​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 19 October 2017

சித்தன் அருள் - 729 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 10


​அடுத்த வியாழக்கிழமைக்காக காத்திருந்து, மூத்தோனை வணங்கி, அனுமனை வணங்கி தினமும் பாராயணம் செய்யும் முறையை தொடங்கினேன். அதுவும் அகத்தியர் அருளால், கூடவே வளர்ந்து வந்தது. எதை நினைத்து செயலில் இறங்கினாலும் ஒரு உத்வேகம் இருப்பதையும், செயல்கள் அனைத்தும் அகத்தியர் அருளால் வெற்றியடைவதையும் காண முடிந்தது. யாரேனும் ஒருவர் வழி, இவ்வுலகுக்கு, அனைத்து உயிர்களுக்கும் ஏதேனும் ஒரு நல்லது நடக்க, இறை அருள தயாராக இருப்பின், அதை வேண்டிக்கொள்ளும் ஒரு பாக்கியம் மட்டும் எனக்கு கிடைத்தால் போதும் என்கிற மனநிலை வந்தது. ​இப்படிப்பட்ட மனநிலைதான் இறைவன் அருள் என்று உணரவும் செய்தேன்.

சந்தோசம் என்பது இயல்பாக வரக்கூடியது. ஆனால் அதிக நேரம், அதிக நாட்கள் நிலையாக நிற்காதது. இதை பகவான் நமக்கு ஒரு சோதனைக் கருவியாக வைத்திருக்கிறான் என்பதை உணர நாளாகும்.  கிடைத்தற்கரிய சந்தோஷம் ஒருவனை என்ன, என்ன செய்ய வைக்கும், எப்படி தன்னிலையை மறக்க வைக்கும் என்பது அவனுக்கும் தெரியாது.  ஆனால் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டிவிடும். இன்னும் சொல்லப்போனால், சாதாரண நிலையில் அல்லது துக்கப்படும் பொழுது உள்ள நிலையில் செய்கின்ற தவறைவிட, மிகவும் சந்தோஷமாக இருக்கும் பொழுது செய்கின்ற தவறு, மிகப் பெரிய தவறாகிவிடும். எனவே, எதையும் சமமாக நினைத்து வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என்ற தத்துவத்தைச, சுந்தரகாண்டத்தின் 62, 63ம் சர்கத்தில் காணலாம்.

இந்த 62, 63ம் சர்கத்தை படிப்பவர்கள் அனைவருக்கும் தோல்வி என்பது நெருங்காது, பயம் என்பது இருக்காது, தடங்கல்கள் விலகும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எட்டாம் வீட்டில் கேது, ராகு, குரு இருப்பவர்களும், சனிபகவானால் கஷ்டப்படும் அஷ்டம சனி நடப்பவர்களும், அஷ்டம ராகு நடந்து கொண்டிருப்பவர்களும், கஷ்டம் நீங்கி வாழ்வார்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பயந்து கொண்டிருப்பவர்களுக்கு எம பயம் விலகும். இருதய அறுவை சிகிர்ச்சை, மூளை அறுவை சிகிர்ச்சை வெற்றி அடையும். திருடர்கள், நெருப்பு இயற்க்கை சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களும், துன்பத்திலிருந்து விடுதலையை நிச்சயம் அடைவார்கள்.

களத்திர ஸ்தானத்தில் ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் ஆகிய கிரகங்கள் இருந்து, அவரவர்கள் மகா புக்தியோ, திசையோ நடப்பவர்கள் 64ஆம் சர்கம் பாராயணம் செய்தால் அத்தனை தோஷத்தையும் விளக்கி, தாம்பத்திய வாழ்க்கையை மலரச் செய்யும். திருமண வாழ்க்கையில் சந்தோசம் இல்லாதவர்கள், பிரிந்து விடவேண்டும் என்று வருந்தி, தினமும் அல்லற்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தொழில் நிமித்தம் காரணமாகக் கணவனும், மனைவியும் தனித் தனியாக பிரிந்திருப்பவர்கள், காதல் தோல்வி ஏற்படுமோ என்று அனுதினமும் பயந்து கொண்டிருப்பவர்கள், அத்தனை பேரும் இந்த சர்கத்தை தினம் மூன்று தடவை படித்து வந்தால் போதும், நடக்காத திருமணம் நடக்கும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் விலகும், இல்வாழ்க்கையில் பரிபூரண ஆனந்தத்தை அடைவார்கள்.

சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கவலைப் படுபவர்கள், ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச்சனி, நடந்து கொண்டிருக்கும் ஜாதகத்திற்கு சொந்தக்காரர்கள், சந்திரனோடு கேது இருப்பவர்கள், கேது திசையில் சந்திர புக்தி நடப்பவர்கள், ஒவ்வொரு மாதமும் சந்திராஷ்டமத்தில் அவதிப்படுபவர்கள், கணவன், மனைவியை பிரிந்திருப்பவர்கள், விவாகரத்து செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள், தூர தேசத்திலிருந்து நல்ல தகவல் வரவில்லை என்று கவலைப்படுபவர்கள், அன்யோன்யமாக பழகத்தடை இருப்பவர்கள், களத்திர தோஷம் உடையவர்கள், செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், இந்த அறுபத்திநான்காவது சர்கத்தையும் முப்பத்தாறாவது சர்கத்தையும் தொடர்ந்து தினம் பாராயணம் செய்து வந்தால், சங்கடங்கள் நீங்கி சௌபாக்கியம் பெறுவார்கள்.

வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்தவர்கள், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, விரயச்சனி, ஜென்மச்சனி, பாதச்சனியினால் அவதிப்படுபவர்கள், சனி மகாதிசையில் சுயபுக்தி, சூரிய புக்தி, கேது புக்தி, சந்திர புக்தி, ராகு புக்தி நடப்பவர்கள், சந்திர திசையில் கேது புக்தி, கேது அந்தரம், ராகு புக்தி, ராகு அந்தரம், சனி புக்தி நடப்பவர்கள், செவ்வாயோடு கேது சம்பந்தப்பட்டு ஆறாம் வீட்டில் இருக்கும் ஜாதகவாசிகள், களத்திர செவ்வாய் தோஷத்தை உடையவர்கள் அனைவரும் இந்த அறுபத்தாறு, அறுபத்தேழாம் சர்க்கத்தை தினம் மூன்று தடவை காலையில் பாராயணம் செய்து வந்தால் அவர்களது கஷ்டம் நீங்கும், தலைவிதியே அற்புதமாக மாறும், என்று கூறி அன்று அகத்திய பெருமான் விடை பெற்றார்.

அடியேனும், அமைதியாக ராமர் பாதத்தில் நாடியை வைத்துவிட்டு, த்யானத்தில் அமர்ந்தேன்.

சித்தன் அருள்.............. தொடரும்! 

26 comments:

 1. sri ramajayam,jai hanuman, sri Lobamudrasamedha Agatheesaya namah....

  ReplyDelete
 2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete
 3. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி
  ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி
  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி

  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

  நன்றிகள் பல ஐயா

  ReplyDelete
 4. ருத்ராட்சம் மற்றும் சந்தன மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும் ? கோவிலுக்கு தேவைப்படுகிறது.

  ReplyDelete
 5. ருத்ராட்சம் மற்றும் சந்தன மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும் ? கோவிலுக்கு தேவைப்படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. Check at Forest Department or any Nursury who sells plants.

   Delete
 6. Jai Shri Ram, Thanks a lot sir, Skandha Sasti had started, can you post some arul of Oothiappar :😊

  ReplyDelete
 7. ஐயா எந்த கருதும் என்னுடையது வரவில்லை ஏன் என்று தெரியவில்லை ஓம் அகத்தீசாய நமஹ ஓம் lobha முத்திரை தாயே துணை!

  ReplyDelete
  Replies
  1. Now it has come. If you have submitted correctly, it will come. No comment is pending for approval, nor rejected.

   Delete
 8. மேற்கூறிய சர்க்கங்கள் படிப்பதற்கு ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்தால் உதவியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சுகம் தரும் சுந்தரகாண்டம் - ஆசிரியர் ஸ்ரீராமஸ்வாமி - இது நம்மிடம் இருந்தாலே எந்த கெடுதலும் யாரையும் அண்டாது. மிகச் சிறந்த படைப்பு. ஆனால் இதில் ஸ்லோகங்கள் என்பது முழுவதுமாக இல்லை. இந்த புத்தகத்தின் மகத்துவத்தை பற்றி பின்னர் உரைக்கிறேன். இது கிடைக்குமிடம் -

   அருள் மிகு அம்மன் பதிப்பகம்
   16/116, T.P.கோயில் தெரு,
   திருமலா ப்ளாட்ஸ்,
   (ஸ்ரீ ராகவேந்திரா மடம் எதிரில்)
   திருவல்லிக்கேணி, சென்னை - 600 005
   தொலைபேசி: 42663546, 42663545
   ஈமெயில்:arulmiguammanpathippagam@yahoo.com

   மேற்சொன்ன புத்தகத்தில் சொல்லப்பட்ட "ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் - ஸுந்தரகாண்டம் (தமிழ் மூலம்) அம்மன் பதிப்பகத்தில் கிடைக்கிறது, கிரி டிரேடிங் கம்பெனியிலும் கிடைக்கிறது. சமிஸ்க்ரித ஸ்லோகங்கள் தமிழில் பதிவு செய்யப்பட்டிருக்கும். சமிஸ்க்ரிதம் தெரியாதவர்களுக்கு இந்த தமிழ் மூலம் ஒரு மிக வரப்பிரசாதம்.

   Delete
  2. மிக்க நன்றி!

   Delete
 9. மதிப்பிற்குரிய திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

  இன்று பதிவு வர தாமதமாகும்/அல்லது இருக்காது என்று நினைத்தேன். காரணம். நேற்று தங்களை முருக பெருமான் அதிகமாக வேலை வாங்கி இருப்பார்.தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  தங்களின் பனி மென்மேலும் சிறக்க குருவின் பாத கமலங்களை வேண்டுகிறேன்.

  மிக்க நன்றி,
  இரா.சாமிராஜன்.

  ReplyDelete
  Replies
  1. Yes you are right sir

   ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி

   ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி

   ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி

   ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

   Delete
 10. "இந்த புத்தகத்தின் மகத்துவத்தை பற்றி பின்னர் உரைக்கிறேன்". We are waiting for this..Om Agaththeeswaraya Namaha

  ReplyDelete
 11. ஐயா கல்வியில் நன்கு படிக்க , எந்த சர்க்கம் படிக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம், ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி

   சரஸ்வதி மந்திரம் தினமும் சொன்னால் நல்ல ஞானம் அறிவாற்றல் பெறலாம்.

   ஓம் ஹ்ரீம் க்லௌம் சரஸ்பதிய நம: ஹ்ரீம் ஓம்

   Delete
 12. Sir, any procedure to follow before starting to chant the sargams?

  ReplyDelete
 13. Sir, any procedure to follow before starting to chant the sargams?

  ReplyDelete
 14. ​மனதையும், உடலையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இன்ன விஷயத்துக்காக என்று இறைவனிடம் சங்கல்பம் வைத்துவிட்டு, மனது ஒன்றி பாராயணம் செய்யவேண்டும். தனிமை நல்லது. தடங்கல்கள் எதுவும் வராது. மனதில் எண்ண சலனங்கள் இன்றி பார்த்துக்கொள்ளுங்கள். இருப்பினும் கணபதியையும், அனுமனையும் வேண்டிவிட்டு பின் தொடங்குங்கள். இறைவன், சித்தர்கள் நிச்சயம் அருள்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க ஐயா!
   ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி
   ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி
   ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி
   ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

   Delete
 15. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 16. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete

 17. ஐயா
  மூத்தோன் என்றால் ,நால்வரில் மூத்தோனான இராமன் என்று எடுத்துக்கொள்ளலாமா?

  ReplyDelete
 18. MOOTHTHON MEANS "GANAPATHY" ACCORDING TO AGASTHIYAR

  ReplyDelete