​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 28 June 2012

மருத்துவர்களுக்கு அகத்தியரின் அறிவுரை!

சித்தன் அருளை தொகுப்பதற்காக நிறைய புரட்டியபோது ஒரு தகவல் என் கண்ணில் பட்டது.  அது தொகுப்பாக குழுவில்/ப்ளாகில் வந்து சேர சிறிது காலம் ஆகும் என்பதால், அதன் உட்கருத்தை மட்டும் உடனே உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

நம்மிடையே, இந்த தொகுப்பை வாசிப்பவர்களில் பல மருத்துவர்களும் (டாக்டர்) இருக்கலாம்.  அவர்கள் தங்கள் கடமையை (தொழிலை) செய்வதற்கு, பல நோயாளிகளையும் பார்க்கவேண்டிவரும்.  தொட்டு சிகிற்சை செய்யவேண்டிவரும்,  மருந்து கொடுக்கவேண்டிவரும், ஊசி போட வேண்டிவரும்.  ஏதாவது ஒரு காரணத்தால் அந்த நோயாளி என்றேனும் இறக்க நேர்ந்தால், நேர்மையான எண்ணத்துடன் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் சிகிச்சை செய்திருந்தாலும், அந்த நோயாளி இறந்ததினால் (என்றாயினும்) கொன்ற பாபத்துக்கு இணையான "பிரம்மா ஹத்தி தோஷம்" சிகிட்ச்சை அளித்த அந்த மருத்துவருக்கு வரும். அதுதான் உண்மை விதி.  இதை அகத்தியரே ஒரு மருத்துவருக்கு நாடி பார்க்கும் பொழுது சொல்கிறார். இது அந்த தொழிலில் தவிர்க்க முடியாதது.இதற்க்கான பரிகாரமும் அகத்தியரே சொல்கிறார். அதிலிருந்து விடுபட, ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டதாக தெரிந்தால், அன்றே சிவன் கோவிலில் அந்த நோயாளியை நினைத்து "மோக்ஷ தீபம்" ஏற்றவேண்டும். மரண செய்தி என்று தெரிந்ததோ அன்றோ அல்லது உடனேயோ (வரும் நாட்களில் கூட)  இதை செய்தால், அந்த தோஷம் விலகிவிடும் என்கிறார். அதற்காக வேண்டுமென்றே கொன்று விட்டு "மோக்ஷ தீபம்" போட்டால் போதுமே என்று நினைக்க கூடாது. வேண்டுமென்று செய்ததற்கு ஒருபோதும் விமோசனம் கிடையாது.

இதை செய்யாமல் போனால், அந்த தோஷமானது, கூட இருந்து, மருத்துவரை வருத்தும். மருத்துவர்களே, இதை புரிந்து கொண்டு உடனே செய்வது நல்லது. ஏன் வாரத்தில் ஒரு நாள் ஒரு முறையேனும் இப்படி தீபம் ஏற்றிவர, தெரியாமலே நம்மிடம் வந்து சேர்ந்த தோஷத்தை விலக்கி கொள்ளலாமே. யோசியுங்கள்! நலம் பெறுங்கள்!

4 comments:

 1. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_

  ReplyDelete
 2. குருநாதர் கூறியுள்ள பல உண்மைகள் யாரும் புரிந்து கொள்ள ஆசைப்படுவதில்லை. மனித இனத்தை நல்வழிப்படுத்தவே சித்தர்கள் இன்றளவும் நம்மிடையே இருப்பது உண்மை. கண்டிப்பாக தாங்கள் கூறியுள்ளதை மருத்துவர்கள் வாழ்வில் கடைப்பிடித்து ஆனந்தமாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். நன்றியுடன் - சிவஹரிஹரன்.

  ReplyDelete
 3. உண்மைகளை எடுத்து சொல்லி, மனிதர்களை நல வழிப்படுத்தவேண்டும் என்கிற எண்ணத்தில் அகத்தியர் பல விஷயங்களை உரைத்திருந்தாலும், கடைசியில் அவர் மனம் வருத்தப்படுகிற அளவுக்கு மனிதர்கள் நடந்துள்ளனர். இதனால் கோபப்பட்ட அகஸ்தியர் "இனிமேல் இந்த மனிதர்களுக்கு நல வழி உறைப்பதில்லை" என்று சபதம் பூண்டு சென்றுள்ளார். சில நாட்களிலேயே அந்த நாடி படித்தவர் மறைந்துவிட, இன்று வரை ஒருவரையும் அவர் நாடி படிக்க தெரிவு செய்யவில்லை. அடியேனும் தினமும் அகத்தியரிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஒரு சிலர் தவறால் கோபப்பட்ட முனிவரின் மனம் மாற வேண்டும். கஷ்டப்படும் நிறைய பேர் வாழ்க்கையில் ஒளியூட்டவேண்டும். மன்னித்து அருள் புரிய வேண்டும் என்று. இதை படிக்கும் அடியவர்களும், மனித குல மேன்மைக்காக அவரிடம் தினமும் வேண்டிக்கொள்ளுங்கள் "சீக்கிரமே ஒரு நல்ல மனிதரை தெரிவு செய்து நாடி வாசிக்க, மக்கள் நலம் பெறவேண்டும்" என்று. நம் உண்மையான பிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக அகஸ்திய முனிவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புவோம். எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்.

  ReplyDelete
 4. சமீபத்தில் நடந்த உண்மை சம்பவம்: திருநெல்வேலியில் சுமார் 300 பசுக்கள் கொண்ட கோ-சாலையை நடத்திவரும் அன்பர் - ஆனி பெளர்ணமி அன்று சதுரகிரி சென்று மகாலிங்கத்தைத் தரிசித்துவிட்டு, திரும்புகையில் தாணிப்பாறையில் அமைந்துள்ள நமது பிரத்தியங்கராதேவி ஆலயத்திற்கு வந்தார். வந்தவுடன் அவரை ஒரு சக்தி ஆட்கொள்ள, ஆலயம் அமைந்துள்ள தென்கிழக்கு பகுதிக்குச் சென்றவர் - சுமார் பதினைந்து நிமிடங்கள், மண்ணில் விழுந்து பாம்புபோல் நடனமாடி- காலங்கிநாத சித்தர் ஜீவ சமாதியாக அங்கிருப்பதாகவும், தினம் விளக்கேற்றி வழிபட அருள் கிடைக்குமென்றார். பெளர்ணமியன்று அணையா தீபமேற்றி வழிபடவும் கூறினார். எல்லாம் சிவமயம். ஆனந்தத்துடன் - சிவஹரிஹரன்.(09/07/2012)

  ReplyDelete