​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 2 January 2017

சித்தன் அருள் - 555 - புத்தாண்டில் பாபநாசம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த வருட முதல் நாளில் பாபநாசத்தில் நீராடி, இறைவனை தரிசித்து (மார்கழி மாதம், பாபநாச நீராடல், இறை தரிசனம், இந்த பூமியில் மறுபிறவியை தவிர்க்கும் என்பார்கள்), அகத்தியருக்கு, கல்யாண தீர்த்தத்தில் அபிஷேகம் செய்கிற பாக்கியத்தை அடியேன் பெற்றுக் கொண்டேன். உண்மையாகவே, சில மாதங்களாக அகத்தியரிடம் வேண்டாத நேரமில்லை. எல்லோருக்கும் அபிஷேகம் பூசை செய்கிற பாக்கியத்தை இறைவன் அருளிய பொழுது, தங்களுக்கு மட்டும் அபிஷேகம் செய்கிற அந்த நொடி இதுவரை கிடைக்கவே இல்லை. அதை இங்கேயே, பாபநாசத்தில் உங்கள் சன்னதியில் அருளக்கூடாதா என்று சில மாதங்களுக்கு முன் விண்ணப்பித்தேன்.

எதற்கும் நேரம், காலம் என்று ஒன்று உண்டு. நீண்ட நாள் காத்திருப்புக்கு பின், இந்த வருடம் முதல் நாளில், ஒரு நண்பருடன் சென்று, கூட்டம் இல்லாத தருணத்தில், அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும், அபிஷேகம், அலங்காரம், ஜபம், நிவேதனம் போன்றவை செய்ய முடிந்தது. நிச்சயமாக அது குருவருள். அடியேனின் வாழ்வில், முதல் முறையாக, அகத்தியப் பெருமானுக்கும் லோபாமுத்திரை தாய்க்கும், என் கரத்தால் அபிஷேகம் செய்கிற பாக்கியம் கிடைத்தது. (ஒரு தகவல் - அங்கே செல்பவர்கள் யார் வேண்டுமானாலும் அபிஷேக பூசை செய்யலாம். செல்லும் பொழுது, பூசைக்கான, தகுந்த ஏற்பாடுடன் செல்வது நல்லது. மாலை 5 மணிக்கு மேல் கல்யாணதீர்த்தம் பகுதிக்குள் யாரையும் விடுவதில்லை.) பூசை மிக எளியதாக இருந்தாலும், மிகுந்த மன நிறைவை தந்தது.

பூசை முடித்து, அவரிடமே செய்த பூசையை ஒப்படைக்கும் பொழுது ஒரு எண்ணம் தோன்றியது. அதையும் விண்ணப்பித்து விட்டேன்.

"அய்யனே! எத்தனையோ அடியவர்கள், எத்தனையோ பிரச்சினைகளுடன் நித்தம், நித்தம் வாழ்க்கையில் போராடி வருகிறார்கள். அவர்கள் அனைவரின் கர்ம வினைகள் தீரவும், மன எண்ணங்கள் ஈடேறவும், இனி வரும் நாட்களில் உங்கள் அருகாமையும், வழி நடத்துதலும் கிடைக்க வேண்டும். உடனேயே அருளுங்கள்."

அங்கு மிகுந்த அமைதி நிலவியது. அகத்தியப் பெருமான் நிச்சயம் அனைவருக்கும் அருளுவார். பொறுமை அவசியம். அங்கே எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே தருகிறேன்.

மேலும், வரும் வழியில், கோடகநல்லூர் சென்று, தாமிரபரணியில் நீராடி, பச்சை வண்ணப் பெருமாளின் தரிசனமும், ஆசிர்வாதமும் பெற்று, ஊர் வந்து சேர்ந்தோம். செல்லும் வழி எங்கும், வலைப்பூவழி தொடர்பு கொள்ள முடியாததால், நேற்றைய தினம் "அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கை" வழங்க முடியவில்லை. இருப்பினும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தயப் பெருமானிடம் உங்கள் அனைவருக்காகவும் விண்ணப்பிக்க முடிந்ததே என்பதில் மிகுந்த மன நிறைவு பெற்றேன்.
 
எல்லோரும் அவர் அருள் பெற்று நிறைவாக வாழவேண்டும்.







ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

15 comments:

  1. Om LOPAMUDRA MATA SAMHET AGATHEESAYA NAMAH
    Om Kamadalu hastay Vidhmahe Kaveri Tirthay Dheemahi Tanno Lopamudra Mata Samhet Agatheesaya Namah

    ReplyDelete
  2. புத்தாண்டில் அனைவரும் ஸ்ரீ அகத்தியபெருமானின் அருள்ஆசிகள்பெற்று வளமுடன் வாழ எம்பெருமானை வேண்டுகிறேன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  3. Ayya thanks for prayed for all us
    Om agathisaya namaha

    ReplyDelete
  4. அனைவருக்கும் அருள் புரிய அகத்திய பெருமானிடம் வேண்டியதற்கு மிக்க நன்றி ஐயா. தங்கள் விண்ணப்பத்திற்கு கூடுதல் பலன் உண்டு.

    சர்வ வல்லமை படைத்த அகத்திய பெருமானே தங்களைச் சரணடைந்த எல்லோரும் துன்பம் நீங்கி நலம் வாழ அருள் புரியுமாறு வேண்டுகிறேன்.

    ஓம் ஸ்ரீ அகத்திய மாமகரிஷி திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  5. How to go to kalyanitheertham from Bangalore

    ReplyDelete
    Replies
    1. from Bangalore you have to come to either Tirunelveli or Ambasamudram. From Tirunelveli you can go to Papanasam through Ambasamudram. From Ambasamudram, Papanasam is just 10 Kms. From Papanasam you have to Go to Kalyana Theertham. Agasthiyar and Lobamudra Idols are at Kalyana theertham.

      Delete
    2. Anna, How far is Kalyana Theertham from Papanasam, Thanks,

      Om Sri Lopamudra Sametha Agatheesaya Namah:

      Delete
    3. Om Agatheesaya Namah

      Please check the below link of Google map, which will help to plan the visit

      https://www.google.co.in/maps/place/Kalyana+Theertham/@8.701618,77.3633355,15z/data=!4m5!3m4!1s0x0:0xf42bb4e12d83d57f!8m2!3d8.701618!4d77.3633355

      Delete
  6. Please tell how to go to kalyanitheertham from bengaluru?

    ReplyDelete
  7. guruve saranam ......om lobamudra samade agatheesaya namah

    ReplyDelete
  8. ஐயா வணக்கம் ,

    பிராணாயாமம் மற்றும் வாசி யோகம் என்பது உண்மையில் இருக்கிறதா ?
    இந்த பதிவை படியுங்கள் http://siththarvaakadam.org/?p=481

    அகத்தியரிடம் கேட்டு சொல்லுங்கள் .

    நன்றி
    செந்தில் குமார்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  9. Om sri lopamuthira sametha agathisaya namaga

    ReplyDelete