​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 1 March 2012

சித்தன் அருள்-61



அவர் எழுந்து வந்த வேகத்தைப் பார்த்தவுடன் எதற்காக இப்படி வருகிறார் என்ற கேள்விக்குறி என்மனதில் எழுந்தது.  வந்தவர், சட்டென்று நெடுஞ்சாண் கிடையாக என் காலில் விழுந்தார்.  பாதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.  இரண்டு நிமிடத்தில் அவர் குலுங்கிக் குலுங்கி அழுவது போல் தோன்றியது.

பொதுவாக யாரும் என் காலில் விழுவதை நான் ஏற்ற்றுக் கொள்வதில்லை.  காரணம் முன் ஜென்ம புண்ணியத்தால் எனக்கு அகஸ்தியரின் ஜீவநாடி கிடைத்தது.  அதை அகஸ்தியர் என் மூலம் மற்றவர்களுக்கு எதிர்காலத்தைச் சொல்லக்கூடிய ஒரு பாக்கியத்தைத் தந்து இருக்கிறார்.

ஏதாவது நல்லது நடக்குமேயானால் அந்தப் புகழ் அகஸ்தியருக்குத்தான் உரியதே தவிர எனக்கில்லை.  ஆனால் நிறையப் பேர்கள் இப்படி ஜீவநாடியைப் படிக்கும் என்னையே அகஸ்தியராக எண்ணுகிறார்கள்.  இதை எத்தனை தடவை எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்குப் புரிவதில்லை.

இந்த வரிசையில் அவரையும் சேர்த்துக்கொண்டு அவரை தூக்கி என் பக்கத்தில் அமர வைத்து, "என்ன விஷயம்?" என்று நிதானமாகக் கேட்டேன்.  வந்தவர் சொன்னார்.

"நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை.  எனக்கு நாடி மீது துளியும் நம்பிக்கை இல்லை. பகுத்தறிவுப் பாசறையைச் சேர்ந்தவன்.  கடவுள் இல்லையென்று சொன்னவன். முன்பு நடந்த போராட்டத்தில் பிள்ளையார் சிலையை நடுரோட்டில் போட்டு உடைத்தவன்.  இருப்பினும் இந்த ஜீவா நாடியைப் பற்றிக் கேள்விப்பட்டு "இது பொய் என்று நிருபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான், யாரிடமும் சொல்லாமல் சட்டென்று, இந்த நள்ளிரவு நேரத்தில் வந்தேன், என்று சொல்லி முடிக்கும் பொழுது வேலாயுதம் உண்மையில் பரவசப்பட்டு போனார்.  அவரது கண்களும் கலங்கியிருப்பதை நள்ளிரவு நேரத்திலும் நான் பார்க்க முடிந்தது.

அப்பாடா என்று நான் மனதில் நினைத்துக் கொண்டேன். பிறகு "அகஸ்தியர் வேறு சில தகவல்களும் சொல்லியிருக்கிறாரே அதைப் பற்றி" என்று கேட்க்கும் பொழுதே வேலாயுதம் தன கை சட்டைப் பையிலிருந்து ஒரு கவர் எடுத்து என்னிடம் கொடுத்து "இதைப் படியுங்கள் பரவாயில்லை" என்றார்.

"இல்லை தாங்களே சொல்லிவிடுங்கள், மற்றவர் கடிதத்தைப் படிக்கும் பழக்கம் எனக்கில்லை" என்று நழுவினேன்.

"ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால் உயர் ஜாதிப் பெண்ணை எனக்கு வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்று எனக்கு இளம் வயதிலே ஒரு வெறி இருந்தது.   எனக்கு எங்க ஜாதியிலே மண முடித்து விட்டிருந்தார்கள்.  ஆனால் பிள்ளைப் பேறு பாக்கியம் இல்லை.

இதையே ஒரு சாக்காக வைத்து உயர் ஜாதி ஏழைப் பெண்ணை இரண்டாம் தாரமாக வைத்துக் கொண்டேன்.  ஆனால் அவளை மணமுடிக்கவில்லை.  அவளுக்குத் தனி வீடு கொடுத்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தேன்.  இந்த விஷயம் என் மனைவிக்கு தெரிந்ததும் குய்யோ முறையோ என்று கத்தினாள்.  எங்கள் வீட்டில் பரம்பரை பரம்பரையாக ஒரு மரகத விநாயகர் இருந்தது.  இதற்கு அவள்தான் பூசை செய்வாள்.  நான் பூசை அறைப்பக்கம் போவதே இல்லை.  

அன்றைக்கு விநாயகர் சதுர்த்தி.  பூசை செய்து முடித்துவிட்டு, வெளியே வந்த என் மனைவி அந்த மரகதப் பிள்ளையாரை தன கையேடு எடுத்து முன் டேபிளின் மீது வைத்து, "நான் வணங்கும் இந்தப் பிள்ளையார் மீது சத்தியமாகச் சொல்லுங்கள்.  இனிமேல் அந்தப் பெண்ணோடு சகவாசம் வைத்துக் கொள்ள மாட்டேன்" என்று விடப் பிடியாகக் கேட்டாள்.

எனக்குப் பொறுமை இல்லை.  "என்னை பெரிய பிள்ளையார்.  நான் பிள்ளையார் சிலையையே உடைச்சவன்.  என்கிட்ட உதார்விடாதே" என்று சொல்லி அவள் கையிலிருந்த அந்த மரகத பிள்ளையாரைத் தூக்கிக் கோபத்தில் வாசலில் எறிந்து விட்டேன்.

இதை என் மனைவி கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.  துடிதுடித்துப் போனாள்.  அடுத்த சில நாட்களில் சித்தப்ரமைக்கும் ஆளாகிவிட்டாள்.  எனது இரண்டாவது துணைவிதான் இருக்கிறாளே அவளை வைத்துக் காலத்தை ஓட்டலாம் என்று நினைத்தேன்.  ஆனால் அவளோ என்னால் தானே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்று சொல்லித் தற்கொலை செய்து கொண்டாள்.  அன்றிலிருந்து இன்று வரை நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்.  வியாபாரத்திலும் போதிய கவனம் செலுத்த முடியவில்லை.  அதுவும் நசித்து விட்டது.  இதுதான் நடந்த கதை" என்று நிதானமாகச் சொல்லி முடித்தார் வேலாயுதம்.

அவரைத் தேற்றி "மேற்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்" என்று கேட்ட பொழுது "எனக்கு இனி எல்லாமே அகஸ்தியர் தான்.  அவர் என்ன வழி கட்டுகிறாரோ அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

"இதை நான் நம்பலாமா" என்று விளையாட்டாகக் கேட்டு விட்டு மறுபடியும் மகா சித்தரான அகஸ்தியரை வணங்கி "இவருக்குப் பரிகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்" என்று வேண்டி ஓலைச் சுவடியைப் புரட்டினேன்.

அதில் வேலாயுதத்தின் முன் பிறப்பு பற்றி சொல்லி , சித்தப்ரமை பிடித்து வீட்டில் இருக்கும் அவரின் மனைவி இன்னும் நாற்பது நாளில் சித்தம் தெளிந்து வேலாயுதத்துடன் இனிய இல்லறம் நடத்துவாள் என்றும், அவரது இரண்டாவது மனைவி தற்கொலை செய்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க கால பைரவருக்கு நாற்பத்தி எட்டு நாட்கள் தூங்கா விளக்கு ஏற்றவேண்டும் என்று குறிப்பிட்டு இனியும் அகத்தியனைச் சோதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, கடைசியாக் மனைவியுடன் சேர்ந்து ஐந்து விநாயகர் கோயிலை ஆங்காங்கே நிறுவினால் வம்ச வ்ரித்திக்காக மூன்று புத்திரர்கள் பிறப்பார்கள்.  அவர்களில் மூத்தவன் விநாயக சதுர்த்தி அன்று பிறப்பான் என்று பிற்காலத்தில் நடக்கப் போவதைப் பதினெட்டு வரிகள் மூலம் அவர்க்கு எடுத்துரைத்தேன்.

இதைப் படிக்கப் படிக்க வேலாயுதம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  அன்று இரவு வேலாயுதத்தைப் பொறுத்த அளவில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைத் தந்தது.  அவரை ஆன்மீகவாதியாக மாற்றிவிட்டது எனலாம்.

சரியாக நர்ப்பத்தி மூன்றாம் நாள்..........

என் வீட்டு வாசலில் தம்பதி சகிதம் வந்து நின்றனர் வேலாயுதம் தம்பதிகள்.  அவரது முகத்தில் சந்தொஷக்களை கொடிகட்டிப் பறந்தது.  நெற்றியில் குங்குமம், திருநீறு, கழுத்தில் உத்திராட்சம் - மொத்தத்தில் சிவப் பழமாகக் காட்சியளித்தார்.  அவரது மனைவியைப் பார்த்தேன்.  முகத்தில் அப்படி ஒரு தெய்வக்களை. கண்களில் அருளொளி.  குடும்பப்பெண்ணுக்குரிய லட்சணத்தில் அடக்க ஒடுக்கமாக நின்றிந்தாள்.

இந்தப் பெண்ணுக்கா சித்தப்ரமை பிடித்திருந்தது என்று சொன்னால் துளிக்கூட நம்பிக்கையே இல்லை.  நன்றாகவே பேசினாள்.

எப்படி நோய் குணம் ஆயிற்று என்று கேட்க நினைத்தேன்.  அதற்குள் அவரே முந்திக் கொண்டு.......

"ஒரு மரகத விநாயகர் சிலையை வாங்கி தினமும் காலையிலும், மாலையிலும் பிரார்த்தனை செய்தேன்.  கொல்லி மலையிலிருந்து யாரோ ஒருவர் வந்தார். அவரிடம் என் மனைவியின் உடல் நிலையைச் சொன்னேன்.  மருந்து கொடுத்தார்.  இன்னும் பதினெட்டு நாளில் குணம் அடைவாள் என்றார்.  அவர் கொடுத்த மருந்தை நானே என் கையால் அகஸ்தியரை நினைத்துப் பிரார்த்தனை செய்து கொடுத்தேன்.  சரியாகப் பதினெட்டாவது நாள் இவள் இயல்பான நிலைக்கு மாறிவிட்டாள்.

இந்தச் சந்தோஷச் செய்தியை முதன் முதல் உங்களிடம் சொல்லவே நேரடியாக அழைத்து வந்தேன்" என்றார் சந்தோஷத்துடன்.

நான் அகஸ்திய மாமுனிக்கு மானசீகமாக நன்றியைத் தெரிவித்தேன்.

விதியை வெல்ல முடியாது என்று வார்த்தைகள் சொல்லப்பட்டு வந்தாலும் ப்ர்ரர்த்தனைகள் அதை வெல்லும் என்பது வேலாயுதத்தின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்ச்சி.

பின்னர் அவர் பல விநாயகர் கோயிலைக் கட்டினார்.  நொடிந்து போன வியாபாரம் செழித்தது.  அவருக்கும் வாரிசு பிறந்தது.  முதல் வாரிசு ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று பிறந்தது.  பின்னர் இரு குழந்தைகளும் பிறந்தன.

தன வீட்டிற்கு "அகஸ்தியர் குடில்" என்று பெயர் வைத்து அன்றாடம் அகத்தியரைத் தொழுது வருகிறார்.

சித்தன் அருள் ............... தொடரும்!

4 comments:

  1. அய்யா வணக்கம்

    அய்யா தங்களிடைய விலாசம் வேணும் அய்யா
    இந்த முகவரிக்கு அனுப்பிவையுங்கள் அய்யா


    yuvarajasaithai@gmail.com

    ReplyDelete
  2. நண்பரே என்றும் சித்தர்கள் நாம் பக்கம்

    ReplyDelete
  3. please send your contact address or phone to my id rajapathamuthu2012@gmail.com , i already get nadi read for me and my wife in two different places, i have some clarification for that we done temples visit and helped some poor and child's as per shandhi kandam But for dheeksha kandam it was much expensive to do this my self only orders , it is must do immediately also i my wife in any cost or do later when i relaxed my financial position

    ReplyDelete
  4. வணக்கம்!

    தங்களின் மெயில் பார்த்தேன். நீங்கள் நினைப்பது போல் என்னிடம் நாடி கிடையாது. அது இருந்த ஒருவருடன் இருந்த தொடர்பில், என்னிடம் பகிர்ந்துகொன்டத்தை நான் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். அவர் இன்று இல்லை. அவருக்கு பின் அகத்தியர் ஜீவ நாடியை வாசிக்க ஒருவரையும் இன்றுவரை தெரிவு செய்யவில்லை. கூடிய விரைவில் ஒருவர் தெரிவு செய்யபடுவார் என்று நினைக்கிறேன். அதுவரை சற்று பொறுமையாக இருங்கள். தகவல் கிடைத்ததும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete