​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 7 November 2021

சித்தன் அருள் - 1047 - அன்புடன் அகத்தியர் - காசியில் நாடியும், குருநாதரும்!


20/10/2021 பவுர்ணமியன்று காசியில் நடந்த மகா ருத்ர அபிஷேகம் மற்றும் ஜீவநாடி பூஜை பற்றிய தொகுப்பு.

புண்ணிய ஷேத்திரம் காசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தினமும் அதிகாலையில் மூன்று மணிக்கு அபிஷேகங்கள் மங்கள ஆர்த்தி கோயில் பூசாரிகளால் நடத்தப்படும் அதன்பிறகு பக்தர்கள் தன்கையால் அபிஷேகங்கள் செய்து வழிபடலாம் சில குறிப்பிட்ட அபிஷேகப் பொருட்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. கோயில் பாதுகாப்பு குழு நிர்வாகக்குழு இவர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே அபிஷேக பொருட்களைக் கொண்டு சென்று அபிஷேகம் செய்து வழிபட முடியும் காசியில் உள்ள வர்கள் அனுதினமும் காசி செம்பில் கங்கை நீரை  கொண்டு வந்து காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

பௌர்ணமி அன்று அதிகாலை 3:00 மணிக்கு ஆலயத்திற்குள் சென்று மங்கள ஆர்த்தி தரிசனம் செய்துவிட்டு காசி விஸ்வநாதருக்கு கருவறை முன்பு இருக்கும் ஆதி முக்தேஸ்வரர் சிவலிங்கத்திற்கு நல்படியாக ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது.

அதன்பின் 14 வகையான வாசனை திரவியங்கள் விபூதி பால் சந்தனம் தயிர் ஜவ்வாது பச்சை கற்பூரம்  தேன் சர்க்கரை அரிசி பொடி முதலிய அபிஷேகப் பொருள்களோடு திரு ஜானகிராமன் ஐயா கோடகநல்லூர் இலிருந்து குருநாதர் அகத்தியர்  பச்சைவண்ண பெருமாள் அபிஷேக பூஜை செய்து லோபமுத்ரா தாயாரின் அம்சமான தாமிரபரணி  பூஜை செய்து கொண்டு வந்த தாமிரபரணி தீர்த்தத்துடன் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது எந்த ஒரு தடையும் இல்லாமல் குருநாதர் அகத்தியர் திருவருளால் பிரம்ம முகூர்த்தத்தில் பவுர்ணமியன்று காசி விஸ்வநாதருக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டத்திற்கு இடையே நிதானமாக மனம் குளிர குளிர பச்சைக் கற்பூரமும் ஜவ்வாதும் சார்த்தி தாமிரபரணி தீர்த்தத்தை கொண்டு விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து அகத்தியர் ஜீவநாடியை காசி விசுவநாதன் மேல் வைத்து பூஜித்து வணங்கும் பாக்கியம் கிட்டியது எல்லாம் குருவின் திருவருள்.

கோயில் பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் அதைக் கொண்டு செல்லக்கூடாது இதைக் கொண்டு செல்லக்கூடாது யாரையும் ஒரு நொடிக்கு மேல் தொட்டு வணங்குவதற்கும் அபிஷேகம் செய்வதற்கு இடம் தரவில்லை காரணம் அவ்வளவு பக்தர்கள் கூட்டம் ஆனால் குருநாதரின் திருவருளால் எந்த ஒரு தடையும் இல்லாமல் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித பொருள்களும் வாசனாதி திரவியங்கள் கைகளால் காசிவிஸ்வநாதர் லிங்கத்தை தொட்டு பூசி ஜீவநாடியை வைத்து பூஜை செய்யும் வரை எந்த ஒரு தடையும் இல்லாமலிருந்தது குருவின் திருவருளே காரணம்.

நல் முறையாக அபிஷேகம் பூஜை செய்துவிட்டு கங்கைக் கரை வந்து கங்கை தேவியை வணங்கி சுவடியை வணங்கி நாடியை பிரித்தபோது ஈரேழு உலகங்களையும் காத்து ரட்சிக்கும் ஆதி பரம்பொருள் சிவனே வந்து வாக்குகள் உரைத்தார்.

அதன் பிறகு மாலையில் கங்கை நதிக்கரையில் அனுதினமும் நடக்கும் கங்கா ஆர்த்தி நேரத்தில் கங்கை கரையில் அகத்தியர் ஜீவநாடியை வைத்து 108 நெய் தீபம் ஏற்றி பச்சைக் கற்பூரம் ஜவ்வாது வெற்றிலை மஞ்சள் குங்குமம் அவல் அச்சுவெல்லம் சமர்ப்பணம் செய்து ஜீவநாடிக்கு ரோஜா புஷ்பங்கள் வில்வம் கொண்டு அனைத்து தெய்வங்களையும் வணங்கி புஷ்பாஞ்சலி செய்து மிகச் சிறப்பாக ஜீவநாடி பூஜை நடைபெற்றது.

பௌர்ணமி ஒளியில் மறுபுறம் கங்கா ஆர்த்தி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தாமிரபரணி தாய் தீர்த்தத்தையும் வைத்து பூஜித்து தாமிரபரணி தீர்த்த நீரை கங்கையோடு சேர்த்து ராமேஸ்வரம் புனித திரவத்தையும் சேர்த்து மஞ்சள்கட்டி மதுரை மீனாட்சி அம்மன் குங்குமம் பச்சை கற்பூரம் ஜவ்வாது முதலியவை கங்கை நீரில் சமர்ப்பணம் செய்து கங்கை தாய்க்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

கங்கை தாய்க்கு தீபமேற்றி புஷ்பங்கள் தூவி நைவேத்தியமாக அச்சுவெல்லம் அவல் பிரசாதமும் சமர்ப்பணம் செய்யப்பட்டது.

பின்பு நாடியில் குருநாதர் அகத்தியர் மிக்க மகிழ்ச்சியோடு வந்து வாக்குகள் உரைத்தார்.

ஆதி ஈசனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன் .

அப்பனே நல் முறைகளாக என்னுடைய ஆசிகள்.


அப்பனே மிக்க சந்தோசங்கள் என்பேன் 

அப்பனே இனிமேலும் இக்கலியுகத்தில் வாழ அனுபவங்கள் தேவை அனுபவங்கள் இல்லாமல் வாழ்ந்தால் அப்பனே திரும்பவும் துன்பத்தில் சிக்கித் தவிப்பீர்கள் எல்லோருக்கும் கஷ்டம் அப்பனே இக் கஷ்டங்கள் எல்லாம் அனுபவங்கள்.

அப்பனே  யானே துணை இருந்து காத்து வருவேன். அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் அப்பனே.

இன்றளவும் அப்பனே யானும் லோபமுத்ரா தேவியும் நல் முறைகளாக கங்கா ஆர்த்தியை கூட பார்த்துக் கொண்டே இருக்கின்றோம். நலமாகவே அப்பனே நீங்களும் கங்கா ஆர்த்தியை பாருங்கள் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அப்பனே அனைவரும் அதிகாலையில் துயிலெழுந்து நல் முறைகளாக கணபதிக்கு தீபமேற்றி பின் நல் முறைகள் ஆகவே ஏதாவது ஜீவராசிகளுக்கு உணவு கொடுத்து வருவது நல்லது என்பேன்.

அப்பனே அனைவரும் இதை நிச்சயம் செய்ய வேண்டும் இவைதன் நல்முறைகளாக அதிகாலையிலும் மாலையிலும் செய்து வருதல் சிறப்பு என்பேன் . இனிமேலும் இவ்வுலகத்தில் மாற்றங்கள் உண்டு என்பேன் அதனால் அப்பனே நல் முறைகளாக இதைச் செய்து வாருங்கள் 

அப்பனே இனிமேலும் கேது அவன் நல் முறையாக ஆட்கொள்வான் இவ்வுலகத்தில் அதனால்தான் கேதுவுக்கு நல் முறைகளாக இதற்கு சமமான பின் தலைவனை நல் முறைகளாகவே கணபதியை வணங்க சொன்னேன் இதை மறந்து விடாதீர்கள் ஆனாலும் அப்பனே முக்கியமான ஒன்று நல் முறைகளாக அனுதினமும் கோமாதா விற்கு ஏதாவது உணவளியுங்கள் அப்பனே இப்படி கொடுத்துவந்தால் மாற்றங்கள் உறுதி என்பேன் இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்பேன்.

செய்ய வேண்டும் அப்பனே முன்னோர்களின் ஆசீர்வாதங்களும் குல தெய்வத்தின் அருளும் கிடைக்கப் பெற்று நல் முறைகள் ஆகவே வாழுங்கள்.

அப்பனே ஒவ்வொருவருக்கும் பணத்திற்கு மீதே மோகங்கள் கொண்டு போய்க் கொண்டு இருக்கின்றார்கள் .

ஆனாலும் அப்பனே பணம் ஒரு விஷயமே இல்லை என்பேன்.

என்னுடைய ஆசிகளே முக்கியம் என்பேன்

ஆனால் பணம் வரும் போகும் அப்பனே!  என்னுடைய ஆசிகள் உலகத்தில் பெறுவதற்கு மிகவும் கஷ்டமப்பா.

கஷ்டமப்பா ஆனாலும் எவ்வகையான  ஏழேழு பல பிறவிகள் எடுத்து புண்ணியம் செய்தால் தான் அப்பனே என்னுடைய ஆசிகள் கிட்டும்.

அப்பனே இன்றளவும் நல் முறையாக அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகளப்பா.

அப்பனே

மகிழ்ச்சியாக யானும்  லோபமுத்ரா தேவியும் ஏற்றுக்கொண்டோம் அப்பனே இவ் மகிழ்ச்சியான தருணத்திலே அப்பனே  நல் முறைகள் ஆகவே அப்பனே அனைவரும் யான் சொல்லியதை நல் முறைகளாக கேட்க குற்றமில்லை என்பேன் அப்பனே  அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்.

என்று  ஆசிர்வாதங்கள் தந்து வாக்கு உரைத்தார் இதனிடையே கங்கைக்கரையில் நீராட வரும் பக்தர்களுக்கு படகு சவாரி சேவை செய்துவரும் காசியை சேர்ந்த சங்கர் என்கின்ற ஏழை பட கோட்டிக்கும் நல் வாக்குகள் தந்து ஆசீர்வாதம் செய்தார் அவருடைய பூர்வ ஜென்மம் அவர் கங்கையில் படகோட்டி செய்துவரும் சேவைகள் குறித்தும் நல்வாக்குகள் தந்து உபதேசித்தார்.

கங்கைக்கரையில் ஒரு வயதான ஏழை படகு தொழிலாளிக்கும் ஆசிகள் தந்து அவர் வறுமையை போக்க அந்த இடத்திலேயே அங்கிருந்த அனைவரிடமும் அந்தப் பெரியவருக்கு உதவி செய்ய சொல்லி அந்த நேரத்திலேயே நிதி உதவி செய்யவைத்தார். அந்தப் பெரியவர் மனம் உருகி கண்ணீர் விட்டு அகத்தியரை வணங்கினார். அவருடைய பெண்ணின் திருமணமும் வசதி இல்லாத காரணத்தினால் தடைபட்டு இருக்கின்ற காரணத்தையும் சொல்லி நல் மனிதர்கள் உனக்கு உதவுவார்கள் நல்லபடியாக திருமணம் நடந்தேறும் என்று ஆசிர்வாதம் தந்து அகத்தியர் தன் கருணையை செய்தார் .... குருநாதர் அகத்தியர்  கருணையே கருணை!

ஓம் ஸ்ரீ லோபமுத்திரை தாயார் சமேத அகஸ்தியர் குரு திருப்பாதங்கள் சரணம் சரணம்!






சித்தன் அருள்.................தொடரும்!

Wednesday, 3 November 2021

சித்தன் அருள் - 1046 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்குடன் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


"ஒரு மனிதன் சேர்த்துக்கொள்ள நினைப்பது, புண்ணியமா! லோகாயாதமா! என அவன் தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. தொடங்கிவிட்ட எம் குருநாதர் முருகப்பெருமானின் அரசாட்ச்சியில், அவரவருக்கான ஆசி, இதன் அடிப்படையில் அமையும். ஆத்மாவை மொண்டு நிற்கும் இவ்வுடல், அவனை சரணடைவதே ஞானத்துக்கு எளிய வழி!" 

அகத்தியப்பெருமான்,
சித்தன் அருள்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சித்தன் அருள்.............தொடரும்!