​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 26 April 2012

இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்!

  1. காலையில் எழுந்ததும் சிவ சக்ரத்தை மனதில் நினையுங்கள்.
  2. பல் தேய்க்கும் போது ஆள் காட்டி விரல் உபயோகிக்காதீர்கள்.
  3. ஓம் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணா என்று மூன்று முறை கூறுங்கள்.
  4. குளித்தபின் உணவு உண்ணுங்கள்.  பைரவர், காகம், பசு இவைகளுக்கு முடிந்த அளவுக்கு உணவு இடுங்கள்.
  5. பணத்தை எப்போதும் இடது மார்பின் பையில் வையுங்கள்.
  6. வாரம் இரண்டு முறை எண்ணை ஸ்நானம் செய்யுங்கள்.  ஆண்கள் - புதன், சனி; பெண்கள் - செவ்வாய், வெள்ளி.
  7. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி தினங்களில் சவரம் செய்வது, நகம் வெட்டுவது கூடாது.
  8. மாசி, ஆனி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் - தலை முடி வெட்டுவது கூடாது.
  9. பூசை மற்றும் அன்றாட தேவைக்கு மணமுள்ள மலர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.  கனகாம்பரம் போன்ற பூக்களை தவிர்க்கவேண்டும்.
  10. கோயில் கோமுகத்தை - சுத்தம் செய்து, சந்தானம், குங்குமம் இட்டு தீபாராதனை செய்யுங்கள்.
  11. மகம் நட்சத்திரம் அன்று எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுத்து வந்தால் மரண பயம் விலகும்.
  12. பூசை விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் - ஞாயிறு, வியாழன், சனி
  13. வருடம் ஒருமுறையேனும் கண்டிப்பாக குலதெய்வ பூசை/வழிபாடு செய்யவேண்டும்.
  14. லுங்கி, கைலி அணியாதீர்கள்.  வறுமை வாட்டும்.  வேஷ்டியே நல்லது.  நள மகாராஜா தமயந்தியின் பாதி சேலையை அணிந்த நிகழ்ச்சியே கைலியாக மாறியது.
  15. வெளியே போகும்போது டாட்டா காட்டாதீர்கள்.  இறைநாமம் சொல்லி செல்லுங்கள்.
  16. புது ஆடைகளை குங்குமமிட்டு, வெண் தாமரை வைத்து பூசை செய்தபின் அணியுங்கள்.
  17. அருந்த சுரைக்குடுவை, மூங்கில் அல்லது வெள்ளி டம்பளர் உபயோகிக்கவும்.
  18. மருதாணியை முடிந்த மட்டும் அதிகமாக உபயோகிக்கவும்.
  19. குழந்தைகளை அடிக்காதீர்கள் - வியாதி, கடன், சுமை அதிகரிக்கும்.



3 comments:

  1. மிகவும் நன்றி.
    என்னுடைய இன்னொரு சந்தேகத்தை தாங்கள் தயவு செய்து நிவர்த்தி செய்தல் வேண்டும்.
    நியாயமில்லாமல் கணவர், மனைவி மீது கோபித்து கொள்ளுவதற்கும் வன்மையாக நடந்து கொள்ளுவதற்கும், அவருடைய குணமும், அகத்தியர் சொல்லுவதை போல் நம்முடைய பூர்வ ஜென்ம பாபமும் தான் காரணம் என்று மன அமைதியுடன் மன்னித்து வாழ்ந்தாலும், சில தருணங்களிலில் மனம் மிகவும் (மீண்டும்,மீண்டும் நடக்கும் போது )சஞ்சலப்படுகிறது. இவற்றில் இருந்து விடு பட தாங்கள் சொன்ன "அகத்தியர் பூஜா விதிகளை பின் பற்றி அகத்தியரை பூஜை செய்தால் போதுமா? அவர்களும், திருந்தி நமக்கும் மன அமைதி கிட்டுமா?
    அல்லது என்ன வழிமுறைகளை பின் பற்ற வேண்டும்? தாங்கள் தயவு செய்து வழி கொடுத்து உதவ வேண்டும்.

    ReplyDelete
  2. ayya... adiyenin thalmayana karuthu... gurunadhar thinamum irendu velyum pooja pathirangalai kaluvi ubayogiga solkirar... aga vilakkukalayum apdiye eiyya vendum enbathu adiyenin karuthu

    ReplyDelete
  3. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete