை புரிந்து கொள்ள முயற்சி செய். இந்த தேகத்தோடு இருப்பது ஒரு பிறவி. இந்த தேகம் பூர்த்தி அடைந்து, இந்த தேகத்தை விட்டுவிட்ட ஆத்மா, அவன் கர்ம பாவங்களின் அடிப்படையிலும், இறைவன் இடும் அருளாணையின் படியும் இன்னொரு தேகத்துக்குள் புகுந்து, அதாவது, இன்னொரு அன்ன தேகத்துக்குள் புகுந்து பிறவி எடுப்பதாவது, பிறவி என்று நாங்கள் கூறுகிறோம். ஏனைய எந்தவித கருத்துக்களையும் குறித்து, எமக்கு எந்த விதமான உடன்பாடும் இல்லை, அது அவரவர் மனோபாவத்தை பொறுத்தது. எனவே, இதை நன்றாக புரிந்துகொள்ள முயற்சி செய்.
பதினோராவது கேள்வி:- இறையை அடைவதற்கு, ஸ்தூல வடிவில் உள்ள குரு அவசியமா? அல்லது குரு இல்லாமலேயே அடைய முடியுமா? நம்முடைய தனிப்பட்ட முயற்ச்சியினால்?
அகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையாலே, குரு என்றால் யார் என்று நீ எண்ணுகிறாய்?
பதினோராவது கேள்வி தொடர்கிறது:- குரு என்றால்....... அகத்தியர் இதை முன்பே அறிந்திருக்கிறார், இருப்பினும் மற்றவர்களுக்காக நான் சொல்லுகிறேன். ஒரு சிறு குழந்தை விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, அதன் விளையாட்டு ஆர்வத்தில், வீட்டையே மறந்து விட்டது. உண்மையான தாய் தந்தையை மறந்துவிட்டு, இங்கு தாய் தந்தையாக வேடம் போட்டுக் கொண்டு இருப்பவர்களை, தாய் தந்தையாக, நினைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அது திரும்ப தன் தாய் தந்தையரை ஞாபகப்படுத்தி, திரும்பி சென்ற அடைய வேண்டும், அதற்க்கு ஏற்கனவே சென்று அடைந்த ஒருவர் வழிகாட்ட வேண்டும். அவர் தான் குரு என்று நான் நினைக்கிறேன்.
அகத்தியரின் பதில்:- இறைவனின் கருணையாலே, யார் இருளை நீக்குகிராரோ, அவர் குரு. யார் பிறவி பயனை நீக்குவதற்கு வழி கட்டுகிறாரோ, அவர் குரு. இது ஒருபுறம் இருக்க, ஒன்றை உணர்ந்து கொள்ள, ஒன்றை கற்றுக்கொள்ள, எது காரணமாக இருக்கிறதோ, அது அனுபவமோ, நிகழ்வோ, சக உறவோ, நட்போ, இதன் மூலம் தக்க பாடம் கற்றுக் கொண்டோம் இனி விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்று உணர்வு, எத்தருணம், யார் மூலம், அல்லது எதன் மூலம் ஒரு மனிதனுக்கு வருகிறதோ, அனைத்தும் குருதான். எனவே, புறத்தோற்றத்தில் குருவை தேடுவதை விட, மானசீகமாக இறைவனை வணங்கி, குறிப்பாக, இறைவனை குரு தட்சிணா மூர்த்தி ரூபத்திலே வணங்கி வந்தால், இந்த குரு தொடர்பான ஐயங்கள் நீங்கும், மனதில் உள்ள இருள் நீங்கும். மனித உருவில் குருவை தேடவேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. எத்தனைதான், உயர்ந்த புண்ணியங்களை செய்து, பலருக்கு ஆன்மீக வழிகாட்டுகிறேன் என்று ஒரு ஆத்மா பிறந்தாலும், இங்கு வந்த பிறகு, சிறிது செப்பை பூசிக்கொள்ளத்தான் செய்கிறது. எனவே, அவன் 90 நல்ல விஷயங்களை போதித்து, சில தவறான விஷயங்களை போதித்துவிட்டால், கேட்கின்ற மனிதனுக்கும், அந்த தவறு பாடமாக பதிந்துவிடும். எனவே, மனித வடிவில் பலரை சென்று பார்ப்பது தவறு என்று கூறவில்லை. எல்லாம் கேட்டுவிட்டு, பிறகு, இறைவனை மானசீகமாக வணங்கி, "எது நல்லது, எது அல்லது என்பதை, இறைவா நீ உணர்த்து என்று" இறைவனிடம் சரணாகதி அடைவதே, மெய்யான குருவிற்கும், குருவின் சோதனைக்கும், ஏற்ற வழியாகும்.
சித்தன் அருள்................. தொடரும்!
Om Agatheesaaya Namaha !!!
ReplyDeleteஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ReplyDeleteom agatheesaya namaha !!!
Delete