​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 4 September 2013

ஒதிமலை முருகர் பிறந்தநாள் தொகுப்பு - 2013

வணக்கம் அகத்திய பெருமான் அடியவர்களே!

செப்டம்பர் 02 ம் தியதி ஒதிமலை சென்று ஓதியப்பரின் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடி அவர் அருளை பெற்று வந்த என் நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டதை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஞாயிற்று கிழமை அன்று ஐந்து பேர் சேர்ந்து மலை ஏறி மறுநாள் கோவில் திறக்கும் வரை காத்திருந்திருக்கிறார்கள்.  இரவில் பலமாக காற்று வீச குளிர் நன்றாகவே உணர முடிந்ததாம். இரவில் கோவிலுக்கு மிக அருகில் நிற்கும் ஒரு உயர்ந்த மரத்தை உலுக்கி எடுத்த காற்று, ஓதியப்பர் கோவில் மண்டபத்துக்குள்ளே வரவே இல்லையாம்.  இது ஒரு மிகுந்த ஆச்சரியம். கீழே தருகிற படங்களில் விதவிதமாக தெரிந்தால் அது சித்தர், ஓதியப்பர் அருள். உன்னிப்பாக பாருங்கள்.

அதிகாலை சூரிய உதயம் மிக சிறப்பாக அமைந்தது. அந்த புகைப்படம் இதோ!


உதயத்தில் ஒதிமலையின் நிழல் எதிர் மலையிலிருந்து ஓடி வந்து நிற்கும். அது ஒரு அருமையான காட்சி. அந்தப் படம் இதோ.


வானத்தில் மேகங்கள் கூட விதவிதமாக காட்சி கொடுத்தது.  அந்த புகை படங்கள் இதோ.



இரவில் ஒதிமாலையில் மழை இல்லை. கோயம்பத்தூரில் சரியான மழையாம். சன்னதி திறந்ததும் மிகுந்த உஷ்ணம் பரவியதை உணர்ந்திருக்கின்றனர்.  ஓதியப்பருக்கு எண்ணை காப்பு (குளிர்விக்க தோதான எண்ணை) போட்டதும், தொடங்கிய மழை இரவு 07.30 வரை நீடித்ததாம்.

எல்லாம் அவன் செயல் என்று நினைப்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும். சமீப காலமாக வெள்ளிக்கிழமை அன்று மட்டும் அடியவர்களுக்கு "உத்தரவு" கொடுத்து வந்த ஓதியப்பர், பிறந்த நாள் திங்கட்கிழமையில் இருந்தும், மனம் உவந்து நிறைய பேருக்கு "உத்தரவு" கொடுத்தது, மிகுந்த ஆச்சரியம். வந்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக, மன திருப்தியுடன், அவர் அருளுடன் சென்றனர். ஓதியப்பரின் பிறந்தநாள் அலங்கார கோலம் உங்கள் அனைவருக்காகவும் இதோ.


எல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ்க! இறையருள் உங்களை சூழ்ந்து நின்று வழி நடத்தட்டும்.

கார்த்திகேயன்

6 comments:

  1. Om Nama Kumaraya
    Om Nama Kumaraya
    Om Nama Kumaraya

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐய்யா.கண்கொள்ளா காட்சி

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ சரவண பவ |
    ஓம் ஸ்ரீ சரவண பவ |
    ஓம் ஸ்ரீ சரவண பவ |

    ReplyDelete
  4. ஒம் ஸ்ரீ சரவனபவ!

    ReplyDelete