​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 16 June 2018

சித்தன் அருள் - 759 - சிவன் மடியில் சிவலோக ப்ராப்த்தி!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சிவன் மடியில் வீழ்ந்து சிவலோக ப்ராப்த்தி அடைய மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். எத்தனையோ கோடி பேர்களில், உண்மையான அடியவர்களுக்குத்தான் அது வாய்க்கும். சமீபத்தில், பீமாவரம் சோமேஷ்வரா ஆலயத்தில் சிவனுக்கு பூசை செய்து கொண்டிருந்த வயதான பூசாரி, அவர் மடியிலேயே விழுந்து சிவபதம் அடைந்ததை, ஒரு வீடியோவில் காண முடிந்தது. நீங்களும் அதை பார்க்க, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அந்த ஆத்மா மோக்ஷம் அடைய வேண்டும் என வேண்டிக்கொண்டு, கீழே உள்ள தொடுப்பை பார்க்கவும்.

ஓம் லோபா முத்திரா சமேத அகத்தீசாய நமஹ!


சித்தன் அருள்............... தொடரும்!

7 comments:

 1. ஆமாம் ஐயா...அந்த பதிவை கண்டேன்.

  மனம் நெகிழ்ந்து போனேன்...எல்லா இறை அருள்

  ReplyDelete
 2. பெரியவருக்கு ‌‌கோயிலிலேயே மோஷம் ‌‌‌‌கிடைத்துவிட்டது இல்லையா ஐயா....‌.கொடுப்பினை..இறைவனுக்கு நன்றி

  ReplyDelete
 3. சிவ சிவ இந்த கலியிலும் இறைவன் தன் அடியாருக்கு எப்படிப்பட்ட ஒரு பதத்தை அருளியிருக்கிறார் ... சந்தேகமின்றி அவர் சிவபதமே அடைந்து விட்டார்...

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா! திரு.வேலாயுதம் கார்த்திகேயன் அவர்களை எப்படி தொடர்ப்புகொள்வது?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். திரு.கார்த்திகேயனை தொடர்பு கொள்வது என்பது இயலாத காரியம். "சித்த மார்க்கத்தின்" வாசல் வழியாக நுழைந்து சென்றவர்தான். அதன் பின் யாரையும் தொடர்பு கொள்வதில்லை, அடியேனையும் சேர்த்து. என்றேனும் அவருக்கே தோன்றி, அடியேனை அழைத்தால் தான் உண்டு. அவரிடம் தொடர்பு கொள்ள நிரந்தர எண்ணும் இல்லை.

   அக்னிலிங்கம்!

   Delete
 5. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete
 6. ஒரு உயிரை எடுப்பது சிவனின் வேலை இல்லை , அது எமனின் வேலை , இறைவன் சன்னதியில் ஒருவன் மரித்தால் மட்டுமே அவன் மோக்ஷம் எய்தமாட்டன் . இந்த மரணத்துக்கும் ஈசனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை . இது முழுக்க காலனின் வேலை . ஒன்றையொன்று வேண்டுமானால் சொல்லலாம் , என்னவென்றால் , கர்பக்ராஹதில் மரணம் என்ற விதி இருப்பதால் , உயிரை எடுக்கும் முன் எமன் ஒருமுறை கைலாயம் சென்று இறையிடம் அனுமதி பெற்று இங்கு வந்து இருப்பார் . மற்றபடி மோக்ஷம் எல்லாம் இல்லை என்பது என்னுடைய எண்ணம் ...

  ReplyDelete