​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 24 July 2014

சித்தன் அருள் - 186 - ஒருவருக்கு வாழ்க்கையை திருப்பி கொடுத்த வரலாறு!


மனிதன் ஆசைக்கு/சுகத்துக்கு அடிமைப்பட்டு பல வழிகளில் செயல்படுவான். அந்த வழியில் அவன் செயல்படும் பொழுது, சிலவேளை, அவன் அதற்கே அடிமையாகிவிடுவான். பின்னர் அவனை திருத்தி நல்லபடியாக வெளியே கொண்டுவர, இறைவன் அருள் வேண்டும், சித்தர்கள் கனிவும் வேண்டும். அப்படி மாட்டிக் கொண்ட ஒரு இளைஞ்சனை, மரணத்தின் விளிம்பிலிருந்து, திருப்பிக் கொண்டு வந்து, நல்வாழ்க்கை அமைத்துக் கொடுத்த, அகத்தியப் பெருமானின், கனிவு, ஒரு நிகழ்ச்சி மூலமாக வெளிப்பட்டதை, இன்றைய சித்தன் அருளில் காண்போம். ​

​ஒரு நாள், ​

"எத்தனையோ அதிசயங்களை செய்கின்ற அகத்தியர்  ​என் பையனையும் குணப்படுத்த மாட்டாரா? என்ற ஏக்கத்தோடு வந்திருக்கிறேன்" என்று ​கலங்கிய கண்களோடு என் முன் வந்தமர்ந்தாள், ஒரு பெண்மணி. 

​"நிச்சயம் குணப்படுத்துவார்.  இருந்தாலும் நாடியில் அவரிடமே கேட்டுப் பார்ப்போம்" என்றேன்.

அந்தப் பெண்ணின் முகம் இதைக் கேட்டு பிரகாசமாக ஒளிர்ந்தது.

நாடியில் அகத்தியர் நல்ல வாக்கு தரவேண்டும் என்று வேண்டி கட்டைப் பிரித்தேன்.

"என்னடா அகத்தியன் மைந்தா! இப்படியொரு வாக்கைக் கொடுத்து என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விட்டாயே! இந்தப் பெண்மணியின் பையன் தினமும் மூன்று வேளையும் சோமபானம், சுரா பானம் அருந்தி, அருந்தி குடலைப் புண்ணாக்கிக் கொண்டிருக்கிறான்.  இதே நிலை நீடித்தால் அவன் இன்னும் ​சில மாதங்கள்தான் உயிர் வாழ முடியும்.  இதையறியாமல் அவளிடம் நிச்சயம் குணப்படுத்துவான் அகத்தியன் என்று அவசரப்பட்டு உறுதிமொழி கூறிவிட்டாயே, கொஞ்சம் நாவை அடக்கி இருக்கக் கூடாதா?" என்று என்னைக் கடிந்து கொண்டார் அகத்தியர்.

​பொதுவாக நான் யாருக்கும் வாக்குறுதி கொடுக்கமாட்டேன். எனெக்கென்னவோ அந்தப் பெண்மணியின் முகத்தைக் கண்டதும் அப்படிச் சொல்லத் தோன்றியது; சொல்லிவிட்டேன்.

ஆனால்;

இந்தப் பெண்மணியின் மகன் குடித்துக் குடித்துக் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறான், அதிக நாளுக்கு உயிர் வாழ மாட்டான் என்று அகத்தியர் என்னிடம் சொன்னது, என்னை திகிலில் ஆழ்த்தியது.

சிறிது நேரம் மௌனமாக இருந்தேன்.

நாடியைப் படித்துவிட்டு நான் திடீரென்று மவுனமாக இருந்தது அந்த பெண்மணிக்கு சந்தேகத்தை கிளப்பியது போலும்.

துக்கம் தொண்டையை அடைக்க கேட்டார்.

"அகத்தியர் ஏதாவது கெடுதலாக சொல்லிவிட்டாரா?"

"இல்லை"

"பிறகு ஏன் பதிலே வரவில்லை?"

"பையனுக்கு ஏதாவது கெட்ட பழக்கம் உண்டா?"

'ஆமாம்"

"என்ன கெட்ட பழக்கம்?"

"குடி பழக்கம் உண்டு.  அடிக்கடி கஞ்சாவும் உபயோகிப்பான்"

"எத்தனை வருடமாச்சு?"

"7 வருடமாக"

"அவனுக்கு ஏதாவது சிகிர்ச்சைக்கு ஏற்பாடு செய்தீர்களா?"

"என்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டோம்.  மருத்துவமனையில் அட்மிட் செய்தும் மருத்துவம் பார்த்தோம்.  சிகிர்ச்சையின் போது நன்றாக இருந்தான். சிகிர்ச்சையை விட்டு வெளியே வந்ததும் பழயபடி குடிக்க ஆரம்பித்து விட்டான்" என்று கண் கலங்கி கூறினாள், அந்தப் பையனுடைய தாய்.

"பையனுக்கு என்ன வயது இருக்கும்?"

"26"

"திருமணம் ஆகிவிட்டதா?"

"இல்லை! வேலைக்கு சரியாகப் போகாததால் வேலையிலிருந்து இவனை நீக்கிவிட்டார்கள்.  அப்படியிருக்க யார் இவனுக்குப் பெண் கொடுப்பார்கள்?" என்றவள், அவனை எப்படியாவது அகத்தியர்தான் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தாள்.

சில நிமிடங்கள் யோசித்து விட்டு நாடியைப் புரட்டினேன்.

"அவனுக்கு குடலில் புண் ஏற்பட்டுவிட்டது.  சிறுநீரகமும் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது.  இப்போது அவன் தினமும் சிறிதளவு மது குடிக்கவிட்டாலும் கூட கை, கால்கள் உதற ஆரம்பித்து விடும். அப்படியிருக்க அவனை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகிறாய்?" என்று அகத்தியர் சற்று கோபமாகவே என்னிடம் கேட்டார்.

நான் பதிலே பேசாமல், அகத்தியரே வாயைத் திறக்கட்டும் என்று மீண்டும் மவுனமானேன்.

சில நிமிடத்திற்குப் பின் அகத்தியரே வாயைத் திறந்தார்.

"சில மருந்துகளை தருகிறேன். அதை நிழலில் காய வைத்து, பொடி செய்து, தண்ணீர் அல்லது வெந்நீரில் கலந்து தினமும் காலையிலும், மாலையிலும் சாப்பிடச் சொல்.  குறைந்த பட்சம் 48 நாட்கள் தொடர்ந்து உண்டு வந்தால் போதும்.  குணமடைந்து விடும்.  அப்படியும் இந்த மருந்தைச் சாப்பிட்டுக் குணமடையவில்லை என்றால், மீண்டும் அகத்தியனை நோக்கி வா" என்று சில நாட்டு மருந்துகளைப்  பற்றி சொல்லிவிட்டு, "ஒருவேளை இந்த மூலிகைகள் ஒத்து வராமல் வேறேதோ பிரச்சினை கூட வரலாம்.  அப்படி ஏற்ப்பட்டால் உடனே அகத்தியனை நோக்கி வா" என்றும் அகத்தியர் கருணையோடு சொன்னது எனக்கு மிகுந்த மன ஆறுதலைத் தந்தது.

"எப்படியும் என் மகன் குடி பழக்கத்திலிருந்தும், கஞ்சா பழக்கத்திலிருந்தும் விடுபட்டால் போதும். இவன் எனக்கு ஒரே மகன். எங்களுக்கு பண வசதி கிடையாது. உற்றார் உறவினர்கள் இருந்தாலும் எங்களை எட்டிக்கூட பார்ப்பதில்லை.  இவனை நம்பித்தான் நானும், என் கணவரும் இருக்கிறோம். அவன் எப்போது திருந்துவான் என்று அகத்தியரை நம்பிக் காத்திருக்கிறோம்" என்றாள் அந்தப் பெண்மணி.

"அகத்தியர் சொன்ன படி செய்யுங்கள்.  எல்லாம் சரியாகிப் போய் விடும்" என்று தைரியம் சொல்லி அந்தப் பெண்மணியை அனுப்பி வைத்தேன்.

இரண்டரை மாதம் கழிந்திருக்கும்.

திடீரென்று ஒரு நாள் அந்தப் பெண்மணி தலைதெறிக்க ஓடி வந்தாள்.

"நீங்க கொடுத்த மருந்தில் என் மகன் கொஞ்சம், கொஞ்சமாக குணமாகிட்டு வந்தான். கொஞ்சம் குடிப்பழக்கத்தையும் விட்டு விட்டான்.  அதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போ திடீரென்று மஞ்சள் காமாலை நோயும் வந்துவிட்டது.  டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போனேன். மஞ்சள் காமாலை கூடி நிற்பதால் பையன் பிழைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க.  பையனை மருத்துவமனையிலே விட்டுவிட்டு, அகத்தியரிடம் உயிர்ப் பிச்சை கேட்கலாம்னு துடிச்சுட்டு ஓடியாந்திருக்கேன்" என்றாள்.

நாளுக்கு நாள் தனது மகன் குணமடைந்து வருவதாகவும், இப்பொழுதெல்லாம் தினமும் குடிப்பதில்லை என்றும் சந்தோஷப் பட்டு சில நாட்களுக்கு முன்பு இந்தப் பெண்மணி கடிதம் எழுதியிருந்தது அப்போது என் நினைவுக்கு வந்தது.

"குணமாகும்" என்று அகத்தியர் சொன்ன வாக்கு இப்பொழுது பொய் ஆகப் போகிறதே! இனிமேல் யாரும் அகத்தியர் அருள்வாக்கை சிறிதும் நம்ப மாட்டார்களே! பகவனே.... இதென்ன சோதனை? என்று கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் போனேன்.

ஏனெனில்,

அந்தப் பெண்மணி சொன்னதை பற்றி யோசித்தால் மஞ்சள் காமாலை கடுமையாக பாதித்திருக்கிறது. அவன் உடம்பிலிருந்து ரத்தமெல்லாம் முழமையாகக் கெட்டு விட்டதால் எந்த நிமிடமும் அவன் உயிர்துறக்கலாம் என்று நன்றாகவே தெரிந்தது.

மானசீகமாக அந்தப் பையன் உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்டி அகத்தியர் நாடியைப் பிரித்துப் பார்த்தேன்.

"இன்னவள் ஈன்றெடுத்த மகன் பிழைப்பான்.  நேராக மருத்துவமனைக்குச் சென்று அவன் தலையருகே அமர்ந்து கருட தண்டகம், சஷ்டி கவசம், தன்வந்திரி காயத்ரி, மகா மிருத்யுஞ்ச ஜெபம் ஆகியவற்றை தொடர்ந்து படிக்கச் சொல். இவனால் படிக்க முடியாவிட்டால் அந்தப் புத்தகங்களை வைத்து குல தெய்வத்தை நோக்கி ஜெபம் செய்யச் சொல்.  தப்பு தப்பாகச் சொன்னாலும் பரவாயில்லை.  ஆண்டவன் கோபித்துக் கொள்ளமாட்டான். அகத்தியன், இந்த அம்மணிக்காக, அகத்தியன் மைந்தனுக்காக அந்தப் பையனின் உயிரைக் காப்பாற்றுவேன்" என்று சொன்னார்.

பிறகு என்னிடம், "மைந்தா! இந்த முறை உன் வேண்டுகோளுக்காக இந்த இளம்பிள்ளையின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறேன்.  இனிமேல் அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விடாதே. என்னையும் வம்பில் மாட்டி விடாதே. மருத்துவமனையில் ஒரு அதிசயம் நடக்கும்.  இவளது மைந்தன் அதனால் உயிர் பிழைப்பான். பாரேன் அந்த வேடிக்கையை" என்று ரகசியமாகச் சொன்னார்.

இந்த தெய்வ வாக்கால் அந்தப் பையனைப் பற்றி எனக்குள் இருந்த பயம் விலகியது.

"அகத்தியர் அருள் வாக்கு தந்துவிட்டார்.  எப்படியும் என் பையன் பிழைத்து விடுவான்" என்று எல்லோரிடமும் பித்து பிடித்தாற்போல் சொல்லி விட்டு, சந்தோஷத்தோடு அந்த பெண்மணி சென்றதை, கண்கொட்டாமல் சில நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான்கைந்து நாட்கள் வரை அந்த பெண்மணியிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை.

இதைக் கண்டு நானே ஒரு மாதிரியாக மாறி விட்டேன்.

அகத்தியரிடம் அந்த மஞ்சள் காமாலைப் பையனை பற்றிக் கேட்டுக் கொள்ளவும் தயாராக இல்லை.

மறு நாள் காலையில்.....

தினசரி பேப்பரை திருப்பி பார்த்த பொழுது "சென்னை அரசாங்க மருத்துவமனையில் மிகப் பெரிய சாதனை: மஞ்சள் காமாலையால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு இளைஞ்சனுக்கு புது ரத்தம் ஏற்றப்பட்டு காப்பாற்றப்பட்டான்" என்று அரை பக்கத்திற்கு ஒரு செய்தி போடப்பட்டிருந்தது.

கூர்ந்து கவனித்த பொழுது, அந்த சிகிர்ச்சை செய்யப்பட்ட இளைஞ்சன் என்னைத் தேடி சில நாட்களுக்கு முன்பு வந்த அதே ஏழைத் தாயாரின் மகன்தான் என்று உறுதிபடத் தெரிந்தது.

அங்கே என்ன நடந்திருக்கிறது என்றால்;

இந்தப் பெண்மணி அகத்தியர் சொன்னபடி நாளெல்லாம் தண்ணீர் கூடக் குடிக்காமல், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தன் மகனது தலைப்பக்கம் அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்த போது, யாரோ ஒரு பெரிய டாக்டர் தம் மருத்துவக் குழுவோடு இந்தப் பையனை பரிசீலனை செய்து, இவன் உயிரைக் காப்பாற்ற ஒரு வழிதான் இருக்கிறது.  அதாவது, ஒரு கை வழியாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரத்தத்தை வெளியேற்றி கொண்டு வருவது.  அதே சமயம் இன்னொரு கையில் சுத்தமான ரத்தத்தை அந்த பையனின் உடலுக்குள் செலுத்துவது என்று தீர்மானித்து, அதற்கான அத்தனை ஏற்பாட்டையும் மள மளவேன்று செய்திருக்கிறார்.

அவனது அதிர்ஷ்டம்.  அவனுடைய குரூப் ரத்தம் நிறைய கிடைத்திருக்கிறது.  அதனால், சிகிர்ச்சையும் வெற்றி பெற்று இருக்கிறது.  அந்த பெண்ணின் பிரார்த்தனை ஜெயித்திருக்கிறது.

எப்படியோ அகத்தியர் அந்தப் பையனைக் காப்பாற்றி இருக்கிறார்.

இப்படிப்பட்ட ரத்த மாற்றுச் சிகிர்ச்சை சென்னையில், அந்த மருத்துவமனையில் முதன் முறையாகவும் நடந்திருப்பதாக எல்லோரும் சொன்னார்கள்.

குணமடைந்த அந்த இளைஞ்சன் இப்போது குடிப்பதில்லை, கஞ்சாவையும் தொடுவதில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.   

[​அகத்தியர் அடியவர்களே! அடுத்த வாரத்திலிருந்து, சமீபத்தில் அகத்தியப்பெருமான், திரு,கணேசன் அவர்கள், தஞ்சாவூர், வசம் இருக்கும்  நாடியில் வந்து நமக்காக எடுத்துரைத்த அருளாசியை, கேள்வி பதிலாக வந்ததை, தரலாம் என்று ஒரு எண்ணம். அவர் அருளுக்காக பொறுத்திருங்கள்!]

​சித்தன்அருள் ............... தொடரும்.​

8 comments:

  1. ஓம் ஸ்ரீம் அகத்தீசாய நமக.
    மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம். அகத்திய பெருமானின் கருணயே கருணை. திரு.கணேசன் அவர்கள் படித்த கேள்வி பதிலை இன்டெர்நெட்இல் கேட்டு இருந்தாலும், நீங்கள் கூற போகும், நமக்காக வந்த அருளாசியை கேட்க ஆவலாய் உள்ளேன். தொடருங்கள். Thank you.

    ReplyDelete
  2. அவர் அருளுக்காக காத்திருக்கிறோம்..
    agatheesaya nmaha:
    agatheesaya nmaha:
    agatheesaya nmaha:
    agatheesaya nmaha:

    ReplyDelete
  3. Agathiyar as usual amazes us by his compassion and care for those who seek him out. Aum Agatheesaaya Namaha.

    ReplyDelete
  4. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  5. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  6. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  7. "எம்மதமும் சம்மதம்., எம்மதமும் என்மதம்"

    ஜெய் விக்ணேஷ்...

    மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை முட்டாள்களாக்கும் செயலிலுருந்து அவர்களை விடுவித்து நல்வழிப்படுத்த ஒரு சிறு முயற்சி...

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்.

    குறிப்பாக மதத்தலைவர்களிடமிருந்தும்... மதகுருமார்களிடமிருந்தும் பதில்கள் வரவேற்கப்படுகின்றன...

    தெரி[ளி]ந்தவர்கள் பதில் கூறலாம்...
    தெரி[ளி]யாதவர்களுக்கு தெளி[ரி]வுபடுத்தப்படும்...

    ஓம்கார்...
    நல்லதே நடக்கட்டும்...
    ஆனந்தமாய் இரு...

    1] மதம் என்றால் என்ன?
    அவை எத்தனை?
    அவை யாவை?
    அதன் பொருள் என்ன?

    2] ஆன்மீகம் என்றால் என்ன?

    3] தியானம் என்றால் என்ன?
    அதற்கு விளக்கம் தேவை...!
    4) தேவன்
    ஆண்டவன்
    இறைவன்
    கடவுள்
    நாசி

    இவை யாவை? விளக்கவும்...


    Contact: www.facebook.com/laalbabaji
    laalbabaji@gmail.com

    ReplyDelete
  8. To put it very briefly, hence not thoroughly:

    “Madam” or “Religion” is a set of truths and practices, leading to “aanmeegam” or “spirituality”. Each madam is founded on a set of spiritual truths/ realisations and develops some practices for its followers to help them perceive or attain those set of spiritual realities. But, in practice, a “madam” gets more associated with and identified by its founder/leader -- rather than by its principles and practices. In theory, each human being is free to follow his own path i.e. there can be millions of religions. Fortunately, in practice, there are a limited number of madams and those people who are comfortable either with that madam’s principles & practices or with its founder/leader like to follow that madam. Again, in practice, a person’s madam is influenced by the madam followed by his parents and fore-fathers. Occasionally, a person may change his madam mid-course and benefit from the same.

    “Aanmeegam”, loosely translated as “spirituality” is unique to man. Man, who is half-way between animal and divines needs “aangeegam” to move up and evolve out of animal origins and discover and develop his innate or in-built divinity. If I am mechanically or blindly follow a madam or become a fundamentalist in that madam, then it is difficult to say that I am doing “aangeegam”. In other words, a “good” madam has to have necessarily a strong element of “aanmeegam” also. In reality, however, we come across lots of deviations – frequently. religion is followed for religion’s own sake, rather for its “aanmeega” core.

    “Dyanam” is a form of “tapas”. Usual type of Dyanam is concentration; it can also be merging (even if it is just for a few minutes) one’s ego-sense into a more universal or cosmic or divine consciousness. There are some relevant observations by Sri Ramakrishna Paramhansa on "religion" and "spirituality".

    “Devan”, “aandavan”, “iraivan”, “kadavul” are translations of Sanskrit words i.e. Deva, Iswara, Brahm, Purusa, Bhagavan, etc. In simple meaning, it means and refers to the Creator or the creative force that brings forths and sustain the worlds, with its living and non-living occupants. It means the Source and the Origin.

    Word “nasi” is not familiar to me.

    ReplyDelete