அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
பாவ வினைகள் மேற்கொண்டு பாவங்கள் செய்யத் தூண்டுகிறதே? என்றால், அதற்குதான் இறை தரிசனமும், பிரார்த்தனைகளும், சிறு அளவிலாவது தர்மத்தையும் செய்யப் பழக வேண்டும். அஃதோடு மட்டுமல்லாமல் பாவங்கள் மேலும் பாவங்களை செய்யத் தூண்டினாலும் கூட, இது போன்ற நல்ல விஷயங்களை சத்சங்கமாகக் கூடிப் பேசி, பேசி "இது பாவம், இதை நோக்கி செல்லாதே, இது புண்ணியம், இதை நோக்கி செல்" என்று அறிவிற்கு கூறிக்கொண்டே இருக்க வேண்டும். மனிதனை பொருத்தவரை மிக,மிக பலவீனமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். பல மனிதர்கள் ஒன்று சேர்ந்து எதை செய்கிறார்களோ, எதைக் கூறுகிறார்களோ அதுவே உண்மை, அதுவே நன்மை, என்று ஒரு மனிதன் பின்பற்றத் துவங்குகிறான். ஒரு மனிதன் அந்த நல்ல தன்மையை அடைந்து விட்டால் ஒருவன் செய்கின்ற நல்லதைப் பார்த்து தானும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவான். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அவ்வாறு இருப்பதில்லை. "அவன் குறுக்கு வழியில் தனத்தை சேர்க்கிறான். ஏன் நான் சேர்க்கக்கூடாது? அவன் இதுவரை மாட்டிக்கொள்ளவில்லை. நானும் மாட்டிக்கொள்ளக் கூடாது. அவன் குறுகிய காலத்தில் இத்தனை இல்லம் வாங்கிவிட்டான். நானும் வாங்க வேண்டும்" என்றுதான் ஒப்பிட்டுப் பார்க்கிறானே தவிர, இந்த உலகிலே உள்ள எதுவும் தன் ஆத்மாவிற்கு சொந்தமில்லை. ஆத்மாவை உயர்த்த வராது என்பதையெல்லாம் புரிந்து கொள்ளவோ, புரிந்து கொண்டாலும் அதனை ஏற்றுக்கொண்டு பின்பற்றவோ மனிதர்களுக்கு அத்தனை பொறுமை இல்லை. அத்தனை நல்ல எண்ணங்களும் வளர்வதில்லை. எப்பொழுதுமே தன் வீடு, தன் பெண்டு, தன் மக்கள் என்று சுயநலத்தோடு வாழ்கிறான். பொது நல எண்ணமும், நோக்கமும் வளர, வளர, தன்னுடைய உழைப்பு தனக்கு மட்டும்தான் சொந்தமாக வேண்டும் என்ற குறுகிய சுபாவம் சென்று, "ஏதோ விதிவசத்தால் பலருக்கு இங்கே உழைக்க வாய்ப்பில்லை. உழைக்க எண்ணினாலும் அந்த உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. தன்னை சுற்றி எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். இறைவனருளால் தான் நாம் நன்றாக இருக்கிறோம். நாம் அரவணைத்துக் கொள்வோம்" என்ற எண்ணம் வந்தால்தான் இறைவனின் கருணை மேலும் பெருகும். பஞ்ச பூதங்களும் சமன் அடையும்.
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDeleteஓம் ஸ்ரீ அகத்தியரே சரணம்
ReplyDelete[ROUGH TRANSLATION] Bad karmas induce a person to indulge in more sins, that’s why it is necessary to cultivate the habit of temple worship, prayers and at least some charity. Though sins induce one to commit more sins, good habits should be discussed in satsang “this is sin, avoid; this is punya, follow” such wisdom should be imparted. The (average) man is leading his life as a feeble weakling. He blindly follows what the majority is saying or doing as true and good. When a man reaches a state of goodness, he sees the good being done by another and wishes to do the same himself. But vast majority are not like this. He compares “another person made money using shortcut, why cant I do the same, he has not been caught so far, I too should escape, in a short period he bought houses, I too should buy”. He does not understand that in this world, nothing belongs to or is owned by atma, possessions don’t elevate atma; even if he understands this, he is too impatient and does not want to accept or follow this. He does not cultivate good thoughts, always living selfishly for himself, his spouse, his children. Cultivate attitude for general welfare of others, get rid of narrow attitude that my work is for the sake of my benefit only. “Due to destiny, so many here are job-less, or even if having job the remuneration is meagre, there are many such around me, thanks to Divine blessings I am in a better position, let me embrace them” only when such thoughts arise, then Divine arul will flow more. The 5 bhutas will stabilise.
ReplyDeleteOm Agatheesaya Namah
Delete