​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 5 July 2018

சித்தன் அருள் - 761 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


[தவத்திரு தங்கராசன் அடிகளார், இறைவனுடன் ஒன்று கலந்துவிட்டார் என கேள்விப்பட்டேன். அகத்தியருக்கும், அவர் அடியவர்களுக்கும், இறைவனுக்கும் எத்தனையோ உயர்ந்த தொண்டினை செய்து வந்தவர். அந்த புண்ணிய ஆத்மா இறைவனுடன் கலந்து மோக்ஷமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்! இவ்வுலகில் அந்த ஆத்மாவுக்கு இனி ஒரு பிறவியை கொடுக்காதீர் இறைவா என அடியேன் மனம் வேண்டிக்கொள்கிறது! இனி எளிய அறிவுரைகளுக்கு செல்வோம்.]

அவர் மேலும் தொடர்ந்தார்.

இலக்கணமே, குறளாயிற்று! 

தன் பசி, தன் வேதனை உணர்ந்தவனுக்குத்தான் அடுத்தவனுக்கு பசிக்கும், வலிக்கும் என்று உணர முடியும்.

தமிழை, முருகோனை தயையுடன் உபயோகியுங்கள். உங்கள் நாவில், வாக்கில் சுப்ரமண்யன் உறைவான். உங்களை எப்பொழுதும் சித்தர்கள் சுற்றி நின்று காப்பார்கள்.

வாழ்க்கை நன்றாய் அமைய, வாக்கில் தெய்வம் குடியிருக்க வேண்டும்.

உணர்வை கட்டிப்போட்டு, உயர்ந்த நிலைக்கு வழிமாற்று. ஆனால் எதையும் கட்டிப்போட்டு வளர்க்காதே! அது உனக்கு நீயே சேர்த்துக்கொள்ளும் எதிர்கால சிறைவாசம்!

சேர்த்துக் கொண்ட கர்மா, கரையக் கரைய, புற்றுமண் கரைந்து நாகம் வெளிப்படுவது போல், இறைவன் உன்னுள்ளே தோன்றுவான்.

அன்னம் தானமாயினும், அது நாராயண சேவை! ஆத்மா நீங்கிய உடல் அக்னிக்கு கொடுக்கினும், அது சிவபெருமான் சேவை.

இவ்வுலகில், நிலையானது என ஒன்றில்லை, இறைவதனைத்தவிர.

எண்ணம் இலை மறை காயாய் இருந்தாலும், இறை வாசம் இருந்தால்தான், கனியும்.

பஞ்சதாயன பூசையில் சுப்ரமணியன் எங்கு போனான் என்று தேடுபவனுக்கு, "பராபரம்" எளிதில் காட்டப்படும்!
 
சின்முத்திரை தத்துவமாகு; சிதறிய வாழ்க்கை, ஒன்று சேரும்!

நெல்மணியாய் விளைந்து நில், பவ்யமாய் வளைந்து நில். உன்னுள்ளே "அரிசிவமாய்" இறைவன் இருப்பான்.

எங்கும், இனிப்பே கசப்பானது, காரமே, புளிப்பானது.

வியாதிக்குள் கர்மா மறைந்திருப்பதுபோல், பசிக்குள் கர்மா தகிக்கப்படுகிறது. வயிற்றில் நித்தமும் கர்மா தகனம் நடக்கிறது.

இப்படி அவர் கூறிக்கொண்டே செல்லச்செல்ல, கேட்ட நானே அசந்து போனேன். அத்தனையும் ஞாபகத்தில் வைக்க முடியுமா என்ற  எண்ணம் தோன்றியது. அதை புரிந்து கொண்டாற்போல், சிரித்தபடியே நிறுத்தினார்.

"சரி! "தலை கீழ் லிங்கத்தைப்" பற்றி பார்ப்போம்!"  என்றார்.

"சிவயோகிகள், த்யானத்தில் அமர்ந்து, தங்கள் சஹஸ்ராரத்தில் இறைவன் திருவடியை தியானித்து இருப்பர். தியானத்தின் உச்சநிலையில், திருவடி மறைந்து ஒரு லிங்க ரூபமாக மாறும். மேலும் தொடர்ந்து த்யானத்தில் அமர்ந்திருக்க, அந்த லிங்கமானது, அவரின் உள் பாகத்தை நோக்கி, மெதுவாக திரும்பும். இதை "விளைதல்" என்றும் கூறலாம். பயிர் விளைந்து நெல் மணி தோன்றும் பொழுதுதானே தலை சாய்க்கத் தொடங்கும். அதுபோல் தவத்தின் வலிமை கூடக்கூட, இறைவனே மனம் கனிந்து, தன்னை தவசியின் பக்கம் திருப்பிக்கொள்கிறார் எனலாம். ஒரு காலத்தில், அந்த லிங்கம் "தலை கீழ் லிங்கமாக" முழுமையாக மாறியபின், அதிலிருந்து ஒரு நாழிகைக்கு, ஒரு சொட்டு என ஒரு அமிர்தம் அந்த உடலுக்குள் மழைத்துளி போல் வீழும். அந்த அமிர்தம் வீழ்ந்து, வீழ்ந்து, அந்த உடல் மிக மிக சுத்தமாகும். உடல் முழுவதும் அந்த அமிர்தம் பரவிவிட்டால், பின்னர் அவனுக்கு, சுவாசிக்க, காற்று கூட தேவை இல்லை. இதை முடிந்தால் முயற்சி செய்துபார் என சொல்லாமல், சொல்வதுதான் நீ பார்த்த ஸ்தூல "தலைகீழ் லிங்கம்". உன்னால் முடிந்தால் த்யானத்தில், சூக்ஷுமத்தில் "தலை கீழ் லிங்கத்தை" பார்க்க முயற்சி செய்து பார்" என மிகப் பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாக, எளிதாகக் கூறினார்.

எத்தனையோ விஷயங்களை இத்தனை நேரம் கூறியிருந்தாலும், இது ஒன்றுதான் நடைமுறைப்படுத்துவது, மிக கடினமான ஒன்றாக இருக்கும் என என் மனம் கூறியது. இந்த வழிகளில் எல்லாம் நடந்து சென்று, விடாப்பிடியாக, திட மனதுடன் இருந்த மனிதர்கள் தான் பிற்காலத்தில் "சித்தர்களாக" மாறியிருக்கிறார்கள் என பல பெரியவர்கள் கூறியதை அப்போது நினைவு கூர்ந்தேன்.
 
[அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்! அடியேனுடைய குருநாதர் "முருகா" என்பவர், கடந்த சனிக்கிழமை அன்று இறைவனுடன் ஒன்றிக் கலந்துவிட்டார். அவரது இழப்பு, என்னுள் ஒரு வெறுமையை உருவாக்கிவிட்டது. எத்தனையோ நல்ல வழிகளை காட்டி, "நடந்து செல்! நான் இருக்கிறேன் கூட!" என்று வாழ்வை செம்மையாக்க வழிகாட்டியவர். மனம், உணர்வுகள் அனைத்தும் வெறுமை அடைந்துவிட்டது. ஒரு சில காலம் தனிமையாக இருக்க விரும்புகிறது. மனம் ஒன்று படும் போது, "சித்தன் அருளில்" தொடர்கிறேன். அதுவரை, சற்று விடை கொடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்!]

சித்தன் அருள்................... நிச்சயமாகத் தொடரும்!

18 comments:

  1. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  2. Om Lopamudra mata Samhet Agatheesaya Namah

    ReplyDelete
  3. Dear Sir,
    Very much interesting and expecting the post on each thursday. But found the reason which is really a valid and very much paintfull . Let us all pray for our Guru Muruga and let him dissolve in the almighty. Every thing will pass on and make us more brave and more human. Now you are in the place of Guru this may be the reason the almighty has take his physical presence from your side. He will be always with you and direct all your activities with eternal presence will get recover soon and start the sithan arul again expecting very Eagerly. Take care and recover with the help of our great guru Agasthiyar . More than 5 Years travelling with your blog which is a gift given to a me (poor person who is not at all eligible for this) by our great guru ji Agastiyar. Om Agathisaya Nama

    ReplyDelete
  4. பிரியமானவரின் இறப்பு என்பது இழப்பீடு செய்ய முடியாதது. உங்கள் மனம் ஒன்று பட்டு, அந்த இழப்பிலிருந்து மீள அகத்தியரை தினமும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. இறைவன் நல் ஆசிகள் தருவானாக...
    தங்கள் மனம் அமைதி அடைய இறையை வேண்டுகிறேன்...
    குரு முருகா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறேன்

    ReplyDelete
  6. Om Namashivaya! Om lobamutra Sametha Agatheesane Potri

    ReplyDelete
  7. அனைவருக்கும் வணக்கம்!

    ReplyDelete
  8. ஐயா... தங்கராசு அய்யா அவர்களின் இழப்பு மிகவும் வேதனை அளிக்கிறது. அவர் ஆத்மா மற்றும் தங்களின் குருவின் ஆத்மா இறையுடன் கலந்து விட வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.,. தங்கராசு அய்யா இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது..

    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

    சித்தன் அருள் தான் எங்கள் உயிர் அய்யா. தாங்கள் மனம் நிம்மதி அடைய அகத்தியர் அய்யனை வேண்டுகிறேன்...

    ReplyDelete
  9. எத்தனையோ நல்ல வழிகளை காட்டி, "நடந்து செல்! நான் இருக்கிறேன் கூட!" என்று வாழ்வை செம்மையாக்க வழிகாட்டியவர்.

    இனி நீங்கள் வழிகாட்ட நாங்கள்
    காத்திருக்கிறோம்... மெல்ல வாருங்கள்..

    ReplyDelete
  10. Guruvadi Saranam!

    "எல்லா மனிதர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாவில், எப்பொழுதேனும் ஒரு பெரியவரை சந்திக்க நேரலாம். அப்படி சந்தித்தபின், அவருடன் கலந்துரையாடியது, எண்ணங்களை பகிர்ந்து கொண்டது, நிறையவே மனதுக்கு இதமாக இருக்கும். தன்னையே மறந்து விடுவார்கள். பின்னர், அவரிடமிருந்து விடை பெற்று தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்த பின், கிடைத்த வெளிச்சத்தை/ஞானத்தை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்தி முன்னேற முயற்சிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, சொல்லித்தந்தவரையே, நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிப்பட்ட நினைப்பு, அவர்கள் தவத்துக்கு இடையூறாக இருக்கும். அவர்கள் செல்கிற சித்த மார்க்க வழியில் தடங்கலாக இருக்கும், அவர்களை பின்னுக்கு இழுக்கும்"

    ReplyDelete
    Replies
    1. இங்கு கூறப்பட்ட "மறந்து விடு" என்பது பூத உடலுடன் குரு இருக்கும் நிலையில். அப்போதுதான் அவர்களுக்கும் தவம் உண்டு! அதற்க்கு நாம் இடையூறாக இருக்கக் கூடாது என்கிற நிலை. எனக்கு தெரிந்த வாசி யோகி "என் குருநாதர் தனக்கு உரிய இடத்தை தேடி அமர்ந்து விட்டார். எனக்கு எங்கே என்று கூறாமலே சென்று விட்டார்" என அடிக்கடி புலம்புவார். சற்று யோசித்தால் இதன் அர்த்தம் புரியும். அவருக்கு, மிகச் சிறப்பான இடத்தில் சமாதி அமைந்தது என்பதே உண்மை.

      Delete
    2. குருவடி சரணம்! அய்யா உங்களின் அன்பு தெரிகிறது! இந்த உலகத்தின் மிக பெரிய இழப்பு நாம் ஒருத்தரை இழந்து விடுவதுதான் என்பதை அறிவேன்! இது இயற்கையின் நியதி! நாம் அதில் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கிலே பதிவு செய்தென். தவறாக நினைக்க வேண்டாம்! எல்லாமே அவன் சித்தம் தானே அய்யா! குருவடி சரணம்!

      Delete
  11. THAVATHIRU THANGARASAN AVARGALIN AANMA IRAIYODU KALANTHU NAM ELLORUKKUM NALVAZHIYAIYUM, ELLORUKKUM NALLA KAPPAGAVUM IRUKKA ELLAM VALLA AGATHIYAPERUMAI VENDUGIREN. UNGAL NABAR GURU MURUGA AVARGALUM IRAIYODU KALANTHU SIRAKKA GURU AGATHIYAR PERUMANAI VENDUGIREN.. THANGALIN MANATHAI GURU AGATHIYAR VAZHI NADATHUVAR ENDRA NAMBIKKAIYUDAN NANDRIGAL...

    ReplyDelete
  12. வணக்கம்
    குருநாதர் மறைவும் அதனால்
    உங்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்தையும் அறிய வருந்துகிறேன்.இழப்பு என்பது
    தவிர்க்கமுடியாதது. ஆனாலும் i
    வருந்துகிறோம் காரணம் நாம்
    அவருடன் பழகியது வணக்கம்
    குருநாதர் மறைவும் அதனால்
    உங்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்தையும் அறிய வருந்துகிறேன்.இழப்பு என்பது
    தவிர்க்கமுடியாதது. ஆனாலும்
    வருந்துகிறோம் காரணம் நாம்
    அவருடன் பழகியது குருநாதர்
    நம்மை நடத்தியவிதம் இன்னும்
    பல.(சமீபத்தில் என் மனைவி
    இறப்பும் அதனால் ஏற்பட்ட மன துக்கமும் தாங்கமுடியாதவை
    ஆனால் வாழ வேண்டியிருக்கே
    என்ன செய்வது )
    குரு உங்களுக்கு பல விஷயங்களை போதித்யுள்ளார்
    அவற்றை கடைப்பிடித்தலும்
    எங்களைப்போன்றவர்களுக்கு
    சொல்லவேண்டியவற்றை சொல்வதுமே உங்களுக்கு
    ஆறுதல் தரும் (ஒரு விஷயம்
    இனி நீங்கள் ஒரு குரு உங்களை நாடி வரும்
    ஆன்மிக அன்பர்களுக்கு.
    இதைத்தான் உங்கள் குரு
    உங்களுக்கு சொல்லாமல் சொல்லி சென்றிருக்கிறார்.

    வயதில் பெரியவன் மற்றும்
    நீண்டநாள் “சித்தன் அருள் “
    தொண்டன் என்ற முறையில்
    எழுதுகிறேன் தவறாகில்
    மன்னித்துவிடவும்.
    அகத்திய எம் பெருமான்
    அனைவருக்கும் மன சாந்தியை
    அருள வேண்டுகிறேன்
    அகததிசாயா நமஹ
    அன்புடன்
    நம்மை நடத்தியவிதம் இன்னும்
    பல.(சமீபத்தில் என் மனைவி
    இறப்பும் அதனால் ஏற்பட்ட மன துக்கமும் தாங்கமுடியாதவை
    ஆனால் வாழ வேண்டியிருக்கே
    என்ன செய்வது )
    குரு உங்களுக்கு பல விஷயங்களை போதித்யுள்ளார்
    அவற்றை கடைப்பிடித்தலும்
    எங்களைப்போன்றவர்களுக்கு
    சொல்லவேண்டியவற்றை சொல்வதுமே உங்களுக்கு
    ஆறுதல் தரும் (ஒரு விஷயம்
    இனி நீங்கள் ஒரு குரு உங்களை நாடி வரும்
    ஆன்மிக அன்பர்களுக்கு.
    இதைத்தான் உங்கள் குரு
    உங்களுக்கு சொல்லாமல் சொல்லி சென்றிருக்கிறார்.

    வயதில் பெரியவன் மற்றும்
    நீண்டநாள் “சித்தன் அருள் “
    தொண்டன் என்ற முறையில்
    எழுதுகிறேன் தவறாகில்
    மன்னித்துவிடவும்.
    அகத்திய எம் பெருமான்
    அனைவருக்கும் மன சாந்தியை
    அருள வேண்டுகிறேன்
    அகததிசாயா நமஹ
    அன்புடன்

    ReplyDelete
  13. வணக்கம்
    குருநாதர் மறைவும் அதனால்
    உங்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்தையும் அறிய வருந்துகிறேன்.இழப்பு என்பது
    தவிர்க்கமுடியாதது. ஆனாலும்
    வருந்துகிறோம் காரணம் நாம்
    அவருடன் பழகியது குருநாதர்
    நம்மை நடத்தியவிதம் இன்னும்
    பல.(சமீபத்தில் என் மனைவி
    இறப்பும் அதனால் ஏற்பட்ட மன துக்கமும் தாங்கமுடியாதவை
    ஆனால் வாழ வேண்டியிருக்கே
    என்ன செய்வது )
    குரு உங்களுக்கு பல விஷயங்களை போதித்யுள்ளார்
    அவற்றை கடைப்பிடித்தலும்
    எங்களைப்போன்றவர்களுக்கு
    சொல்லவேண்டியவற்றை சொல்வதுமே உங்களுக்கு
    ஆறுதல் தரும் (ஒரு விஷயம்
    இனி நீங்கள் ஒரு குரு உங்களை நாடி வரும்
    ஆன்மிக அன்பர்களுக்கு.
    இதைத்தான் உங்கள் குரு
    உங்களுக்கு சொல்லாமல் சொல்லி சென்றிருக்கிறார்.

    வயதில் பெரியவன் மற்றும்
    நீண்டநாள் “சித்தன் அருள் “
    தொண்டன் என்ற முறையில்
    எழுதுகிறேன் தவறாகில்
    மன்னித்துவிடவும்.
    அகத்திய எம் பெருமான்
    அனைவருக்கும் மன சாந்தியை
    அருள வேண்டுகிறேன்
    அகததிசாயா நமஹ
    அன்புடன் Sv

    ReplyDelete
    Replies
    1. கூறியதில் தவறேதுமில்லை. மிக்க நன்றி!

      Delete
  14. ஓம் அகத்தீசாய நமஹ .... சற்று கனத்த மனதுடன் ...
    அய்யா அவர்களுக்கு வணக்கம் ....
    தங்களின் குருநாதர் அவர்களின் ஆன்மாவும் , தவத்திரு தங்கராசன் அடிகள் அவர்களின் ஆன்மாவும் இறைவனடி சேர மனதார பிரார்த்தனை செய்கிறேன். சென்ற வருடம் தவத்திரு தங்கராசன் அடிகள் அய்யா அவர்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். அவரிடம் ஆசிர்வாதமும் பெற முடிந்தது. அகத்திய பெருமானின் துதிகளை அவர் பாடிய பொழுது நான் மெய் மறந்து விட்டேன்.. அதில் அப்படி ஒரு ரம்மியமும் அமைதியும் இருப்பதை உணர்ந்தேன். இன்றும் என் செவிகளில் அவரின் குரல் ஒலிக்கின்றது. அவர் இல்லை என்பதை மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது.எல்லாம் இறைவன் செயல்..
    ஓம் அகத்தீசாய நமஹ..

    ReplyDelete
  15. Ohm Akathiyar thiruvadigal Potri Potri

    ReplyDelete