​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 16 November 2019

சித்தன் அருள் - 825 - அகத்தியரின் அனந்தசயனம்!


நித்ய அனுஷ்டானங்கள் பூஜைகளை பத்மநாபாருக்கு செய்துவிட்டு, மஹாராஜா, ப்ரச்னம் பார்ப்பவர், கோவில் பூஜாரி, அதிகாரிகள், கோவிலில் வேலை பாப்பவர்கள், ஊர் மக்கள் என அனைவரும், ஆவலுடன் காத்திருந்தனர், கிழக்கு வாசலை நோக்கியபடி. 

வெளியூரிலிருந்து, பத்மநாபரை தரிசிக்க வருபவர்கள், பொதுவாக, கிழக்கு வாசல் வழியாகத்தான் உள்ளே வருவார்கள்.

சரியாக, 8.30 மணிக்கு ஒரு சிறுவனுடன், நடுத்தர வயதை எட்டிய ஒருவர் கோவிலுக்குள் நுழைந்தார்.

அவர்கள் வருவதை கவனித்த மகாராஜா, கோவிலின் உயர் அதிகாரியை நோக்கி தலையசைத்தார்.

உயர் அதிகாரி, உடனேயே முன் சென்று, சிறுவனுடன் வந்த பெரியவரிடம், "சற்று நில்லுங்கள், எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று வினவினார்.

"ஹைதராபாத், ஆந்திரா மாநிலத்திலிருந்து பத்மநாபரை தரிசிக்க வந்திருக்கிறோம்" என்றார், அவர்.

பதிலை கேட்ட அதிகாரி, மகாராஜாவை நோக்கி "ஆம்!" என்பது போல் தலையசைத்தார்.

அவர்களை அழைத்து வருமாறு மகாராஜா சைகையால்,உத்தரவிட்டார்.

அருகில் வந்த பெரியவரையும், சிறுவனையும் உற்று பார்த்த மகாராஜா, மீண்டும் ஒரு முறை "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார்.

முன்னர் கூறிய அதே பதிலை வந்தவர் கூறினார்.

பதிலை கேட்ட, மகாராஜா, அர்த்தத்துடன், ப்ரச்னம் பார்ப்பவரை நோக்க, அவரும் கை கூப்பி  "எல்லாம் பத்மநாபர் விருப்பம் போல்" என்றார்.

உடனே மகாராஜா, அந்த பெரியவரை நோக்கி, "உங்கள் மகனை ப்ரச்னம் பார்க்க உதவிக்கு எடுத்துக் கொள்ள சொல்லி, இறைவன் உத்தரவிட்டிருக்கிறார். உங்களுக்கு சம்மதம்தானே?" என்றார்.

இறைவன் உத்தரவிருந்தும், கேட்பவர் மகாராஜாவாக இருந்தாலும், இறைவன் வேலைக்கு உதவி கேட்கும் பொழுது, அவர்கள் சம்மதத்தை கேட்டுத்தான் செய்யவேண்டும். அப்படி எஜமானன் நடந்து கொண்டால்தான் ப்ரச்னம் உண்மையை தெளிவாகக் காட்டும். இதெல்லாம் ப்ரஸ்ன விதியில் உள்ள கட்டுப்பாடுகள்.

ஆச்சரியத்துடன் உண்மையை உணர்ந்த, சிறுவனின் தகப்பனார், மகன் சார்பாக சம்மதம் தெரிவித்தார்.

"உங்கள் மகன் குளித்து புது ஆடை அணிய வேண்டும். வாருங்கள்!" எனக்கூறி இருவரையும் உயர் அதிகாரி, மகாராஜா அனுமதியுடன், கோவிலினுள் தனி இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அனைவரும் அரை மணி நேரம் காத்திருந்தனர்.

சிறுவன் தயாராகி வந்ததும், ப்ரஸ்னர் மஹாராஜாவிடம் உத்தரவு கேட்டார்.

அவர் அனுமதி கொடுத்ததும், ப்ரஸ்ன விதிகளின்படி மந்திரோச்சாடனம் நடந்தது.

விக்னேஸ்வரர், கோவில் காவல் தெய்வங்கள், அஷ்டதிக் பாலகர்கள்,ப்ரஸ்ன தேவதை, இறைவன் ஆகியோருக்கு பூசை செய்து அனுமதி பெற்றுக்கொண்டபின், ப்ரச்னம் பார்ப்பவர், அந்த சிறுவனை அழைத்தார்.

அந்த சிறுவனின் கைகளில் நான்கு சோழிகளை கொடுத்து, "உன் மனத்தால் பிரார்த்தித்து, உனக்கு இந்த 12 கட்டங்களில் எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் வைக்கலாம். அது உன் விருப்பம்!"என்றார்.

அவர் கொடுத்ததை பெற்றுக்கொண்டு, தரையில் வரையப்பட்டுள்ள களத்தை [ஜாதக கட்டம்] உற்று நோக்கியபடி, அவருக்கு எதிர்புறம் வந்து நின்றான், அந்த சிறுவன்.

கண்மூடி தியானித்து, கையிலிருந்த சோழிகளை, தன் இடது கால் பக்கத்தில் இருந்த ஒரு கட்டத்தில் வைத்தான். நான்கு சோழியில் ஒன்று விலகி ஓடியது. அதை உடனேயே பிடித்து மற்ற மூன்றுடன் சேர்த்து வைத்தான்.

நடந்தவைகளை உற்று நோக்கியபடி இருந்த ப்ரச்னம் பார்ப்பவர், மிகுந்த கவலையுற்று, மகாராஜாவை நிமிர்ந்து பார்த்தார்.

மகாராஜா "பரவாயில்லை! தொடருங்கள்!" என சைகையால் உணர்த்தினார்.

அவரது சிஷ்யர்கள் 22 பேரும் களத்தை அமைதியாக உற்று நோக்கியபின், தங்கள் ப்ரஸ்ன விதியை ஒரு காகிதத்தில் வேகமாக எழுதினர்.

அந்த சிறுவன் சோழிகளை வைத்த முதல் களம், கோவிலின் ப்ரஸ்ன விதி ஜாதகத்தின் லக்னம் எனப்படும். அதுவே ஜீவன்.

நடந்தது என்ன? நிலைமை எப்படி உள்ளது என்பதை அறிய, நுழைய வேண்டிய, நுழைவு வாசல்.

சிஷ்யர்கள் எழுதி முடிக்கும் வரை எங்கும் அமைதி நிலவியது.

மகாராஜாவும், ப்ரச்னம் பார்ப்பவரும் சற்று தளர்ந்து போயினர்.

ஏன் என்றால், ப்ரஸ்ன விதிக்கு லக்கினமாக அந்த சிறுவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட களம் - "விருச்சிக ராசி". இந்த ராசியை ஜோதிட விதிப்படி "யுத்த ராசி" என்பார்கள். உருவாகப் போகிற ப்ரஸ்ன புருஷனுக்கு, தலையாக, ஆத்மாவாக, விருச்சிக ராசி அமைவது, நல்ல சகுனமல்ல.

ப்ரச்னம் பார்ப்பவர், சிறுவனை இரண்டாவது முறையாக அருகில் அழைத்து, நான்கு சோழிகளை கையில் கொடுத்து, மௌனமாக சைகை காட்டினார்.

சிறுவன் களத்தை சுற்றி நடக்கத் தொடங்கினான்!

சித்தன் அருள்............... தொடரும்!

19 comments:

  1. Om Agatheesaya Namaha
    Om Namo Narayanaya Namaha

    ReplyDelete
  2. ஐயா வணக்கம், எங்க வீட்டுக்காரருக்கு உடல்நிலை சரியில்லை.அவர் பூரணமான குணம் அடைய பிரார்த்தனை ஐயா. மிக்க நன்றி. ஓம் அகத்தியர் ஐயன் திருவடிகள் போற்றி! அம்மா திருவடிகள் போற்றி!

    ReplyDelete
    Replies
    1. அகத்தியப்பெருமானிடம் பிரார்த்தனையை சமர்பித்துள்ளேன்! பூரணநலமடையட்டும் அவர்.

      Delete
  3. ஐயா,
    அகத்தியப் பெருமானின் அருளால் எனக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.

    இந்த நேரத்தில் கடந்த வருடம் பால்கட்டிப் பிரசாதம் அனுப்பிய தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த வேலையில் சிறப்புறவும், இனி வரும் தேர்வுகளில் வெற்றி பெற்று வாழ்வில் முன்னேறவும் தங்கள் ஆசி வேண்டி மனமார தங்கள் பாதம் பணிகின்றேன்.

    ஆசிர்வதியுங்கள் ஐயா. மிக்க நன்றி.

    கோபிநாத் மருதை

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள். அரசு வேலை, நிரந்தர வேலை. இதில், சேர்ந்தபின் மிக மிக நேர்மையாக நடந்துகொண்டு, அத்தனை வறியவர்களுக்கு, உங்களால் இயன்ற சேவையை செய்வதே, அகத்தியருக்கு நீங்கள் செய்யும் மரியாதை ஆகும்.எதற்கும் அகத்தியர் கோவில்சென்று நன்றி தெரிவித்து விடுங்கள்.

      Delete
    2. தங்கள் பதிலைத் தற்போது தான் படித்தேன். தாமத்திற்கு மன்னிக்கவும். நிச்சயமாக ஐயா தாங்கள் சொல்வதை பின்பற்றுகிறேன். இன்று உத்துமலை முருகன் கோவிலில் உள்ள அகத்தியருக்கு தீபம் ஏற்றினேன். இன்று ஆயில்ய நட்சத்திரம். இதுவும் அகத்தியப் பெருமானின் பேரருளே. மிக்க நன்றி ஐயா.

      Delete
  4. நன்றி ஐயா....

    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்.
    பால்கட்டிப் பிரசாதம் வேண்டி தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

    Yogeshwaran V

    ReplyDelete
  6. அய்யா தற்போது அந்தியூரில் ஜீவ நாடி வாசிக்க ப்படுகிறதா? தகவல் தெரிந்த அன்பர்கள் தயவு செய்து பதிவிடவேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் .அந்தியூரில் தற்பொழுதும் ஜீவநாடி வாசிக்கப்படுகிறது.முன்பதிவு செய்வது நன்று.காலை 11 மணி முதல் 1 மணி வரை தொலைபேசில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்வது நல்லது.மேலும் தகவல் வேண்டும் என்றால் தெரிவிக்கவும் . ஓம் லோபாமுத்ரா அம்மா சமேத அகஸ்தியர் ஐயா போற்றி.ஓம் ஓதியப்பர் போற்றி.

      Delete
    2. ௐ ஶ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தியர் அருளால் feb 1 ல் ஞானஸ்கந்த மூர்த்தியாகிய முருகப்பெருமான் ஜீவநாடி வாசிப்பு இறையின் அடியவள் குடும்பத்திற்கு கிடைத்தது.மிக்க நன்றி அய்யா.

      Delete
  7. மிக்க நன்றி அய்யா . தகவல்மற்றும் phone number தாருங்கள் அய்யா
    அந்தியூர் முருகன் ஜீவநாடி கேட்க

    ReplyDelete
    Replies
    1. ஜீவ நாடி முன்பதிவு செய்ய தொலைபேசி எண் : 9865848488 .காலை 11 மணி முதல் 1 மணி வரை தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம். ஈரோட்டில் இருந்து அந்தியூர் செல்ல பேருந்தில் 1 மணி நேரம் ஆகும் .அந்தியூரில் இருந்து மந்தை எனும் இடத்தில அமைந்துள்ள முருகர் கோவிலில் ஜீவ நாடி படிக்க படுகிறது .அந்தியூரில் இருந்து 6km தொலைவில் ஜீவ நாடி வாசிக்கும் இடம் அமைந்துள்ளது . ஓம் லோபாமுத்ரா சமேத அகஸ்தியர் அய்யா திருவடிகள் போற்றி .ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி .

      Delete
  8. my native place theni. anthiyur jeeva nadi 2 times keduruken.eppothu jeevanadi kekavendum ayya pls details and phone number.அகத்தியர் உண்டு.

    ReplyDelete
  9. ayya i am theni. kindly send Anthiyur jeevanadi details and phone number

    ReplyDelete
  10. மிக்க நன்றி அய்யா .

    ReplyDelete
  11. ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை
    அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.


    ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி கண்டோம். இது ஒரு துளி மட்டுமே. காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. இதற்கு முந்தைய பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். மீண்டும் தொடர்வதோடு அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டும் இந்தப் பதிவை பகிர்கின்றோம்.

    ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தர் மூர்த்தியின் அருளாசியால் நம் குருநாதரின் திருக்கரத்தால் ஏற்கனவே "ஜீவ நாடி அற்புதங்கள் " இந்த தொடரில் இடம் பெற்றுள்ளது.
    Read more - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

    குருவின் தாள் பணிந்து,

    ரா.ராகேஷ்
    கூடுவாஞ்சேரி

    ReplyDelete