​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 6 June 2019

சித்தன் அருள் - 812 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


"மனித உடலினுள் தங்கியிருக்கும், அமிலத்தில்தான் அனைத்து நோயும் வேர் ஊன்றி, உணவு தரும் சத்தை எடுத்துக்கொண்டு, நன்றாக வளருகிறது. இது எல்லா நோய்க்கும் பொருந்தும். உடலுள், அமிலம் அளவு அதிகமாக, அமிலத்தின் வீரியம் அதிகமாக நோய்க்கு கொண்டாட்டம்தான். தற்போதுள்ள ஆங்கில மருத்துவ முறையில், நோயினால் வரும் வேதனையை உணர முடியாதபடி செய்ய மருந்து கொடுக்கப்படுகிறதே தவிர, முற்றுமாக நோயை அறுத்து உடலை விட்டு போகச்செய்ய மருந்து கொடுக்கப்படுவதில்லை. உதாரணமாக, கண்டமாலை (புற்று நோய்) என்கிற நோய்க்கு இதுவரை, தெளிவான மருந்தை, அந்த மருத்துவ முறை கண்டு பிடிக்கவில்லை. ஏன்! "ஹச்"னு தும்முகிற தும்மலுக்கு கூட மருந்து கிடையாது. மனிதர்கள், நோயை கவனிக்கிறார்கள். சித்தர்கள், நோயின் ஆணிவேரை கவனித்தார்கள். ஆதலால், சித்தர்களிடம் அனைத்து வியாதிகளுக்கும் மருந்து உண்டு. ஒவ்வொரு மனிதனும், தன் உடலில் உருவாகும், உற்பத்தி செய்யப்படும், அமிலத்தை கவனித்து, குறைத்து வந்தாலே, நோயின்றி நிம்மதியாக வாழலாம். எப்படி என்று சொல் பார்ப்போம்!" என்று கொக்கி போட்டார்.

"அமிலத்தின் அளவை குறைத்தால் நல்லது என்று புரிந்தது. எப்படி என்று நீங்களே தெளிவுபடுத்துங்களேன்!" என்றேன்.

"உடல் ஒரு அற்புதமான ரசாயன தொழிற்சாலை. அதற்கு உள்வரும் உணவை எப்படிப் பிரித்து எதை எடுக்க வேண்டும் என நன்றாக தெரியும். அதே போல், எதை விலக்க வேண்டும் எனவும் தெரியும். விலக்க வேண்டியது அதிகமாகிவிட்டால், ஒவ்வாமை, வாந்தி, பேதி போன்ற வழிகளில், வெளியே தள்ளிவிடும். உணவுடன் உள்ளே செல்லும் அமிலமும், அமில உணவுகளும், உணவை பிரிக்கும் பொழுது உடலுள் உருவாகும் அமிலமும், ஒரு நேரத்தில், 50%விகிதத்துக்கு மேலே இருக்குமானால், அந்த உடல் "பித்த பிண்டம்" ஆகிறது. அப்பொழுது, உடலுக்குள் வளரும் நோய், தன் ஆணிவேரை இந்த அமிலத்தில் ஊன்றி, தன் இருப்பை பலப்படுத்திக் கொள்கிறது. இப்படி நமக்கே பிடிக்காத வலியை தருகிற நோயை இறக்குமாறு செய்ய வேண்டின், ஒரு மனிதன் செய்ய வேண்டியது, அளவுக்கதிகமான அமிலத்தை உடலை விட்டு நீக்குவது. அமிலத்தை நீராக்க, "அல்கலைன்" மிக சிறந்த மருந்து. இந்த அல்கலைன் எங்கு கிடைக்கும்? நம் வீட்டு சமயலறையில், நாம் தினமும் காணும் பழத்தில், காயில் உள்ளது.

1. சமையலுக்கு உபயோகிக்கும் "சோடா உப்பு" (சோடியம் பை கார்போனேட்) மிக சிறந்த அல்கலைன். இதை தினமும் ஒரு ஸ்பூன், இதமான நீரில், காலையில், ஒரு நேரம், வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், உடலில் உள்ள அமிலத்தை நீராக்கி மாற்றி வெளியேற்றிவிடும். ஒரு வாரத்திலேயே, உடல் எடை குறைந்து இளைத்துப் போகும்.

2. சோடா உப்பு ஒத்துக்கொள்ளவில்லை என்று நினைப்பவர்கள், ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி (பிழிய வேண்டாம்) ஒரு பாத்திரத்தில் இட்டு, சூடு நீரை அதன் மேல் விட்டால், 10 நிமிடத்தில் அந்த நீர் அல்கலைன் ஆக மாறியிருக்கும். அதை அருந்தலாம். அது குணப்படுத்தும்.

3. இதுவும் சரியாகாது என்பவர்கள், மூன்று தேங்காய் கீற்றெடுத்து, ஒரு பாத்திரத்தில், சூடு நீர் ஊற்றி வைத்தால், அந்த நீர் 10 நிமிடத்தில் அல்கலைன் ஆக மாறும். அதை உபயோகிக்கலாம்.

4. இல்லை என்றால், "சிறியாநங்கை" என்கிற மூலிகை இலையை பொடித்து, ஒரு வெள்ளி பாத்திரத்தில், பசும்பால் கலந்து ஒரு நாழிகை வைத்திருந்து பின்னர் குடித்தால், கண்டமாலை நோய்கூட ஓடிப்போய்விடும். ஆனால், இது மிகுந்த கசப்பானது. சிலவேளை, வாந்திவரும். அவரவர் நிலை அறிந்து உபயோகிக்க வேண்டும்.

"சரி, இந்த அல்கலைன் மருத்துவ முறை எப்படி நோயை விரட்டுகிறது? உடலில் அதிகமாக உள்ள அமிலத்தை நீராக்கி மாற்றிவிட, உடல் அந்த நீரை வெளியேற்றிவிடுகிறது. அமிலத்தில் வேரூன்றி நிற்கும், நோய்க்கு, உணவு கிடைப்பதில்லை. நோய்வாய்ப்பட்ட செல்கள் உணவின்றி இறந்து போகிறது. நோய் படிப்படியாக, உடலை விட்டு விலகிவிடுகிறது. கண்டமாலையை கூட உடலை விட்டு விரட்டி அடிக்கும் சக்தி அல்கலைனுக்கு உண்டு. ஆனால், இந்த வியாதி விலக, இறை அருள் வேண்டும். ஏன், எல்லா வியாதியும் விலக இறை அருள் வேண்டும். ஆகவே, இறைவனை பிரார்த்தித்து இதை மருந்தாக உட்கொள்வது நல்லது!" என்றார்.

[நிற்க! இந்த மருத்துவ முறையை, அடியேன், இவ்வாழ்க்கையில் பரிசோதித்து பார்த்தேன். மிக சிறந்த பலனளித்தது. இறை அருளால், 6 பேருக்கு இருந்த கண்டமாலை விலகியது என்பதே உண்மை. அந்த ஆறு பேரின் உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி, அல்கலைன் மகத்துவத்தை உணர்த்தி எடுத்துக்கொள்ள செய்து, உடலின் எந்த பாகம் பாதிக்கப்பட்டு இருந்ததோ, அந்த இடத்தில், சோடாஉப்பை, ஆமணக்கு எண்ணெயில் கலந்து, தினமும் இரவில் புரட்டி வர செய்த பொழுது, நல்ல பலனளித்தது, என்பதே உண்மை. இதனுடன், கோடகநல்லூர் பெருமாளிடம் வேண்டிக்கொண்டு, மஞ்சள் பொடி வாங்கி வந்து தினமும் உண்டு வர, அவரில் மூன்று பேருக்கும்  இறை அருளால் உடனேயே பலன் கிடைத்தது.]

"உணவு முறையை, நம் முன்னோர்கள், மிகுந்த பலனளிக்கக்கூடிய முறையில்தான் அமைத்தார்கள். உதாரணமாக, ஒரு திருமணத்தில், அன்னம் பாலிக்கப்படுகிற முறையை பார்ப்போம். வாழை இலையில், முதலில் உப்பு, பின்னர் பலவித காய்கறிகள், ஊறுகாய், ஒரு பழம், கிச்சடி, பச்சடி, பின்னர் சாதம், நெய், பருப்பு. சாப்பிடுபவர், முதலில், பருப்பு கலந்த சாதத்தை சாப்பிட வேண்டும். இது உள் சென்று வயிற்றில் அதிகப்படியாக சேர்ந்துள்ள அமிலத்தை குறைக்கும். பின்னர், சாம்பார் விட்டு சாதம். இந்த சாம்பார் என்கிற உணவு, சுட்ட புளியில்தான் செய்வார்கள். அதன் பின்னர், மல்லி போட்ட ரசம். ஜீரண சக்தியை தூண்டும். பின்னர் வெல்லம் போட்டு தயாரிக்கப்பட்ட பாயாசம். உடலுக்கு தேவையான சக்தியை உடனேயே கொடுக்கும். பின்னர் மோர் கலந்த சாதம். குடலின் உள்ளே குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதனுடன், ஊறுகாய். உமிழ்நீரை நிறைய உற்பத்தி செய்து உணவின் ஜீரணத்தை எளிதாக்கும்."

"இதில், இன்றைய உணவுமுறையில் மனிதர்கள் எங்கெங்கு தவறு செய்கிறார்கள், என பார்ப்போம். முதலில், இலைக்கு பதில், உலோக தட்டு. பல வேளைகளில் பருப்பு என்பதே இல்லை. காரமாக, புளிப்பாக சாம்பார், ரசம். எல்லா காய்கறிகளிலும், பட்டாணி. வயிற்றை கெடுக்கிற முதல் உணவே இதுதான். உடனேயே பாலில் செய்த பாயாசம். அது முடிந்த பின் மோர் விட்டு சாதம். மிகப்பெரிய தவறே இது தான். பாலில், மோர் விட்டு உறைய விடும் பொழுது அதில் எவ்வளவு சக்தி உபயோகிக்கப்பட்டு தயிராக மாற்றப்படுகிறது என்பது மனிதனுக்கு தெரியாது. உங்கள் விஞ்சான முறைப்படி அணுஉலைகளில் உருவாகிற fusion அங்கு நடக்கிறது. இது ஒரு பாத்திரத்துக்குள் நடந்தால் பிரச்சினை இல்லை. பால் உணவு சாப்பிட்டு, உடனேயே மோர் சாப்பிட்டால், நம் வயிற்றுக்குள் அது நடக்கும். நல்லதே இல்லை. Fusionனை தாங்குகிற சக்தி குடலுக்கு கிடையாது. அதுவே பின்னர் பலவித நோய்கள் உருவாக அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது, என்பதே உண்மை." என்றார்.

"அடடா! ஒரு வேளை சாப்பாட்டில் இத்தனை விஷயங்கள் கவனிக்க வேண்டியுள்ளதா! நம் முன்னோர்கள், ஆரோக்கியத்துக்கு, முக்கியத்துவம் கொடுத்து, எத்தனை வழிகளை கொடுத்து சென்றுள்ளார்கள். இதில், எப்பொழுது இந்த மனித சமூகம் தவறிப்போனது?" என்று யோசித்து அதையே கேள்வியாக்கினேன்.

"மேலை நாட்டவர் நம்மை படையெடுத்து, நம் சமூகத்தின் கட்டமைப்பை, சிதறடித்த பொழுது, வேறு வழியின்றி, நம் வாழ்க்கை முறையை கைவிட்டு, அவர்கள் வாழ்க்கை முறையை நம் வாழ்க்கை முறையில் நடை முறைப் படுத்திய காலத்திலிருந்து" என தெளிவாக பதில் வந்தது.

சித்தன் அருள்.................. தொடரும்!

18 comments:

 1. சுட்ட புளி என்றால் எப்படி தயாரிப்பது பற்றி மேலும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஐயா

  ReplyDelete
  Replies
  1. புளியை "சுட்ட புளியாக்கிட" வெயிலில் நன்றாக உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளலாம். அல்லது ஒரு இரும்பு சட்டியில் போட்டு, நன்றாக சூடேற்றி, வறுத்து பின், குளிர்ந்தபின் கல் உப்பு போட்டு ஒரு பரணியில் சேமிக்கலாம்.

   Delete
  2. மிக்க நன்றி ஐயா

   Delete
 2. ஐயா ... காலை உணவு, மற்றும் மாலை உணவு பற்றி கூறுங்கள் ஐயா...

  ReplyDelete
 3. Super information. Thanks a lot sir.

  ReplyDelete
 4. அருமையான தகவலை தந்ததற்கு நன்றி! ஐயா ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி!

  ReplyDelete
 5. ஐயா வணக்கம். ஐயா நீங்கள் சொன்ன முறையில் வருடத்திற்கு ஒரு முறை puli வாங்கி நன்றாக காய வைத்து எடுத்து வைக்கிறோம் . இன்னும் பலமுறை காய வைக்க வேண்டுமா ஐயா. இப்போ எல்லோருக்கும் சக்கரை நோய் வந்து மனிதனை வாட்டுகிறது ஐயா. இது குணமாக நம் குரு அருள் கருணை வைத்து நோய் தீர்க்க வழி சொல்ல வேண்டுகிறோம் ஐயா. எங்க வீட்டில் நல்ல நாளில் பருப்பு , நெய் வைத்து இறைவன்னுக்கு படைத்து பின் உண்போம் ஐயா. நன்றி ஐயா. ஐயா உங்கள் அன்புக்கும், வழிகாட்டுத்தலுக்கும் மிக்க நன்றி. குருவே துணை!

  ReplyDelete
  Replies
  1. Mikka nandri ayya 🙏🙏🙏

   Delete
  2. "சக்கரை நோய் வந்து மனிதனை வாட்டுகிறது" - பொறுத்திருங்கள், தொகுப்பு வரும்!

   Delete
 6. ஐயா வணக்கம். கோடகநல்லூர் கோவிலில் கட்டிட பராமரிப்பு வேலை நடைபெறுவதாகவும் இரு மாதங்களில் வேலை முடிந்தபின்பு அதற்கான விழா மற்றும் பூஜை கோவிலில் நடைபெற உள்ளதாக தகவல் அறிந்தேன். இதை பற்றி மேலும் தகவல் தங்களுக்கு தெரியவந்தால் கூறவும் . பூஜை நடைபெறும் நாள் மற்றும் நேரம் யாரேனும் அறிந்தால் தெரியப்படுத்தவும் . ஓம் லோபாமாதா சமேத அகஸ்தியர் அய்யா மலரடிகள் போற்றி போற்றி. ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி போற்றி .

  ReplyDelete
  Replies
  1. கோடகநல்லூர் ப்ரஹன்மாதவர் கோவிலில், கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக, புனருத்தாரண வேலைகள் நடக்கிறது. கும்பாபிஷேக தியதி இன்னும் முடிவாகவில்லை. கோவில் எப்பொழுதும் போல, காலை 9 மணிமுதல் 11.30 வரையிலும், பின்னர் மாலை 5 மணிமுதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.

   Delete
  2. மிக்க நன்றி ஐயா. ஓம் லோபாமுத்ரா சமேத அகஸ்தியர் அய்யன் மலரடிகள் போற்றி போற்றி .ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி போற்றி.ஓம் என்னில் அடங்கா கோடானகோடி சித்தர்கள் தேவர்கள் முனிவர்கள் போற்றி போற்றி போற்றி.

   Delete
 7. Dear Sir

  Amilam in Tamil means acidity in english isnt it

  ReplyDelete
 8. Vakkam aiya.
  Can you advice any siddha medicine for hypertension/blood pressure?
  Aum Appa Agathiyar Thiruvadigal Potri.

  ReplyDelete
 9. அகத்தியர் அடியவர்களே..
  இன்னும் ஒரு உப்பு நீர் (Sole) பருகும் முறையை பற்றி அறிந்து கொள்ள இந்த பக்கத்தை பாருங்கள்..
  http://www.facebook.com/groups/790627491137665?view=permalink&id=1225084274358649&scmts=scwsiltcsdd

  ReplyDelete