​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 4 May 2014

தாய் பாதம் வழி பொதிகை பயணம் - உதவி தேவை!

[புகைப்பட நன்றி:திரு சரவணன்] 

ஓம் லோபாமுத்ரா சமேத அகதீசாய நமஹ!

"சித்தன் அருளை" வாசிக்கும் அகத்தியர் அடியவர்கள் பார்வைக்கு ஒரு தகவலை தருகிறேன். திரு சுரேஷ்குமார் என்பவர் நம்பிமலயில் இருந்து "தாய் பாதம்" வழியாக பொதிகை பயணம் செய்ய உள்ளார். ஒரு சில தகவல்களை எதிர்பார்த்து அவர் அனுப்பிய வேண்டுகோளை உங்கள் முன் தருகிறேன். தெரிந்தவர்கள் உதவி செய்யவும்.

ஓம் அகத்தீசாய நமஹ!

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம். நம்பிமலையலிருந்து "தாய் பாதம்" வழியாக பொதிகை பயணம் பற்றி இங்கே வாசித்திருப்பீர்கள். ஒவ்வொரு வருடமும் "சித்ரா பவுர்ணமி" அன்று மட்டும் நிறைய பேர் சென்று தரிசனம் செய்வார்களாம். இந்த வருடம் மே 14 அன்று வருகிறது. அன்று தாய் பாதம் வழியாக பொதிகை பயணத்திற்கு முயற்சி செய்யலாம் என்றிருக்கிறோம். 
மிக மிக அடர்ந்த வனப்பகுதி என்பதால் பொதிகை செல்லவே 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம். இரவு பகல் பாராமல் வெயில் மழை பாராமல் பசி தூக்கம் பொருட்படுத்தாமல் கிடைத்தவற்றை உண்டு நடக்க வேண்டியது வரும். கொடிய மிருகங்கள் நடமாட்டமுள்ள பகுதிகள் வேறு. "அகத்தியர் வாக்கு" ஐ மட்டுமே நம்பித்தான் இந்த பயணம் இருக்கும்.

இப்பாதையைப் பற்றி அறிந்தவர்கள் (அல்லது) வள்ளியூர், நாங்குனேரி பக்கம் உள்ளவர்கள் (அல்லது) மலைவாசிகளையோ பள்ளியர்களையோ தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் உள்ளவர்கள், தயவு செய்து எங்களுக்கு ஓர் பேருதவி செய்யுங்கள்.  எங்களை 8508765371 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்களுக்கு வழி காட்டுங்கள்.

மலைவாசிகள் துணையன்றி செல்வது மிக மிக கடினம். யாரை எப்படி அணுகுவது என்று தெரியாமல் இருக்கிறோம்.  அப்படியொரு ப்ராப்தம் இருந்தால் இப்பாதை வழியே பொதிகை சென்று "சித்தன் அருளை" சிறப்பாய்ப் பெற்று வருவோம்.

ஓம் அகத்தீசாய நமஹ.

சுரேஷ்குமார்

7 comments:

  1. ungal Punidha payanathirku agathiya adiyenin vazhthukkal..!! Om sreem hreem sree agathiya sitharswamiye potri..!!

    ReplyDelete
  2. அகத்திய மாமுனியின் திருவருளால், தகுந்த வழிகாட்டியின் உதவியுடன், உங்கள் புனிதப் பயணம் நல்லபடியாக நிறைவேற அடியேனின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Agathiyarin naamathaiye manadhil jebithu kondu sellungal , avare vazhithunaiagavum varuvar migundha ullanarchiyudun vizhippudan sellungal, bayam vendam - Mudinthal Thangarasan Adigaralai thodarbu kondu vivarangalai kettu perungal - Agathiyar adiyavan Ravi-Chennai-Mogapair- Nandigal- Vazhthukkal

    ReplyDelete
  4. Ungal Punitha Payanam vetri pera enadu Valthukkal.

    Om Agatheesaya Namaha.

    ReplyDelete
  5. Ungal punitha Payanam Vetri Pera Enadu Valthukkal.

    Agathiar Eppodum Udan Iruparaga.

    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  6. ஓம் அகத்தீசாய நமஹ!
    நாங்கள் மூன்று பேர் மூன்று நாட்கள் தங்கியிருந்து "நம்பிமலையிலிருந்து தாய் பாதம்வழியாக பொதிகை பயணத்திற்கு" எவ்வளவோ முயற்சிகள் செய்தும் இந்த முறை அந்த ப்ராப்தம் கிடைக்கவில்லை.
    சித்ரா பவுர்ணமி யாகத்தில் கலந்து கொள்ளும் பாக்கியமும் புளிய மரச்சித்தனுக்கு வழிபாடு செய்யும் பாக்கியமும் கிட்டியது.
    ஓம் அகத்தீசாய நமஹ!

    ReplyDelete