​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 4 July 2019

சித்தன் அருள் - 815 - நோயிலிருந்து விடுதலை பெற்றுத் தரும் சுலோகம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்க்கத்தில் எளிய மருத்துவம்" என்கிற தலைப்பில், "கண்டமாலை" என்கிற "கான்சர்" குணமாக இறை அருள் வேண்டும் என்று தெரிவித்ததை தொடர்ந்து, பல அடியவர்கள், நோய் குணமாக இறை அருளை தேடி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தூய்மையான சரணாகதியும், மனம் நெகிழ்ந்த பக்தியும் போதும் என்பதே உண்மை ஆயினும், அடியேன் ஒருவரது விஷயத்தில் தெரிவித்து, அவர்களும் தொடர்ந்து ஒரு ஸ்லோகத்தை ஒரு மண்டலம் (48 நாட்கள்) நம்பிக்கையுடன் ஜெபித்து வெற்றி பெற்றதையே, இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

நாராயணீயம் என்று ஒரு மிகப்பெரிய ஸ்லோகத் தொகுப்பு உண்டு. குருவாயூரில் உறையும் கிருஷ்ணரை ஆராதனை செய்து இயற்றப்பட்டது. இது 100 தசகங்களை (அத்தியாயங்களை) கொண்டது. இதில், 8வது தசகத்தில், 13வது சுலோகம் மிக மிக சக்தி வாய்ந்தது. அதை கீழே தருகிறேன்.

அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே 
த்வமிதமுத்தபித பத்மயோனிஹி

அனந்த பூம மம ரோக ராஷிம்
நிருந்தி வாதலய வாச விஷ்ணோ!

உச்சரிப்பு சரியாக தெரிய வேண்டும் என்று விரும்புகிறவர்கள், கீழே உள்ள வீடியோவை பாருங்கள், மனப்பாடம் பண்ணிக்கொள்ளுங்கள்.


மேற்கண்ட இந்த ஸ்லோகத்தை ஒரு நாள் 48 முறை, என்று 48 நாட்கள் ஆத்மார்த்தமாக ஜெபித்தபின் எந்த வியாதியாயினும், "உள்ளது" என்று எழுதித்தந்த மருத்துவர் கையாலேயே, இனி "இல்லை" என்று எழுத வைக்க முடியும். அப்படி மிக சக்தி வாய்ந்த மந்திரம். இதை இறை நம்பிக்கையுடன், எந்த வியாதியால் பீடிக்கப்பட்டவரும், ஜெபித்து வர,  நிச்சயம், சீக்கிரமாக குணமடைய முடியும்.


ஸ்ரீ காஞ்சி பெரியவர் அவர்களே, இந்த ஸ்லோகத்தை, பலருக்கும், அவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற, தனிப்பட்ட முறையில் உபதேசித்துள்ளார் என்பதிலிருந்து, இந்த ஸ்லோகத்தின் அருமையை உணர்ந்து, அனைவருக்கும் தெரிவியுங்கள், பகிருங்கள்.

ஓம் ஸ்ரீ லோபமுத்திரா சமேத அகத்தீசாய நமக!

சித்தன் அருள்..................... தொடரும்!

15 comments:

  1. ஐயா... அகத்தியர் அய்யன் அருள் கிடைக்க குடுத்து வைத்து இருக்க வேண்டும்...
    ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி

    ReplyDelete
  2. உண்மை நான் இதை உபயோகித்து வருகிறேன். எந்த நோயாக இருந்தாலும் பலன் கிடைக்கும்...

    ReplyDelete
  3. நன்றி ஐயா. குரு துணை இருக்கும் போது வேறு என்ன வேண்டும்.

    ReplyDelete
  4. ஓம் ஸ்ரீ லோபமுத்திரா சமேத அகத்தீசாய நமக!

    ReplyDelete
  5. Om Sri lopamudra samathe agastiyar thiruvadi pottri .

    ReplyDelete
  6. திரு அக்னிலிங்கம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
    காஞ்சிபுரம் தேவராஜஸ்வாமி திருக்கோவில் அத்திவரதர் வைபவம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெறுகிறது. இது 40 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் வைபவம். இதைப்பற்றி இவ்வலைத்தளத்தில் பதிவிட்டால் அன்பர்கள் பயன்பெறுவர்கள்.
    ரா.நரசிம்மன்

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்கிறேன். அதற்கு முன், இந்த பதிலை படிக்கும் ஒவ்வொருவரும், தயவுசெய்து, சிரமம் பார்க்காமல், அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என நினைத்து இப்பொழுதே சென்று அவர் ஆசியை, தரிசனத்தை பெற்றுவிடுங்கள்.

      Delete
  7. ஓம் அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  8. Ayya vanakam.neeingal sonna barli wheat kasayam seidu ullan. Three days ana udan mele konjam knorai vantu ullatu.appaditan irrukuma.lilai preparation mistakea.pls answer sollunga.

    ReplyDelete
    Replies
    1. நுரை வரும், புளிக்கும், ஆனால் கெடுதல் எதுவும் செய்யாது. இறையை வேண்டிக்கொண்டு மருந்தாக உபயோகிக்கவும். குறைகள் ஏதும் இல்லை.

      Delete
  9. Sri lopamudra samata agastiyar thiruvadi pottri.mikka nandri ayya.

    ReplyDelete
  10. Sir can I chant these mantra for my father

    ReplyDelete
  11. Hello Sir, Shall we reciet it for mental illness. I have bi polar mood disorder for the past 20 years.

    ReplyDelete