​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 29 April 2021

சித்தன் அருள் - 998 - அன்புடன் அகத்தியர் - நாடி வாக்கு - சிதம்பரம்!


ஒரு முறை சிதம்பரம் கோவிலில் அர்த்தஜாம பூஜைக்காக காத்திருந்த பொழுது, ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் நாடி வாசிக்க வேண்டி வந்தது. தனிப்பட்ட நாடி வாக்கில் அகத்தியப் பெருமான் வந்து பொதுவான ஒரு சூட்சுமத்தை உரைத்தார். அதை மட்டும் அடியவர்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே தருகிறேன்.

"அப்பனே, இன்னொரு விளக்கத்தையும் ஒரு சூட்சுமமாக விளக்குகின்றேன்.  யாரும் விளக்கவில்லை. அப்பனே! பௌர்ணமி, அமாவாசை திதிகளில் இங்கு அமர்ந்து/உறங்கினால் அப்பனே, உடுக்கை சத்தம் கேட்கும், அப்பனே! நடை பயணம் கேட்கும், சலங்கை ஒலி கேட்கும். அப்பனே இங்கு திரிவார் என்பது திண்ணம். சிவபெருமான் இங்கு நடப்பதை கேட்கலாம். இது ஞானிகளுக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது.

அப்பனே! எவையென்று கூற! அப்பனே! இன்னொரு விளக்கத்தையும், மிக சூட்சுமமாக விளக்குக்கின்றேன். இதையும் யாரும் விளக்கவில்லை. அப்பனே! இரவு இங்கு உலா வந்து ஒரு காலம் அமர்ந்து, பின்னர் அண்ணாமலைக்கு வருவான். பின்னர் அங்கு சுற்றி திரிவான் இறைவன். பின்பு ஏகாம்பரம் என்றழைக்க கூடிய காஞ்சிபுரம் செல்வான். இங்கிருந்து காளத்திரி (காளஹஸ்தி) போவான். அதன் பின்னர் அதிகாலையில் திருவானைக்காவில் நீராடுவான் இவன்" என்றார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த நாடி வாசித்தது ஒரு அமாவாசை திதி அன்று, சிதம்பரத்தில். நாடி வாக்கை பதிவு செய்த பொழுது, பின்னணியில் சதங்கை ஒலியும் பதிவாகியுள்ளது. அதை உணரும் பாக்கியம் ஒரு சிலருக்குத்தான் கிடைத்துள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்! 

16 comments:

 1. ஓம் அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 2. Om Agatheesaya Namah! Whoever experienced are really blessed 🙏🙏

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா, தங்கள் சேவைக்கு நன்றிகள் பல பல.

  சசதங்கை ஒலி கேட்கும் அந்த ஆடியோ துணுக்கை மட்டும் பகிர முடியுமா.

  ஓம் அம் அகத்தீசாய நமஹ ||

  ReplyDelete
 4. OM AGATHEESAYA NAMAHA, OM NAMACHIVAYA

  ReplyDelete
 5. பஞ்ச பூத ஸ்தலங்கள். ஓம் நமசிவாய. அகத்தியன்
  அகத்தியன்
  அகத்தியன்

  ReplyDelete
 6. Om Agatheeswaraya Namaha !!!
  Om Agatheeswaraya Namaha !!!
  Om Agatheeswaraya Namaha !!!

  ReplyDelete
 7. உலக பந்தம் குடும்ப பந்தம் விடாதபடி மனம் அலைபாய்வதால் இறைவனின் நாமத்தை
  தொபர்ந்து நாள் முழுவதும் ஜபிக்கமுடியவில்லை என்று வருத்தமாக உள்ளது
  அகத்தியன் வைராக்கியத்தை
  அருள வேண்டி யாசிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. AYYA BAGAVAD GITA PADIYUNGAL
   UNGALUKKU VIRUPAMANA THEIVATHIN NAMA EPPOTHUM SOLLUNGAL.

   Delete
  2. மதிப்பிற்குரிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
   மதிப்பிற்குரிய திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

   வணக்கம் அய்யா,
   எந்த ஒரு கடவுளும், சித்தர்களும், மகான்களும் இல்லறத்தை விட்டு, குடும்ப கடமைகளை விட்டு இறையை தேட சொல்லவில்லையா அய்யா.
   இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இல்லறத்தில் இருந்து சரி வர கடமைகளை செய்து, முடியும் போதெல்லாம் இறையை வணங்கி கொண்டே வந்தால் அவர்களாவே நல்ல வழியை காட்டுவார்கள்.
   ஒரு சிஷ்யன் எப்படி ஒரு நல்ல குருவை தேடி வருவானோ அதைப்போல குருவும் நல்ல சிஷ்யனை தேடி வருவார்.

   அகத்தியர் படம் என்று நினைவில்.
   நாரதர், நான் நாள் முழுவதும் நாராயண நாமம் சொல்லுகிறேன் என்ற சிறிய எண்ணம் ஏற்பட்டது. அவர் ஒரு குடியானவனை காட்டி அவர் தான் சிறந்தவர் என்று கூற...நாரதரோ அவர் காலையில் ஒரு முறை மற்றும் படுக்க போகும் போது ஒரு முறை மட்டும் இறை நாமத்தை சொல்லுறார் எப்படி சிறந்தவர் ஆக முடியும் என்று கேட்க.

   குரு அகத்தியர், நாரதர் கையில் வழிய வழிய எண்ணெய் கிண்ணம் கொடுத்து உலகை சுற்றிவர சொன்னார் மாலைக்குள். கவனம் ஒரு சொட்டு எண்ணெய் கூட சிந்த கூடாது என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

   நிபந்தனை படி நாரதரும் சுற்றி வர...குரு அகத்தியர் அவரிடம் கேட்டார்..இன்று எதனை முறை நாராயண நாமத்தை சொன்னீர்கள் என்று. நாரதரோ, என் எண்ணம் எல்லாம் எண்ணெய் கிண்ணத்திலே இருக்க நான் எப்படி சொல்லுவேன் என்று கூறினார்.

   அந்த குடியானவனுக்கும், அவன் குடும்ப விஷயம் ஆயிரம் இருந்தும் காலையில் மற்றும் மாலையில் ஒரு முறை சொன்னார் அது பெரியது தானே என்று கேட்டார். எத்தனை முறை சொல்லுகிறோம் என்பது அல்ல முக்கியம். எந்த மனநிலையில் சொல்லுகிறோம் என்பது தான் முக்கியம்.

   மறுபடியும் சொல்லறேன்,
   இல்லறத்தில் இருந்து சரி வர கடமைகளை செய்து, முடியும் போதெல்லாம் இறையை வணங்கி கொண்டே வந்தால் அவர்களாவே நல்ல வழியை காட்டுவார்கள்.

   குருவே சரணம்.

   மிக்க நன்றி அய்யா,
   இரா.சாமிராஜன்

   Delete
 8. ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏

  ReplyDelete
 9. ஐயா தங்களுக்கு நன்றி.... ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  ReplyDelete
 10. ஐயா... அகத்தியர் அய்யன் மற்றும் சிவபெருமான் அண்ணை முருகப்பெருமான் இவர்கள் பற்றிய அருள் கோயம்புத்தூரில் ஏதேனும் கிடைத்தால் தாருங்கள் ஐயா... மற்ற இடங்கள் பற்றி படிக்கும் போது அங்கு சென்று தரிசனம் செய்ய விருப்பம் ஆனால் வழி கிடைக்கவில்லை. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏

  ReplyDelete
  Replies
  1. கோவையில் அகத்திய பெருமான் ஜீவா நாடியில் வந்து உரைக்கும் இடம்

   http://agathiyarpogalur.blogspot.com/

   ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

   Delete
 11. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஐயா எனது ஐயத்தை தெளிவாக்குங்கள்

  ஏதாவது வாசணதி பொருள் இட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்றால் எதை கலந்து ஏற்றுவது மஞ்சள் (அ) சந்தனம் (அ) பச்சை கற்பூரம் (அ) சாம்பிராணி இதில் எதை கலந்து ஏற்றுவது?
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்

  ReplyDelete
 12. திருவோணம் பூஜை செய்து விட்டேன் நன்றி

  ReplyDelete
 13. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்

  ReplyDelete