​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 17 December 2020

சித்தன் அருள் - 969 - அகத்தியப்பெருமான், அனைவருக்கும் தெரிவிக்க சொன்ன தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

திரு.ஜானகிராமன் அவர்கள், அகத்தியரின் நாடி வாசிக்கிற தகவலையும், ஒவ்வொருவருக்கும் நாடி வாசிக்க முன் பதிவு செய்கிற முறையையும் சமீபத்தில் சித்தன் அருளில் தொகுப்பு 961 & 962 வழி தெரிவிக்கப்பட்டது.

முன் பதிவு செய்தவர்களில் பல அடியவர்களுக்கும் இன்று வரை நாடி வாசிக்கப்படாமல் போகவே, அடியேனுக்கு ஈமெயில் வழி தெரிவித்த கருத்தை, அவருக்கு அனுப்பி, ஏன் இத்தனை தாமதம் என கேட்ட பொழுது, தெரிய வந்த தகவலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

நிறைய அடியவர்கள் முன் பதிவுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், யாருக்கு நாடி வாசிக்க வேண்டும் என்பதை அகத்தியர், நாடியில் வந்து தெரிவு செய்பவருக்கு மட்டும்தான், தற்போது நாடி வாசிக்க முடிகிறது. பலரின் பெயரை கூறி உத்தரவு கேட்டாலும், அகத்தியப் பெருமான் மௌனம் காக்கிறார்.  இதற்கான காரணத்தை நாடியில் கேட்ட பொழுது, அவர் விவரித்ததை கீழே தருகிறேன்.

"அப்பனே! எமது ஆசியை, அருள் வாக்கை கேட்க முன் வந்திருக்கிற சேய்களின் கர்மா, அவர்களின் மனஎண்ணம், இவைகளில் இத்தனை வருடங்களாகியும், முன்னேற்றமே இல்லை. எத்தனையோ அறிவுரைகள் கூறிய பின்னும் தவறாய் வாழ்க்கையில் வாழ்வது, அதன் வழி கெட்ட கர்மாவை சேர்த்துக் கொள்வதில் திறமையானவர்கள் ஆகிவிட்டார்கள். பிற உயிர்களும் நம்மைப்போல் கர்மாவை கழிப்பதற்காக இந்த பூமியில் வந்தவர்கள்/வந்தவைகள்தான்  என, எந்த கெடுதலும் செய்யாமல் வாழ்வது மிக முக்கியம். ஆகவே, அருள்வாக்கு கேட்க விழைபவர், வாழ்க்கையை தவமாக நேர் முறையில் வாழட்டும். அதன் பின்னர் அவர்கள் விதி விலகி வழிவிட, அப்படிப்பட்டவர்களுக்கு யாம் வாக்குரைப்போம். அதுவரை எம்மை நாடும் சேய்களின் கர்மாவை அவர்களே சரி செய்துகொள்ளட்டும்" என்றார்.

மேலும் கூறுகையில் "எமது நாமத்தை கூறிக்கொண்டே தவறு செய்கிறவர்கள், எமது நாமத்தை கூறி, வியாபார பொருள் போல் உபயோகிப்பதையும் யாம் அறிவோம். அவர்களுக்கான பலனை, யாமே முன் நின்று கொடுப்போம்" எனவும் கூறினார்.

"நிழல் ஒளியுள்ளவரை
உயிர் மூச்சுள்ளவரை
ஆசை அறுந்து போகும்வரை
குரு கடைசிவரை
இறை உள்ளொளி வரை
இதை உணர்ந்திடு மானிடா!"

மேற்கூறிய வார்த்தைகளின் அர்த்தம் உங்கள் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

இனி இங்கு தனிப்பட்ட ஒவ்வொருவரின் கர்மாதான், நாடியில் அகத்தியரின் அருள்வாக்கை தீர்மானிக்கும். ஒவ்வொருவரும், தங்கள் செயல்களை, எண்ணங்களை பரிசீலனை செய்து சீர்படுத்தி, நேர்மையாக வாழ்ந்து, அகத்தியரை நினைத்து விளக்கேற்றி, தவமிருந்து, அவரே உங்களை அழைத்து அருள் செய்யும்படி வேண்டிக் கொள்ளுங்கள்.

எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ அப்படி வாழ்ந்து வாருங்கள். புண்ணியம் சேர்ந்து, விதி விலகி வழி விட, அகத்தியப்பெருமானே உங்களை தேடி வருவார். அதுவரை, பொறுமையாக இருப்பதை தவிர வேறு வழி இல்லை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


சித்தன் அருள்....................தொடரும்!

19 comments:

 1. ஓம் அகத்தீசாய நமஹ
  ஓம் அகத்தீசாய நமஹ
  ஓம் அகத்தீசாய நமக
  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 2. True sir. Om sri lobamudra thayar samedha agasthia peruman thiruvadigale potri.

  ReplyDelete

 3. ஓம் அகத்தீய பெருமானே சரணம்
  ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

  ReplyDelete
 4. நம் வாழ்வில் தேவையான ஆன்மீக ரீதியான முன்னேற்றத்திற்கும், உலகியல் ரீதியான முன்னேற்றத்திற்கும் ,தேவையான அனைத்து செய்திகளும் சித்தன் அருளில் உள்ளன.
  பதிவுகள் அனைத்தையும் நிதானமாக உள்வாங்கி படித்தால் நம் வாழ்வில் ஏற்படும் அத்தனை சந்தேகத்திற்கும் இன்னல்களுக்கும் விடை தெரியும் அதிகப்படியாக கூறப்போனால் சித்தனருள் வாசிப்பவர்கள் நாடியை கூட தேடிச் செல்லத் தேவையில்லை,. தேவையான அத்தனை விஷயங்களும் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். சித்தன் அருளில் பதிவிட்டுவதுபோல் நாம் அனைவரும் நல்வழியில் செல்ல வேண்டும் ..

  மிக முக்கியமாக என்றும் நாம் மூவருக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் முதலாவது ஹனுமத்தாசன் ஐயா மற்றும் கார்த்திகேயன் ஐயா அக்னிலிங்கம் அருணாச்சலம் ஐயா , (இறைவனுக்கும் அகத்திய பெருமானுக்கு என்றென்றும் நன்றி)

  ஓம் அகத்தீசாய நம (தவறாக ஏதாவது இருந்தால் அகத்திய அடியவர்கள் மன்னித்துக் கொள்ளவும்)

  ReplyDelete
  Replies
  1. உண்மை! சித்தன் அருள் வலைப்பூவில் எங்கெல்லாமோ. புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள எளிய வழி முறைகள் அகத்தியப்பெருமான் கற்பித்தது/உரைத்தது கூறப்பட்டுள்ளது. மனம் ஒன்றி அதைப்படித்து, அவரவர் வாழ்க்கையில் நடைமுறை படுத்திக்கொள்ளுங்கள். வெறும் கதையை படிப்பதுபோல் படிப்பதில் அர்த்தம் இல்லை. அகத்தீசா என்று வாய்விட்டு கூறி ஜபம் மட்டும் செய்வதில் அர்த்தம் இல்லை. ஒவ்வொரு சூழ்நிலையிலும் செயல்படும் முன் ஒரு நிமிடம், இந்த சூழ்நிலைக்கு எப்படி செயல்பட வேண்டும் என அகத்தியர் உரைத்துள்ளார் என யோசித்து செயல் பட்டால், அவரே ஓடி வந்து நம்மை கைதூக்கி விடுவார். அதை புரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

   எங்கெல்லாமோ தேடி ஒரு நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்வது , விழலுக்கு இறைத்த நீராக போகிறது என்று உணரும் பொழுது, இப்படி உரைப்பது தேவையா, நாம் மட்டும் உணர்ந்து கொள்வோம், அது போதும் எனத்தான். அடியேனுக்கு தோன்றுகிறது! 

   Delete
  2. நன்றி அய்யா🙏🙇‍♂️ ஓம் அகத்தீசாய நம

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  ReplyDelete
 6. Hi Sir,

  One small request: Is this the same naadi which was with Hanumandasan Ayya? Where it was all these days? Thappa ketrinthal mannikavum. Avar mel iruntha avalil kettu viten. I had read all the Hanumandasan Sir's episodes in Naadi Sollum kathagal and also in this blog. Great man and great soul.

  ReplyDelete
  Replies
  1. NO. ITS NOT THAT. IT BELONG TO HIS FATHER, WHO DID POOJA DAILY.

   Delete
 7. ஓம் அகத்தியர் திருவடி போற்றி

  ReplyDelete
 8. ஓம் அகத்தியர் திருவடி போற்றி

  ReplyDelete
 9. ஓம் அகத்தியர் திருவடி போற்றி

  ReplyDelete
 10. ஐயா அன்பு வணக்கங்கள்,
  ஓம் அகத்தியரே போற்றி! ஓம் லூபா அம்மா போற்றி! ஐயா முதல் முறை தினத்தந்தியில் குரு பிரான் அருள் வாக்கு ஹனுமந்தாச ன் ஐயா எழுதிய பொது நாடி கேட்க என்ன செய்வது என்று புரியவில்லை. பிறகு 18 சித்தர் களுக்கு 18 தீபம் , 18 நாள் ஏற்றினேன் ஐயா. உடனே நாடி பார்ப்பதற்கு வழி கிடைத்தது. அனுமந்தாச ன் ஐயாவும் உடனே நாடி படிக்க தேதி கொடுத்தார் .குரு அருள் நாடி மூலம் வழி சொன்னார் . ரொம்ப சந்தோசம் அடைந்தோம் ஐயா. தாங்கள் விளக்கு ஏற்றி வழிபட சொன்னது போல் செய்தே குரு அருள் பெற்றோம் ஐயா. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன் ஐயா, அம்மா.

  ReplyDelete
 11. சித்தன் அருள் வலைத்தளத்தில் படித்து தான் குருநாதர் திருவருளை நாங்கள் பெற்றோம்.. அனுதினமும் அவரை வணங்குவது மட்டுமல்லாது அவர் காட்டிய நற்பாதையில் நடக்கிறோம்..அவர் அருள் வாக்கினை உணர்ந்து செயல்படுவோம்.. .நம் கர்மவினைதீர குருநாதர் உரைத்ததை முடிந்த வரை செய்வோம்... நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் குருநாதர் கவனிக்கிறார் என்று நினைத்தாலே போதும்... நாம் நல் வழியில் திரும்புவோம்.. வழிகாட்டியாக வழித்துணையாக குருநாதர் இருப்பதை நினைத்து செல்லும் வழியில் நல்லதே நடக்கும்.. யானைக்கும் ஒரே பசிதான் எறும்பிற்கும் ஒரே பசிதான் தினமும் அன்னதானம் வழங்க நமக்கு முடியாவிட்டால் மீன்களுக்கு பொரியும் எறும்புகளுக்கு இனிப்பு தர நம்மால் முடியும். நம் கர்மவினைதீர தர்மசிந்தனை தர்ம காரியங்கள் செய்ய குருநாதர் நமக்கு வேண்டி கூறியதை கடைபிடிப்போம்... எங்களுக்கு குருநாதர் ஆசிகிடைக்க செய்த சித்தன் அருள் வலைத்தளத்திற்கும் திரு கார்த்தி கேயன் அய்யா அவர்களுக்கும் திரு அக்னிலிங்கம் அருணாச்சலம் ஐயா அவர்களுக்கும் தன் ஜீவநாடி வாசிப்பு அனுபவத்தினால் குருவின் திருவருளையும் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று உரைத்த மகான் ஹனுமத்தாசன் அய்யா அவர்களுக்கும்.. தன் சேய்கள் நலன் கருதி மீண்டும் குருநாதர் வாக்கு உரைக்க வந்து தேர்ந்தெடுத்து அவரின் ஆசிகள் கிடைக்க செய்யும் திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் நமஸ்காரங்கள். ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏

  ReplyDelete
 12. Guru paadhame sri charanam...Guruve sarvalokanam.Thangalai pondra irai arul mikka mandihargal arugil irupadhe engalin perum bakkiyam dhaan.Oru murai jeeva naadiyile agathiyar vakku sollu podhu ivvaru vamndhadhu "ikkataaana soolnilai varum podhu ikkattinai(naadi nool) ninaithu kol" ...Loga shemathaukkaga neengal seiyum kaariyangal potra padavendiyavai iyya....

  ReplyDelete
 13. “The human birth – is very rare to obtain. Everyone has to depart one day. The Lord has not only given us brain and power, but has given the ability to forgive as well. Whoever commits a mistake, if one forgives them with magnanimity, the sins committed by them in their previous births becomes nullified. If one remains without doing any sin, with an understanding that everything is God’s act or that we are going through the effect of past karma, and does all possible good deeds and prays to God right from the tender age, that one accumulates Punya. Evil thoughts, anger, frustration, jealousy etc will not touch these. Thereby, even if others commits a mistake, they won’t feel like punishing them.

  “Whoever comes looking for me (Nadi – the Tamil word also means, to look for, to search), I will help them. But I won’t go out myself to change their fate. I do not have such a power because, I have to be trusted. My beloved sons, those who read the Jeeva Nadi, they are to be believed as well. Those who read the Nadi, should convey “what exactly” I say through these glowing letters, without altering even a single word. They should not charge anything for this. At the same time, if those who are blessed to receive such a reading offers something out of their desire, it can be accepted. But nothing should go beyond a limit. Most importantly, no one should threaten others by saying My name.

  To those who think of earning money with my Jeeva Nadi, I won’t appear as the Light of Life to them” –
  These are words from gnanbbomi(english with than arul)
  Myself Nitin Zaveri ,I am from Aurangabad Maharashtra.I am translating these blog throgh translator app .After reading about jangiraman ji I had called him and my jeev naadi reading done and our gurunathar and lobmudra mata (amma)bestowed shower of love and grace to me.I just want to say wholeheartedly surrender to our beloved gurunathar,.🙏

  ReplyDelete