"இனி சொல்வதை கவனமாக குறித்துக்கொள். எந்த ஒரு விஷயத்தையும் "மனம் உவந்து" பிறருக்கு கொடுத்தால்தான் அது அவர்களை சென்று சேர்ந்தாலும், பலனளிக்கும். ஏனோ, தானோவென்று, கொடுப்பது எதுவும், அது சென்று சேர வேண்டிய நிலையை அடைவதில்லை. இறைவனிடம் பிரார்த்தனை வைத்தாலும், பல முறை அது நிறைவேறாமல் போகக் காரணமே, "சொல்லிட்டாங்க! அதுனால செய்கிறேன். நிறைவேற்றிக்கொடு" என்கிற மனப்பான்மையுடன் 99% மனிதர்களும் நினைத்துக் கொள்வதுதான். மனிதனை சொல்லிக் குற்றமில்லை. அவனோ கலியின் பாதிப்பில் இருப்பவன், இவ்வுலக பௌதீக விஷயங்களை பார்த்து, நம்பி, அதன் வழியே நடந்து வந்தவன். அதனால் முழு மனதுடன், நம்பிக்கையுடன் எதையும் செய்வதில்லை. உலக பௌதீக விஷயங்களில் உடன் பலன் கிடைக்கும் என்று உணர்ந்தால், எத்தனை வேகமாக, நம்பிக்கையுடன் செய்கிறானோ, அந்த நம்பிக்கையுடன் இனி கூறுபவற்றை செய்து பார்க்கட்டும். நிச்சயம் பலனளிக்கும்."
"நீ செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தால் என்ன செய்வாய்?"
"கோவில் உள் சென்று இறைவனை, தரிசித்து, பிரார்த்தனை செய்து செல்வேன்" என்றேன் நான்.
"நீ வழியே செல்லும் பொழுது, இறங்கி, உள்சென்று இறைவனை தரிசிக்க நேரமில்லை, என வைத்துக்கொள். அப்பொழுது, உன் பிரார்த்தனை சூழ்நிலை எப்படி இருக்கும்? என்றார்.
இவர் எது வழியோ வந்து என்னை கவ்வ வருகிறார், என புரிந்தது.
"அப்படிப்பட்ட நிலையில், கோவிலின் வெளியே நின்று, மனதால் இறைவன் பாதத்தை, உருவத்தை தியானித்து "எல்லா ஜீவன்களையும் காப்பாற்றி, அருள் புரியுங்கள் இறைவனே" என வேண்டிக்கொள்வேன்" என்றேன்.
"பரவாயில்லை! நல்ல வேண்டுதல்தான். இருப்பினும், அப்பொழுது, அங்கு நீ பிரார்த்திக்கும் அந்த நிமித்தத்தில், என்ன நடக்கிறது என பார்த்ததுண்டா? இல்லை, கவனித்ததுண்டா?" என்றார்.
"ஒரு சிலவேளை, அப்படி பிரார்த்திக்கும் பொழுது, என்னைப் போல் ஒரு மனித உருவம், இறைவன் காலடியில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதை பார்த்திருக்கிறேன். அந்த நேரங்களில், இது என் மனம் உள்ளுக்குள்ளே அப்படி ஒரு உருவத்தை தோற்றுவிக்கிறது. உண்மையாகவே அப்படியெல்லாம் கிடையாது" என எண்ணிக்கொண்டு சென்றுவிடுவேன்.
சற்று நேரம் என் கண்களையே உற்று நோக்கிய படி இருந்தார், அந்த பெரியவர்.
பின்னர், அந்த உற்று நோக்கலை கலைத்துவிட்டு, மற்ற பெரியவர்களை பார்த்தபின், சிரித்தபடியே "நீ பார்த்தாயே அந்த உருவம்தான் எத்தனையோ சூக்ஷ்ம உடல்களில் ஒரு உடல். இங்கு மனதுள் நினைப்பதை அங்கே பதிவு செய்து கொள்ள காத்திருக்கும் உடல். நீ எங்கு சென்றாலும், உன்னை தொடரும் உடல்.
அங்கே பாதத்தில் கிடக்கும் அந்த உடலை கண்டவுடனேயே, "இறைவா! இந்த சூக்ஷ்ம உடலை நீ எடுத்துக்கொண்டு விடு! எனக்கு வேண்டாம்! மறுபிறப்பை அறுத்துவிடு" என "ஆத்மார்த்தமாக" தாரைவார்த்துக் கொடுக்கலாமே. உன் அந்த நேரத்திற்கு, இறைவன் மனம் கனிந்தால், அந்த சூக்ஷும உடலுக்கு அளிக்கப்பட கர்மாவை, இறைவன் நினைத்தால் கரைத்து விடலாம், அல்லது வேறு சூக்ஷும உடலுக்கு மாற்றிவிடலாம். எல்லா கர்மாவையும் இறைவன் கரைத்து விடுவான் என்று கூறவில்லை. ஒரு சிலவற்றை இந்த ஜென்மாவிலேயே அனுபவித்துவிடு என விதிக்கவும் செய்யலாம். இதையே இன்னொரு விதமாகவும், வேகமாகவும் உடல்களை கரைத்து விட ஒரு வழியும் கூட உண்டு." என்று கூறி நிறுத்தினார்.
சற்று நேர இடைவெளிக்கு பின் "ஒரு கோவிலில், இறைவன் பாதத்தில் விழுந்து சூக்ஷும உடல் சரணடைவதை பார்க்கும் பொழுது, "நீங்கள் எவ்வுரு கொண்டு, எங்கெல்லாம் கோவில்களில் அமர்ந்திருக்கிறீர்களோ, அங்கெல்லாம் அந்த சூக்ஷும உடல்கள் இதே நேரத்தில் உங்களை வணங்குகிறது. அதன் வழி அடியேனின் நமஸ்காரத்தை தெரிவிக்கிறேன். அத்தனை உடல்களையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு விடுங்கள். மறுபிறப்பு வேண்டாம்" என வேண்டி பல உடல்களை இறைவனிடம் திருப்பி ஒப்படைத்து விடலாமே! இல்லையா?" என்றார்.
"அட! ஆமாம்! மிக எளிய யோசனை ஆயிற்றே! இது மட்டும் உண்மையாயின், மனிதனுக்கு வாழ்க்கை பயணத்தை கடப்பது மிக எளிதாயிற்றே. இத்தனை சண்டை, சச்சரவு, வாழ்வதற்கு போட்டி என, நிறைவேறாத ஆசைகளை, வாசனைகளாக சேர்த்து வைத்து துன்பப்பட வேண்டாமே!" என்றேன்.
"மனிதனுடைய சந்தேக எண்ணம், நம்பிக்கையின்மை, இதெல்லாம் சாத்தியமா! என்கிற அவநம்பிக்கை, வெளியுலக விஷயங்களில் உள்ள ஆர்வம், ஆசை போன்றவைதான் அவனுக்கு தடையாக உள்ளது. இந்த மாதிரி எளிய விஷயங்களை கூட தனிப்பட்ட முறையில் நடை முறைப்படுத்தி பார்க்காமல் இருக்கும் மனநிலை தான் காரணம்".
"சரி! யாரோ ஒருவர் இதை நம்பி நடை முறைப்படுத்தித்தான் பார்த்து விடுவோமே என்று இறங்கினால், அவரை அந்த இறையே சோதிக்க நினைக்கும் மிகப் பெரிய ஆபத்தும் இதில் உண்டு" என்று நிறுத்தினார்.
"இறை சோதனை மிகுந்த ஆபத்தாக", என்றால் என்ன அர்த்தம்? நடந்து செல்ல வழியையும் காட்டிவிட்டு, ஆபத்து என்று கூறி பயமுறுத்துகிறீர்களே! அப்புறம் எப்படி ஒரு சாதாரண மனிதன் இந்த வழியில் எல்லாம் இறங்குவான்? பிறகு மனிதன் சரியில்லை என்று எப்படி நீங்கள் குறை கூறலாம்? என்று சற்று காட்டத்துடன் கேள்வியை எழுப்பினேன்.
"எல்லாம், எளிதாக, இலவசமாக கிடைக்க வேண்டும் என்று ஒரு சாதாரண மனிதன் நினைக்கலாம். சித்த மார்கத்தில் வருபவர்கள், அந்த நிலையை அடைந்தவர்கள், எப்படிப்பட்ட சோதனைகளை கடந்து வந்தவர்கள் என உனக்கு புரியாது. அவர்கள் அனைவரையும், இறைவன் சோதித்து, திசை திருப்பி, புடம்போட்டு தங்கமாக மாற்றியுள்ளான்.
"நீரில் மூழ்கினும், நஞ்சு என்னை தீண்டினும், நாமம் உரைப்பது "நமச்சிவாயமே" என எதற்கும் கலங்காதிருந்தவருக்குத்தான் சிவபதம் கொடுத்துள்ளான் இறைவன். அந்த சோதனையில் ஒரு மிகச் சிறு அளவு சோதனை வைத்தாலும், இங்கிருக்கும் ஒருவரும், அந்த தேர்வை எழுத மாட்டீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இந்த விஷயங்களில், கேள்வி கேட்பதற்கே அருகதையற்றவர்கள்", என மிக நிதானமாக, தெளிவாக கூறினார்.
அமைதியாக இருந்த என் மனதில் "சரிதான்! போச்சுடா! தவறாக ஏதாவது பேசிவிட்டோமோ?" என்று தோன்றியது.
இதை அறிந்த ஒருவர், "நண்பர்களுக்குள் விவாதம் வரலாம்! தவறில்லை! முறை தவறி விடக்கூடாது, உரையாடலை தொடருவோம்" என சூழ்நிலையை சுமுகப்படுத்தி, மேலும் "அந்த இறை சோதனை ஆபத்தையும்" விளக்கிவிடுங்கள், என்று வழி மாற்றினார்.
சித்தன் அருள்................... தொடரும்!
Ayya thangalin arokiyam ipoluthu Nalama ..Mikka nandri intha pathivirku anaal purinthu kolla mudiyavillai athavathu iraivanin kaaladiyil namaskaram Seivathu pol naam manakkannal Kaanum Udala ???thayai koornthu vilakkam thevai ...om Sri madha lobamudra sametha agatheesaya namah ....
ReplyDeleteகோவில் வாசலில் நின்று, இறையின் பாதத்தை கண்டு, பின்னர் முக தரிசனத்தை பெற்று, கண் மூடி பிரார்த்தனையை கொடுக்கையில், பல முறை மனக்கண்ணில் ஓர் உருவத்தைக்கண்டு திகைத்து, கண் திறந்து பார்த்தாலும், அவ்வுருவம் அஷ்டாங்க நமஸ்காரம் செய்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். ஏதேனும் பெரியவர்கள் அதே நேரத்தில், அரூப/சற்று தெளிந்த ரூபமாக இறைவனை வணங்குகிறார்கள் என பின்னர் நினைத்து சென்றதுண்டு. முதலில், இதை என் மனமே உருவாக்கி காட்டுகிறது என நினைப்பேன். நாள் செல்லச் செல்ல, இது தொடருவதை கண்டு, என்னுள் கேள்வி மேல் கேள்வி. அந்த கலந்துரையாடலில் தான் என் கேள்விகளுக்கு தெளிவு பிறந்தது. பிரார்த்திக்கும் பொழுது என்ன சூழ்நிலை கண்டாய் என்று அவர் கேட்டவுடன், அடியேன் கண்டதை கூற முதலில் மனம் வரவில்லை. இந்த பதில் தானாகவே வந்தது. என் பதிலை கூட அவர் அச்ச்சரியமின்றி ஏற்றுக் கொண்டது, அவர் அனைத்தையும் தெளிவாக காண்கிறார், நாம் தான் உண்மையாக உரைக்க வேண்டும் என தோன்றியது. அது முதல், 100% கண்டதை உரைத்தேன். அதனால் கலந்துரையாடல் நீண்டது. இல்லையெனில் நின்று போயிருக்கும். நமக்கும் தெளிவு கிடைத்திருக்காது. ஒரு விஷயம் புரிந்தது, தெளிவாக. பெரியவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டும். எதை மறைத்தாலும் கண்டு பிடித்து, கேள்வி கேட்டு, உண்மையை வரவழைத்து விடுவார்கள்.
DeleteMikka nandri ayya ....
Deleteஓம் அகதீசாய நமஹ
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅங்கே பாதத்தில் கிடக்கும் அந்த உடலை கண்டவுடனேயே, "இறைவா! இந்த சூக்ஷ்ம உடலை நீ எடுத்துக்கொண்டு விடு! எனக்கு வேண்டாம்! மறுபிறப்பை அறுத்துவிடு" என "ஆத்மார்த்தமாக" தாரைவார்த்துக் கொடுக்கலாமே. உன் அந்த நேரத்திற்கு, இறைவன் மனம் கனிந்தால், அந்த சூக்ஷும உடலுக்கு அளிக்கப்பட கர்மாவை, இறைவன் நினைத்தால் கரைத்து விடலாம், அல்லது வேறு சூக்ஷும உடலுக்கு மாற்றிவிடலாம். எல்லா கர்மாவையும் இறைவன் கரைத்து விடுவான் என்று கூறவில்லை. ஒரு சிலவற்றை இந்த ஜென்மாவிலேயே அனுபவித்துவிடு என விதிக்கவும் செய்யலாம். இதையே இன்னொரு விதமாகவும், வேகமாகவும் உடல்களை கரைத்து விட ஒரு வழியும் கூட உண்டு." என்று கூறி நிறுத்தினார்.
ReplyDeleteUnable to understand the above lines, Please somebody explain the above.
ஐயத்தை தீர்க்க ஒரு எளியவழி, ஐயனை சரணடைவது, கேள்வியை கேட்டுவிட்டு, "புரியவில்லை, சற்று தெளிவு படுத்துங்களேன்" என வேண்டி த்யானத்தில் அமருங்கள். த்யானம் வழியாகவோ, கண் முன் நிகழ்ச்சிகளை நடத்தி புரியவைப்பார். உங்கள் பக்கத்தில் நீங்கள் செய்ய வேண்டியது, எப்போதும் விழிப்புடன் காத்திருப்பது.
Deleteஒருமுறை அகத்தியர் கோவில் சென்று, "அய்யனே, ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை கூற அனுமதிக்கக்கூடாதா? ஏதேனும் பதிவு செய்ய தரக்கூடாதா" என்றவுடன் "அதுதான் சித்த மார்க்கத்தின் நிறைய ரகசியங்கள் உங்கள் கலந்துரையாடல் வழி வெளி வந்துவிட்டதே. இனி எப்படி அது ரகசியமாகும். அதையே எழுது" என்று உத்தரவிட்டதால் இந்த தொடர். நான் சற்றும் எதிர்பார்க்காதது. கலந்துரையாடல் நடந்து பல நாட்களாக என் நெருங்கிய நண்பர்களிடமிருந்து கூட மறைத்து வைத்திருந்ததை, அவரே வெளிக்கொண்டு வந்துவிட்டார். அய்யன் வழி எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருக்கும். நாம் தான் அதை சரியாக புரிந்து கொண்டு நடக்க வேண்டும். ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
First you have to start to see your sookshma body. Then only you will be able to realise this. The concept is beyond our normal way of life.
ReplyDeleteBelieve the concept. Then you can start seeing it, by continuous practice.
ReplyDeleteஐயா
ReplyDeleteபல கடினமான பதிவுகள் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது... ஆனால் இந்த புதிய பதிவுகள் உண்மையான புரிதல் கிடைத்ததா என்ற ஐயம் வருவதை தவிர்க்க முடியவில்லை...
ஐயத்தை தீர்க்க ஒரு எளியவழி, ஐயனை சரணடைவது, கேள்வியை கேட்டுவிட்டு, "புரியவில்லை, சற்று தெளிவு படுத்துங்களேன்" என வேண்டி த்யானத்தில் அமருங்கள். த்யானம் வழியாகவோ, கண் முன் நிகழ்ச்சிகளை நடத்தி புரியவைப்பார். உங்கள் பக்கத்தில் நீங்கள் செய்ய வேண்டியது, எப்போதும் விழிப்புடன் காத்திருப்பது.
Deleteஒருமுறை அகத்தியர் கோவில் சென்று, "அய்யனே, ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை கூற அனுமதிக்கக்கூடாதா? ஏதேனும் பதிவு செய்ய தரக்கூடாதா" என்றவுடன் "அதுதான் சித்த மார்க்கத்தின் நிறைய ரகசியங்கள் உங்கள் கலந்துரையாடல் வழி வெளி வந்துவிட்டதே. இனி எப்படி அது ரகசியமாகும். அதையே எழுது" என்று உத்தரவிட்டதால் இந்த தொடர். நான் சற்றும் எதிர்பார்க்காதது. கலந்துரையாடல் நடந்து பல நாட்களாக என் நெருங்கிய நண்பர்களிடமிருந்து கூட மறைத்து வைத்திருந்ததை, அவரே வெளிக்கொண்டு வந்துவிட்டார். அய்யன் வழி எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருக்கும். நாம் தான் அதை சரியாக புரிந்து கொண்டு நடக்க வேண்டும். ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
ஐயா தங்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது ? விரைவில் குணம் திரும்பி பெரியவரின் அருளை நமக்கு உரைக்க வேண்டும் ஓம் சாய்ராம் ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteBy his grace, am well now!
Deleteமிக அற்புதம் ஐயா
ReplyDeleteஐயா தங்களின் பதிவு மற்றும் அகத்தியர் அய்யன் ஆசிகள் மிகவும் அரியது....
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ...
ReplyDeleteAarumugam Aarumugam Aarumugam Aarumugam Aarumugam Aarumugam
ReplyDeleteகுரு வாழ்க! குருவே துணை!!
ReplyDeleteOm agatheesaya namaha...
ReplyDeleteDear Sir,
ReplyDeleteHow are you? How is Mr. Karthikeyan?
Regards
Admin, GnanaBoomi.com
வணக்கம்!
Deleteஇருவரும் நலமாக உள்ளோம். இறைவனும் அகத்தியப் பெருமானும்தான் வழி நடத்த வேண்டும்!
அக்னிலிங்கம்!