- ஆதிக்கும் ஆதியான இறைபாதம் வணங்கி போற்றி அறிவிப்பேன் சில்வாக்கு இத்தருணம், அஃது ஒப்ப அகத்தில் நுணுக்கமாய் கருத்தினை பதிய வைத்துவிடு.
- அறிவதை தெளிவாக உள் உணர்ந்து அறியவில்லை என்றால் எமது வாக்கின் அர்த்தங்கள் விபரீதமாகுமப்பா. எஃது ஒப்ப மனதை ஒரு நிலைபடுத்தியே எமது வாக்கினை அறியவேண்டும்.
- ஏற்றம்பெற, ஏற்றம்பெற கர்மம் தொலைய பலதடங்கள் (பல புண்ணிய ஸ்தலங்கள்) தரிசிப்பதும், தர்மங்கள் செய்வதும் என்றென்றும் சிறப்புதான். உயர் சிறப்புதான் எக்காலமும், காலகாலம் பல்வேறு மகான்கள் வழிபட்ட தடங்கள் சென்று வணங்குவதும் சிறப்புதான்.
- அப்பனே எத்தனை தெய்வீக அருள் பெற்ற மாந்தன் ஆயினும், எஃது ஒப்ப இறையை நேரில் காணும் பாக்கியம் பெற்றவன் ஆயினும், எத்தருணமும் எக்காலமும் தடங்கள் சென்று வணங்குவது சிறப்பாம். ஏனைய குழும அமைப்பில் வழிபாடுகள் செய்தாலும், பித்ருக்கள் தோஷநிவர்த்தி செய்தாலும், தெய்வதீவிலும் (இராமேஸ்வரம்) அஃது ஒப்ப தடத்திலும் ஏற்பதும் சிறப்பாம்.
- செப்புவேன் எம்மாந்தன் ஆயினும் இறைதடமோ, தெய்வீக வழிபாட்டு கூடமோ அமைத்து அமைத்து எத்தனைதான் சிறப்பாக வழிபட்டாலும் அத்தகைய அமைப்புதன்னிலே சதம்சதம் பிராயசித்தங்கள் எடுபடாது.
- அப்பனே மாந்தர்கள் எத்தனை ஞான உபதேசத்தை செய்தாலும், கேட்டாலும் மனம்கொள் சதம்சதம்.
- அகத்தில் சத்தியமும் தெளிவும் உடைய எத்தகைய ஆன்மீக மாந்தனும் இன்றைய அண்டத்தில் இல்லையப்பா.
- ஆட்சிவழி மாந்தர்களோடு எவ்வித தொடர்பும் எந்த நிலையில் எதற்காக வைத்தாலும், அங்கே ஆன்மஞானம் கறை படுகிறதப்பா. அதிகாரம் உள்ள மாந்தனையோ, ஆட்சிவழி மாந்தனையோ ஆன்மவழி அமைப்பில் சேர்த்தால் அஃது அமைப்பு சிதறுண்டுதான் போகுமப்பா.
- அஃது ஒப்ப எந்த நிலையிலும் “தான்” தோன்றக்கூடாது, தோன்றினால் இறைவன் தோன்றமாட்டான்.
- எஃது ஒப்ப குற்றமோ, பாவமோ செய்வது மாந்தர்களின் இயல்புதான் பாதகமில்லை, பாதகம் அதில் இல்லையப்பா செய்வதை உணர்ந்து திருந்தாமல் இருப்பதே பாதகமாப்பா.
- பகருங்கால் லக்கினத்தை, ராசியை சுபர் திருட்டிக்க (நோக்க) பாலனே பொன்னன் (வியாழன்/குரு) திருட்டிக்க இத்தகு மாந்தர்கள் எம் வழி வரதக்கவர்கள்.
- பாபம் செய்யினும் மனம்கொள் சிந்தையில் துடிதுடித்து அதற்காக வருந்தி திருந்துவார்கள்.
- பகருவேன் ஏனையோர் இஃது ஒப்ப இருந்தால் இறைகருணை பெறலாம்.
- பகருவேன் ஏகஏக மாந்தனுக்கும் சரியோ தவறோ தனித் தனி உணர்வு உண்டு, தனித் தனி கருத்து உண்டு. உண்டு என்பதால் அதனை ஏளனம் செய்வதில் எவருக்கும் லாபமில்லை. உணர்ந்து உரைக்க வேண்டினால் மட்டுமே அறஉரை உரைக்க வேண்டும்.
- நல் உணர்வு அற்றோர் இறை அருளினால் மட்டுமே நன்மையை உணர இயலும் இயலும்.
- தீமையை விலக்க இயலும்.
- இயலும் உயர்ந்ததை பேச இயலும்.
- இயலும் உன்னதத்தை உன்னதமாய் உரைக்க இயலும்.
- இயலும் உள்ளத்தில் உறுதியும், திடமும், அறமும் கொண்டு வாழ இயலும்.
அகத்தியர் அறிவுரை!
அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!
Monday 24 February 2014
அகத்தியர் அருள் வாக்கு - நமக்கென!
Subscribe to:
Post Comments (Atom)
Ayya Thangaluku Nandri...
ReplyDeleteThank you very much sir.
ReplyDeleteThose answer are very much suitable for my question by agathiyar, such questins arise in my mind at 23rd feb night... what a micracle ....... Thanks thanks To Agaithyar.
ReplyDeleteThose answer are very much suitable for my question by agathiyar, such questins arise in my mind at 23rd feb night... what a micracle ....... Thanks thanks To Agaithyar.
ReplyDeleteஅப்பனே எத்தனை தெய்வீக அருள் பெற்ற மாந்தன் ஆயினும், எஃது ஒப்ப இறையை நேரில் காணும் பாக்கியம் பெற்றவன் ஆயினும், எத்தருணமும் எக்காலமும் தடங்கள் சென்று வணங்குவது சிறப்பாம். ஏனைய குழும அமைப்பில் வழிபாடுகள் செய்தாலும், பித்ருக்கள் தோஷநிவர்த்தி செய்தாலும், தெய்வதீவிலும் (இராமேஸ்வரம்) அஃது ஒப்ப தடத்திலும் ஏற்பதும் சிறப்பாம்.
ReplyDeleteit will be so helpful if meaning for this is explained for us
எப்படிப்பட்ட தெய்வீக அருள் பெற்ற மனிதர் ஆயினும், இறைவனை நேரில் காணும் பாக்கியம் பெற்ற மனிதர் ஆயினும், ஒவ்வொரு நேரத்திலும், காலத்திலும் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபடுவது மிகச் சிறப்பாகும். மேலும், ஒரு குழுவாக அமைத்து அதில் இருந்து எத்தனை வழிபாடுகள் செய்தாலும், பித்ரு தோஷ நிவர்த்தி செய்தாலும், ராமேஸ்வரம் போன்ற அதற்கு நிகரான இடத்தில் செய்வதுதான் மிகச் சிறப்பு என்கிறார், அகத்தியப் பெருமான்.
DeleteWonderful ayya :)
ReplyDeletethanks a lot karthikeyan
ReplyDeleteIt is so kind of you to be sharing these treasures with us, his devotees, May this service of yours be Blessed by Maha Guru himself.
ReplyDeleteSeriously, my mind was stuck at those lines of Rameshwaram, hoping to get back to re-read it couple of times to get a clear thought on the same, wow, Mahan knows what we want and already he has arranged for it through someone else and you have explained clearly.
Thank you Brother Velayudham Karthikeyan, SAIRAM
•பகருங்கால் லக்கினத்தை, ராசியை சுபர் திருட்டிக்க (நோக்க) பாலனே பொன்னன் (வியாழன்/குரு) திருட்டிக்க இத்தகு மாந்தர்கள் எம் வழி வரதக்கவர்கள்.
ReplyDeleteஅய்யா மேற்கூறிய அய்யனின் வரிகளுக்கு விளக்கம் தருக.
நன்றி.
Arputhamana Azhagana Thamizil agathiyar vakku..
ReplyDeleteMikka nandri..
Om agatheesaya Namaha..!!
Om agatheesaya Namaha..!!
Om agatheesaya Namaha..!!
ஆனாபான சதி எனப்படும் புத்த தியானம் செய்தால் அருமையாக உள்ளது. இந்த தியானத்திற்கு என்ன சிறப்பு. செய்தபின் ஏற்படும் பரவச நிலைக்கு காரணம் என்ன? எனக்கு பொதுவாக 7 ம் தேதி பிறந்தவர்களோடு சண்டை வந்து கொண்டே இருக்கிறதே? 7 என்றாலே கேது என்று சொல்கிறார்கள். கேது என்றால் விநாயகன் என்று அகத்தியரே ஒரு முறை சொல்லி இருக்கிறார் நம் முந்தய பதிவில். விநாயகன் என்னும் கேது மக்களுக்கு நாக தோஷம் என்று துன்பத்தை கொடுப்பாரா? அருகம்புல்லுக்கு அருள் செய்யும் இறைவன் துன்பம் தருவது எப்படி? கேது ஸ்வர்ண பானு என்னும் அரக்கனே என்றும் புராணங்கள் சொல்கின்றன. ஸ்வர்ண பானுவிர்க்கும் விநாயகனுக்கும் என்ன தொடர்பு? என் தந்தை எப்போது திருப்பதி கோவில் சென்றாலும் அவர் வேலைக்கு ப்ரசின்னை வருவது ஏன் ? வழிபாடு செய்தாலோ த்யானம் செய்தாலோ நடு நெஞ்சில் ஒரு வித சத்தம் வருகிறது? 2325 இல் கலியுகத்தில் 10,000 வருட கிருதாயுகம் வர போகிறது என்று படித்தேன். அது உண்மையா ? சந்தியுகம் 2025 முதல் 2325 வரை உள்ளது என்றும் படித்தேன். இந்த link இல் பார்க்கவும்.
ReplyDeletehttp://www.grahamhancock.com/forum/DMisraB6.php
கேது தோஷத்திற்கு நாய்களுக்கு சாதம் வைப்பது சிறப்பு என்று வட நாட்டு ஜோதிடர் ஒருவர் கூறினார். அது சரியா ?
எனது கேள்விகளுக்கு பதில் அறிந்தவர் கூறவும். விரைவில் கிடைக்கும் என காத்திருக்கிறேன்.
GOOD READIND
ReplyDeleteசதம் சதம் பிரியாசித்தங்கள் ? அப்படினா சதம் ஞதம்
ReplyDelete