​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 3 June 2021

சித்தன் அருள் - 1005 - அன்புடன் அகத்தியர் - போகர் பெருமான் வாக்கு!

உலகை ஆளும் நமசிவாயத்தை பணிந்து, என் பாச பிள்ளை கந்தனை வணங்கி

ஈரேழு உலகத்தையும் தன் பாச கருணையினால் கட்டி அணைத்து என்குரு நாதனையும் வணங்கி உரைக்கின்றேன் போகன் அவன். நிச்சயமாய் எளிதில் மாற்றம் நிகழ்வது கடினம் என்பேன்

குரு போன்று நன்மை தீமைகளையும் ஆராய்ந்து இப்பூவுலகில் பின் பல யுகங்கள் வாழ்ந்து வரும் என் குரு அகத்தியர் நல் முறையாக சுற்றித்திரிந்து எவ்வாறு மனிதர்களுக்கு நல் முகமாய் ஆசிகள்  வழங்கினால் தப்பித்துக் கொள்வார்கள் என்று நினைத்து உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் ஆனால் மனிதனோ மாயையில் சிக்கி வழி மாறிச் சென்று கொண்டிருக்கின்றான்.

பூலோகத்தில் அகத்தியரும் வலம் வந்து கொண்டு ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இனிமேலும் மனிதன் தவறு செய்து கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டு பொறுப்பதில்லை.

மனிதனைப் பார்த்து பாவம் மனிதன் என்றுதான் அகத்தியரும் கருணையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சித்தர்கள் நல்லது செய்ய நினைத்தாலும் கூட மனிதன் மாய வலையில் சிக்கி தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறான்.

இனிமேலும் மனிதன் தவறான வழியில் செல்வது ஒரு உயிரை கொன்று உண்ணுவது.

இவ்வாறான பாவ காரியங்கள் செய்துகொண்டிருந்தால் இனிமேலும் கஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

மனிதர்களின் கஷ்டத்திற்கு மனிதர்களே காரணம். யோசித்துப்பார் மனிதனே அகத்தியர் நல்முறையாக வாக்குகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் வரும் காலங்களில் பலவிதமான நோய்கள் வரும் என்ன விதமான நோய் என்று தெரியாமலே போகும் அதற்கு  போகன் ஆகிய மருந்துகள் உரைக்கின்றேன்.

அதன் பயன்படுத்தி நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

 • கீழாநெல்லி
 • அக்கரகாரம்
 • மாசிக்காய்
 • ஜாதிபத்திரி

இவற்றை நெய்யில் இட்டு ஐந்து கடுகளவு தினமும் உண்ண வேண்டும்.

 • மலை நெருஞ்சி இலை
 • முருங்கை இலை
 • துளசி இலை
 • புதினா இலை
 • கறிவேப்பிலை
 • காட்டுக் கொடித்தோடை
 • குப்பைமேனி இலை
 • கண்டங்கத்திரி இலை
 • வில்வ இலை

இவற்றை இடித்து பொடித்து பனை வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வேண்டும்.

வாரம் ஒருமுறை மிளகு வெள்ளைப்பூண்டு உண்ண வேண்டும்.

இன்னும் ஏராளமான மூலிகைகளை என்னால் உரைக்க முடியும் அவற்றைப் பயன்படுத்த குருமந்திரம் தேவை ஆனால் அந்த குரு மந்திரம் சொல்லி விட்டால் மனிதன் அதை பயன்படுத்தி காசு ஈட்டுவான்.

பொருள் சம்பாதிப்பதற்கு இதனை தவறான வழியில் பயன்படுத்துவான்.

இதனை தயார் செய்து வைத்திருந்தால் அவருக்கு குரு மந்திரம் தந்து   உபதேசம் செய்வேன்.

இப்பொழுது குரு மந்திரம்  கூறி விட்டால் அதனை பயன்படுத்தி மனிதன் காசாக்குவான்.

இவற்றை நல்ல முறையில் அகத்தியர் பக்தர்கள் தயாரித்தால் அவர்களுக்கு குரு மந்திரம் உபதேசம் செய்வேன். இந்த மருந்துகளை சேகரித்து பயன்படுத்துவதற்கும் குருவின் திருவருள் தேவை குருவின் அருள் இல்லாமல் இதனை செய்ய முடியாது நல் முறையாக செய்பவர்களுக்கு என்னுடைய குரு மந்திர உபதேசம் கொடுப்பேன்.

மனிதர்களை நீங்கள் நேர்வழியில் நடப்பதுதான் உங்களுக்கு பலன் தரும் . மாயையில் சிக்கி தவறு மேல் தவறு செய்யும் மனிதர்களுக்கு இனிவரும் காலம் கஷ்ட காலம் தான்.

மீண்டும் வந்து சில மூலிகைகளை உரைக்கின்றேன்.

திரு போகர் சித்தர் உரைத்த பொது வாக்கு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

17 comments:

 1. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ ஸ்ரீ போகர் சித்தரே போற்றி போற்றி 🙏🙏

  ReplyDelete
 2. ஓம் அகத்தீசாய நம!
  குருவே சரணம்!

  ReplyDelete
 3. அய்யா நமஸ்காரம். 2016 july article 816 அதில் அகத்தியர் சொன்னபடியே அத்தனை மூலிகைகளை கலந்து 50 gm கப்வடிவில் தூபங்கள் தயாரித்து கொடுத்து (விலை 10 ) வருகின்றேன் .10 percentage profit .அதுவும் தெருவில் வாழும் பைரவ வாகனத்திற்கு உணவிற்காக செலவு செய்கின்றேன். அகத்தியர் சொன்னார் என்பதற்காக வாங்கி உபயோகப்படுத்தும் ஒரு குடும்பம் இன்று அவர்கள் வசிக்கும் பகுதியில் apartment யில் அனைவருக்கும் நோய்.அகத்தியர் தூபம் பயன்படுத்திய வீட்டை தவிர..இதை நான் முயற்சி எடுத்து செய்ததால் இன்று ஒரு குடும்பம் தப்பித்தது...business mentality உள்ளவர்கள் இதை படிக்கும் வாய்ப்பு இல்லை .. இது என் அனுபவம் ..இன்று போகர் அடுத்து திருமூலர் வருவார் மூலிகை பற்றி சொல்ல.அகத்தியர் சொன்ன மூலிகை உள் உறுப்புகள் இரத்த கசிவு ஏற்பட்டு மரணம் என்பதை சொல்லாமல் மூலிகை மூலம் சொல்லி உள்ளார் ..போகர் kidney பாதிக்கப்பட்டு வலிப்பு நோய் வந்து மரணம் வரபோவதை மூலிகை மூலம் சொல்லி உள்ளார் .அடுத்து திருமூலர் என்ன சொல்லபோகிறார்..கீழாநெல்லி இலை மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி இரண்டுமே சேர்த்து தான் மஞ்சள் காமாலை நோயை குணமாகும் .கீழாநெல்லி liver protection தன்மை உள்ளது. இதை சாப்பிட்டால் உப்பு புளி உணவில் சேர்த்து கொள்ள கூடாது .அக்ரகாரம் மற்றும் காட்டு கொடித்தோடை காக்காவலிப்பு நோய் வருவதை தடுக்கும் .மாசிக்காய் குப்பை மேனி இரத்ததில் விஷம் பரவலை தடுக்கும்.ஜாதிபத்திரி muscle relaxant . துளசி fatty liver தடுக்கும். வில்வம் நரம்பு சுருங்க செய்யும். ஆக மொத்தத்தில் உள் உறுப்புகள் இரத்த கசிவு ஏற்பட்டு மரணம் என்பதை சொல்லாமல் மூலிகை மூலம் சொல்லி உள்ளார் ... அகத்தியர் அடியவர்கள் நாங்கள் கேட்பது இப்போது உள்ள நிலையில் வீட்டில் ஏற்றி வழிபாடு செய்ய தீபம் பரிகாரம் .தூபம் பரிகாரம் சொல்லுங்கள் .காற்றில் பரவும் கிருமிகள் தூபம் பயன்படுத்தி தான் எங்களை நாங்கள் காப்பாற்ற முடியும்.மூலிகைகளை எடுத்து அதை சாபநிவிர்த்தி செய்ய வேர் சம்பந்தமாக மூலிகை எதுவும் இல்லை .. அனைத்தையும் தயாரித்த பிறகு அகத்தியர் முன்பு 48 மணிநேரம் வைத்து இதை பயன்படுத்தலாம். அல்லது அகத்தியர் மூல மந்திரம் ஒருலட்சம் தடவை உச்சரித்து சித்தி பெற்று இருந்தால் ஒரு ருத்ராட்சம் மாலை கையில் நேராக தூக்கி பிடித்தால் மாலை வலப்புறமாகவோ அல்லது இடது புறமாவோ தானாக சுற்றும் .வலதுபுறமாக சுற்றினால் நல்லது இடதுபுறம் சுற்றினால் கெட்டது .இப்படி சுய ருத்ராட்ச பரிட்சை செய்தும் தெரிந்து கொள்ள முடியும்..மூலிகைகளை தந்த எங்களை காப்பாற்றிய அகத்தியர் தூபம் தீபம் பரிகாரம் சொல்லி தந்து காப்பாற்ற வேண்டும் .

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் ரேவதி அவர்களே
   ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏

   Delete
  2. எனக்கு கப் சாம்பிராணி வேண்டும். How to contact you

   Delete
  3. Vanakkam Revathi mam, how to order from you? Highly appreciate your service !

   Delete
  4. நன்றி. என் குரு அகத்தியர் பாதங்களில் சமர்பணம் செய்கின்றேன் .contact number 9629496486.

   Delete
  5. நன்றி. என் குரு அகத்தியர் பாதங்களில் சமர்பணம் செய்கின்றேன் .contact number 9629496486.

   Delete
 4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

  நம்முடைய நல்ல நேரம் சித்தர்கள் அருள் கிடைக்க.நன்முறையில் பயன் படுத்தி வாழவேண்டும்... ஓம் போகர் சித்தர் திருவடிகள் போற்றி 🙏🙏🙏

  ReplyDelete
 5. குரு வாழ்க 🙏 குருவே துணை 🙏❤️

  ReplyDelete
 6. குரு வாழ்க 🙏 குருவே துணை 🙏❤️

  ReplyDelete
 7. ஓம் போகர் அய்யன் போற்றி ஓம் லோபமுத்திரை அகத்தியர் போற்றி.

  ReplyDelete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. மன்னிக்கவும் thursday 18 july 2019 article 817 தவறாக 2016 என்று எழுதி இருந்தேன் .அகத்தியர் அடியவர்கள் தொடர்பு கொண்டீர்கள் மிக்க நன்றி. வேலைக்கு ஆட்கள் வைக்கவில்லை .நான் pharmacy college professor ஆக வேலை பார்த்து கொண்டு தான் இந்த தூபம் தயாரித்து வருகின்றேன்.இந்த தூபம் கைகளால் மட்டுமே செய்ய முடியும் .அதனால் உங்கள் தேவை என்ன என்று சொல்லி 3 days time கொடுங்கள்.மூலிகை பற்றி விளக்கம் இதில் எனக்கு தெரிந்தவரை சொல்கின்றேன்.online class எடுப்பதால் தங்களுக்கு phone lift பண்ணி பேசமுடியவில்லை. புகை நுழைய முடியாத இடம் எதுவும் இல்லை. சாமி கருவரை வரை நுழைந்து நம் கோரிக்கைகளை இறைவனிடம் கொண்டு போய் சேர்த்து விடும். ஆகாயத்தில் கலந்து நம் வேண்டுதல் விரைவில் நிறைவேற்றும். அகில் கட்டை புகை வானுயர செல்லும் தன்மை உள்ளது. கருங்காலி புகை தெய்வகட்டுகளை விடுவிக்கும் தன்மை உடையது.பெண் தெய்வத்திற்கு உகந்தது .வில்வம் புகை மகாலெட்சுமி சிவ அம்சம் உள்ளது .வெண்கடுகு தீயதை அழிக்கும் .நமக்கு யாராவது மாந்தீரிகம் செய்து நம் இருப்பிடத்தை பார்க்க முயன்றால் இந்த புகை நம் இருப்பிடத்தை மறைத்து விடும் .எப்படிபட்ட மாந்திரவாதியும் நம் இருப்பிடத்தை கண்டு பிடிக்க முடியாது .நாய்கடுகு மருதாணி கெட்ட ஆவி அண்டாமல் செய்யும் .வெண்கடுகு நாய்கடுகு மருதாணிவிதை மூன்றுமேanti bacterial activity உள்ளது .இது காற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும். கஸ்தூரி மஞ்சள் மற்றும் மஞ்சள் இவற்றில் இருந்து வரும் புகை sinus problem இருந்தால் அதை தடுக்கும் .நெற்றிபகுதிகளில் நீர் கோர்க்காது.அருகம்புல் மஞ்சள் இவை பெண்கள் கருப்பை கோளாறை சுத்தப்படுத்தும்.பச்சை கற்பூரம் எள்ளளவும் தோஷத்தை அண்ட விடாது.மலைவேம்பு ஆதிசக்தி அம்சம் இது antibacterial தன்மை நிறைந்தது.பேய் மிரட்டி செய்வினை மாந்தீரிக பாதிப்பை அண்ட விடாது.குங்கிலியம் காற்றில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் .சாம்பிராணி என்பது கருப்பு குங்கிலியம் மற்றும் படிகாரத்தை ஒன்றாக உருக்கி கிடைப்பது தான் சாம்பிராணி .படிகாரம் காற்றில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும். வன்னி இலை மிகவும் கசப்பு தன்மை உள்ளது.ஒருவருக்கு ஆயுள் கூட வேண்டும் என்றால் 3 மண்டலம் தொடர்ந்து வன்னி குச்சிகளை வைத்து ஹோமம் செய்தால் ஆயுள் அதிகமாகும் இது அகத்தியர் மகரிஷி சொன்னது. ஆயுளை நீட்டிக்க வன்னி ரொம்ப முக்கியமானது அதனால் தான் அகத்தியர் இத்தனை சிறப்பு வாய்ந்த ஒரு தூபத்தை போடுங்கள் என்று சொன்னார். அனைத்து மூலிகை எளிதாக கிடைக்கும். தங்களால் சேகரிக்க முடியவில்லை என்றால் இவை அனைத்தையும் கலந்து கப்சாம்பிராணி வடிவில் என்னிடத்தில் கிடைக்கும் தேவை என்றால் மட்டுமே என்னை தொடர்பு கொள்ளுங்கள் .. மூலிகை ரகசியம் நிறைய உண்டு ..ஒருவர் பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையில் இருந்தால் அவர் உண்மையான அகத்தியர் பக்தர் ஆக இருந்தால் அவரை மூலிகைகளை கொண்டு தயார் செய்த தீபம் மற்றும் தூபம் மூலம் உயரத்திற்கு கொண்டு வரமுடியும் .இது உண்மை. இந்த மூலிகைகளை பயன்படுத்தி தற்போது தீபம் ஏற்ற வழி இல்லாத கோவில்களை தேர்த்துஎடுத்து சோதித்த பொழுது அகத்தியர் சொன்ன அத்தனையும் உண்மை என்று தெரிந்தது...எனக்கு தெரிந்த விளக்கம் சொல்லிவிட்டேன்.அதிகமாக விளக்கம் தேவை என்றால் சிததன்அருள் அய்யா தான் தரமுடியும் ..மிக்க நன்றி .

  ReplyDelete
  Replies
  1. Madam u can't test the thatha vaaku. U have told that u have tested in temples with ur thoopam. This is not correct. U can explain about ur thoopam. Please.

   Delete
  2. Dear Revathy sister. Pls contact me at my email.

   krisel786@gmail.com.

   I live in Singapore. Thank you.

   Delete
  3. Namaskaram Revathy Madam, adiyen oru Agathiyar bakthan, ungaludaya sevai padithen/parthen. Miga nandru. Enakku konjam poruladhara sikkal irukku. Enakku konjam udhavungal.- Ravi Mobile 8144633033, Mogappair,Chennai

   Delete