​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 14 February 2019

சித்தன் அருள் - 795 - அகத்தியப்பெருமான் அருளிய ஒரு பாடம்/அனுபவம்-2!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

[இரு வாரங்களுக்கு முன் அகத்தியப்பெருமான் ருத்ராக்க்ஷ மாலையை கேட்டு வாங்கிக்கொண்டதை அறிவீர்கள். பல அகத்தியர் அடியவர்களும், மாலை அணிந்த அகத்தியரை தரிசிக்க விரும்பினார். பூஜாரியிடம் மாலை அணிந்த அகத்தியரை, ஒரு படம் எடுத்து அனுப்புங்களேன் என்று கேட்கவே தயக்கமாக இருந்தது. இருப்பினும் மனதை மாற்றி, அவருக்கு செய்தி அனுப்பினேன். அவரும் ஒரு படம் எடுத்து அனுப்பித் தந்தார். நாம் அனைவரும் மிகவே கொடுத்து வைத்தவர்கள் என்று புரிகிறது. குருநாதர் அருளால், அந்த படம் வந்து சேர்ந்தது. சென்ற வியாழக்கிழமை அவருக்கு அணிவித்து பின் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பினார். கீழே உள்ள படத்தை சற்று பெரிதாக்கி பார்த்தால், லிங்கத்துடன் உள்ள மாலையை பார்க்கலாம். குருநாதரை கண்டு அவர் அருள் பெற்றுக்கொள்ளுங்கள். இனி சித்தன் அருளை தொடருவோம்.}


மறுநாள், அலுவலகம் விட்டு மாலை 5.30க்கு வீடு வந்து சேர்ந்தேன். அம்மா, வீட்டை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்.

"என்னாச்சு! இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாய்!" என்றார்.

"வேலை ரொம்ப சீக்கிரம் முடிந்துவிட்டது, அதான்" என்றேன்.

சமீபத்தில் ஒரு நாளும் இதுபோல் சீக்கிரமாக வந்ததில்லையே! என்கிற உணர்வு வர, சூழ்நிலையை உற்று நோக்கினேன். கையிலிருந்த பையை வாசலருகில் உள்ள மாடிப்படியில் வைத்தேன். நடுஹாலில், தகப்பனாரின் பூசை அறை. அதை கடந்துதான் சமையலறையை நோக்கி செல்ல வேண்டும். ஒரு நிமிடம், பூசை அறையின் முன் நின்று "இன்று இதுவரை நடந்ததெல்லாம் உங்கள் செயல். இனி நடப்பதும் உங்கள் செயலாகவே இருக்கட்டும்" என இறைவனை நோக்கி பிரார்த்தித்தும், வீட்டில் மிகுந்த அமைதி நிலவியதை உணர்ந்தேன். மிகுந்த அமைதி, ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதற்கான அறிகுறி, என பல முறை உணர்ந்திருக்கிறேன்.

"சமயலறையில், காப்பி கலந்து வைத்திருக்கிறேன்! எடுத்துக்கொள்!" என்ற அம்மாவின் கரிசனம், அடியேன் தியானத்தை கலைத்தது.

"சரி" என்றுவிட்டு நேராக குளியலறை வரை சென்று கை, கால், முகம், கழுவி உள்ளுக்குள்ளேயே உற்றுப்பார்த்தபடி சமயலறையில் அமர்ந்து, அம்மா கலந்து வைத்த காப்பியை யோசித்தபடி அருந்தினேன்.

"இந்த நேரத்தில், பெரியவர்கள் எங்கேனும் கிளம்பிப்போ" என கூறுவார்களோ என்ற எண்ணம் வந்தது. எத்தனை யோசித்தும், எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இயல்பு நிலைக்கு வந்தால்தான் சரியாகும், வருவதை அந்த நேரத்தில் சந்திப்போம், என காப்பியை அருந்தி முடித்துவிட்டு, மறுபடியும் நடுஹாலுக்கு வர, அங்கு இரண்டு பெரியவர்கள் அமர்ந்திருந்தனர்.

முகம் தெரியாத யாராயினும், வந்தால், வீட்டிற்குள் வரவேற்க வேண்டும் என்ற எண்ணம் அடியேனுக்கு உண்டு.

அடியேன் அவர்களை நோக்கி கைகூப்பி "வாங்க! எப்படி இருக்கீங்க! காப்பி சாப்பிடுவீங்களா? எடுக்க சொல்லட்டுமா? என்ன விஷயம்! எங்கிருந்து இவ்வளவு தூரம்!" என்று கேள்விகளை சமர்பித்தேன்.

இருவரில் ஒருவர் வயதானவர். காலில் மாவு கட்டு போட்டிருந்தார். சமீபத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கும் போல என்று நினைத்துக்கொண்டேன்.

மற்றவர், ஒரு 30 வயதுக்குள் இருப்பார், அந்த பெரியவரின் மாணாக்கர் என பின்னர் தெரிய வந்தது.

பெரியவர் பேசத் தொடங்கினார்.

"நாங்க ரெண்டுபேரும் சிதம்பரத்தில் தீக்ஷிதர்கள்."

"உங்கள சந்திச்சதில ரொம்ப சந்தோஷம்" என்றேன்.

சிறு தயக்கம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.

"சொல்லுங்க, என்ன விஷயம்" என்றேன்.

"என் பொண்ணு ரொம்ப நன்னா படிக்கிறா. இது அவ மார்க் சர்டிபிகேட். இது அவ ஆதார் கார்ட்." என்று நீட்டினார்.

அடியேனுக்கு, ஒரு நிமிடத்தில் எல்லாமே புரிந்து போனது.

"இருக்கட்டும். சாட்சி தேவை இல்லை." என்றேன்.

"நீங்கள் வந்த விஷயம் என்ன என்பதை கூறுங்கள் அய்யா" என்றேன்.

"எனக்கு என் மகளை பெரிய படிப்பு படிக்க வைக்கிற அளவுக்கு வசதி இல்லை. உங்களை மாதிரி ஒரு சிலரிடம் கை ஏந்தி அவளை படிக்க வைக்க வேண்டும் என்கிற நிலை. அதான் இங்கு வந்தேன். உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்" என்றார்.

அந்த மகளின் தகப்பன் ஸ்தானத்தில் ஒரு நிமிடம் யோசித்து பார்க்க, அதிர்ந்து போனேன். இன்று செய்யவில்லையேல், நாளை என்று ஒன்றில்லை என வந்தது.

வாசலில் தன் வேலையில் இருந்த அம்மாவிடம் "அம்மா! மாடிப்படில என் பை இருக்கு. அதை எடுத்துக் கொடேன்!" என்றேன்.

அம்மா, மெதுவாக படியேறி வந்து, பையை எடுத்து அடியேனிடம் தர, அதை திறந்து, நல்ல செயலுக்கென மாற்றி வைத்திருந்த ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.

அத்தனை ரூபாய் அவர் எதிர் பார்க்கவில்லை போலும்.

சந்தோஷமாக வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டார்.

கூடவே "உங்கள் நாமதேயம் என்னவென்று கூறவில்லையே" என்றார்.

அடியேன் அமைதியாக "அதில் என்ன இருக்கிறது! பிறருக்கு ஒரு நல்லது செய்யணும்னு தோன்றினால், உடனேயே செய்துவிடவேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான். எல்லாம், அதோ, அவர்கள் செயல்" என்றேன், பூசை அறையிலுள்ள ஸ்வாமியின் படத்தை சுட்டிக்காட்டி.

"இந்த காலத்துல இப்படியும் மனிதர்களா!" என்றார்.

"சரி! நீங்கள் ஏதேனும் சாப்பிடுகிறீர்களா! காப்பி போட்டு தரட்டுமா, அல்லது வேறு ஏதேனும்!" என்றேன்.

"வேண்டாங்க! இன்னும் போக வேண்டி உள்ளது, ரொம்ப அதிகமாகிவிடும். நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்" என்று கிளம்பினார்.

காலில் மாவு கட்டு போட்டு, கைத்தடி உதவியுடன் சற்று விந்தி நடப்பதால், உயரமான படி இறங்க அவருக்கு சிரமமாக இருக்கும் என்று உணர்ந்து, அவருக்கு முன்னரே வாசலில் இறங்கி, அவர் வலது கையை தாங்கிக்கொள்ள அடியேனின் வலது கையை நீட்டினேன். அவரும், அடியேனை கூர்ந்து கவனித்தபடி, அவரது வலது கையை நீட்டினார்.

அத்தனை குளிர்ச்சியாக இருந்தது அவர் கை.

"என்ன! அப்பனுக்கு அபிஷேகம் பண்ணுகிறீர்களோ!" என்றேன்.

உணர்ந்து கொண்டவர் "எல்லாம் அவர் செயல். ஒரு நாடகம் நடத்தணும்னு, அவர்கள் தீர்மானித்தால், எங்கெல்லாமோ அழைச்சுண்டு போவா! இல்லையா." என்று கையை எடுத்தபடி "அப்ப, நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்" என்றார்.

அவர்கள் போவதை உற்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஐயப்பன் கோவில் வரை போவதை பார்த்தேன். அடியேனுக்கு வீட்டிலிருந்து 2 நிமிட தூரம்.

சரி, இனி நடக்கவேண்டியதை பார்ப்போம், என்று வீட்டுக்குள் வர, தாயார் நிறைய கேள்விகளை கேட்டார். ஒவ்வொன்றாக பதில் கூறி, பூசை அறை முன் நின்று, அகத்தியப்பெருமானிடம் "நேற்றுதான் வேண்டிக்கொண்டேன். இன்றே அதற்காக ஏற்பாடு செய்துவிட்டீர்கள். மிக்க நன்றி" என கூறி முடிக்கவும்,

"வந்து வாங்கிக்கொண்டது யார் என உனக்கு புரியவில்லையே! வேண்டுமானால் போய் பார்! உன்னால் எங்கும் காணமுடியாது" என்று பதில் வந்தது.

ஒரு நிமிடம் உடல் சிலிர்த்துப் போக, வீட்டுக்குள்ளிருந்து இறங்கி அவர்கள் சென்ற தெருவை நோக்கி ஓடினேன்.

அடியேன் ஓடுவதை பார்த்த அம்மா பின்னாலே நடந்து வந்து, "என்னடா ஆச்சு! ஏன் இப்படி ஓடுகிறாய்?" என்று கேள்வி எழுப்பினார்.

"இல்லை அம்மா! அவர்களை ஒரு முறை கூட பார்க்க வேண்டும்! அதான் தேடுகிறேன்" என்று கூறிவிட்டு எங்கும் தேடியும் இருவரையும் காணவில்லை.

அவர்கள் இருக்கும் பொழுது எத்தனை தெளிவாக இருந்தும், உண்மையை மறைத்துவிட்டார்களே. அடச்சே! இனிமேல் இந்த வாய்ப்பு கிடைக்குமா! பெரியவர்கள் கண் தரமாட்டார்கள். இமை தாழ்த்தித்தான் பேசுவார்கள். அது போகட்டும். அது அவர்கள் இருப்பு. அடியேனாவது, அவர்கள் காலில் விழுந்து, ஆசிர்வாதம் வாங்கியிருக்கலாமே! விட்டுவிட்டோமே! என்ற எண்ணம், இந்த அனுபவத்தை தட்டச்சு செய்கிற இந்த நிமிடம் கூட அடியேனை வாட்டுகிறது.

மறுபடியும் பூசை அறை முன் கணீர் மல்க நிற்கத்தான் முடிந்தது.

நம் குருநாதர், நம்முடைய நேர்மையான எண்ணங்களுக்கு வாய்ப்பளிக்க, என்னவெல்லாம் செய்து தருவார் என்பதிலிருந்து, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை.

உங்கள் அனைவரிடமும் அடியேனுக்கு ஒன்றுதான் கூற வேண்டும் என்ற எண்ணம்.

இந்த மாதிரி சூழ்நிலையில், பவ்யமாக, தெளிவாக இருங்கள். நடப்பது நடக்கட்டும். ஆனால் ஆசிர்வாதத்தை வாங்கிவிடுங்கள். நிரந்தரமாக, நிம்மதியாக வாழ்ந்து விடலாம்.

இந்த அனுபவத்தை, அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

சித்தன் அருள்....................... தொடரும்!

24 comments:

  1. ஓம் அகத்தீசாய நமா ஓம்!

    அற்புத அனுபவம்! அதுதான் நயன தீட்சையும், தொடு தீட்சையும் கிடைத்து விட்டதே! அய்யா, தனியாக ஆசிர்வாதம் வேற வேணுமா!

    அவர்கள் யார் என தெரியும் ஆவலில் இருக்கிறேன்! அகத்திய பெருமானும் திருவிளையாடல் செய்வார் போல்!

    அய்யா, அப்படி கொஞ்சம் எங்க பக்கமும் அனுப்பி வையுங்க!நாங்களும் கொஞ்சம் அருள் பெறுகிறோம்.

    உண்மையில் உங்கள் செயல்களை பார்க்கும் போது எனக்கு ஒரு ஆதங்கமும் பெருமூச்சும் வருகிறது! என்னால் இது போன்று உணர முடியவில்லையே!

    ஒரு வேளை என் அன்பில் குறைபாடு இருக்கிறது போல்! அதான் எங்களுக்கு இந்த மாதிரி இல்லை! உங்களைப் போல் பெருமானிடம் அன்பும் அதை விட நம்பிக்கையும் எங்களிடம் வளர வேண்டுமென வாழ்த்துங்கள் அய்யா!

    குருவடி சரணம்!
    குருவின் திருவடி சரணம்!

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குறிய திரு. அகினிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
      மதிப்பிற்குறிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

      நன்றி சித்த பராபர சபை

      நயன தீட்சை பற்றி எனக்கு தெரியாது. கூகிள்- பார்த்து/படித்தது.
      அகத்தியர் அடியவர்களுக்காக...


      தச தீட்சைகள்

      நயன தீட்சை : குருவானவர் தன் கண்களால் அருளி அனுக்கிரகரிப்பது.
      சிவபெருமானிடம் திருத்தோணிபுரத்திலே திருஞானசம்பந்தர் பெற்றது நயன தீட்சையாகும்.

      ஸ்பரிச தீட்சை : குருவானவர் சீடனின் சிரசை தொட்டு வழங்குவது.
      சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்சை பரிச தீட்சை அகும்.

      மானஸ தீட்சை : குருவானவர் தன்னுடைய சீடனை நினைத்த தன்னுடைய மனதிலேயே அருளும் ஆசியாகும்

      வாசக தீட்சை : மந்திர உபதேசத்தால் சீடனை உயர்ந்த நிலைக்கு ஆக்குதல்
      மாணிக்கவாசகருக்கு சிவபொருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும்.

      சாஸ்திர தீட்சை : ஆகமங்களை போதித்து சீடனின் மனதுள் சென்று அருளாசி வழங்குவது.
      மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி, பசு, பாச விளக்கம் வழங்கியமை இதற்கு உதாரணமாகும்.

      யோகதீட்சை : யோக மார்க்கத்தால் சீடனின் மனதிற்குள் சென்று ஆசி வழங்குவது
      தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாராகிய நான்கு பேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோக தீட்சையாகும்.

      அவுத்திர தீட்சை : வேள்வியினால் ஹோமங்கள் செய்து சீடனுக்கு சிறப்பு தருவது.

      ஞான தீட்சை : சீடனுக்கு ஞானம் விளங்க குருவின் மனதால் செய்யப்படும் தீட்சை

      கிரியா தீட்சை : குண்டலினி சக்தியை மேல் எழுப்பி சீடனுக்கு அனுக்கிரகம செய்வது.

      சபீஷ தீட்சை : குருவிடம் வேதாகமாங்கள் பயின்று அனுக்கிரகம் பெரும் தீட்சையாகும்.

      நன்றி
      இரா.சாமிராஜன்

      Delete
  2. ஐயா தங்களின் அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா. எங்கள் புண்ணியம். தாங்கள் சொல்வது முற்றிலும் சரி. பெரியவர்கள் வந்து சென்ற பின்னரே உணர்கிறேன் ஐயா....

    ReplyDelete
  3. Appanae koodave irruintu nallvali kattupa.om Sri lopamudra samata agatisya.potri.

    ReplyDelete
  4. ஒம் லோபமுத்ரா சமேத அகத்தீசாயா நமக!

    ReplyDelete
  5. அய்யா இதுபோல பிறர்க்கு ( முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு ) உதவிகள் செய்திட மனம் வருவதற்கு என்ன செய்திட வேண்டும். நம் எண்ணங்கள் சீராகி இதுபோல உதவும் எண்ணம் மேலோங்க என்ன செய்திட வேண்டும்.

    ReplyDelete
  6. ஓம் லோபாமுத்ரா சமேத அகஸ்தியர் அய்யா திருவடிகள் போற்றி போற்றி. ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி போற்றி. ஓம் நம குமாராய போற்றி போற்றி. ஓம் மூத்தோனே போற்றி போற்றி. ஓம் விநாயக சித்தனே போற்றி போற்றி. ஓம் பதினெண் சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி .

    ReplyDelete
  7. குரு பாதங்கள் சரணம்
    அப்பப்பா எப்பேர்ப்பட்ட பாக்கியம்... மெய்சிலிர்த்து போகிறது ஐயா... உங்கள் தொடர்பு கிடைத்ததே அதிர்ஷ்டம்... இவ்வளவு கூர்மையாக பார்க்க வேண்டும் என்று இப்போது தான் புரிகிறது.. ஆனால் எப்படி அதை அனுபவித்து பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு புரியும் வகையில் தாங்களே கற்றுக் கொடுக்க வேண்டும் ஐயா...இறையும் குருவும் அருள வேண்டும்..

    ReplyDelete
  8. ஓம் அகத்திசாய நமஹ

    ReplyDelete
  9. ஓம் அகத்திசாய நமஹ

    ReplyDelete
  10. ஓம் அகத்திசாய நமஹ

    ReplyDelete
  11. Vanakam
    Fantastic experience.good guidelines.
    Augasthiya mamuni potri potri
    Anbudan S.V

    ReplyDelete
  12. அய்யா நமது ராணுவ வீரர்கள் எதிரிகளால் கொல்லப்பட்டது குறித்து மனது மிகவும் வருந்துகிறது.இம்மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் நமது ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அகத்தியரை பிரார்த்தித்து கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  13. வந்திருந்த பெரியவர்கள் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் சம்பந்தர் போன்றவர்களாக இருக்குமோ.

    ReplyDelete
  14. நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
    கோலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன
    சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார் சிவயோகிகளே
    காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.

    ReplyDelete
  15. மதிப்பிற்குறிய திரு. அகினிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
    மதிப்பிற்குறிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

    நன்றி திரு.செந்தில்நாதன்

    http://kaumaram.com/alangkaram/alangkaram_ss026_u.html

    திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 26 நீலச் சிகண்டியில்

    பாடல் 26 ... நீலச் சிகண்டியில்

    நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
    கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
    சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
    காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.

    ......... சொற்பிரிவு .........

    நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்தநேரத்திலும்
    கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன
    சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே
    காலத்தை வென்று இருப்பார்; மரிப்பார் வெறும் கர்மிகளே.

    ......... பதவுரை .........

    நீலநிற மயில்வாகனத்தின் மீது ஏறுகின்ற திருமுருகப்பெருமான் எந்த
    நேரத்திலும் அழகுமிக்க வள்ளியம்மையாருடன் அருள்புரிவதற்கு வருவார்.
    [மேலும்] அடியேனின் குருமூர்த்தியாகிய எம்பெருமான் உபதேசித்த
    மெய்ப்பொருளின் தன்மையை மெல்ல தேர்ந்து [தெளிந்து]
    புரிந்துகொள்பவர்களாகிய சிவயோகிகள் மாத்திரமே காலதத்துவத்தை
    வென்று அதனைக் கடந்து காலாதீதராக இருப்பார்கள். வெறும்
    கர்மயோகிகளோ காலத்துக்கு உட்பட்டு மாய்ந்துபோவர்.


    நன்றி,
    இரா.சாமிராஜன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு.ஸ்வாமி அவர்களே!
      ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

      Delete
    2. எல்லாம் குருவின் அருள்.

      நன்றி,
      இரா.சாமிராஜன்

      Delete
  16. ஓம் அகத்தியர் அய்யா திருவடிகள் போற்றி போற்றி போற்றி

    ReplyDelete
  17. ஓம் அகத்தியர் அப்பா போற்றி! ஓம் தாமிரபரணி அம்மாபோற்றி! ஐயா வந்த பெரியர்வர்கள் அகத்தியர் பெருமானும், போகர் பெருமானும் என்று எனக்கு தோன்றுகிறது. தங்கள் கருணைக்கு நன்றி!

    ReplyDelete
  18. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  19. Dear Sir, Very very Nice experience Kallil Kattu endbathal Manthan na ka irruka vendum enbathu adiyanudaya thalmayana Yukam. Vanthathu Yar endru Sonal innum nandraka Irrukum. Thadaikal Varatha Kodiakum Oru Theiva Sitham Vendum Ungalaku Nam Guruvin arulal Athu Kedaithu irrukirathu. Nam Theiva Kariyangalil Idu padum pothu ethaiyum Unarvu poorvamaka anuka vendum endru purikira thu ungal anubavathil nan purinthu kolvathu than munaipodu nam kariyathai mattum perithaka ennamal yar perukirarkal endru purinthu kola vendum endru purikirathu. On Agatheesaya Namaka.

    ReplyDelete
  20. Hi agnilingam and karthikeyan ayya. Can i know which agathiyar temple you both are going.which place.and agathiyar is telling via naadi or through your meditation.when you pray in temple.

    ReplyDelete
  21. ஓம் அகத்தீசாய நம! அற்பதம் ஐயா! உங்கள் அனுபவம் இன்னொருவருக்கு பாடம்.

    ReplyDelete