​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 23 October 2013

சித்தன் அருள் ...... பெற்றால் தான் தகப்பனா!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பல முறை யோசித்தபின், இதுவும் ஒரு சிறந்த வழி என்று தோன்றியதினால், உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தீர்மானித்தேன். எனது நண்பர் மிக பெருந்தன்மையாக என்னிடம் பகிர்ந்து கொண்ட, நாடியில் வந்த விஷயங்களைத்தான், அகத்தியர் அனுமதியுடன் உங்கள் அனைவருடன் அடியேன் "சித்தன் அருளில்" பகிர்ந்து கொள்கிறேன். மனிதனாக பிறந்தவர் இறந்து தான் ஆகவேண்டும். இறந்த பின் அவருக்கான சடங்குகளை, அவரவர் குல வழக்கப்படி செய்துதான் ஆகவேண்டும். 

எனது நண்பரின் மறைந்த திதி நேற்று (22/10/2013) வந்து சென்றது. நான் கேள்விப்பட்டவரையில் அவருக்கான வருடாந்திர திதி சடங்குகள் எதுவுமே அவர் குடும்பத்தாரால் செய்யப்படவில்லை என்று செய்தி. என் வரையில், அவர் ஞாபகர்த்தமாக ஒரு முருகர் கோவிலில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்ய முடிந்தது. அவர் மறைந்த ஆங்கில தியதி வரும் சனிக்கிழமை (26/10/2013) அன்று வருகிறது.

வாழ்க்கையின் உலக இன்பங்களில் திளைத்து செல்லும் நமக்கு, அன்மீகப்பாதையில், சித்தர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் ஆசிகளை வாங்கித்தந்து , பலரின் வாழ்க்கையை செப்பனிடுவதே தன் கடமை என்று வாழ்ந்து சென்ற அந்த புண்ணிய ஆத்மாவுக்கு, நினைவார்த்தமாக நாம் அனைவரும் ஏதேனும் ஒரு நல்லது செய்ய வேண்டும். இத்தனை அருளை வாரி வழங்கிய அந்த ஆத்மாவின் நினைவாக, ஒருவருக்கேனும் அன்றய தினம் (26/10/2013) "அன்னதானம்" செய்யுங்கள். அது போதும். இதுவே என் வேண்டுதல்.

இந்த விஷயத்தை கூட உங்களிடம் பகிர்ந்துகொள்ள அனுமதி அளித்தது அகத்தியப் பெருமான்தான்.

இதை நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆகவே யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது! எனக்கு கிடைத்த செய்தியை பகிர்ந்து கொள்கிற ஒரு செயல் மட்டும் தான்.

எல்லோரும் அவர் அருளை பெற்று நலமுடன் வாழ பிரார்த்தித்துக் கொண்டு..........


கார்த்திகேயன்

5 comments:

  1. Very good suggestion sir. Though you have not mentioned specifically, I believe you are referring to Shri Hanumantha Dasan, who departed about three years ago.

    I will definitely do Annadhanam as suggested on 26.10.2013 in memory of this great soul. Thank you for providing us all this opportunity through your blog post.

    ReplyDelete
  2. Naan nichayam seiren sir. Avarukaga mattum ilama ungalukagavum than for your selfless service.

    ReplyDelete
  3. I confirm having done it this morning. Once again thank you for indicating this opportunity to us.

    Om Agatheesaaya Namaha.

    ReplyDelete
  4. சாதாரண மனிதர்களுக்கு தான் சண்டங்குகள் எல்லாம் அவர் ஒரு தெய்வம் அகத்தியரின் மைந்தர் . ஆகவே அதை பற்றி கவலைப்பட தேவையில்லை இந்நேரம் அவர் மோக்ஷம் அடைந்து இருப்பர் அல்லது தெய்வ அந்தஸ்து பெற்று இருப்பார் ... இப்படி நன் பேசினால் உங்களுக்கு கோவம் வரும் என்று தெரியும் ! இருக்கட்டும் அனால் இது தான் உண்மை . எனக்கு ஆசிரியம் என்றால் அகத்தியர் சொன்னார் என்று தான் நானாக இருந்தால் கண்டிப்பாக அவரை பற்றி கேட்டு இருப்பேன் .... ஏனோ தங்களுக்கு என் தோன்றவில்லை என்று தெரியவில்லை ..:P

    ReplyDelete