​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 16 July 2013

அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 6

ஆன்மீகத்துக்கு பல முகங்கள் உண்டு.  அவற்றில் ஒன்று கோவில் வழிபாடு. இருக்கும் இடத்தில் இருந்து பூசை செய்ய முடியாதவர்களுக்கு கோவில் ஒரு வரப்பிரசாதம்.  அங்கு சென்றால் நடந்து கொள்ளவேண்டிய முறைகளை பற்றி பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமே.

  • கண்டிப்பாக தலைக்கு குளித்துவிட்டு, அசுத்தமின்றி, நெற்றியில் விபூதி, குங்குமம் அல்லது சந்தானம் தரித்ததுதான் கோவில்களுக்கு செல்லவேண்டும்.
  • கோவில் பூசைக்கு அல்லது இறைவனுக்கு என்று கொடுக்கப்பட்ட எதையும், தொடுவதோ, நமெக்கென எடுத்துக் கொள்வதோ கூடாது 
  • சிவ அபசாரம் என்பது மிகக் கொடிய பாவங்களில் ஒன்று. மெதுவாக ஆனால் வீரியத்துடன் நம்முள் நின்று வருத்தும்.
  • கோவிலின் ஈசான்ய மூலை மிக புனிதமானது.  சற்று நேரம் அங்கமர்ந்து த்யானம் செய்யவும்.
  • கோவிலில் இகபர வாழ்க்கையின் எண்ணங்களை களைந்து இறைவன் திருவடியை சிந்தையில் நிறுத்துங்கள்.
  • தரிசனம் முடித்து திரும்புகையில் கோவில் வாசலில் ஒரு நிமிடம் அமர்ந்து கண்மூடி "போதும்! நிறைவாக உள்ளது! இனி வரும் பக்தர்களை வழிநடத்தி அருள் புரியுங்கள்" என்று நினைத்து வரவும்.
  • கோவில்களில் காணப்படும் கொடி மரத்தை தொட்டு வணங்கக் கூடாது. கொடிமரத்துக்கு பின்னால் மட்டும் தான் கீழே விழுந்து வணங்கலாம். கொடிமரத்தை தாண்டிவிட்டால் கை கூப்பி மட்டும் தான் வணங்க வேண்டும்.  கோவில் பூசாரிக்கு மட்டும் தான் தன கடமையின் பாகமாக கொடி மரத்தை தாண்டி வணங்குகிற உரிமை உண்டு.
  • கோவிலில் ஏதேனும் பெரியவர்களை சந்திக்க நேர்ந்தால், கீழே விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது.  கோவிலில் உறையும் இறையை தவிர வேறு எந்த மனிதருக்கும் நமஸ்கார வணக்கத்தை ஏற்றுக் கொள்கிற தகுதி கிடையாது.
  • நல்ல எண்ணங்கள் மனதில் இருக்க இறை வழிபாடு நடத்தப் படவேண்டும்.
  • அமைதி உள்ளும் வெளியேயும் இருக்க நம்மால் இயன்ற மௌனத்தை கடை பிடிக்க வேண்டும்.
  • நாம ஜபம், மந்திரங்கள் (மனதுள்) நம்முள் படர, இறை அருள் நம்மை சூழ்வதை உணரலாம்.
  • மருத்துவர்கள் பிரம்மஹத்தி தோஷம் விலக விளகேற்றும் போது, அந்த விளக்கை சிவலிங்கத்துக்கு முன் வைக்கச் சொல்லி பூசாரியிடம் கொடுக்கவும்.  சிவலிங்கத்துக்கு முன் ஏற்றுகிற விளக்கு மட்டும் தான் "மோக்ஷ தீபமாக" கருதப்படும், பலன் கொடுக்கும்.
  • கோவிலில் சன்னதியில் இறையை தரிசனம் செய்யும் போது முதலில் பாதத்தை தரிசனம் செய்து மனதில் இருத்தியபின், முகத்தை தரிசனம் செய்யவேண்டும்.
  • பூ, சந்தானம், விபூதி போன்ற பிரசாதங்களை இரு கை நீட்டி வாங்கிக்கொள்ளவேண்டும். அவை நம் கை விட்டு கீழே சிந்தாமல், சிதறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • கோவில் கோமுகம் மிக புனிதமானது.  அங்கு வழியும் தீர்த்தம் நம்முள் இருக்கும் அனைத்து கெடுதல்களையும் விலக்கும். கோமுகததை சுத்தம் செய்து, சந்தானம் குங்குமம் இட்டாலே அங்கு உறையும் இறைக்கு நாமே நேரடியாக பூசை செய்த பலன் கிடைக்கும். கோமுகத்தின் அருகில் அனைத்து பெரியவர்களும் உறைவதாக ஐதீகம்.
  • சிவன் கோவிலில் பிரகாரத்தில் இருக்கும் "பிட்சாடன" மூர்த்தியின் பிச்சை பாத்திரத்தில் நம்மால் இயன்ற காசை போட்டு வேண்டிக்கொண்டால் நம் நிதிநிலை பிரச்சினை உடனே தெளிவாகும்.

சித்தன் அருள்........... தொடரும்!

5 comments:

  1. சிவ அபசாரம் மற்றும் "பிட்சாடன" மூர்த்தி பற்றி விளக்க இயலுமா?

    ReplyDelete
    Replies
    1. சிவனுக்கு சொந்தமான விஷயங்களில் எந்த தவறு செய்தாலும் அது சிவா அபசாரமாக கருதப்படும். நிறைய உதாரணங்களை சொல்லலாம். சிவனடியார்களை வருத்துவது, சிவன் சொத்தை அபகரிப்பது, சிவ பூசையை தடுப்பது அல்லது களங்கப்படுத்துவது, சிவனை பூசிக்க விதிக்கப்பட்ட ஜென்மத்தை அது செய்யாமல் இருப்பது, இப்படி எத்தனையோ. சிவனுக்கு கடன் இருந்தால்/அபசாரம் செய்திருந்தால் ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சூரியன் இருக்கும் நிலையை பார்த்து சொல்வார்கள். அவருக்கு கொடுக்க வேண்டிய கடன் இருந்தால், எத்தனை ஜென்மம் எடுத்தாலும், அதை கொடுக்காமல் மோக்ஷத்தை அடைய முடியாது என்பர்.

      பிக்ஷாடன மூர்த்தி என்பது இறைவன் தன்னை வருத்திக் கொண்ட நிலை. புண்ணுக்கு மருந்து தடவுவது போல், அவருக்கு செய்கிற ஆராதனை பல உண்டு. அவருக்கு ப்ரீத்தி செய்ய நம் குறிப்பிட்ட பிரச்சனை விலகும் என்பது உண்மை. இன்றைய மனிதருக்கு நிதிநிலை தானே பிரச்சினை. அதனால் அதற்கான வழியை மட்டும் காட்டிக் கொடுத்தேன். விரிவாக தெரிய வேண்டுமென்றால் பிக்ஷாடன மூர்த்தியின் விஷயங்களை படியுங்கள்.

      Delete
    2. பிஷாடன மூர்த்தியின் விவரங்களை எங்கு தேடுவது? (வெளி நாட்டில் இருக்கும் எம் போன்றோருக்காக கேட்கிறேன்) Thank you

      Delete
  2. please write about way of removing pithru dosha as told by siddhars

    ReplyDelete
  3. Nalla arivurai iyya. Thavaramal pinpattruven

    ReplyDelete