​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 14 January 2016

சித்தன் அருள் - 268 - அகத்தியப் பெருமானின் ப்ராஜெக்ட் - பங்குபெற வாருங்கள்!


வணக்கம் அகத்தியப் பெருமானின் அடியவர்களே!

முதலில், அகத்தியர் அடியவர்கள், அவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும், 

"இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"

இனி வரும் நாட்களில் எல்லோரும் "ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானின்" அருள் பெற்று, ஷேமமாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

"பெருமாளும் அடியேனும்" என்கிற தொடருக்கு ஒரு இடைவேளை விடுகிறேன். 

அகத்தியப் பெருமான் ஒரு நுட்பமான "தொடர் வேலையை", சென்னையில் வசிக்கும் "இரு அடியவர்களுக்கு" கொடுத்துள்ளார். அவர்களும் "அகத்தியரின் சித்தன் அருளை" வாசிக்கும் அகத்தியர் அடியவர்கள் யாரேனும் முன் வந்தால் அவர்களையும் சேர்த்துக் கொண்டு செய்யலாமே என்று யோசனை கூறவும், அதை பற்றிய தகவலை இந்த வாரம் உங்களுக்குத் தெரிய வைக்கலாம் என்பதினால் உருவான தொகுப்பு இது.

அந்த வேலை என்பது, மனித குல மேம்பாட்டிற்காக.  இன்று வரை அதர்மம் செய்து, வாழ்ந்து சேர்த்துக் கொண்ட கெட்ட கர்மாக்கள் இந்த "பிரபஞ்சத்தை" விட்டு கரைந்து போகவும், அதில் நாம் அனைவரும், ராமருக்கு அணில் சேது பாலம் கட்ட உதவியது போல், ஒரு சிறு பங்கை செய்து அருள் பெறவும் வழிவகுக்கப் பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தை கண்டு அரண்டு போகாதவர்களே இருந்திருக்க மாட்டார்கள். அதர்மத்தினால் "எதிர்வினைகள்" எகிறிய பொழுது, இயற்கையே இறங்கி வந்து சுத்தம் பண்ண ஒரு முடிவெடுத்தது என்பதே உண்மை. இதுவரை நடந்த இயற்கை சீற்றம் ஒரு "முன்னோட்டம்" மட்டும்தான்.

இந்த தொடர் வேலை என்பது மிக எளிதான ஒன்று. அதைப் பற்றிய தகவலை கீழே தருகிறேன். இறைவன்/அகத்தியரின் உத்தரவு என்பது இதுதான்.

"எங்கும் மந்திர ஜபம் ஒலித்தால் அத்தனை கெட்ட கர்மாவும் கரைக்கப்படும்" என்று செய்தி வர ஒரு நல்ல முயற்சியாக நாம் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில்களில், தினமும் மந்திர ஜபம் ஒலிக்க ஏற்பாடு செய்தால் என்ன? என்ற எண்ணம் வந்தது, அந்த இரு அடியவர்களுக்கும். இத்தனை பெரிய நாட்டில் இருவரால் இதை செய்ய முடியாது என்பதால், அகத்தியர் அடியவர்களின் உதவியை பெற்று, வெகு விரைவாக, அவரவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில், இதை செய்யலாம் என்று தீர்மானித்துள்ளனர். இதற்கு ஆகும் அத்தனை செலவையும் அந்த இரு அகத்தியர் அடியவர்கள் ஏற்றுக் கொள்வதாக தீர்மானித்துள்ளனர். இதில், என்னையும் சேர்த்து, யாருக்கும் பொருள் அல்லது பண உதவிக்கு பங்கு பெற முடியாது என்பதே உண்மை. புரிந்து கொள்ளுங்கள். 

அகத்தியர் அடியவர் என்கிற முறையில் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்கள் பெயர், முழுவிலாசம், செல் எண், கோவில் பெயர், இருக்கும் இடம் இவைகளை கீழே தந்துள்ள மெயிலுக்கு அனுப்பி வைக்கவும். ஒரு 7லிருந்து 10 நாட்களுக்குள் நீங்கள் தெரிவித்த விலாசத்துக்கு ஒரு மந்திரம் அடங்கிய DVD வந்து சேரும். அதை கொண்டு போய் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில் கொடுத்து அவர்களிடம் தினமும், காலை, மாலை இருவேளைகள் ஒலிக்கச் செய்யவும். மிக எளிய வேலை, அவ்வளவு தான்.

இது ஒரு மிகப் பெரிய அகத்தியர் ப்ராஜெக்ட்.  இதில் பங்கு பெறுவது என்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆகவே தீர்மானம் என்பது உங்கள் கையில். உங்கள் பெயர், விலாசம், செல் எண்கள் எந்தக் காரணம் கொண்டும் வெளியிடப் படமாட்டாது, தவறாகவும் உபயோகப் படுத்த மாட்டாது என்பதை உறுதி கூறுகிறேன்.

இந்த ப்ராஜெக்டை, நம் தமிழர் திருநாளாம் "பொங்கல் பண்டிகை" அன்று முதல் தொடங்கலாம் என்பது எண்ணம்.

இதை முதலில் சென்னையில் மட்டும் தான் நடைமுறைப் படுத்துகிறார்கள். மற்ற இடங்களுக்கு பின்னர் விரிவுபடுத்த தீர்மானம் உள்ளது. ஆகவே, சென்னையில் உள்ள அகத்தியர் அடியவர்கள், விருப்பப்பட்டால் இதில் கலந்து கொண்டு அகத்தியப் பெருமானின் அருளை பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

மெயில் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி: agasthiyarproject@gmail.com

வணக்கம்!

24 comments:

 1. ஓம் அகத்திசாயா நம ஓம் சாயி நாதாய நம

  அண்ணா எங்களது பாக்கியம், தங்களுக்கும் கார்த்திகேயன் அண்ணா அவர்களுக்கும் மிக்க நன்றி,
  இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைத்து கொடுத்ததற்கு.

  மெயிலில் தொடர்பு கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. Om agatheesaya namah....Ayya vanakkam migaperum Pakiyam....
   Enathu santhegam veetirku Varum DVD yei print pottu neraiya kovilkaluku kudukalama illai arugil irukum oru koviluku mattum than kudukanuma .....pathilukaka kathirukiren...

   Delete
  2. ஓம் அகத்திசாயா நம ஓம் சாயி நாதாய நம

   அண்ணா Mail Sent, Thanks

   Delete
  3. Yes. You can take any number of copies and give it to nearby temples.

   Delete
 2. We are blessed. Soon I will send mail.

  ReplyDelete
 3. ஓம் அகத்தீசாய நம
  அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் வணக்கம்,
  சில மாதங்களுக்கு முன்பு ஒரு அடியவர் மூலமாக ஒரு சிவ ஸ்தலத்தைப் பற்றி கேள்விப்பட்டதை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

  நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் என்ற ஊருக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடியில் ஈசன் உத்திரபதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். குழந்தை இல்லாத தம்பதிகள் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பரணி பெருவிழாவில் கலந்து கொண்டு அமுது படையல் நிகழ்ச்சியில் வழங்கப்படும் சிறப்பு பிரசாதத்தை உண்பவர்களுக்கு பிள்ளை வரம் கிடைப்பது உறுதி

  அந்த குறிப்பிட்ட நாள் வருகிற மே மாதம் 6ம் தேதி வருகிறது
  மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட லிங்க்-ஐ பார்க்கவும்
  http://www.dinamani.com/latest_news/2014/04/29/திருச்செங்காட்டாங்குடி-உத/article2195755.ece

  ReplyDelete
 4. அற்புதம்! மிக்க நன்றி!

  ReplyDelete
 5. இம்மந்திரங்கள் வீட்டில் கேட்கலாமா? கேட்கலாம் எனில் mp3 formatல் அளித்தால் அனைவருக்கும் அகத்தியரின் அருள் கிடைக்கும்,

  ReplyDelete
  Replies
  1. வீட்டில் கேட்கலாம். mp 3 இல் தான் தயாரிக்கப்படுள்ளது.

   Delete
 6. இம்மந்திரங்கள் வீட்டில் கேட்கலாமா? கேட்கலாம் எனில் pls send one C.D.
  selvi

  ReplyDelete
  Replies
  1. வீட்டில் கேட்கலாம். ஆனால் முதலில் பொதுநலத்துக்காக அவர் உத்தரவு படி கோவில்களில் கொடுத்துவிட்டு பின்னர் அவரவர் வீட்டுக்கு உபயோகப் படுத்திக்கொள்ள பின்னர் கேளுங்கள். எல்லோரும் இந்த அகத்தியர் ப்ரஜெக்டில் பங்கு கொள்ளுங்கள்.

   Delete
 7. Enakum intha santhegam undu thelivu paduthungal... veetil kekalama.

  ReplyDelete
  Replies
  1. வீட்டில் கேட்கலாம். ஆனால் முதலில் பொதுநலத்துக்காக அவர் உத்தரவு படி கோவில்களில் கொடுத்துவிட்டு பின்னர் அவரவர் வீட்டுக்கு உபயோகப் படுத்திக்கொள்ள பின்னர் கேளுங்கள். எல்லோரும் இந்த அகத்தியர் ப்ரஜெக்டில் பங்கு கொள்ளுங்கள்.

   Delete
 8. முதலில் அவர் உத்தரவை நிறைவேற்றுவோம்.

  ReplyDelete
 9. பொதுநலம் கருதுதலுக்கு நன்றி. எங்கள் ஊரில் இது போன்ற பணியில் நாங்கள் பங்காற்ற அனுமதி அளித்து உதவும்.

  ReplyDelete
 10. தன்னலம் கருதாது பொது நலம் கருதி செய்கிற எந்த விஷயமும், சித்தர்கள் ஆசியினால் தான் வருகிறது என்று என் திடமான எண்ணம். அப்படி தோன்றிவிட்டால், நல்லதை உடனேயே செய்துவிடுங்கள். அப்படி செய்வது பெரியவர்களால் கவனிக்கப்படும். தொடர்ந்து நல்லது செய்துவர, தனிப்பட்ட முறையில் அவர்கள் அழைத்து புதுப்புது விஷயங்களை செய்கிற முறையை அவர்கள் உருவாக்கித் தருவார்கள். அப்பொழுது அதை பிறருக்கும் பங்குபெற வாய்ப்புக் கொடுத்து அவர்களையும் உயர வழி வகுத்துக் கொடுங்கள்.

  நீங்கள் நினைத்த நல்ல விஷயத்தை செய்வதற்கு உங்களுக்கு அவர்களின் ஆசி உண்டு. செல்க! செய்க!

  ஓர் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

  ReplyDelete
 11. Dear Sir,

  Can you please let me know what type of sloka's are available in the CD so that we can give it to appropriate temples. As you know Siva temples may not prefer Vishnu slokas and vice versa.

  Thanks
  Krishna

  ReplyDelete
 12. agathiyar arulal niraivetrapathu om agathisaya namah

  ReplyDelete
 13. Could you please make it available for online download as well.

  ReplyDelete
 14. ஐயா பல நாட்களாக இந்த mp3ஐ தாங்கள் அனுப்பவில்லை மற்றும் பகிர்ந்தும் கொள்ளவில்லை
  எனது மெயில் nsk200000@gmail.com

  ReplyDelete
 15. i got it today morning thanks agathiyar

  ReplyDelete