வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இறைவன் அருளால், 2018ம் ஆண்டு 12.10.2018 முதல் 23.10.2018 முடிய தாமிரபரணி மகா புஷ்கரவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆண்டு (2019) குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்வதால் அதற்குரிய பிரம்மபுத்திரா நதியில் புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக *தாமிரபரணி மகாபுஷ்கரத்தின் நிறைவு* நிகழ்ச்சியாக "தாமிரபரணி அந்திம புஷ்கர விழா" 1.11.2019 முதல் 4.11.2019 முடிய நடைபெற உள்ளது.
இந்த விழா நெல்லை குறுக்குத்துறை, திருப்புடைமருதூர் ஆகிய பகுதிகளில் நான்கு நாட்கள் வேதபாராயணம், நதிபூஜை, நதி நீராடல், சிறப்பு பூஜைகள் ஆகியவையுடன் நடைபெற உள்ளது. விழாவில் மடாதிபதிகள் கலந்து கொள்கிறார்கள். விழாக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
தாமிரபரணி புஷ்கர விழாவின் தொடக்கத்தில் கலந்துகொள்ளவேண்டும் என ஆசைப்பட்டு, பின்னர் முடியாமல் போன அகத்தியர் அடியவர்களுக்கு, இந்த ஜென்மத்தில் கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு. 01.11.2019க்கும் 04.11.2019க்கும் இடையில் ஒருநாள் சென்று தாமிரபரணியில் ஸ்நானம் செய்து, இறை அருள், உன்னத நதியாம் தாமிரபரணியின் அருள் பெற்று நலமாக வாழ வேண்டுகிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் நமஸ்காரம்!
சித்தன் அருள்................ தொடரும்!