​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 2 March 2026

சித்தன் அருள் - 2136 - அடியவர் கேள்விக்கு அகத்தியப்பெருமானின் பதில்கள்-பகுதி - 8!


101. கலியுகத்தில் அனைத்தும் அழிந்துதான் ஆகவேண்டும். அதுவே இறைவன் விதி. பின்னர் ஏன் இத்தனை போதித்து சித்தர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குகிறீர்கள்? சித்தர்களும் "நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்! நீ அழுகிற மாதிரி நடி!" என்று இறைவனிடம் முன்னரே பேசி வைத்து, நடிக்கிறீர்களோ?

குருநாதர்: எதை என்று கூற, எங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள், அகத்தியன் செய்வான் என்று! அவர்களுக்காக! நிச்சயம் மனிதன் நடிப்பால், யாங்கள் நடிப்பதில்லை. ஏன் என்றால், எங்களிடத்தில் வருபவர்கள் எல்லாம் நடித்து வரங்களை வாங்கி கொள்கின்றானே! அடடா!எப்படிப்பட்ட மனிதன்? புத்திசாலித்தனம்! அப்புத்திசாலித்தனத்தை வைத்துக் கொண்டு ஒன்றும் உருப்படியில்லை. இதனால் தான் யாங்கள் வருந்துகின்றோம்! அப்பா! 

102. தலை கீழ் லிங்கத்தை பற்றி கூறச்சொன்னால், மறுதலிக்கிறீர்கள்! உண்மையை சொல்லாவிட்டாலும், உணர்ந்ததை கூறி உணர வைக்க முயற்சிக்கலாமே!

குருநாதர்: அப்பா! இப்பொழுது வேண்டாம்! அப்பா! எப்பொழுது காலங்கள் கனிகிறதோ அப்பொழுது. இவை எல்லாம் ப்ரம்மாவிடத்தில் கேட்டுத்தான் யான் குறைக்கவேண்டும், சொல்லிவிட்டேன்!

அடியவர்: தலைகீழ் லிங்காயத்தை பற்றியுமே?

குருநாதர்; விசேஷங்கள் பல உள்ளது. பொறுத்திரு இதற்க்கு. நிச்சயம் சொல்வதில் இப்பொழுது!

அடியவர்; அது மட்டும், உண்மை புரிந்துவிட்டால், ஒருவனும், தவறு செய்யமாட்டான், திருட மாட்டான், நல்லவனாக மாறிவிடுவான்! அது வேண்டாம் என்பது அவருடைய நினைப்போ என்னவோ!

103. இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை உண்பதால் கர்மா/தோஷம் வருமா? 

குருநாதர்: அப்பனே, எதையாவது உட்கொள் அப்பனே. இதற்கு பதிலே இல்லை இப்பொழுது. 

104. இறைவன் தர்மம் உருவானவன்! அப்படியென்றால் யுகத்துக்கு யுகம், தர்ம விளக்கம் எப்படி மாறும்? இறைவன் குணம்  மாறிக்கொண்டே இருப்பாரா?

குருநாதர்: நிச்சயம் தர்மம் தான் இறைவன். அத்தர்மத்தின் வழியே யார் செலகின்றானோ, அவனுக்கு இறைவன் காட்சி கொடுப்பார், அருள் வழி நடத்துவர்.அவ்வளவுதான்!

அடியவர்: யுகத்துக்கு யுகம் தர்மம் மாறுகிறது!

குருநாதர்: நிச்சயம் இல்லை அப்பா! 

அடியவர்: யுகத்துக்கு யுகம் தர்மம் மாறுகிறது என புத்தகத்திலேயே எழுதி விட்டுள்ளார்கள்.

குருநாதர்: அப்பா! நிச்சயம் இதை நீ கேட்டிருக்கலாம். கலியுகத்தில் நிச்சயம் தர்மம் தலைகீழாக போயிருக்கவேண்டும் என்று கேள்விப்பட்டிருப்பாய். ஆளாவது புரிந்து கொண்டிருக்கலாம் அல்லவா? 

அடியவர்: தலை கீழாக போயிருக்கிறது என்றால், அதை கூறி உருவாக்கி கொண்டு வந்தது யார்?

குருநாதர்: நிச்சயம்! எல்லாம் இறைவன் செயல். அனைத்தும் நல்லதற்கே!

அடியவர்: அப்போ மாறுகிறது! உண்மை தானே!

105. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வணக்கம்.  அப்பா நாடியில் கடைசியாக இந்த மாதத்தில் வாக்கு மறுபடியும் தருகிறேன் என்று சொல்லுறீங்க. ஆனால் அதன்படி வாக்கு மறுபடியும் கிடைப்பதில்லை. குழப்பமும் மன வருத்தமும் ஏற்படுகிறது. எங்கள் மீதுள்ள தவறை மன்னித்து இதற்கு என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள் தந்தையே.

குருநாதர்: கர்மா வினைகள் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கிறது! அதனால், கர்மாவை, பாபத்தை எப்படி தொலைப்பது? நீங்கள் சொன்னாலும், பாபத்தை தடுக்க முடியுமா என்ன! யாங்கள்தான் தடுக்க வேண்டும்! அதனால்தான் நிச்சயம், குழந்தைக்கு வாங்கி தருகின்றேன்! வாங்கி தருகின்றேன்! என்று இழுத்து வந்து கொண்டு இருக்கின்றேன்! அவ்வளவுதான். பின் பாபத்தை தொலைக்கவைத்துக் கொண்டு இருக்கின்றேன், அவ்வளவுதான்.  

106. விந்திய மலையை குறுக வைத்து "யாம் திரும்பி வரும் வரை அவ்விதமே இருக்க!" என்று கூறி பொதிகை சென்ற அகத்தியர் பின்னர் ஒவ்வொரு முறையும் கைலாயத்துக்கு செல்லும் பொழுது விந்திய மலையை பார்த்து வழி அமைக்க வேண்டும் என்பதால், வேறு வழியாக சுற்றி கைலாசம் செல்வதாக பல புராணங்கள் கூறுகிறதே! அது போலத்தான் உங்கள் அடியவர்களுக்கு கொடுக்கிற வாக்குகளுமா? பின்னர் பதிலே உரைப்பதில்லையே! 

குருநாதர்: பதில் உரைக்கின்றேன் என்றுதான். இன்னும் பக்குவங்கள் ஏற்படுத்தித்தான் உரைக்க வேண்டும். அப்பக்குவங்கள் ஏற்படுத்தி கொடுத்தால் தான் அவர்களும் வாழ்வார்கள், அவரை சார்ந்தவர்களும் வாழ்வார்கள். மற்ற சித்தர்கள் வந்தால் தூக்கி எறிந்துவிட்டு செல்வார்கள். புசுண்டனும் சொல்கின்றான், மனிதர்களை திருத்துவது சாதாரணம் இல்லை என்று! ஒரு அடி கொடு என்று! யானோ, அதாவது சிறு வயதில் மிட்டாய் என்கிறார்களே அதை கொடுத்து காத்துக் கொண்டு இருக்கின்றேன்!  

107. அகத்தியர் என்கிற சொல் தமிழ் சொல் எனவும் அது அகம் + தீ (உள்ஒளி உடையவர்) என்றும் கூறப்படுகிறதே! உள் ஒளி உடையவர் என்பதால் அப்பெயர் உருவாயிற்றா?

குருநாதர்:எதை என்று கூற. "அ" முதல் "ன்" வரைதான் வாழ்க்கை ஒருவனுக்கு. "அ" முதல் "ன்" வரை ஒருவன் வாழ்க்கையில் எப்பொழுது கண்டங்கள் வரும் என விதியில் எழுதப்பட்டுள்ளது. ஆதலால், அனைத்தையும் எடுத்துரைப்பேன் வரும் காலத்தில்.  

108. கூட்டு பிரார்த்தனையை மிக எளிதாக ஆனால் சிறப்பாக செய்ய உங்கள் அடியவர்களுக்கு உரைக்கலாமே!

குருநாதர்: அதனால் தான் அடியவர்களை அடி அடி என அடித்துக் கொண்டு இருக்கின்றேன்! அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுக்கு தேவை. அனைவரும் என் பிள்ளைகளே!

109. பல ரிஷிகளும், முனிவர்களும் இறைவனிடம் வரம் வாங்கி வந்து மலர்களாக பிறந்து, இறைவன் திருவடியில் அல்லது மார்பில் விழுந்து மோக்ஷத்தை பெற வேண்டும் என வருகிறார்கள் என்று முன் உரைத்தீர்கள். எத்தனை உரைத்தும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், பூக்களை வாரி இரைத்து, மனிதனுக்கு பாதத்திலும், தலையிலும் போட்டு, பிணத்துக்கு போட்டு - ஏன் இதற்கெல்லாம் விடிவுகாலம் இல்லையா? உங்கள் அடியவர்கள் கூட எப்பொழுது உணரப்போகிறார்கள்? 

குருநாதர்: அப்பனே! பக்குவம் அடைந்தவர்கள்தான் இவர்கள். இன்னும் பக்குவம் அடைந்தபின் நிச்சயம் உரைக்கின்றேன்!

110. சமீபத்தில் வெளியான தகவலின்படி செவ்வாய் கிரகத்தில் Xenon-122 என்கிற ஒரு isotope நிறைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இயற்கையில் உள்ள தனிமம் அல்ல. ஆகவே செவ்வாய் கிரகத்தில் ஏதேனும் அணுஆயுதப் போர் நடந்து அங்கு வாழ்ந்த உயிர்கலழிந்ததா? என கூற முடியுமா? 

குருநாதர்:இன்னும் கிரகங்களை பற்றி உரைக்க இடைக்காடன் வருவான். அனைத்து கிரகங்களிலும் மனிதர்கள்/உயிர்கள் உண்டு. இதை ஏற்கனவே செப்பிவிட்டேன். பொறுமையாக இருந்தால் அனைத்தும் வரும்!

அடியவர்: எப்போ? வரும் வரும் என தள்ளிக்கொண்டேதான் சென்று இருக்கிறீர்கள்.

குருநாதர்:அப்பனே! அனைத்தும் சொல்லக்கொண்டேதான் இருக்கின்றேன்! அனைத்தும் நீயும் இட்டுக்கொண்டேதான் இருக்கின்றாய். அனைத்தும் வரும், வரிசையாக.

111. நவகிரகங்களுக்கு வீட்டில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய வைத்து அவர்களை ஒவ்வரு அடியவரின் வீட்டிலும் அமர வைத்த பெருமை உங்களையே சாரும்!

குருநாதர்: அப்பனே! எவை என்றாலும் சாரட்டும்!

112. ராவணனை இப்பொழுது ஏன் புகழ்த்தி முன்னுக்கு கொண்டு வருகிறீர்கள்?

குருநாதர்:அப்பா! அவ் அவ் சமயத்திற்கு, வந்தால் தான் உண்மை நிலை புரியும். அனைத்தையும் சரி செய்ய வேண்டும். அவனுக்கு எவ்வளவு பலம்! அடித்தால் தாங்க மாட்டார்கள் அப்பனே! அதனால் தான், வரும் காலத்தில் தீயோர்களை அழிக்க வேண்டும் அல்லவா? ராவணனை எடுத்து வந்தே ஆகவேண்டும். 

113. சில காலங்களுக்கு முன்னால் நவகிரகத்துக்கு விளக்கேற்றி வரச்சொன்னீர்களே! அவைகளின் போக்கு சரியாகிவிட்டதா?

குருநாதர்: அப்பனே! நீ ஏற்றவில்லை! இருந்தும் மற்றவர்கள் செய்ததால் அதை சரி செய்துள்ளோம். ஆசிரியன் நாளை பரீட்ச்சை வைத்தால், வந்து எழுத வேண்டும். அதைவிட்டு கேள்வி கேட்பதில் என்ன பயன்! வெற்றியோ, தோல்வியோ மதிப்பெண்களை யான் போடுவேன். 

114. அறிவு பலம் நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
 
குருநாதர்: அப்பா! நாள் ஒழுக்கத்துடன் இருந்தாலே போதுமானது!

115. எந்த ஒரு நல்ல விஷயம் செய்தாலும்சரி! அதில் மாந்த்ரீகம், ஏதோ ஒருவிதத்தில் வந்து புகுந்து விடுகிறது. அது ஏன் அப்படி!

குருநாதர்: அப்பனே! இதை பற்றி, யான் சொல்வேன் அப்பனே! கால, நேரங்கள் வந்து கொண்டு இருக்கிறது! அப்பொழுது இதைப்பற்றி சொல்வேன் அப்பனே! 

அடியவர்: நீங்கள் சொல்லி செய்கிற விஷயங்களில் நல்லசக்திகள், நல்ல விஷயங்கள்தான் உள்  நுழைய வேண்டும்.

குருநாதர்: இது நல் சக்திகளுக்கும், துஷ்ட சக்திகளுக்கும் உள்ள போராட்டம். இறைவன் படைத்தவன்!  இதை நீ எடுத்துரைக்க வேண்டும். ஈசன் உலகை படைத்தான். அதே போல் துஷ்ட சக்திகள், எங்களால் உருவாக்கப்பட்டவர்கள் மூலம் உலகை அழிப்போம் என்றன! அனைத்து புராணங்களிலும் பேசப்பட்டுள்ளது. அதனால் தான் நல்லோர்கள் சேவை செய்யும் பொழுது அசக்தி கெடுதலை அனுப்பி கெடுக்க செய்கின்றது. இவை எல்லாம் யூடுத்துரைக்க வேண்டும். இன்னும் மனிதருக்கு தெரிவதில்லை அப்பா! வாழ்க்கைப்பற்றியே! இதனால் தான், ஒரு நேர் சக்தி இருந்தால், அதை எதிர்க்க துஷ்ட சக்தி இருக்கும். இறைவனால் உருவாக்கப்பட்ட நல் சக்தியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. சொல்லிவிட்டோம் அப்பனே!  ஆகவே அதை காப்பாற்றி, துஷ்ட சக்தியை அழிக்கவே, யங்கள் வந்திருக்கின்றோம் அப்பனே! கேட்டார்களே! அங்கும் இங்கும் இருக்கும் சித்தர்கள் ஏன் வரவேண்டும் என? உங்களை காக்கத்தான்! ஆசிகள், ஆசிகள்!

அகத்தியப்பெருமானிடம் கேட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் நிறைவு பெற்றது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்திய திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!