​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 4 July 2013

சித்தன் அருள் - 131

அகத்திய பெருமான் பல முறை, நாடியில் வந்து பொதுவாக சொல்லும் போது "தவறை திருத்திக்கொள்ளுங்கள்" என நாடி படிக்க வருபவர்களிடம் கூறி, அனைவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்குவார்.  திருந்தியவர்கள் வாழ்க்கை மிகத் தெளிவடைவதை பல முறை பார்த்திருக்கிறேன். 

பிறருக்காக சொல்லப்பட்டாலும், பல முறை தனிமையில் இருக்கும்போது, அதில் எனக்கும் எச்சரிக்கை உள்ளதோ என யோசித்து பார்த்ததுண்டு. தவறின் வேகம், வலிமை அனுசரித்து பாதிப்புகள் உண்டாவதை எத்தனையோ பேரின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் எனக்கு புரியவைத்துள்ளது.  தவறுகளில் மிக கொடியது இன்னொரு உயிரை கொல்வது, கொல்ல நினைப்பது.  அது "பிரம்மஹத்தி தோஷத்தை" வரவழைக்கும்.  யாருக்கு எதிராக இந்த தோஷத்தை செய்ய நினைக்கிறார்களோ, அவர்கள் கர்மா படி விஷயங்கள் நடக்கும்.  அவர்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்று விதி இருந்தால், யாரோ, ஏதோ ரூபத்தில் வந்து செய்தியை மறைவாக சொல்லியோ, அல்லது நேரடியாக தலையிட்டோ காப்பாற்றுவார்கள்.  அப்படி அகத்திய பெருமான் தலையிட்டு ஒரு குடும்பத்தை காப்பாற்றிய நிகழ்ச்சியை இன்றைய தொகுப்பில் பார்ப்போம்.  இந்த தொகுப்பை படித்து முடிக்கும் போது, உளமார படிக்கும் அனைவருக்கும் தனிமையில் அமர்ந்து நிறைய அளவுக்கு "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று ஜபம் செய்யவேண்டும் என்று தோன்றும்.  தோன்றினால் செய்யுங்கள்.  சரியான வழியை யார் முகமேனும் காட்டுவார்.

மிகவும் உயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள்.  பேச்சிலே மேன்மை தெரிந்தது.  கணவன் மனைவி அவர்களுடைய மகள் ஆகிய மூவரும் என்னைப் பார்க்க வந்திருந்தனர்.

எல்லோருக்கும் உள்ள பிரச்சினைதான் இவர்களுக்கும் இருக்கும். ஆதலால், அகத்தியரிடம் அருள்வாக்கு கேட்டு, வாங்கித்தரலாம்  என்று எண்ணினேன்.

"அகத்தியரை நோக்கிப் பிரார்த்தனை செய்கிறேன்.  உங்களது கேள்விகளை அவரிடம் சொல்லுங்கள், நல்ல பதில் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு நாடியை படிக்க ஆரம்பித்தேன்.

நாடியில் வந்த அகத்திய பெருமான் "முதலில் இவர்கள் இங்கிருந்து  வீட்டிற்குச்     சென்றதும் வேறு எங்கேயாவது ஒருநாள் தங்கி, பகல் பொழுதில் தங்கள் வீட்டிற்குள் நுழையட்டும்.  இவர்கள் எதற்காக அகத்தியனைக் காண வந்தார்களோ அந்த நல்ல காரியம் நடக்கும்" என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.   அகத்தியர், இதற்கு மேல் சூசகமாகக் கூட எதுவும் சொல்லவில்லை.

வந்தவர்களுக்கு இந்த வாக்கு திருப்தியைத் தரவில்லை என்பது மட்டும் புரிந்தது.  ஆனால் நான் ஒன்றும் சொல்ல முடியாதே, அதனால், அமைதியாகவே  பார்த்துக் கொண்டிருந்தேன்.

"நாங்கள் நிறைய விஷயத்தை அகத்தியரிடமிருந்து எதிர் பார்த்துத் தான் வெளியூரிலிருந்து இங்கு வந்தோம்.  ஆனால் விளக்கமாக அகத்தியர் எதுவும் சொல்லவில்லையே?" என்றார் வந்தவர்.

மறுபடியும் கட்டைப் பிரித்தேன்.

"தெரிந்தோ, தெரியாமலோ  இந்த இளம்பெண் ஒருவனிடம் காதல் வயப்பட்டிருக்கிறாள்.  இடையில், இவள் அவனது நடவடிக்கையைக் கண்டு அவனிடமிருந்து ஒதுங்கி நின்றாள்.  ஆனால், அவனோ, இதைத் தாங்க முடியாமல் ஒரு பெரிய இடத்து சம்பந்தம் வீணாகப் போகிறதே என்று பரிதவித்து இந்தப் பெண்ணைக் கொலை செய்யக் கூட முயற்ச்சித்தான்.  சித்த பிரமையாகி விட்ட அவனது கொடுமையான எண்ணத்தைக் கண்டு, இந்தப் பெண்ணும், அவளது பெற்றோர்களாகிய நீங்கள் இருவரும் பயந்து நடுங்கி இங்கு வந்திருக்கிறீர்கள்.  இதுதானே விஷயம்?" என்று நிதானமாக அகத்தியர் கேட்டார். இதைப் படித்ததும் "ஆமாம்" என்றனர்.

"அகத்தியர் முதலிலேயே இதைச் சொல்லியிருந்தால் மிகவும் பரவசப்பட்டு இருப்போம்" என்றாள் அந்தப் பெண்ணின் தாயார்.

 "அகத்தியர் எப்பொழுதுமே சட்டென்று சொல்வதில்லை.  முதலில் வந்தவரின் மன நிலையை சோதிப்பார்.  இவர்கள் உண்மையில் தன்னை நம்பி வந்திருக்கிறார்களா? என்று தெரிந்து கொண்ட பின்புதான் தனது அருள்வாக்கைத் தருவார்" என்றேன்.

"சிலருக்கு மட்டும் நல்லபடியாக, உடனடியாக நடந்து விடுகிறதே!"

"நியாயம் தான், வந்தவுடன் எல்லாம் நடந்து விட்டால் எனக்கும் மகிழ்ச்சி.  ஆனால்  சிலருக்கு நான்கு நிலைகளை கடந்துதான் நடக்கிறது.  இதற்கு பொறுமை தேவை" என்றேன்.

"அதென்ன நான்கு நிலை?"

"அதான் சொன்னேனே.  முதலில் சில வழிகளைக் காட்டுவார்.  நம்பிக்கையோடு செய்தால் அவர்களது காரியம் வெற்றி பெற்று விடும்.  ஒரு வேளை அப்படிச் செய்தும் காரியம் வெற்றி பெறவில்லை எனில் வேறொரு வழியைக் காட்டுவார்.  இதற்கும் பொறுமை வேண்டும்.  பெரும்பாலும் இரண்டாவது பிரார்த்தனைகளில் எதிர்பார்க்கும் காரியம் முடிந்து விடும்.  அப்படியும் முடியவில்லை எனில் மறுபடியும்  அகத்தியரிடம் வந்தால் "விதி"யதை  மாற்ற முடியுமா என்று பிரம்மாவிடம் கேட்டு பதில் சொல்வார்.  எப்படிப்பட்ட காரியமும் முடிந்து விடும்.  எனக்குத் தெரிந்து என்னிடம் வந்து அகத்தியர் அருள்வாக்கு பெற்றவர்கள் மூன்றாவது நிலையிலேயும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்."

 "இப்போது நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்றனர்.

நாடியை மீண்டும் புரட்டினேன் 

"இந்தப் பெண்ணிற்கு அவனால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது.  ஆனால் நீங்கள் ஊரை விட்டு வந்த விஷயம் அவனுக்குத் தெரிந்துவிட்டது.  தனக்குக் கிடைக்காத இந்த பெண், வேறு யாருக்கும் கிடைக்கக்  கூடாது என்றெண்ணி மிகப் பெரிய தவறினை செய்திருக்கிறான்."

"என்ன தவறு?"

"அதை இப்போது சொல்வதற்கில்லை.  ஆனால் எந்த தவறைச் செய்தானோ அதே தவற்றால் அவன் தண்டிக்கப்படுவான்.  அது மட்டும் நிச்சயம்.  அதுவரை கருட தண்டகத்தையும், துர்கா சப்தசதி பாராயண  மந்திரத்தையும் இந்த  நிமிடம் முதல் சொல்லி வாருங்கள்.  இதுதான்  உயிர்  காக்கும் மந்திரம்" என்று நாடியில் வந்தது.

"மற்றபடி பயப்படுவதற்கு எதுவுமில்லை, தைரியமாக சென்று வாருங்கள்" என்றேன்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்களே தவிர முழுமனதோடு இந்த பிரார்த்தனைகளைச் செய்வார்களா என்று எனக்குத் தோன்றவில்லை.

அவர்கள் சென்ற பிறகு எனக்குள்ளேயே குழப்பம்.  வருங்காலத்தைப் பற்றி அகத்தியர் ஒரே சொல்லில் சொல்லாமல் ஏன் இப்படி சுற்றி சுற்றி வளைத்துச் சொல்கிறார்.  யார் வந்து எதைக் கேட்டாலும் முடியும், முடியாது.  எதிர்பார்த்தது  நடக்கும், நடக்காது என்று சட்டென்று சொல்லி விட்டால் எத்தனை ஆறுதலாக இருக்கும் என்று பெருமூச்சு விட்டேன்.

அவர்கள் சென்று இரண்டு நாட்கள் ஆகியிருக்கும்.

"அகத்திய பெருமானுக்கு மிக்க நன்றி.  எங்கள் மூவர் உயிரும் காப்பாற்றப்பட்டது" என்று அவர்களிடமிருந்து தகவல் வந்தது.

"எப்படி?" என்று ஆர்வத்தோடு கேட்டேன்.

"நாங்கள் அன்று இரவே எங்கள் பண்ணை வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். ஆனாலும் அகத்தியர் நள்ளிரவில் அன்றைக்குத் தங்கக் கூடாது என்று சொன்னதால், அரைகுறை மனதோடு வெளியூருக்கு சென்று லாட்ஜில் தங்கினோம்.

மறுநாள் பகல் பொழுதில் எங்கள் வீட்டிற்குள் நுழைந்த போது படுக்கை அறைக்குள் நான்கு நல்ல பாம்புகள் இருந்தது.  அந்த அறையில் யார் வந்து இந்த விஷமுள்ள கருநாகங்களை  கொண்டு விட்டிருப்பார்கள் என்று பயந்து போனோம். நன்றாக மூடியிருந்த படுக்கை அறைக் கதவுகள் உடைக்கப்பட்டு அறைக்குள் பாம்புகளை வீசியிருக்கிறார்கள்.  அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அறைக்குச்  செல்லும் வழியிலும் விஷமுள்ள பெரிய சர்ப்பங்கள் எங்கள் கண்ணில் தென்பட்டது.

வீட்டு வேலைக்காரர்கள் மூலம் அத்தனை பாம்புகளையும்  ஜாக்கிரதையாக பிடித்தோம். வேறு பாம்புகள்  இருக்கிறதா என்று இரண்டு நாட்களாக தேடிப்பார்த்தோம்.

இப்பொழுது தான் நாங்கள் நிம்மதியாக தூங்கப் போகிறோம்.  நல்ல வேளை.  அன்று நள்ளிரவே நாங்கள் பண்ணை வீட்டில் தங்கியிருந்தால் எங்களது மூவருடைய படங்களும் இன்றைய தினம் செய்தித்தாளில் கொட்டை எழுத்தில் வந்திருக்கும்.  அகத்தியர் தான் எங்களைக் காப்பாற்றினார்" என்று நடந்த நிகழ்ச்சியை அப்படியே தொடர்கதை போல் பரபரப்பாகச் சொன்னார்.

"வேலைக்காரனுக்கு தெரியாமல் இப்படி நடந்திருக்குமா? அவனை விசாரித்தீர்களா?" என்றேன்.

"அவன் மேல் தவறு இல்லைங்க.  அவனுக்கு குடிப்பழக்கம்  உண்டு நன்றாக குடித்து விட்டு தூங்கியிருக்கிறான்.  அவனையும் அறியாமல் நடந்த நிகழ்ச்சி இது" என்றார்.

"பாம்புகளைக் கொண்டு வந்து படுக்கை அறையில் விட்டு உங்களைக் கொல்லும் அளவுக்கு உங்களுக்கு அப்படி யாருங்க எதிரி இருக்காங்க!" என்றேன்.

"எனக்கு தெரிந்து என் மகள் மேல் ஆக்ரோஷம் கொண்ட அவளது பழைய நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும்.  வேறு யாரும் எனக்கு எதிரி இல்லை?" என்றார் அவர்.

"கருட தண்டகம் படித்ததால் பாம்புகளிடமிருந்து தப்பி இருக்கிறீர்கள்  தொடர்ந்து படித்து வாருங்கள். எல்லாவிதத்  தொல்லையிலிருந்தும் விடுதலை பெறுவீர்கள்.  இதுதான் அகத்தியர் இட்டதொரு கட்டளை" என்று பேசி முடித்தேன்.

என்னதான் இவர் பூசி மொழுகினாலும் எனகென்னவோ அவர் வீட்டு வேலைக்காரன் மீது ஒரு  சந்தேகம் இருந்தது.  நான்  சரியா என்பதை அறிந்து கொள்ள அகத்தியர் நாடியைப் பிரித்தேன்.

"ஏதாவது சொல்லி நல்லவர்களை கெட்டவர்களாக மாற்றிவிடாதே. இன்னும் சிலநாள்  பொறுத்திரு. குற்றவாளி யார் என்பது புரிந்து விடும்" என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். நானும் அப்படியே விட்டு விட்டேன்.

ஒரு மாதம் கழிந்திருக்கும்.  வெளியூரிலிருந்து அந்த பெரியவரே என்னிடம் பேசினார்.

"சார்! என் பெண் மீது  கோபம் கொண்ட அந்த பையன் விஷம் குடிச்சு ஆஸ்பத்திரியிலே பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கான்.  உயிர் தப்புவது கடினம் என்று சொன்னார்கள்.  அவன் நண்பர்கள் மூலம் என் வீட்டிற்கு பாம்புகளை கொண்டுவந்து விட்டது, எங்களை கொல்ல நினைத்தது எல்லாம் வெளியே வந்து விட்டது.  நாங்கள் அகத்தியர் அருளாலே தப்பிச்சுட்டோம்" என்றவர் "இதைத்தான் நாசூக்காக அகத்தியர் எங்களிடம் அன்றைக்கே சொல்லி விட்டார்.  நாங்கதான் அதை சரியாக புரிஞ்சிக்க முடியல்ல" என்றார் ஒரு வகையான பதற்றத்துடன்.  நான் மௌனமானேன்.

சில நாட்களுக்கு  முன்பு வந்த அந்த நபர் தனது மகளின் திருமணப் பத்திரிகையை வைத்து விட்டு, "அந்த பையன் முகமே நீலமாக மாறிவிட்டது உயிர் தப்பித்தானே தவிர நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு  சித்த பிரமையாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக  இருக்கிறான். கலியுகத்தில் இப்படியும் காரியங்கள் நடக்கத்தான் செய்கிறது" என்றார்.

தவறுக்கு தண்டனை உடனே கிடைத்து விட்டால் தெய்வத்தின் பெருமை யாருக்கும் தெரியாது.  பொறுமையாக இருந்து தான் தெய்வம் ஒவ்வொரு தவற்றையும் தண்டிக்கிறது.

அதுவரை மக்களுக்கு அகத்தியர் மீதும் தெய்வத்தின் மீதும் நம்பிக்கை இருந்தால் சந்தோஷம்.

"ஓம் அகத்தீசாய நமஹ!"

சித்தன் அருள்.................... தொடரும்!

14 comments:

 1. Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 2. ஓம் அகத்தீசாய நமஹ
  ஓம் அகத்தீசாய நமஹ
  ஓம் அகத்தீசாய நமஹ

  சரணம் குருவே! சரணம் ஐயா !!

  ReplyDelete
 3. ஓம் அகத்தீஸ்வராய நமஹ!

  திரு கார்த்திக் அவர்களே! மிக அருமையான பதிப்பு. சற்குருநாதரை எண்ணியவுடன் நல் வழி கிட்டும். இந்த பேறு பெற்ற நாம் அனைவரும் பெரும் பாக்கியசாலிகளே.

  ஓம் அகத்தீஸ்வராய நமஹ!

  ReplyDelete
 4. திரு கார்த்திக்
  நல்லது, நிறைய விஷயங்களை விரிவாக கூறி இருக்கி
  றீர்கள் .இவை யாவும் அன்றாடம் நடப்பவையே , நாம்தான் புரிந்து கொள்ளாமல் தன்முனைப்பால் [ஈகோ]
  எப்படியோ நடந்து கொள்கிறோம் .
  நிற்க , ganamadaiya வழி சொல்லவும் . எதுவும் தெரியாது என்று சொல்லாமல் நீங்கள் கற்றதை சொல்லலாம் .
  முடிந்தால் என்னுடைய 'E ' mail ல் தெரிவிக்கலாம். ஆர்வத்துடன் இருக்கிறேன் . அன்புடன் வெங்கட் .

  ReplyDelete
  Replies
  1. "சித்தன் அருள்" வலை பதிவில் "அருள் நிறைந்த வாழ்க்கைக்கு" என்று ஒரு தொடர் வருகிறது. அதில் பல பெரியவர்கள் சொன்னதை தான் தொகுத்து வழங்குகிறேன். அவற்றை அவரவர் வாழ்க்கையில் நடைமுறை படுத்தி வந்தாலே ஒரு நிலை அடையலாம். அவை யாவும் உண்மை என்று நம்புகிற மனம் இருந்து, தொடருங்கள். ஞானத்துக்கு முதல் படியாக் திருமூலர் சொன்ன "ஆசை அருமீன்காள் ......" என்று இருந்து வருவதை ஏற்றுக்கொள்கிற மனதோடு இருக்க தொடங்குங்கள். எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.. ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்கட்டும். அதில் கூறப்படுவதெல்லாம், பெரியவர்களால், அனுபவித்து அறியப்பட்டு நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள் என்று நமக்காக உறைக்கப்பட்ட விஷயங்கள்.என்னுடையது என்று எதுவும் கிடையாது.

   Delete
 5. ஓம் கம் கணபதயே நமக...

  // அப்படியும் முடியவில்லை எனில் மறுபடியும் அகத்தியரிடம் வந்தால் "விதி"யதை மாற்ற முடியுமா என்று பிரம்மாவிடம் கேட்டு பதில் சொல்வார். எப்படிப்பட்ட காரியமும் முடிந்து விடும். எனக்குத் தெரிந்து என்னிடம் வந்து அகத்தியர் அருள்வாக்கு பெற்றவர்கள் மூன்றாவது நிலையிலேயும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்."

  --மேற்கண்ட வரிகளை படிக்கும் போது உடம்பில் ஓர் அதிர்வு ஏற்படுகிறது அல்லது நம் கண்ணீல் கண்ணீர் வர வேண்டும்... எவ்வளவு கருணை.

  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...

  ReplyDelete
 6. vanakam kurumunee. Om agatheesaya namagaha.

  ReplyDelete
 7. vanakam swami.... enaku migaum aarvamaga ulladhu agathiya bagavanin arul vakkai ketka vendum endru... adhrku eatra vazhiyai agatthiyarey amaithu tharuvar endru nambugiren... oom agatthisiyaya namaga.........

  ReplyDelete
 8. Iya nan thangalidam agathiyar arulvakku ketka virumbugiren. Thangaludaiya mugavari sonnal nanraga irukum.........

  ReplyDelete
 9. ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக... ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக.
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக.

  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக.

  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக.
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக.

  ReplyDelete
 10. how to get that approval

  ReplyDelete
 11. ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக...
  ஓம் அகத்தீசாய நமக.

  ReplyDelete
 12. Om agatheesaya namaha
  Om agatheesaya namaha
  Om agatheesaya namaha

  ReplyDelete