​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 10 June 2021

சித்தன் அருள் - 1006 - அன்புடன் அகத்தியர் - ராமேஸ்வரத்தில் சிவபெருமான் வாக்கு!


நமச்சிவாயம் யான் இயம்புகின்றேன். பின் பின் மறைமுகமான பல இன்னல்களும் இவ்வுலகத்தில் வரும் என்பேன். மனிதரிடையே புத்தி நிரந்தரமாக நின்று விட்டது. அதனால் ஒரு சோதனை கொடுக்கலாம் என்றேன். நீங்களே பார்த்து விட்டீர்கள். யானும் வருடங்களாக இங்கு இருந்து இருந்து, பின் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அவரவர் இஷ்டத்துக்கு ஏற்ப பணத்தைத்தான் மதிக்கின்றனர். ஆனாலும் நேரடியாக யான் வந்து நின்றாலும் அவன்தான் என்னையும் கண்டுகொள்வதே இல்லை.  இதற்குப் பெயர்தான் பக்தியா? பக்தி செலுத்த கோபங்கள், தாபங்கள் விலக்க வேண்டும். என்றால்தான் என்னை அடையலாம்.

யான் நல்முறையாய் செய்வேன் என்று உணர்ந்து அகத்தியனும் பூமியில் சுற்றிக் கொண்டிருக்கின்றான், என்பேன். ஆனாலும் அகத்தியனை வழிபடு என்று சொல்லியெல்லாம், பொய், பித்தலாட்டங்கள். யான் ஏற்கனவே அகத்தியனுக்கு சொல்லிவிட்டேன். ஆனால் அகத்தியனோ, பார்ப்போம், என் பக்தர்கள் மெய்யானவர்கள், இவ்வுலகில் உண்டு என்றான். ஆனாலும் ஒவ்வொரு இடத்திலும் பார்த்தால், "ஐயோ" என்கிற நிலைமை அவன்தனுக்கு தோன்றுகின்றது. சிவனே, அப்பனே என்றெல்லாம் என்னை பூ உலகிலிருந்து அழைக்கின்றான். ஆனாலும் பார்ப்போம் என்றுதான் உலா வந்து கொண்டிருக்கின்றான், அகத்தியனும். ஆனாலும், எவை என்றும், எதனை என்றும், மனிதனே, தன் இனத்தை, கீழ்ப்படுத்துவான் என்பேன். மனிதனின் புத்திகள் மாறும் இனி மேலும். ஆனாலும் ஒழுங்காக செயல்படமாட்டான். மனிதரும் இவை, எவை என்று தெரியாமல் வாழ்வார்கள். இதனை கண்டு யான் எத்தனை நாட்கள் பொறுத்திருப்பது. என் இடத்திலே வந்து கூட சில கேள்விகள் கேட்கின்றனர். ஆனாலும் ஒருவர் கூட என்னை வேண்டும் என்று கேட்பதில்லை. ஒரு இல்லோன் கூட இங்கு வந்து நிம்மதியாக வழிபட அனுமதிப்பதில்லை. அன்பை அன்றி வேறு ஒன்றை யாங்கள் எதிர் பார்ப்பதில்லை.

அப்பனே, இவ்வுலகில் உண்மையான பக்தியை விட பொய்யான பக்தியே நிலவுகின்றது. இத்தனையும் யான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். எவை என்று கூற, நிச்சயம் தண்டனை உண்டு என்பேன். இப்பிறவியிலேயே செய்த தவறுகளுக்கு தண்டனையை இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்று விதி. யான் கட்டளை இட்டுவிட்டேன் நவகிரகங்களுக்கு. நவகிரகங்கள் விடாது என்பேன். ஒவ்வொருவரும் மனசாட்சிப்படி நடக்க நடக்க நன்மைகள் விளையும். தவறு செய்தால், அவன்தனுக்கு அப்பொழுதே தண்டனையை யானே கொடுப்பேன் என்றேன்.

பல கோடி ஞானியர்களும் திரிந்து கொண்டுதான் இருக்கின்றனர் இங்கே. இங்கு நிச்சயமாய் சித்தர்கள் ஆட்சி வரும். இங்கேயே பல ஞானியர்களும் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இதனையும் (ராமேஸ்வரம்) பிடித்தமான ஸ்தலம் என்பதால், யானே தான் அமைத்துக் கொண்டேன். இதன் சரித்திரத்தை யாரும் சரியாக கணிக்கவில்லை என்பேன். எப்பொழுது ராமனும் சீதையும் இங்கு வருவார்கள் என்பதும் எந்தனுக்கு தெரியும். சித்திரை மாதத்தில் ராமனும், சீதையும் வந்து வணங்கி, பின் நல்முறையாய், இங்கே உறைவார்கள். ராமனுக்கு விடிவுகாலம் இங்கிருந்துதான் ஏற்பட்டது என்பேன்.

எமது ஆசிகள் அனைவருக்கும் உண்டு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

11 comments:

  1. Om Sri lopamudra samata Agastiyar thiruvadi saranam.

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  3. ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தீசாய நமக

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ஓம் போகர் சித்தர் திருவடிகள் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  5. தென் நாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    ReplyDelete
  6. Om namashivaya
    Om lobhamudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri

    ReplyDelete
  7. குரு வாழ்க 🙏 குருவே துணை 🙏

    ReplyDelete
  8. அய்யா,
    தினமும் வீட்டில் விளக்கேற்றிய சிறிது நேரத்திற்கு பிறகு விளக்கு முழுவதும் குபு குபுவென்று பற்றி எரிகிறது. எதனால் இப்படி நிகழ்கிறது?. இதற்கு என்ன தீர்வு?

    ReplyDelete
    Replies
    1. விளக்கில் எண்ணை தீர்ந்து போகும் நிலையில் அப்படித்தான் எரியும். ஒன்று செய்து பாருங்கள். பருமன் குறைந்த நூல் திரியை உபயோகித்து பாருங்கள். விளக்கில் அக்னி சிறிதாக இருக்கும்படி திரியை நீளம் குறைத்து வைக்கவும்.

      Delete
  9. என்ன தவம் செய்தேனோ ஈசனின் உரை கேட்பதற்கு !!

    ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

    தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

    ReplyDelete


  10. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    சித்தன் அருள் - 1006 - ராமேஸ்வரத்தில் சிவபெருமான் வாக்கு!

    நமச்சிவாயர் வாக்கு - ““இப்பிறவியிலேயே செய்த தவறுகளுக்கு தண்டனையை இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்று விதி. யான் கட்டளை இட்டுவிட்டேன் நவகிரகங்களுக்கு. நவகிரகங்கள் விடாது என்பேன்.”

    https://www.youtube.com/watch?v=iiz4jYRbSC8

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete