அந்த உருவம் என்னெதிரே நின்றது. அசையவும் இல்லை, மறையவும் இல்லை. சாதாரணமாகக் கதைகளில் வருகிறது போல், அது வெண்மை உடை அணிந்திருக்கவில்லை. சலங்கை ஒலி சப்தமும் கேட்கவில்லை. குளிர்ந்த காற்றும் அடிக்கவில்லை. அதோடு எந்தவிதமான நறுமண வாசனையும் வரவில்லை.
இரண்டு நிமிடம் பார்த்த பிறகு,
என் கையிலிருந்த ஓலைச்சுவடியைப் பிரித்து - அகஸ்தியரைப் பிரார்த்தனையில் அழைத்தேன்.
ஓளி ரூபமாக அகத்தியர் - அந்த ஆவியைப் பற்றிச் சொன்னார். அதை அப்படியே வார்த்தைகளில் தருகிறேன்.
"இவள் பெயர் அமுதா. சென்னைக்குத் தென்கிழக்கே உள்ள நூற்றைம்பது மைல் கல் தொலைவில் உள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவள். வறுமையான குடும்பம். பெற்றோர் பெயர் கன்னியப்பன் - கலா ராணி. ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்ந்தாள். பருவ வயது வந்ததும் - இவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதால் பணத்திற்காக இவளது பெற்றோர் அமுதாவோடு இந்த இடத்தில் வீடு கட்ட உதவும் சிற்றாளாக வந்து சேர்ந்தனர்.
இந்தக் கட்டிடத்தை காண்டிராக்ட் எடுத்தவன் பெயர் ராஜகுரு. இளம் வயது தாண்டினாலும் அவன் ஒரு பெண்லோபி. அமுதாவைத் தன் மோகவலையில் சிக்க வைத்தான். அமுதா கர்ப்பம் அடைந்தாள். இதைக் கண்டு பயந்த ராஜகுரு, அமுதாவை ஒருநாள் நள்ளிரவு இந்த வீட்டுக்கு என்று தோண்டப்பட்ட கழிவு நீர் தேங்கும் தொட்டியில் கொன்று புதைத்துவிட்டு - அதன் மீது வலுவான கல்லை வைத்து மூடி - சிமெண்ட் வைத்துப் பூசிவிட்டான். யாரும் கண்டு பிடிக்கவில்லை.
அமுதாவைக் காணாமல் அவளது பெற்றோர் தவித்து அதே ஏக்கத்தில் இறந்தனர். அமுதாவைக் கொன்றதோடு இல்லாமல் - அவளது பெற்றோரையும் கொன்ற பாவம் ராஜகுருவை விரட்டியது. இதற்கு பிரம்மஹத்தி தோஷம் என்று பெயர்.
அதற்குரிய பரிகாரங்களயாவது ராஜகுரு செய்திருக்க வேண்டும். அதனால் ஓரளவு பாவம் குறைந்திருக்கும். ஆனால் அவன் செய்யவில்லை. இதன் காரணமாக அவன் கடும் தோஷத்திற்கு உள்ளாகி, வெளியூர் சென்று கொண்டிருக்கும் பொழுது அரசுப் பேருந்து மோதி, அவனும் அவனது பதினெட்டு வயது மகளும் அழகான மனைவியும் பரிதாபமாக இறக்க நேரிட்டது.
அமுதாவுக்கு பிரம்மன் போட்ட வயது நாற்பத்திநாலு. ஆனால் அவள் பத்தொன்பதாவது வயதிலேயே துர்மரணம் அடைந்தாள். இதற்கு அவள் பூர்வஜென்ம புண்ணிய பாவத்தில் தன் கணவனை வெட்டிக் கொன்றாள். அவனே இந்த ஜென்மத்தில் ராஜகுருவாக மாறிப் பழி தீர்த்துக்கொண்டான்.
ராஜகுரு தெய்வத்தை நம்பி மனசாட்சியோடு அமுதாவை மனைவியாக ஏற்று இருந்தால், அவனுக்கு துர் மரணம் ஏற்பட்டிருக்காது. அமுதா போன ஜென்மத்தில் செய்த தவறுக்கு கொலைபட்டிருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. ஆனால், ஒழுக்கத்தை மீறினாள். தன்னை நம்பியிருந்த பெற்றோரை ஏமாற்றினாள். அதன் பலனாகவே அவளுக்கு இக்கதி ஏற்பட்டது, என்று விறுவிறுவென்று விளக்கத்தைக் கூறினார் அகஸ்தியர்.
இந்த விளக்கம் சொல்லும்வரை ஆவி ரூபமாக அமுதாவும் அங்கிருந்தாள். பிறகு மறைந்து போனாள். என் கண்ணுக்கு தெரியவில்லை.
இப்பொழுது "செய்வினை" என்றால் என்ன என்பதற்கு அகஸ்தியர் மேலும் விளக்கம் தந்தார்.
"மனிதப் பிறவி - கிடைத்தர்க்கரிய பிறவி. எல்லோருமே என்றாவது ஒருநாள் மறையக் கூடியவர்களே பகவான் நமக்கு அறிவு - ஆற்றலை மட்டும் தரவில்லை. மன்னிக்கும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறான். யார் தவறு செய்தாலும் பெரும் தன்மையோடு மன்னிக்கும் தன்மை இருந்தால் அவர்களுக்குப் போன ஜென்மத்தில் செய்த பாவம், தோஷம் விலகும். கூடுமானவரை எந்தத் தவறும் செய்யாமல், எல்லாம் இறைவன் செயல், போன ஜென்மத்தில் செய்த கர்மாவை அனுபவிக்கிறோம் என்று பொறுமையோடு இளவயது முதல் பிரர்ர்த்தனை செய்து வந்தால், புண்ணியம் சேரும். கெடுதலான எண்ணங்கள், கோபங்கள், எரிச்சல்கள், ஆத்திரங்கள், பொறாமைக் குணங்கள் ஏற்படாது. எனவே மற்றவர்கள் தவறு செய்தாலும் கூட தண்டிக்கும் மனப்பான்மையும் ஏற்படாது.
இங்கே ராஜகுரு - மனத்தைக் கட்டுப் படுத்தியிருந்தால் அமுதாவால் பாவம் ஏற்பட்டிருக்காது. தவறு செய்யும் எண்ணம் ஏற்பட்டிருக்கது, பிரார்த்தனை, இப்பொழுது செய்கின்ற நல்வினைகள் அவனை காப்பாற்றியிருக்கும். ஆனால் ராஜகுரு, தெய்வ நீதியை மறந்தான். இன்றைக்கு நடு ரோட்டில் கெட்ட ஆவியாக அலைகிறான்.
அதேபோல் அமுதாவும் - பெற்றோருக்கு தெரியாமல் ஒழுக்கத்தை விற்றாள். மனத்தைக் கட்டுப்படுத்தவில்லை. அதோடு அவளுக்கும் ஆரம்ப காலத்திலேயே தெய்வப் பற்றும் ஏற்படவில்லை. நன்னடத்தையுள்ள பெற்றோருக்குக் கெடுதல் தரும் மகளாகவே வாழ்ந்தாள். இவள் கொஞ்சம் யோசித்திருந்தால் தெய்வப் பிரார்த்தனையை செய்திருக்கலாம். துர்மரணம் ஏற்பட்டிருக்காது.
இப்பொழுது புரிகிறதா "செய்வினை" என்பது போன ஜென்மத் தொடர்ச்சிதான். திடீரென்று யாரும், எதுவும் செய்வதில்லை. ஒரு வேளை போன ஜென்மத்தில் நல்லது செய்து கொண்டே தெய்வ நம்பிக்கையோடு செயல் பட்டால் யார் எதைச் செய்தாலும் அதனால் எந்த விதப் பாதிப்பும் ஏற்படாது.
நீ கூட கேட்கலாம். நல்லது செய்து வந்த நிறையப் பேர்களுக்கு இன்னமும் செய்வினை (அதர்வண வேதப் பிரயோகம்) வைக்கிறார்களே என்று. இப்பொழுது சொல்கிறேன். அப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் வரட்டும். அவர்களது தலைவிதியை எம்பெருமான் அருளால் மாற்றிக் காட்டுகிறேன்" என்று அகஸ்தியர் உறுதிமொழியும் தந்தார்.
இதைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், அவர்கள் அத்தனை பேர்க்கும் அகஸ்தியரின் கருணை கிடைக்க வேண்டுமே என்ற கவலைதான் ஏற்பட்டது.
"யார் என்னை நாடி வருகிறார்களோ, அவர்களுக்கு நான் உதவுவேன். ஆனால், நானாகச் சென்று அவர்களின் விதியை மாற்றும் சக்தி எனக்கில்லை, ஏனெனில் என்னையும் நம்பவேண்டும். என் மைந்தனான ஜீவ நாடி படிக்கும் நபர்களையும் அவர்கள் நம்ப வேண்டும். அதோடு என் நாடி படிக்கிறவர்களும் "வாய்மை" தவறாமல் நான் ஒளிமூலமாக சொல்வதை அப்படியே வார்த்தை மாறாமல் அவர்களிடம் கூறவேண்டும். இதற்கான பொருளை அவர்கள் பெறக் கூடாது. அதே சமயம் நாடி கேட்கும் பாக்கியம் உள்ளவர்கள் ஆசைப்பட்டுக் கொடுப்பதை ஏற்கலாம். இருப்பினும் எதுவும் வரம்பு மீறிப் போகக் கூடாது. அதே சமயம் அகஸ்தியன் என் பெயரைச் சொல்லிப் பயமுறுத்தவும் கூடாது.
என்னுடைய ஓலைச்சுவடியை வைத்துப் பெரும் பணம் சம்பாதிக்கிறவர்களிடம் ஜீவ ஒளியாக நான் தோன்ற மாட்டேன்" என்றும் அற்புதமாக விளக்கினார் அகத்தியமாமுனி.
"எனக்கொரு சந்தேகம். கேட்கலாமா?"
"கேள்!'
"ஆவிகள் எப்பொழுதும் பெண்களாகவே இருக்கிறதே. ஆண் ஆவி என்று எதுவும் இல்லையா?"
"அப்புறம்?"
"மனித கண்களுக்கு ஆவி தெரியாது என்கிறார்கள்!. எனக்கோ ஆவியைக் காட்டி விட்டீர்! அதே போல் எனக்கு அனுமானையும் நேரிடையாக காட்ட முடியுமா?"
காட்டுகிறேன். அப்புறம்"
"செய்வினை பற்றி அதர்வண வேடத்தில் நிறையப் பிரயோகங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. தாங்கள் சொல்வதற்கும் அதர்வண வேதத்தில் சொல்லப் பட்டு இருப்பதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறதே. எதை நாங்கள் ஏற்றுக்கொள்வது?"
"இவ்வளவு தானா இன்னும் ஏதாவது உண்டா?"
"இருக்கிறது சுவாமி, இந்த அமுதாவுக்கு சாப விமோசனத்தை தாங்கள் தர முடியாதா? அதே போல் விபத்தில் காலமான ராஜகுருவின் மனைவி மகளுக்கும் புத்துயிர் கொடுக்கத் தாங்களால் முடியாதா? ராஜகுவாவது பாவம் செய்தார் சரி. அவரது மனைவியையும் குழந்தையையும் பழி வாங்குவது என்ன நியாயம்? இதை அமுதாவின் ஆவி செய்ததா? இல்லை தெய்வம் தந்த தீர்ப்பா? இதையும் தெரிந்து கொள்ள வேண்டும்"
"நீ தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது? ஒவ்வொருவரும் அவரவர் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப இந்த ஜென்மத்தை எடுக்கிறார்கள். இளமை முதலே தெய்வபக்தியும் மனச்சாட்ச்சியும் கொண்டு, யாருடைய மனமும் புண்படாமல் செயல் பட்டால் அத்தனை பாவங்களும் தொலைந்து புனிதனாக மாறலாம். ஆனால் யாரும் இதைச் செய்வதில்லை. கஷ்டம் வரும் போது தானே கடவுளிடம் வேண்டுகிறார்கள்."
"மாமுனிவரே! உடல் நலம் குன்றிய போது தானே மருத்துவரிடம் வருவார்கள். கஷ்டம் வந்தால் தானே கடவுளை நினைப்பார்கள். இதில் தப்பேதும் இல்லையே."
"ஒத்துக்கொள்கிறேன். முதலிலேயே இறைவனைப் பிரார்த்தனை செய்தால் கஷ்டமே வராதே" என்று கிண்டலாகப் பேசி, "என்னையே மடக்கப் பார்க்கிறாயா பேதை ஜோதிடா" என்று ஒரு குட்டும் என் தலையில் வைத்த அகஸ்தியர்.
"நீ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறேன். நீ முதலில்.... போலீஸ் ஸ்டேஷன் சென்று அமுதா என்ற பெண் காணாமல் போனாள் என்று பதிவாகியிருக்கிறதா என்று பார். பிறகு அப்படியே இன்றைக்கு நான்காம் நாள் காலையில் ஜீவ சமாதியான "ராகவேந்திரரின்" சமாதிக்கு புறப்பட்டு வா, அந்த மந்திரத்தின் ஆலயத்தில் மூன்று நாள் தங்கு. ராகவேந்திரர் உனக்கு நேரிடையாக தரிசனம் தருவார். பின்னர் அங்கிருந்து அருகேயுள்ள ரணமண்டல மலை மீது ஏறு. அங்கு உன் வேண்டுகோளை நாம் ஏற்று அனுமனின் திரு உருவத்தை அப்படியே காண வைப்போம். அதுவரை எவரிடமும் இதைப் பற்றி மூச்சு விடாதே. இது தேவரகசியம்" என்று ஒரு போடு போட்டு என்னைத் திக்கு முக்காட வைத்தார் அந்தக் குறுமுனி.
சித்தனருள்................... தொடரும்!
இந்த ஜீவ நாடி பார்த்த பெரியவர் திரு. ஹனுமந்த்தாசன் என்ற பெரியவர் தானா? ஏனென்றால் அனுபவங்கள் மிகவும் ஸ்ட்ராங் ஆக உள்ளன. மற்றும் அகத்தியர் போன்ற மாமுனிவர்கள் எல்லாம், மரணமில்லா பெரு வாழ்வு வாழ்பவர்கள். அப்படியிருக்க அவர்கள் ஏன் "எல்லோருமே என்றாவது ஒருநாள் மறையக் கூடியவர்களே" என்று கூறி உள்ளார்கள். தயவு செய்து விளக்கினால் அடியேன் தெரிந்து கொள்ளுவேன். நன்றி. வள்ளி.
ReplyDeleteagathiyarin arputhangal arumai,
ReplyDeletesivakumar
குரு வாழ்க! குருவே துணை!!
ReplyDelete