​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 14 August 2014

சித்தன் அருள் - 189 - அகத்தியர் அருள்வாக்கு - 3


மூன்றாவது கேள்வி: ஓம் அகதீஸ்வராய நமஹ! எல்லா பெரியவங்களுக்கும் வணக்கன். எப்படி கேட்பது என்று தெரியவில்லை, எங்க தொடங்குவது என்பது புரியல. முன்னர் அய்யா சொன்னாங்க, இனி பிறப்பெடுத்தாலும் உன்னையே நாடி வரும் மனம் வேண்டும் என்று. அப்படி ஒரு பெரியவர் மதுரையில் பழங்காநத்தம் அருகில் காசி விஸ்வநாதன், விசாலாட்ச்சி அம்மையார் ஆலயத்தை பராமரிச்சிட்டு வராங்க. அவங்க பெயர் கிருஷ்ணையா. அவங்க வந்து பதஞ்சலி மகா முனிவர வந்து, குருவா ஏத்துக்கிட்டு, அவரை நாடி வரக்கூடிய நல்ல ஆத்மாக்களுக்கு யோகத்தை பயிற்றுவிக்கிறாங்க. அப்படி பயின்று வரக்கூடிய ஒரு சீடரின் பெயர் சிவஞானம். அவருக்கு வந்து, ஒரு பெரியவர் அழைத்துச் சென்று, "இந்த இடத்தில் கோவில் கட்டு" என்று சொல்லிட்டுப் போயிட்டாங்க. அந்த இடம் வந்து மதுரைக்கு அருகில், வேலூர் அருகில் அரிட்டாப்பட்டி. அங்க வந்து ஈஸ்வர ஆலயம். அந்த இடத்தைப் பற்றி வரலாறு என்ன சொல்லறாங்கன்ன, ஒரு மகரிஷிக்கு அம்மை அப்பனே காட்சி கொடுத்து, நானே உன்னுடைய தாய் தந்தை என்று அருளாசி கொடுத்ததாகச் சொல்லறாங்க. அந்த கோவில் கட்டக் கூடிய பணிக்குத் தேவையான செல்வம் கிடைப்பது என்பது மிகக் கடினமாக இருக்கிறது. அத எப்ப, எப்படி கட்டி முடிப்பாங்க? எப்படி நடக்கும். அது க்ரிஷ்ணய்யவினுடைய தலைமையில் தான் நடக்கும் என்று விஸ்வாமித்ரா நாடில வந்ததாகச் சொன்னாங்க. தற்போது பதஞ்சலி மகா முனிவருடைய நாடில வேறு விஷயங்கள் வருகிறது. அந்த கிருஷ்ணையாவினுடைய தலைமையில யோகம் பயிலும் மாணவர்களுக்கு ஆசி கிடைக்கவும், கோவில் கட்டுகிற பணி நல்லபடியாக நடக்கணும். அது கிருஷ்ணையா தலைமையில் நடந்தால் மிகச் சிறப்பு. இன்று சுயநலமில்லாம, மாணவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து, நல வழி செல்வதற்கான நல்ல விஷயங்களை போதிக்கிறாங்க. நல்லோர்கள் நல்ல படியாக வாழ்ந்தால், அவர் வழி செல்லும் மாணவர்களும் நல்ல வழியில் செல்வார்கள். இப்படிக்கு, அந்த காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்மையார் கோவில், நல்ல படியாக கட்டி முடிக்கவும், அவர் கீழ் பயிலும் மாணவர்கள் நல்ல படியாக முன்னேறவும், அய்யா நல அருளாசி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அகத்தியர் பதில்:-   இறைவனின் கருணையை கொண்டு, இயம்புவது யாதென்றால், இகுதப்ப, ஆன்மா லயிக்கின்ற இடம் ஆலயமாகும். மனிதன், மனதிற்குள், ஒவ்வொரு மனிதனும் தத்தம் மனதிற்குள் ஆலயத்தை எழுப்புவதும், மனமாகிய கருவறையிலே, தூய இறையை அமர்த்தி, அன்றாடம் அன்பால் பூசை செய்வதையுமே, இறைவன் விரும்புவது. இருப்பினும், எடுத்த எடுப்பிலேயே, இது போன்ற தத்துவார்த்த விஷயங்களை கூறினால், அது பலனை தராது என்பதால் தான், புற வழிபாடுகளும், புற பூசைகளும், முன்னோர்களான மகான்களால் தான் வைக்கப் பட்டு வருகின்றன. இகுதப்ப, பல் வேறு ஆலயங்களிலே, பல் வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டு, அது காலம் கடந்து நிற்கிறது, சில சிதிலம் அடைந்து விடுகிறது. இவை அனைத்திற்குமே, பல்வேறு விதமான சூட்ச்சுமா காரணங்கள் இருக்கிறது. இகுதப்ப, இம்மகன் எழுப்பிய வினாவின் அடிப்படையிலே, இகுதப்ப ஆலயம் சிறப்புடன் வளர, யாம் இறைவன் அருளால், நல்லாசிகள் கூறுகிறோம். எந்த ஒரு ஆலயமும், மெய்யாக மெய்யாக வளர, மெய் அன்பர்கள் ஒன்று பட்டால் போதும். அங்கே அருள் இணைப்பு இருந்தால் போதும். பொருள் இணைப்பு மிகப் பெரிய விஷயம் அல்ல. இறைவன கருணையால், இனிதே நடக்கும். இந்த தமிழ் மண்ணில் உள்ள மூத்தோனுக்கு தலை சிறந்த ஆலயங்கள். அங்கெல்லாம் தொடர்புடைய மனிதர்கள் சென்று, இயன்ற வழிபாடுகள் செய்து, பணியை துவக்க, நலம் நடக்கும். நல்லாசிகள்.

நான்காவது கேள்வி:- சூலகிரில வரதராஜ சுவாமி கோயில் இருக்கு. அர்ஜுனன் பிரதிஷ்டை பண்ணின சுவாமி அது. அபயஹச்தம் அது. (ஆனால் கோவில் அதிகமாக வளர்ச்சி அடையவில்லை.)

அகத்தியரின் பதில்:- இறைவன் கருணையாலே, அனைத்து பிராண சம்பவங்கள் நடந்தது உண்மை. தக்க காலத்தில், வலிவும், பொலிவும், அகுதப்ப சூழல் உருவாகும். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆலயம் வளர்ச்சி பெறுவது என்பது மனிதர் நோக்கிலே இருப்பது அல்ல. பெருவாரியான ஆட்கள் ஒரு ஆலயத்தை நோக்கி படை எடுத்தால் என்ன ஆகும்? அங்கு வெறும் வியாபாரம் தான் இருக்கும். இறை அம்சம் இருக்குமா? எனவே, ஒரு ஆலயம் அத்தனை எளிதாக பலரின் பார்வைக்கு வரவில்லை, பலரும் அவரை எண்ணிக் கூட பார்க்கவில்லை என்றால், சிலர் மட்டும் செல்கிறார்கள் என்றால், அதனால் அந்த ஆலயத்திற்கு குறை ஒன்றும் அல்ல. தொடர்ந்து, அந்தந்த காலத்தில், எந்தெந்த ஆத்மாக்கள், அந்த ஆலயத்தோடு தொடர்புடையவர்களோ, அவர்கள் வந்து தொண்டினை தொடர்வார்கள். சிறப்பாக அனைத்தும் நடக்கும். நல்லாசிகள்.

ஐந்தாவது கேள்வி:- மீண்டும் மீண்டும் கேட்கிறேனே என்று அவை என்னை மன்னித்தருள வேண்டும். சுயநலமற்று, மனித நேயத்தோடு, தமிழ் சார்ந்த, தமிழ் மக்களுக்காக, தமிழை வளர்த்த, அதற்காக சங்கம் ஏற்ப்படுத்திய, தமிழ் மொழிக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற, தமிழ் இறையனார் எம்பெருமானும், முருகவேளும், தமிழ் என்று எப்பொழுதும் ஒலித்து, அதற்கே ஆட்சி என்று கொடுத்த இந்த தருணத்திலே நாம் கேட்பது, காவிரியை கொடுத்த அகத்தியர், கர்நாடகத்திலே கொடுத்தாலும், தமிழ் மக்களுக்கு சென்று பலன் அளிக்கிறது என்று ஒருவாறாக கூறாமல், என்று இந்த காவிரி பிரச்சினை, பொதுவாக தீர்க்கப்படும் என்று வேண்டி உங்களிடம் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் பிறந்தவனோ, கர்நாடகத்திலே பிறந்தவனோ, உலகத்தில் இருக்கின்ற அனைவருமே அருந்தக்கூடிய, அந்த கங்கை நதியே இங்கு காவிரியாக வந்து அனைவரும் பெறுவதற்கு தகுதி இருக்கும் பொழுது, ஒருவருக்கொருவர், சமாதானமின்றி, சண்டையிட்டுக் கொள்வது என்று முடியும் என்று வேண்டி பொதுநலக் கருத்தோடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

அகத்தியர் பதில்:- இறைவனின் கருணையை கொண்டு இயம்புகிறோம் அப்பா. மனிதர்கள் இருக்கும் வரையிலும், மனிதர்க்குள்ளே, பிரச்சினைகளும், அமைப்புகளும், எக்குதப்ப சிக்கல்களும் இருந்து கொண்டுதான் இருக்கும். காரணம் காலம் தோறும் மாறலாம். ஆனால், மனிதர்களிடையே பகைமையும், கருத்து வேறுபாடுகளும் இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே. மனிதருக்குள், தனிமனித ஒழுக்கம், தனி மனித பண்பாடு, வளராதவரை, இதை எதனாலும், யாராலும் ஏற்க முடியாது. இது மனித ரீதியான பார்வை. விதியும், கர்மாவும் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ, அப்படித்தான் மனித மனம் செல்லும். இருந்தும், நாங்கள் இறையிடம் பிரார்த்தனை வைத்து, என்றும் சமாதான லோகம் இருக்க வேண்டும் என்று அன்றாடம் தவம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். இகுதப்ப, இங்குள்ள மனிதர்களும், அங்குள்ள மனிதர்களும், எல்லா மனிதர்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இந்த உலகம் மட்டுமல்லாது, அனைத்தும் இறைவனால், படைக்கப்பட்டது. எனவே, இதில் யாரும் ஆண்டானும் இல்லை, யாரும் அடிமையும் இல்லை. எல்லோருக்கும், எல்லாம் பொது என்கிற ஒரு உணர்வு, ஒவ்வொரு தனிமனித மனதிலும் வரவேண்டும். அப்படி வருவது கடினம் என்றாலும், வர வேண்டும், வர வேண்டும் என்று எப்பொழுதுமே இறையிடம் வரம் வேண்ட, அகுதப்ப வரம் வரவேண்டும் என்று யாமும் நல்லாசி கூறுகிறோம்.

சித்தன் அருள் ................. தொடரும்!

8 comments:

 1. Om Sri lopamutra samedha agatheesaya nam aha

  ReplyDelete
 2. Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!

  ReplyDelete
 3. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

  ReplyDelete
 4. kutralam pakkathula muthukumarasamy nu oruthar agasthiyar jeeva nadi padikararam avari pathina thagavalai alithal nandraga erukum.......

  ReplyDelete
  Replies
  1. The contact number to reach Sri Muthu kumara swamy is 9443851965. The number is switched off
   sometimes but one can try till the appointment comes through..At Coutralam Sri Muthu kumara swamy
   lives in Kasi major puram. One can check with anyone for address but prior appointment is required.


   Delete
  2. contact mobile no is 94889 86149

   Delete

 5. ஓம்
  அருள்மிகு அன்னை அகிலாண்ட வல்லி உடனுறை ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில்
  (அகத்தியர் மனக்குறை தீர்த்த ஆலயம் )

  (அரிட்டாபட்டி கிராமம், மேலூர் வட்டம் , மதுரை மாவட்டம் )

  ஸ்தல வரலாறு

  தமிழ்ச் சித்தர்களிலே மூத்தவரும் அகர வரிசையிலே முதலானவருமான கும்ப முனி என்று போற்றப்படும் அகத்தியர் மாபெரும் சிவ யோகி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அத்தனை சிறப்புகள் பெற்ற சித்தர் பெருமான் அகத்தியருக்கே மாபெரும் மனக்குறை ஒன்று இருந்தது. அது என்னவென்றால் தன் தாய் ,தந்தை யார் என்பதாகும். அந்தக் கேள்வி அவரை மாபெரும் மனவாட்டத்தில் ஆழ்த்தியது. இந்தக் கேள்விக்கு தான் வணங்கும் அந்தச் சிவ பெருமானும் , அன்னை உமா தேவியுமே விடையளிக்க முடியும் என்றெண்ணி கடும் தவத்தில் ஆழ்ந்தார் அகத்தியர் .
  அந்த தவத்தின் முடிவில் அவருக்கு சிவபெருமான்-அன்னை உமாதேவி சமேதராக காட்சியளித்து தாங்களே அகத்தியரின் அன்னை –தந்தை என்று உணர்த்தி அகத்தியரின் மனக்குறையினை தீர்த்தனர். அதனால் மிகவும் உள்ளம் மகிழ்வடைந்த அகத்தியர் அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவர் அவ்வாறு ஈசனை வழிபட்ட இடமே அந்த காலத்தில் சான்றோர்களால் தேவாரிஷ்டாப்பட்டி என்று அழைக்கப்பட்டு இன்று அரிட்டாபட்டி (மேலூர் வட்டம் ) என்ற பெயரிலே அறியப்படும் கிராமம் ஆகும்.

  அந்தக்காலத்திலே இங்கே இருந்ததாக கூறப்படும் சிலம்பாறு எனப்படும் ஆற்றின் கரையிலே , அடர்ந்த வனப்பகுதிக்குள் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இங்கே அகத்தியர் ,கொங்கணவர் மற்றும் இன்னும் பல சித்தர்கள் வாழ்ந்தாக அறியப்படுகிறது.


  காலம் செல்லச்செல்ல இந்த ஆலயம் பராமரிப்பின்றி இன்று மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. சித்தர் அகத்தியப் பெருமானும், மாமன்னர் சடைய வர்ம விக்கிரம பாண்டியனும் வழிபட்ட இத்திருக்கோவிலை மீண்டும் அனைத்து ஆன்மீக நல் உள்ளங்களின் பேராதரவுடன் மீண்டும் கட்டியெழுப்ப அன்பர் சிவஞானம் குழுவினரும், அரிட்டாபட்டி ஊர்ப்பொதுமக்களும் முடிவு செய்துள்ளனர் .

  ஆன்மீக நல் உள்ளங்களாகிய நீங்களும் இந்த ஆலய புனரமைப்பு பணியிலே எந்தளவு துணை செய்யமுடியுமோ அந்தளவு தங்கள் பேராதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மகிமை மிகு இந்தப் பணிக்காக தங்கள் உதவி செய்து தாங்களும் , தங்கள் குடும்பமும் , வருங்கால சந்ததியும் சிவனருள் பெறும்படி கேட்டுகொள்கிறோம்.

  அகத்தியப் பெருமானின் மனக்குறை தீர்த்த அந்த ஈசன் தங்கள் மனக்குறையையும் அகற்றுவார்

  இப்படிக்கு என்றென்றும் இறைப் பணியில்
  பிரணவ நாத திருவருட் சபை மற்றும் அரிட்டாபட்டி ஊர்ப்பொதுமக்கள்
  நன்றி
  தொடர்புக்கு
  திரு. சிவஞானம்
  பிரணவ நாத திருவருட் சபை
  மதுரை
  மொபைல் – 99524-54869, 80151-46989

  ReplyDelete