​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 6 February 2014

சித்தன் அருள் - 162 - நம்பிமலை - நாகசித்தர் தரிசனம்!

[அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கப்பட்ட இடம். நம்பிமலை கோவில் வாசல்]

அகத்தியப் பெருமான், முக்கண்ணனுக்கு சேவை செய்ய சென்ற பின், சரி இனிமேல், சிறிது நேரத்திற்கு, அவரிடமிருந்து எந்த அருள்வாக்கும் எதிர்பார்க்க முடியாது என்று, எல்லோரும் சற்று ஓய்வெடுக்கலாம் என்று விலகி அமர்ந்தோம். இருவர் கோவிலை ஒருமுறை சுற்றி வரலாம் என்று சென்றனர்.

எங்கும் ஒரே இருட்டு. குளிர்ந்த காற்று, சிறிய இடைவேளை விட்டு, ஓடி வந்து சில நேரம் தழுவிவிட்டும், சில நேரங்களில் அறைந்துவிட்டும் சென்றது. நடு இரவில் நல்ல குளிர் இருக்கும் என்று தோன்றியது.

சுற்றி வரச் சென்ற இருவரும் வேகமாக ஓடி வந்தனர்.

"ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்? ஏதாவது பிரச்சினையா? என்ன பார்த்தீர்கள் என்றேன்?"

வந்தவர் தன்னை சற்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு

"சாமி! நாடியை புரட்டிப்பார்த்து என்ன நடக்கிறது என்று கேளுங்களேன்" என்றார்.

"என்ன நடந்தது என்று தெளிவாக சொல்லுங்கள். அகத்தியப் பெருமானிடம் இப்போது கேட்க முடியாது. அவர் வேலையாக சென்றுள்ளார். எப்படிக் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார். பின்னர் விசாரிப்போம். இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள்" என்றேன்.

"சாமி! நடந்து வரும்போது, சும்மாவேனும் அந்த புற்று இருக்கும் இடத்தை பார்க்கலாம் என்று எட்டிப்பார்த்தேன். அங்கு வெளிச்சம் போட்டபடி ஒரு நாகம் சென்றது. அதன் முகமருகே சங்கு சக்கரம் தெளிவாக தெரிந்தது. இதென்ன விநோதமாக இருக்கிறதே என்று தோன்றியது. அதையும் அகத்தியரிடமே கேட்டுவிடலாம் என்று தான், தங்களை கேட்டேன்" என்றார்.

"இப்பக் கேட்டா பதில் சொல்ல மாட்டாரே" என்ற படி நாடியை புரட்டினேன்.

நானே ஆச்சரியப்படும்படி அகத்தியர் நாடியில் வந்து பதில் சொன்னார்.

"அன்னவன் சற்றுமுன் செப்பினானே. நானும் ராகு காலம் வந்துவிட்டது என்று சொன்னேன். ராகு காலத்துக்கு அதிபதியாம், ஆதிசேஷன் அவதாரம் எடுத்த புற்று என்று சொன்னேன். அவனே தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்று சொன்னேன். அந்த ஆதிசேஷனை காணவேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். அது சீறுமா, கடிக்குமா, மயக்குமா, மெருக்குமா, அவ்வளவு பெரிய பாம்பா, என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். ஆதிசேஷனுக்கு ஏழு தலை என்று பெயர். ஆனால் ஐந்து தலையுடன் ஒரு நாகம் இருப்பதாக இங்குள்ளவர்கள் சற்று முன் சொன்னார்கள். ஐந்து தலை நாகமோ, ஏழு தலை நாகமோ, சற்று முன் இன்னவன் கண்ணில் பட்டதெல்லாம், சித்த நாகமடா! அவன் நாக பாம்பல்ல, நாகப்பாம்பு சித்தன் என்று பெயர். அந்த சித்தருக்கு மறு பெயர் "பாம்பாட்டி சித்தர்" என்று பெயர். இவன் கண்டதெல்லாம் நாகப்பாம்பல்ல, பாம்பாட்டி சித்தனையே கண்டிருக்கிறான்" என்றார்.

"போதுமா?" என்றேன் நான்.

"நாடியை கையில் வைத்திருந்தால், செய்தி வந்து கொண்டே இருக்கும் போலிருக்கு. அரை மணி நேரத்துக்கு சன் டீவியில் செய்தி வருவது போல" என்றேன் நான்.

"ஏதாவது நியூஸ் இருந்தா குடுங்க சார்!, இப்படியே வெச்சிட்டு இருந்தா போறும். ராத்திரி பூரா இதுதான் எனக்கு வேலை. வீட்டிலிருந்தால் படுக்க போயிருப்பேன்" என்றேன் நான்.

இருவரில் ஒருவர் " நாம போக வேண்டாம்! என்று சொன்னேன். அப்படியும் போய் இவர்தான் எட்டிப் பார்த்தாரு. தேவையா. பயந்து போயிட்டாரு" என்றார்.

"ஒருநாள் இடைக்காடரை காட்டித்தந்தார். ஒருநாள் பாம்பாட்டி சித்தரை காட்டிவிட்டார். அழுகுணி சித்தரை பற்றி தகவல் இன்று தந்தார்" என்றேன்.

சற்று நேரம் அனைவரும் அமைதியாக இருந்தோம்.

திடீரென்று நாடியில் அருள் வாக்கு வந்தது.

"விண்மீனை பார்க்க முடியவில்லை என்று கவலைப் பட்டாயே! மூன்றாவது ஜாமத்தில் மேலே எட்டிப்பார். விண்மீன் தெரியும். விண்மீனில் ஒரு அதிசயம் நடக்கும். அதை அகத்தியன் இப்பொழுது உரைக்க மாட்டேன். நீ கண்டால், அப்புறம் கேளு, உரைக்கிறேன்."

மூன்றாவது ஜாமம்னா எப்போ? என்றேன்.

"பன்னண்டு மணி" என்று கூட இருந்தவர் சொன்னார்.

"லோப முத்திரா வேறு யாரும் இல்லை, காவிரியும், தாமிர பரணியும் தான். எனக்கு மனைவி இல்லையடா. துறவறம் பூண்டவனை வீட்டில் வைக்ககூடாது என்று சட்டம். அகத்தியனை ஒதுக்கி விடுவார்கள் என்பதற்காக அல்ல. உலக வழக்கத்துக்காக. அகத்தியனுக்கும், மற்ற சித்தர்களுக்கும் இதே நிலை தான். அத்திரி முனிவருக்கு மனைவி உண்டு, குழந்தை உண்டு. காக புசுண்டருக்கும் உண்டு. அத்திரி மகரிஷியின் மனைவி தான் அனுசூயா. அனுசூயாவுக்கு பிறந்தவர் தான் மார்க்கண்டேயன்." என்றார்.

"இன்று தான் மார்க்கண்டேயன் பிறந்த நாள். அந்த நாளும் இந்த நாளே. இந்த நாளில் சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும் தான் அகத்தியன் யான் உரைப்பேன். இப்படிப்பட்ட விஷயங்கள் அவ்வபோது வரும். நீங்கள் அனைவரும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளித்து உடலை சுத்தம் படுத்திக் கொண்டு, பாபநாசம் செல்க. பிறகு அங்கிருந்து மேற்கொண்டு பயணத்தை தொடர்க. மேற்கொண்டு விஷயத்தை உரைக்க, பாபநாசம் நோக்கி வரட்டும். மேற்கொண்டு விஷயத்தை உரைக்கிறேன். இடையில் அகத்தியனை தொந்தரவு செய்யாதே! அகத்தியனுக்கு சற்று அவகாசம் கொடு. மூன்று நாழிகை." என்றார்.

"சரி! இனி அவரை தொந்தரவு செய்ய கூடாது" என்று கூறி நாடியை கட்டிவைத்தேன்.

எல்லோரும் உணவருந்தி விட்டு உறங்க சென்றோம்.

மறுநாள் காலை. அகத்தியப் பெருமான் சொன்னது போலவே, பிரம்ம முஹுர்த்தத்தில் எழுந்து, குளித்து உடலை சுத்தம் பண்ணிக்கொண்டு, நம்பிமலை பெருமானுக்கு அவர் வாசல் முன் நின்று நன்றி கூறிவிட்டு, நாடியை புரட்டிப் பார்க்கலாமே என்று கட்டை பிரிக்க, அகத்தியர் உடனே வந்தார், அருள் வழங்கினார், சொன்னதை கேட்ட நாங்கள் அனைவருமே, திக்கு முக்காடிப் போனோம்.

"ஒளிமறை விண்மீன் கேட்டை உதித்திட்ட வேளையிலே, ஒப்பற்ற ஆங்கொரு மாமலை மீது அமர்ந்து கொண்டு அகத்தியன்  எதிர்கால நிலைபற்றி யாம் உரைக்க, நேற்றைய தினம் எத்தனையோ செய்திகளை சொன்னேன் என்றாலும், சித்தர்கள் வழிபாடு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் சிலருக்கு இருக்கலாம். எட்டி எட்டி பார்த்ததில் பயனில்லை. அவர்கள் சற்று தாமதமாக வந்து, இங்கு நீங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போதெல்லாம், அவர்கள் முதுகை எல்லாம் தடவிக் கொடுத்து முத்தமிட்டு, நல்லதொரு வாழ்த்துக்களை வழங்கிவிட்டு சென்றார்கள். 9 சித்தர்களும் சுற்றி வளையவந்து, எந்த வித ஆபத்துகளும் இல்லாமல் இவர்களை காக்கவேண்டி, மலையை சுற்றி சுற்றி காவல் காத்ததெல்லாம் அதிசயம் தான். சித்தர்கள் தான் மனிதர்களை பார்ப்பார்கள் என்றாலும், மனிதர்களை சுற்றி வந்து பாதுகாப்பு கொடுத்ததெல்லாம் இதுதான் முதன் முறையடா. அகத்தியன் இட்ட கட்டளைக்கு இணங்கி, அவர்கள் அன்போடு வந்து மாமலையை சுற்றி விட்டு, இப்பொழுதுதான் தங்கள் இருப்பிடத்திற்கு சென்று விட்டார்கள். புளியமரத்துக்கு அடியில் இருக்கிற சித்தர்கள் கூட, சற்று எட்டிப்பார்த்து, அதிகாலை, உங்கள் கணக்குப்படி, மூன்றாம் ஜாமத்துக்கு முடிவிலும், நான்காம் ஜாமத்துக்கு முதல் ஆரம்பத்திலும் நம்பி திருமகனை சேவித்து, வரும் வழியில், இவர்களை எல்லாம் வாழ்த்திவிட்டு சென்றதெல்லாம் உண்மை தான். வானத்திலே ஆங்கொரு நட்சத்திரம் தோன்றும் என்று எட்டி எட்டிப் பார்த்த பொழுது, இடதுபக்கம் மாமலை மீது, மலை உச்சியில், அந்த அரும் பெரும் காட்சி அது கிடைத்தது.  ஆனால் யாருமே கண்டுகொள்ளவில்லை. அன்னவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம் அது. விடியற்காலை, உங்கள் கணக்குப் படி, என் கணக்குப் படி ஜாமம் என்றாலும் கூட, கடிகாரம் முள், மூன்றிலிருந்து, மூன்று இருபதுக்குள், அந்த அரும் பெரும் காட்சி, இடதுபக்கம் மலை உச்சியில் நடந்தது. தட்டி எழுப்பி பார்க்க வைக்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அயர்ந்து தூங்கட்டுமே, அவன் அடியன் கோவிலில் தானே படுத்துக் கொண்டிருக்கிறான், அந்த காட்சி இவர்களுக்கு தானாக கிடைக்கட்டும் என்று விட்டுவிட்டேன். ஆகவே, சித்தர்கள் வந்தது, சற்று தாமதமானாலும் கூட, அருமையான அகத்தியன் சொற்படி, அத்தனை தூரத்திலிருந்து வந்து, இங்கு மாமலை மீது அமர்ந்து, படிக்கட்டில் அமர்ந்து, அந்த நம்பி பெருமான் முன் அமர்ந்து, வடக்கு நோக்கி அமர்ந்து, கிழக்கு நோக்கியும் அமர்ந்து அகத்தியன் இட்ட கட்டளை எல்லாம் அன்புற கேட்டனர். ஆகவே, அகத்தியன் உங்களுக்கெல்லாம் நல்லதொரு புண்ணியத்தை வழங்கிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, பிறந்த பயன், இவர்களெல்லாம் அடைந்து விட்டனர் என்றே எண்ணிக் கொள்ளலாம். இன்னும் சில பயணங்கள் இருக்கிறது என்றாலும் கூட, இந்த மாமலையில் விசேஷம் நேற்றிரவு நடை பெற்றதெல்லாம், இனிமேல் அடுத்த 200 ஆண்டுகளுக்குப் பிறகு தானே. ஆகவேதான், அந்த காட்சியை கண்கொள்ள காணவேண்டும் என்பதற்காக, அகத்தியன் இட்டதொரு கட்டளையை ஏற்று வந்ததெல்லாம், பெரும் புண்ணியமே. ஆகவே, மேற்கொண்டு எதும் உரைக்க, பாபநாசத்துக்கு வருக, மேற்கொண்டு உரைக்கிறேன் என்று அருள்."
   
அவர் உத்தரவு படி கீழே இறங்கி, பாபநாசம் நோக்கி பயணமானோம்.

பாபநாசம் சென்று, எம்பெருமான் முக்கண்ணனை தரிசனம் செய்துவிட்டு, கோவிலில் ஒரு ஓரமாக அமர்ந்து நாடியை பிரித்தேன்.

சித்தன் அருள் .......... தொடரும்!

22 comments:

  1. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  2. ///// துறவறம் பூண்டவனை வீட்டில் வைக்ககூடாது என்று சட்டம்.///// இவ்வாறு அகத்திய பெருமான் கூறி இருப்பதால் ஆஞ்சநேயர் படம் மற்றும் துறவிகளின் படங்களை வீட்டில் வைத்து வழி படலாமா கூடாதா? பல் வேறு கருத்துக்கள் இதை பற்றி உள்ளன. தங்களுடய கருத்து என்ன? This post is very interesting sir. Thank you

    ReplyDelete
    Replies
    1. துறவறம் பூண்டவனை வீட்டில் வைக்கக் கூடாது என்பது சட்டம்தான். அதை மீறி நாம் வீட்டில் வைத்து வழிபடும் போது எதற்க்காக வழிபடுகிறோம் என்பதில் தெளிவாக இருந்தால், வழிபடுவதில் தவறில்லை. உங்கள் வேண்டுதல் தர்மத்துக்கு உட்பட்டு, அவர்கள் ஆசியை வேண்டுகிற படி இருந்தால், இல்லற வாழ்க்கைக்கு அவர்கள் அருளை வேண்டுவதாக இருந்தால், தவறில்லை. ஆனால் இல்லறத்தில் இருந்துகொண்டு, துறவறத்தை வேண்டி, அவர்கள் ஆசியை வேண்டினால், அப்படிப்பட்டவர்களுக்குத்தான் அந்த சட்டம். அது தவறு. தகப்பனாக இருந்து அருள வேண்டுங்கள், இல்லறத்தில் நல்ல வழி காட்டச்சொல்லுங்கள்! அது தவறல்ல.

      அகத்தியர் சொன்னது பொதுவானது.

      Delete
  3. ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி

    ReplyDelete
  4. Om Agasthiyar thiruvadigal potri..
    avarin arul ennil adangaa...
    ayyanae arul puriyungal ellorukkum..

    Mikka nandri ayya..

    ReplyDelete
  5. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  6. ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி

    ReplyDelete
  7. Jai Sarguru OM Agathisaya Namaha OM Agathiyar Thiruvadi potri potri potri sarguru patham saranam patham

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்.

    சித்தர் தரிசனம் கிடைச்சா அது ஆகும் இது ஆகும்னு சொல்லுவங்கா....அதற்கு என்றே திருவண்ணாமலை எல்லோரும் சுற்றுகிறார்கள் ....இங்கே என்னடான நாக சித்தர் தரிசனம் கிடைசும் எல்லாம் ஓட்டாண்டி தான் போல....ஒரு பிரயோஜனம் இல்லை போல???

    ReplyDelete
    Replies
    1. ஏங்க வெறும் பொன்னும் பொருளும் தான் பிரயோசனமா?நம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் சிறிது காலம் தேடிப்பாருங்களேன்
      அற்புதங்கள் கொட்டோ கொட்டும்.நீங்க இவ்வலைத்தளத்துக்கு வந்ததே தேடலின் அறிகுறி ஆரம்பமாகியிருக்கிறது.கலா

      Delete
    2. வணக்கம் கலியுக ராவணன்(!)

      "இங்கே என்னடான நாக சித்தர் தரிசனம் கிடைசும் எல்லாம் ஓட்டாண்டி தான் போல....ஒரு பிரயோஜனம் இல்லை போல?"

      மேற் சொன்ன வாக்கியம் யாரை சுட்டிக்காட்டி சொன்னீர்கள்? அந்த நாடி வாசித்த போது கூட இருந்தவர்களையா?

      சித்தர் தரிசனம் கிடைத்த எத்தனை பேர்கள் தங்கள் வாழ்க்கையை செம்மை படுத்திக் கொண்டு மேல் நிலைகளில் ஏறி இருக்கிறார்கள் என்று தெரியுமா? சித்தர் தரிசனம் பெற்றவர் என்ன பெறவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எதில் ஓட்டாண்டி? அதை சொல்லுங்கள்.

      Delete
    3. Kaliyuga Ravanan solvathu sarithan.!!! Avarai ariyamalae oru unmaiyai solli ullar... Ottaandi = Odu + Aandi. intha odaakiya udambin mel patru illamal aandikalai iruppavarkal engirar. athu poka pasitha pillai paal kudikkum... kaaliyaana odu sitharkal arulal nirayum... aaka eppadi parthaalum niraivukku oru valithaan ottaandiyaaka iruppathu... Agatheesaaya nama...

      Delete
    4. ஐ மீன் நோ ட்ரான்ஸ் போர்மேசென் இன் மைன்ட் தோஸ் வு சீன் சித்தர்ஸ்............

      Delete
  9. Here, Sri Agastya says that sage Markandeya is the son of sage Atri (a sapta-rishi) and his wife Anasuya. As per puranas/mythology, the 3 children of sage Atri couple are: Datta-treya, sage Durvasa and Soma (or Chandra) god. Sage Markandeya is stated to be the son of sage Mrukanda and his wife Marudvati. Mrukanda is said to belong to lineage of Bhrigu, who is another sapta-rishi. Thus there seems to be an apparent contradiction between what Sri Agastya states here versus the puranas. However, this could be another divine secret, which, Sri Agastya, will un-ravel later on hopefully.

    ReplyDelete
    Replies
    1. Yes. It may be a divine secret about the lineage. Agasthiyar has to explain it, then only we will be able to know. Let us wait, it may come out in some other time.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Thanks. However, as per wikipedia, the sage Markendeya associated with Oppiliappan and Bhooma devi is none but the always-16 Markandeya only. In other words, as per wikipedia, there are no two Markendeyas, but only one. Of course, the always-16 Markendeya is associated with the Tirukadaiyur temple near Mayiladuthurai.

      Delete
    4. two markandeya..??how abt agasthiar?how many r der...?so many ashram came in the name of agasthairs.......

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  10. ஓம் அகதீசாய நம

    ReplyDelete