வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நவகிரகங்களில், சனி கிரகத்தினால், மனிதர்கள் கடுமையாக பாதிக்க படக்கூடாது என்பதற்காக அகத்தியப்பெருமான் ஒருமுறை அருள்வாக்கில் நல்ல வழியை உரைத்தார். அதை செய்து பார்த்த பொழுது, அன்னம் தானமாக கொடுப்பதின் பலனை அடியேன் தத்ரூபமாக அனுபவித்ததினால், நண்பர்களுக்கு தெரிவித்து நல்ல பலனை அவர்கள் பெற்றதையும் கண்டேன். இன்று அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சனிக்கிழமையன்று ஒரு உள்ளங்கை நிறைய பச்சரிசியோ அல்லது அதை நன்கு பொடி செய்து மாவோ எடுத்து, சூரியன் உதித்தபின் நமஸ்காரம் செய்துவிட்டு, அரச மரத்தடியில் இருக்கும் விநாயகப் பெருமானை மூன்று முறை வலம் வந்து, அந்த அரிசியை/அரிசி மாவை மரத்தை/விநாயகரைச்சுற்றிப்போட் டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும். அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால், அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.
அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள், தமது மழைக் காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படிஇரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அது வலு இழந்து போய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, சனி மகா தசை நடப்பவர்களுக்கு, இது ஒரு மிகப் பெரிய வரப்ரசாதம் ஆகும். இதனுடன், உடல், ஊனமுற்றவர்களுக்கு காலணிகள், அன்ன தானம் அளிப்பது, மிக நல்லது.
இதை தொடர்ந்து செய்து வர பல தலைமுறைகளுக்கான புண்ணியத்தை நாம் எளிதில் சேர்த்துவிடலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..............தொடரும்!
Thank u very much sir.
ReplyDeleteOm lobha thayar samedha agasthiya peruman thiruvadigale potri.
வணக்கம்
ReplyDeleteஅரிசி குருனை சிறிது சர்க்கரை கலந்து கோவில் பிரகாரம் ஓரமாகப்
போட்டால் எறும்புகள் எடுத்துச்செல்ல
உதவியாக இருக்கும்,இதன் பலன் எனக்குத் தெரியாது.செய்து இருக்கிறேன்.உங்கள் தகவல் மூலம்
பலன் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி
அகத்திய மாமுனி போற்றி போற்றி
Thai tantaiku namaskaram.om Sri Lopamudra samata agastiyar thiruvadi saranam 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நம !
ReplyDeleteகுருவே சரணம் !
Om lobamuthra sametha agasthiyaha namaha.
ReplyDeleteYes , This was told in our jeeva nadi in coimbatore. We are following
ReplyDelete